வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும்அயன்மாற்குஅரியோய்நீவேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு என்று உண்டு எனில் அதுவும் உன்றன் விருப்பு அன்றே.
செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்
எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது.
நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை நந்தியிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர்
என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.
நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது.
நந்தியே தர்மத்தை குறிக்கிறது. தர்மமே இறைவனை தாங்கி நிற்கிறது.
சிவபெருமானின் ஆணைக்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்திற்கேற்ப எல்லா கோவில்களிலும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும்.
ஆன்மாக்களாகிய நாம் நம் கவனத்தை நந்தியைப் போல எப்போதுமே இறைவன் மீதே நோக்கியிருக்க வேண்டும்
சிவாலயம் என்றால் அங்கு நந்தி நிச்சயம் இருக்கும்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்கு முன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.
இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு!
ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது, பிரம்மனின்
5 தலைகளில் நான்கு தலைகள் வேதங்களை உச்சரிக்துக் கொண்டிருந்தன.
ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது.
வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.
சோமேஸ்வர் என்ற இடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன்று தனது கன்றுடன் பேசுவதைக் கேட்டார்.
பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்தி பாவத்திற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப்பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.
இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசையை பின்பற்றி சிவபெருமானும் சென்றார்.
பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்ம ஹத்தி பாவத்தை போக்கி, பழைய நிலைக்கு திரும்பியது.
அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
பின்னர், அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடி கொண்டார்.
சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு, அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது.
ஆனால் இதற்கு சிவன் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பிரம்ம ஹத்யா பாவத்தில் இருந்து விடுவித்ததால் குருவுக்கு சமமானவர் என்றும், அதனால் தன் முன் அமர வேண்டாம் என்றும் நந்தியைக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி இங்குள்ள சிவாலயத்தில் நந்தி சிலை வைக்கப்படவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிவ பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
முன்பு இங்கு சிவலிங்கம் மட்டுமே வழிபடப்பட்டு வந்தது. பின்னர் இங்குள்ள பக்தர்கள் நிதி திரட்டி தற்போதுள்ள ஆலயங்களை எழுப்பினர்.
இங்குள்ள கோதாவரி ஆற்றில், ஸ்ரீராமன் தனது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்து வழி பட்டதாகக் கூறப்படுவதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு நீராடி தங்கள் முன்னோர்களை வழிபடுகின்றனர்.
சாலை மார்கமாக : புனேவில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும்; மும்பையில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன.
ரயில் மார்கமாக : மும்பையில் இருந்து நாசிக் ரயில் நிலையம்
சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம்.
விமான மார்கமாக : புனே விமான நிலையம் சென்று,
பிறகு சாலை வழியாக கோயிலை அடையலாம்
புராண வரலாறு உட்பட பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் கோயிலின் மகிமைகளை அறிந்தேன் அம்மா... நன்றி...
ReplyDeleteவித்தியாசமான கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
ReplyDeleteபஞ்சவதி கபாலீஸ்வரஎ மகாதேவ் கோயில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. பாடல்கள், படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வித்தியாசமான கோவில் தான்.....
ReplyDeleteநந்தி இல்லாமல் ஒரு சிவன் கோயில் இருக்கிறது என்று சொல்லி, அதனுடன் அதற்கான காரணத்தையும் சொல்லி எங்களை ஆச்சிரியப்படுத்திவிட்டீர்கள் அம்மா.
ReplyDeleteமேலிருந்து கீழ் மூன்றாம் படத்தைப்பார்த்து அப்படியே சொக்கிப்போனேன்.
ReplyDeleteஎவ்ளோ அழகோ அழகாக உள்ளது!!!!!
ரோஜாக்களாலும் பட்டு ரோஜாக்களாலும், மல்லிகைப்புஷ்பங்களாலும் ஓர் சிவலிங்கம்.
அற்புதம், அபாரம், அசத்தல், அருமை.
அதைப் பொறுமையாக அழகாக வடிவமைத்தவர்கள் கரங்களையும், அதை இங்கு காட்சிப்படுத்தி என்னை வியக்க வைத்தவர் கரங்களையும், கற்பனையில் என் கண்களில் ஒத்திக்கொண்டேன்.
>>>>>
தற்சமயம் அநிருத்துடன் நான் கணினியில் இருப்பதால், நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேனாக்கும். ஜாக்கிரதை. ;)
ReplyDelete>>>>>
படங்களும், தகவல்கலும் அருமை. சோமவாரத்தில் சோமேஸ்வரர் தரிசனம் கிடைக்க வைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteமுதல் படமும் இதுவரை காட்சிப்படுத்தாத மிக அழகான படமாக உள்ளது. சிவனுக்குள் சக்தி இருப்பதைச் சொல்லாமல் சொல்வதாக உள்ளது.
ReplyDeleteஅவர்கள் ஒருவருள் ஒருவராக அர்தநாரியாக ஐக்யமான அந்தரங்க அறைக்குக் காவலாக ஓர் மிகப்பெரிய பாம்போ !!!!!
;))))) சூப்பர் !
>>>>>
நந்தியில்லா நாசிக் பற்றிய காரணக்கதை தாங்கள் சொல்லிக் கேட்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
ReplyDeleteநந்தி என்ற பொருளாதாரத் தடை குறுக்கே இல்லாததால், நம் அரசாங்கமும் தன் இஷ்டப்படி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத்தள்ள நாசிக்கையே தேர்ந்தெடுத்ததோ என எண்ண வைக்கிறது.
பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறைகளைத் தவிர்க்க கரன்ஸி ரூபாய் நோட்டுக்களை இஷ்டப்படி அச்சடித்துத் தள்ளுவதால் நம் நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைவதோடு, நாட்டில் பணவீக்கம் தாறுமாறாக ஏற்பட்டு வருகிறது.
இதில் நிதித்துறை மற்றும் RBI யின் கட்டுப்பாடு என்ற நந்தி அவசியமாக இருக்க வேண்டும் என்பது, பண வீக்க கட்டுப்பாட்டுக்கும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மிக மிக முக்கியமானதாகும்.
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteபுனே, பாம்பே, நாசிக் அருகே அமைந்துள்ள கபாலீஸ்வரர் மந்திரின் இருப்பிடம் செல்லும் பாதை, பயணம் செய்ய ஆலோசனைகள் முதலியன எல்லாம் விபரமாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.
Deleteஇன்று பேரனுடன் நான் கொஞ்சம் பிஸி. கோச்சுக்காதீங்கோ !
ReplyDeleteஅதிசய சிவாலயம் பற்றிய அழகான இன்றைய தங்களின் பதிவுக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துகள். நன்றிகள். வாழ்க !
;) 1336 ;)
ooo ooo
மீண்டும் இன்று பழைய பதிவுகளின் எண்ணிக்கையில் மேலும் ஒரு குழப்பம்.
ReplyDelete2013= 366
2012= 395
2011= 380
Total=1141
இன்னும் கூட அடிக்கடி குட்டிபோட்டுக்கொண்டே உள்ளீர்களே ! ;)))))
எப்படி 1139 என்பது 1140 ஆச்சு? இன்று 1140 என்பது எப்படி மேலும் ஒன்று கூடி 1141 ஆச்சு?
என்னவோ போங்கோ! எதைத்தான் நான் நினைவில் வைத்துக்கொள்வது !!!!!
எப்படித்தான் புள்ளிவிபரங்களை சேகரித்துக் கணக்கு வைத்துக்கொள்வது?
மாற்றி மாற்றி ஏதாவது செய்து என்னை அடிக்கடி திடுக்கிட வைக்கிறீர்களே ! நியாயமா ? சொல்லுங்கோ !
;) 1337 ;)
தெரியாத தகவல்கள் தாங்கிவரும் பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்தியாசமான கோயில் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஜ்யோதிர் லிங்க காணொளி இப்போது தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteநந்தி இல்லாத சிவன் கோவில்...
ReplyDeleteபடங்களூடன் அருமையான பகிர்வு அம்மா.
சிறு வயதினில் அடிக்கடி பாடிய திருவாசக வரிகளை உங்கள் பதிவினில் மீண்டும் படித்த போது மனதினில் ஒருவித உற்சாகம்.
ReplyDeleteவித்தியாசத் தகவல்கள்
ReplyDeleteஅருமை.
இனிய நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
கேள்விப்பட்டிராத தகவல் நந்தியில்லாத சிவன் கோவில் பற்றியது. மிகமிக அழகான படங்கள். சிறப்பான தகவல் பகிர்விற்கு நன்றி.
ReplyDelete