Thursday, July 17, 2014

தட்சிணாயன புண்ய காலம்
தேவி ஹாரத்தி பாட்டு

ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ)

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவை யெல்லாம் அடைய அம்மா பக்தி பெருகிட பாடி
உருகிட பணிப்பாய் அன்பில் எமை      (ஓம் ஸ்ரீ)

இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க 
ஈஸ்வரி வரம்  அருள்வாய்கரங்குவித்தோமினி 
காலை விடோமம்மா கருணையுடன் அணைப்பாய் (ஓம் ஸ்ரீ)

காசினில் எங்கும் வேற்றுமை போக கருத்தினில்
அன்பருள்வாய் தேஜசுடன் வாழ காட்டி காட்சி
தேவி அடைக்கலமே அம்மா (ஓம் ஸ்ரீ)

நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான
நல்லொளி தீபம் வைத்து அம்மா நமஸ்காரம்
செய்து ஹாரத்தி எடுத்தோம் ஞாலத்துக்கு அமைதியை தா.

ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா
ஓம் த்ரிகுண தீ தா ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ
ஓம் ஜய ஜகத் ஜனனி

ஆடி மாதத்தில் சூரியன் தனது தென் திசைப் பயணத்தில் செல்லும் தட்சிணாயன புண்ய காலம் ஆறு மாதங்களுமே வழிபாடுகளுக்கும், விரதங்களுக்கும் சிறப்பு பெற்றவை.. . 
லௌகீக விஷயங்களுக்கு உத்தராயணமும், ஆன்மீக விஷயங்களுக்கு தட்சிணாயனமும் என்று பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது

தட்சிணாயணத்தில் இருக்கும் ஆறு மாதங்களிலும் ஆடி மாதம் முதல்  சூரியன் சஞ்சரிக்கும் கடக ராசி முதல், அதைத் தொடர்ந்து வரும் சிம்ம்ம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகள், நாம் இருக்கும் காலக்ஸியின் நட்சத்திரக் கூட்டங்களாகும். 

 நாம் வாழ்வதற்கு வகை செய்த இந்த ராசிகளின் ஊடே செல்லும் பொழுது, நம்முடைய மூலத்தை வணங்கும் வண்ணம், பலவிதமான ஆன்மீகக் கடமைகள் ஆடியை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கின்றன.

ஆடி என்னும் பெயருக்குக் கண்ணாடி என்பது பொருள். 

ஒரு பெரிய மலையைக் கூட ஒரு சிறு கண்ணாடிக்குள் காட்டிவிட முடியும்

அது போல ஆன்மீக முன்னேறத்தை மட்டுமல்ல, இம்மை இன்பத்தையும் ஆடி மாதத்தில் செய்யும் அம்மன் வழிபாடுகளால் அடைந்து விட முடியும்.
ஆரம்பம் என்பது தாயிலிருந்து பிறக்கிறது. 

ஆன்மீக காலமான தட்சிணாயனமும் தாயை முன்னிட்டு, 
அம்மனை வழிபட்டு ஆரம்பிப்பது பொருத்தமே. 

உயிர் வாழ அவசியமான நீரைக் கொண்டு வரும் ஆறு, தாய் போன்றவள். 

மழைக் காலத்தை அறிவிக்கும் வண்ணம், முதல் மழை நீரை 
அந்த ஆற்றுத்தாய் பெருக்கெடுத்துக் கொண்டு வரும் போது 
அவளுக்கு ஆடிப் பெருக்கு ஆராதனை நடக்கிறது.

ஆடி மாத நேரத்தில் செய்யும் வேண்டுதல், ஆறு மாதங்களுக்கு முன்னால் மார்கழி மாதத்தில் ஆற்றங்கரையில் ‘அம்பாவாடல்’ என்று தாயுடன் சேர்ந்து கன்னிப் பெண்கள் செய்த பாவை நோன்பின் பொழுதும் 
தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்றும் நல்ல கணவன் 
வர வேண்டும் என்றும் ஆடிப்பெருக்கின் போதும் வேண்டுதலைச் செய்கிறார்கள். 

புதுத்தாலி என, தாலியைப் பிரித்துக் கட்டிக் கொள்ளுதல் 
ஆடிப் பெருக்கின் போதும் நடை பெற்று வருகிறது.
ஆடியில்தான் கண்ணகியின் கணவன் கோவலன் கொலை செய்யப்பட்டான். 

அதற்கு நீதி கேட்ட கண்ணகியால், ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை நட்சத்திரம், கடைசி வெள்ளிக் கிழமை கூடிய நாளில் மதுரைக்குத் தீ வைக்கப்பட்ட்து. 

அதன் தொடர்பாக தமிழ் நிலங்களில் பலருக்கும், தொழு நோய் மற்றும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் ஏற்பட்டன. 

எங்கும் மழை பெய்யவில்லை. வறட்சியும், சாவும் மக்களை வாட்டின.

இதிலிருந்து மீள்வதற்காக அப்போது அரசுக் கட்டில் ஏறிய பாண்டிய மன்னன் வெற்றி வேல் செழியன் என்பவன் கண்ணகிக்குப் பலி கொடுத்து, சாந்தி பூஜை செய்தான். 

அதன் பயனாக மழை வந்தது, நோய் நீங்கியது. மக்கள் துன்பம் நீங்கியது. 

இதைக் கண்ட கொங்கு மண்டலத்துக் கோசர்கள் என்பவர்கள், 
தங்கள் பகுதியிலும் இதே போல பூஜைகள் செய்ய ஆரம்பித்தனர்.

பாண்டிய மன்ன்ன் செய்த பூஜையில் இலங்கை மன்னன் கயவாகு என்பவனும் கலந்து கொண்டான். அவனும் இந்தப் பூஜையை ஒரு ஆடி மாதத்தில் தன் நாடான இலங்கையில் ஆரம்பித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 

அது முதல் ஆடி மாதத்தில் கண்ணகிக்கும், நாளடைவில் அவளது அம்சமாக ஆங்காங்கே அம்மனுக்கும் விழாக்கள் எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
ஒரு ஆடி மாதத்தில் கண்ணகி கணவனை இழந்தும், அதே ஆடி மாதத்தில் அவளது கோபத்தால் மக்களுக்கும் துன்பமும் வரவே, ஆடி மாதத்தில் அம்மனுக்குப் பூஜை செய்வதும் வழக்கமும் ஆரம்பித்திருக்கும். 
.கண்ணகிக்கு மங்களா தேவி என்றுதான் பெயர். 

அவளைப் பூஜிப்பதால் மங்களமும், சுமங்கலித்துவமும் ஏற்படும். 

நாளடைவில் கண்ணகியின் பெயர் மறைந்தாலும், அவளுக்குச் செய்த பூஜையை ஏற்கெனெவே இருந்த அம்மன் கோவில்களிலும், அல்லது புதிதாக அம்மன் கோவில்களை உருவாக்கியும் செய்திருக்கிறார்கள்.

வெள்ளிக் கிழமையில் அவள் எரியூட்டியதால், 
வெள்ளிக் கிழமை பூஜைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
ஆடி மாதக் கடைசி வெள்ளியில் எரியூட்டவே, கடைசி 
வெள்ளிக் கிழமையில் தீ மிதி விழா எடுப்பது வழக்கத்தில் வந்திருக்கிறது. 
கண்ணகியின் காலத்துக்கும் முன்பே கொற்றவை என்னும் பெண் தெய்வ வழிபாடு நடக்கும் ஆடி மாதத்திற்கான கடக ராசிக்கு அதிபன் சந்திரன் என்பதால், வெள்ளை நிற உணவாகக் கூழ் ஊற்றுதல் பிரசித்தம் பெற்றது.
 கண்ணகி போல அம்மனிடமும் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் தண்டனை நிச்சயம். 

ஆனால் நேர் வழியில் வாழும் மக்களுக்கு அம்மன் அருள் என்றும் இருக்கும்.என்பதை மனதில் கொள்ளவே ஆடி மாதம் சிறப்புபெறுகிறது..!
மகாபாரத யுத்தம் நடந்த  ஆடியை போர்க்காலம் இதனால் இந்த மாதத்தில் எந்த செயலை துவக்கினாலும், அது பின்னடைவை தரும் என்று கூறுவார்கள். 
இந்த மாதத்தில் நாம் தெய்வ வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்தினால் துயரங்கள் யாவும் பறந்து போகும் என்ற நம்பிக்கையால்  ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்தது. 
பிராண வாயு அதிகமாக கிடைப்பது. ஜீவாதார சக்தி அதிகம் உள்ள மாதம்  ஆடி மாதம் சக்தி மாதம்  எனவே விதை விதைப்பதை  மேற்கொண்டு ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானது  

தட்சிணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, 
ஈசனை அடையும் பேறுபெற்ற மாதம் 

தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் "வாராஹி நவராத்திரி' ஆடி மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.  
ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்

காவடி எடுத்தல், தீமிதி, கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும். 

படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும். 

ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். 

19 comments:

  1. ஆடி பிறந்தது! ஆடி மாதச் சிறப்புகள் மற்றும் கோவலன் கதையோடு இணைந்த கண்ணகி வழிபாடு, அம்மன் வழிபாடு பற்றிய தகவல்கள், அழகான அம்மன் பட்ங்களோடு ஆடி முதல்நாளைச் சிறப்பித்தமைக்கு நன்றி!

    திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்பு உங்கள் பதிவு ஒன்றில் சொன்னது போல ஆடி மாதம் சிறப்புப் பதிவுகள் பல தருவீர்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆன்மீகப் பதிவருக்கு ஆடி மாத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆடியின் மகத்துவம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. ஆடி என்னும் பெயருக்குக் கண்ணாடி என்பது பொருள் உட்பட அனைத்து விளக்கங்களும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தங்களின் இந்த பதிவைப் பார்த்து தான், ஆடி மாதம் தொடங்கி விட்டது என்று அறிந்தேன் அம்மா.
    ஆடி மாத சிறப்புகளை அறிந்து கொண்டேன் நன்றி.

    ReplyDelete
  5. ஆடியின் அறியாத சிறப்புக்களை
    தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. அருமையான பதிவு .....மிகவும் நன்றி...

    ReplyDelete
  7. லௌகீக விஷயங்களுக்கு உத்திராயணமும், ஆன்மீக விஷயங்களுக்கு தட்சிணாயமும் என்று பிரித்துக்கொடுத்திருப்பது உங்கள் பதிவின் மூலமாக இன்று தெரிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
  8. ஆடி மாத சிறப்பு பதிவு மிக அருமை.கண்ணகி வழிபாடு சக்தி வழிபாடு, என்ற விபரங்கள் அருமை.
    வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  9. ஆடி மாத சிறப்புக்களை அறிந்து கொள்ள முடிந்தது. தேவியின் ஹாரத்தி பாடல் நீண்ட இடைவேளைக்கு பின், இன்று உங்கள் தளம் மூலம் கிடைக்கப் பெற்று பாடி மகிழ்ந்தேன். நன்றிம்மா.

    ReplyDelete
  10. ஆடி மாதத்தின் பெருமை கூறிய இனிய பதிவு..
    அழகான படங்கள்.. அருமை.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  11. ஆடி மாதத்தைக் கண்ணகியுடன் தொடர்பு படுத்திக் கூறியவை அறியாத செய்திகள். சில படங்கள் திறக்கவில்லை. ஆடி மாதத்துக்கும் சிறப்பு தள்ளுபடிக்கும் என்ன தொடர்பு.?

    ReplyDelete
  12. தட்சிணாயன புண்யகால ஆரம்ப தினத்தன்று மிகவும் பொருத்தமான பகிர்வு. ஆடி பிறந்ததும் முதல்பதிவிலேயே ஆடிப்போக வைத்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  13. வழக்கம்போல படங்கள் அனைத்தும் அழகோ அழகு.
    அதிலும் சமயபுரம் மஹமாயி தனி அழகு.

    கீழிருந்து இரண்டாவது படமும் சூப்பராக உள்ளது

    >>>>>

    ReplyDelete
  14. தேவி ஹாரத்தி பாராட்டுப் பாடல் ஜோராக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  15. லெளகீக விஷயங்களுக்கு உத்தராயணம்
    ஆன்மிக விஷயங்களுக்கு தக்ஷிணாயனம் !

    அழகாக மிகச்சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். அடுத்தடுத்து ஏராளமான பண்டிகைகளாக வரப்போகின்றன.

    >>>>>

    ReplyDelete
  16. ஆடி = கண்ணாடி = அதில் அம்மன் வழிபாடு
    அருமையான விளக்கமாக உள்ளது.

    ஆடிமாதச்சிறப்புகள் அனைத்தையும் அறிய முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  17. பொருத்தமான நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

    ஆடி பிறந்து விட்டது. இனி தங்கள் ஆன்மிகப் பதிவுக் காட்டில் எப்போது பலத்த மழை தான்.

    ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பே கோவையில் நல்ல மழை பெய்துள்ளது என செய்தித்தாளில் படித்தேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். வாழ்க !

    ;) 1340 ;)

    ooo ooo

    ReplyDelete
  18. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

    ReplyDelete
  19. ஆடிமாத சிறப்புகள், பல புதிய தகவல்கள், கண்ணகியம்மனின் தகவல் என
    எல்லாமே நான் புதிதாக இப்பதிவின் மூலம் அறிகிறேன்.மிக அழகான படங்கள்.நன்றி.

    ReplyDelete