Monday, July 21, 2014

ஆசிகள் அருளும் ஆடிக்கிருத்திகை..


[m1.jpg]
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே பாட வந்தேன்
செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்..

தணிகைமலை மேல் அமர்ந்தான் தத்துவமே பேசு கின்றான்
பழனிமலை தேடி வந்தான் பரம்பொருளாய்க் காட்சி தந்தான்..

செந்தூரில் கோயில் கொண்டான் சிங்கார வேலைக் கண்டான்
அழகர்மலை சோலை நின்றான் ஆடும்மயில் ஏறி வந்தான்..

பரங்குன்றில் ஆட்சி செய்தான் பாமாலை சூடிக் கொண்டான்
சாமிமலை வாசல் வந்தான் காவடிகள் கோடி கண்டான்..
கயிலையில் நடைபெற்ற சிவ பார்வதி திருமணத்தின் போது திரண்ட சுற்றத்தால் உலகம் சாய்ந்து திணறியபோது தனியொருவராக தென்னகம் வந்து உலகம் சமநிலை பெற அருளிய தமிழ் முனிவராம் அகத்தியரிடம் சிவபெருமான சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை  அகத்தியரிடம் வழங்கி,  மருதமலையில் வைத்து விடக் கூறினார்...
அகத்தியர்.  வழியில்  தவத்தில் இருந்த இடும்பனின் தவத்தை கலைத்து சடாசர மந்திரத்தை உபதேசித்தார் அகத்தியர். 
 நீண்டு வளர்ந்த ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி,  மரத்தின் ஒரு முனையில் ஒரு மலையையும் மறுமுனையில் இன்னொரு மலையும் கட்டி, காவடி எடுப்பது போல் சுமந்து வந்தார் இடும்பன்.  
 பழனியில் சிறிது நேரம் மலையை இறக்கி வைத்த போது வேடன் உருவத்தில் ஒரு சிறுவன் தோன்றி, அந்த இரண்டு மலைகளையும் திரும்ப எடுக்க முடியாத அளவு  பிடித்து வைத்திருந்த.  சிறுவனிடம் சண்டையிட்டார் இடுமபன்.  அவன் தந்த பதிலடியை தாங்க முடியாமல் இறந்தான் இடும்பன். 

சிறுவன் உருவத்தில் வந்தது முருகன் என்பதை அறிந்த அகத்தியமுனிவர், முருகனிடம் சென்றே நியாயம் கேள். அவர் கருனை செய்வார்.“ என்றார் இடும்பனின் மனைவி இடும்பியிடம்..
அதன்படி . இடும்பியின் வருத்ததை பார்த்து கருனை உள்ளத்துடன் இடும்பனை மீண்டும் உயிர் பெற செய்து தம்பதியினருக்கு ஆசி வழங்கினார். 

 பக்தர்கள்  காவடி எடுத்து வரும் போது, அவர்களுக்கு துணையாக இருந்து காக்க வேண்டும்.“  காவடி எடுக்கும் பக்தர்கள் வாழ்வில் இன்னல்கள் இல்லாமல் இருக்க, அவர்களுக்கு துணை இருக்க வேண்டும்.” என்றார் இடும்பனிடம் முருகப் பெருமான்!!. 

ஆடி கிருத்திகை அன்று இடும்பனை போல் காவடி எடுத்தால் 
கவலைகள் மறையும். “
முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்தில் காட்சி இருக்கிறது..!

சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். 

பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். 

முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால்,  கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். . 

முருகப்பெருமானுக்கு முல்லை மலர்கள்    விசேஷமானது. 

ஆடிக்கிருத்திகை பால் குட வழிபாடு..
ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று வாசனை மலர்களை தந்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சு திறன் சிறப்பாக இருக்கும்.  நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடு நலமோடு கந்தன் அருளால் சிறப்பு பெறlலாம்.
தொடர்புடைய பதிவுகள்....15 comments:

 1. ஆடிக் கிருத்திகை அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. ஆடிக்கிருத்திகை பற்றிய சிறப்புகள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

  ReplyDelete
 3. ஆடிக்கிருத்திகை பற்றி சிறப்பான பதிவு. கூடவே கண்களை மனதை நிறைக்கும் அற்புதமான படங்களின் பதிவு. நன்றி.

  ReplyDelete
 4. அழகன் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை என அற்புத பதிவு.. நிறைந்த தகவல்கள்.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 5. ஆடி மாதத்தில்
  ஆடிக்கிருத்திகை பற்றிய அழகானதோர் பதிவு எழுதி
  ஆடிப்போக வைத்துள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 6. ”ஆடிக்கறக்க வேண்டிய மாட்டை
  ஆடிக்கறக்க வேண்டும் .....

  பாடிக்கறக்க வேண்டிய மாட்டைப்
  பாடிக்கறக்க வேண்டும்”

  எனச் சொல்வார்கள்.

  ஆஹா ! தங்களுக்குத்தெரியாத கறவை முறைகளா என்ன ?

  என்னிடமிருந்து நிறைய பின்னூட்டங்களைக் கறந்து விடுவீர்களே !

  >>>>>

  ReplyDelete
 7. ’ஆசிகள் அருளும் ஆடிக்கிருத்திகை’

  என்ற இந்த கறந்த பால் போன்ற தங்களின் பதிவினில் கும்முன்னு சும்மா நுரை பொங்குதாக்கும்.

  >>>>>

  ReplyDelete
 8. படங்கள் அத்தனையுமே வழக்கம்போல அழகோ அழகு !

  அழகென்ற சொல்லுக்கு முருகா என்று சொல்லுவார்களே !!

  முருகனைப்பற்றிய பதிவென்றால் அதுவும் தாங்கள் கொடுக்கும் பதிவென்றால் அழகுக்குக் கேட்கவா வெண்டும்.

  அழகோ அழகு ! அழகு அப்படியே சொட்டுகிறது !!

  தேன் சொட்டும் அழகினை ஏந்திப்பருகி வருகிறேனாக்கும். ;)

  என் சுகர் லெவல் மேலும் ஜாஸ்தியானால் நீங்கதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். சொல்லிட்டேன். ஜாக்கிரதை !

  >>>>>

  ReplyDelete
 9. ஹனுமன் சொல்லின் செல்வனானது முருகனாலா ?

  பேஷ் பேஷ். அருமையான விளக்கம்.

  >>>>>

  ReplyDelete
 10. நாம் முருகனுக்குக் காவடி எடுத்தால் நம் கஷ்டங்களை காவடியாக முருகன் சுமப்பானா?

  ஜோர் ..... ஜோர் !!

  >>>>>

  ReplyDelete
 11. தங்களையும் என்னையும் போன்ற பெரிய சம்சாரிகளை ‘பெரிய குடும்பி’ எனச் சொல்வார்கள் - கேள்விப்பட்டுள்ளேன்.

  குடும்பி போல இடும்பியா ?

  இடும்பனின் மனைவி இடும்பியா ?

  நீங்களும் தினமும் ஏதேதோ சொல்லித்தான் வருகிறீர்கள்.

  உங்களுக்குத்தான் எவ்ளோ KNOWLEDGE - எனக்கு மிகவும் வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது.

  Very Good Knowledge உள்ள தங்களை VGK க்கு மிகவும் பிடித்துப்போனதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

  >>>>>

  ReplyDelete
 12. முதல் இரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

  முருகனைப்பற்றிய பதிவு என்பதால் எனக்கு மேற்கொண்ட என்ன எழுதுவது என்றே புரியவில்லை.

  அதனால் அகஸ்தியர் போல குள்ளமாகக் கொஞ்சூண்டு மட்டுமே எழுத நினைத்தேன்.

  ஆனால் என் ‘சிந்தனையில் மேடைகட்டிக் கந்தனையே பாட’ வைத்து விட்டீர்கள்.

  அதுதான் உங்கள் ஸ்பெஷாலிடி. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 13. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். நல்வாழ்த்துகள்.

  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  ;) 1344 ;)

  ooo ooo ooo

  ReplyDelete
 14. இறை வணக்கம் செய்வோருக்கு எந்த நாளும் நந்நாளே. இருப்பினும் காலம் காலமாக சில நாட்களை இறைவனை நினைக்கவும் அவன் புகழ் பாடவும் முன்னோர்கள் குறிப்பிட்டுச் சென்றனர், தவறாமல் நாளுக்கேற்றபடி பதிவெழுதி எல்லோர் மனசிலும் இடம் பிடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. முருகன் புகழ்பாடும் பதிவு அருமை.
  பாடல்கள், படங்கள் எல்லாம் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.
  இன்று வைத்தீஸ்வரன் கோவில் சென்று வணங்கி வந்தோம்.

  ReplyDelete