Wednesday, July 30, 2014

ஆடிப்பூர நாயகி ஆண்டாள்
ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ்  ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.

திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.  .

ஆண்டாளை வடமாநிலங்களில் கோதாதேவி என சீராட்டி  
அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை  கோதாதேவி 
அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். 

பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். 
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். 
தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். 

அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். 

தானே அரங்கனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம் ஆடிப்பூரம்.  அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விதைத்த ஆன்மீக விதை, பிற்காலத்தில் சமயம் காக்கும் பெரும் விருக்ஷமாக வளர்ந்தது.
.
இலங்கையை நோக்கி அரங்கன் பள்ளிகொண்டு அறிதுயில் கொள்வதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்! 

உறங்குவது போல நடித்தபடி நடக்க இருக்கும் நிகழ்வுகளை 
அசை போடுகிறாராம்!

ஸ்ரீவில்லிபுத்தூரிலே  ஆண்டாள் அவதரிக்கக் காரணம்- நூற்றெட்டு திவ்ய தேசத்தில்  தெற்கு பார்த்து சயனித்துக்கொண்டு அரங்கன்  தெற்கே ஸ்ரீவில்லிபுத்தூரைப் பார்த்து படுத்துக் கிடக்க! அரங்கன் பார்வை படும் இடத்தில் எழில்பாவையாக  தன்னைக் கிடத்திக்கொண்டாளாம்! 

நூற்றெட்டுத் திவ்ய தேசப் பெருமான்களில் ஆண்டாளுக்கு 
அரங்கனின் அழகு மட்டுமே நெஞ்சைக் கவர்கிறது.
எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர்  கண்ணழகர் கொப்பூழில் 
எழுகமலப் பூவழக ரெம்மானார்  என்னுடைய 
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே

என்று பாடுகிறாள்.
திருவரங்கத்தில் அரங்கன் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக்கொள்கின்றார்.
ஆடிப் பூரத்தன்று பெரிய பெருமாளுக்குத் தினந்தோறும் காலையில் காவேரியிலிருந்து வரும் திருமஞ்சனத்தைவிட விசேஷ விமரிசையுடன் பெரிய கோயில் கைங்கரியபரர்கள் யானை மேல் கொண்டுவரும் தீர்த்தத்தால் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். 
 பெரிய பெருமாள் ஸந்நிதியிலிருந்து சேலையும் அலங்காரமும் வந்து, அலங்காரம் அமுது செய்ததும் கோஷ்டி. முதலில் வெளியாண்டாளுக்குத் திருமஞ்சனம் வந்த பிறகு உள்ளாண்டாளுக்கு வரும்.
பெரிய பெருமாள் தம்முடைய திருமஞ்சன வேதி முதலியவற்றை (கோவிலுக்குள் நுழைந்ததும் இருக்கும்) உள்ளாண்டாளுக்குக் கொடுத்தனுப்புவார்.

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் – கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் ! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்! நமக்குக் காட்டிக் கொடுத்துவிட்டாளே..!! 
அதனால்தான் அது கோதற்ற இனிய கோதைத் தமிழ் என்றானது
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே என்று கூறி, 
ஆண்டாள் திருவடிகளை வணங்குவோம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், 
அழகான புன்முறுவலோடு காட்சியளிக்கிறாள். 

சாய்ந்த எழில்  கொண்டை, மூன்று வளைவுகளோடு கூடிய திருமேனி, கையிலே அழகிய கிளி என்று அழகிய மணவாளனான ஸ்ரீரங்கமன்னாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஆண்டாளின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாளுக்காக ஸ்ரீரங்கநாதன், ரங்கமன்னாராக ராஜகோபாலனாக கண்ணனாக எழுந்தருளியுள்ளார். 

 ஸ்ரீவைகானஸ ஆகம விதியின்படி ராஜகோபாலனுக்கு வலதுபுறம் 
ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருளியுள்ளதால் மஹாலட்சுமியின் அவதாரமான ஸ்ரீருக்மணி பிராட்டியின் அம்சமும் உடையவளாகிறாள். 

க, கருணையே வடிவமான மஹாலட்சுமியின் அம்சத்துடனும், புராணத்தின்படி பொறுமையே வடிவமான பூமிப் பிராட்டியின் அம்சத்துடனும், தன்னையே கோபிகையாக ராதையாக எண்ணி பக்தி செய்ததால் அன்பே வடிவமான, நீளாதேவியான ராதையின் அம்சத்துடனும் ஸ்ரீஆண்டாள்  ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியுள்ளது மிகவும் சிறப்பானது. 

பூமிப்பிராட்டி ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தது போல, உபநிடதங்கள் எல்லாம் திருப்பாவையாக அவளால் சொல்லப்பட்டது. என  குறிப்பிடுகிறார் வைணவ ஆசாரியர் சுவாமி பெரியவாச்சான் பிள்ளை

23 comments:

 1. ஆடிப்பூர நாயகி
  ஆண்டாளுக்கு
  என் காலை வந்தனங்கள்
  நமஸ்காரங்கள் !

  >>>>>

  ReplyDelete
 2. கடைசி படத்தில் அம்பாளின் அரக்கு பார்டருடன் கூடிய வெண்பட்டுப்புடவை

  எடுப்பான மூக்கினில் இரு பக்க மூக்குத்திகள் + புல்லக்கு !

  இடுப்பினில் ஒட்டியாணம்

  கழுத்தினில் காசு மாலை ...

  காதினில் அட்டிகை

  மார்பினில் சுற்றிவர மாங்காய் டிசைனில் ஆபரணங்கள்

  நெற்றியில் தலைகீழ் முக்கோணத்தில் பச்சை மரகதக் கல் பதிந்த மங்கலப் பொட்டு

  கருத்த முடிக்கொண்டையில் பெருமாளின் சங்கு சக்ர நாம அடையாளங்களைப் பிரதிபலிக்கும் கிரீட ஆபரணங்கள்

  முரட்டு மலர் மாலைகள்

  பக்தியில் சொக்கிப்போய் கண்ணைமூடிக்கொண்டு அவள் கனவுலகில் மிதக்கும் காட்சி

  என எல்லாமே புதுமை, இனிமை, பதிவுக்கே ஓர் பெருமை !

  >>>>>

  ReplyDelete
 3. கீழிருந்து நாலாம் படத்தில் அது என்ன கண்ணாடி சேவையோ ?

  பார்க்கவே தேங்காய்ச்சேவை போல ருசியோ ருசியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 4. கீழிருந்து ஏழாம் படத்தில் அந்த சந்நதியிலேயே போய் நாம் நிற்பது போன்ற பிரமையை ஏற்படுகிறது.

  ஒரே வெள்ளி மயம்.

  திருவாசி, சிம்மாஸனம், முரட்டு பேலா, துளஸி தீர்த்த பாத்திரங்கள் என எல்லாமே புது வெள்ளியில் சும்மா ஜொலிக்கின்றன.

  காலை எழுந்ததுமே எல்லோருக்கும் திவ்ய தரிஸனம்.


  >>>>>

  ReplyDelete
 5. கோதா ஸ்துதி மாலோல கண்ணன் + ரங்கநாத தேசிகன் பாடிய பாசுரங்களின் இனிய காணொளி கொடுத்துள்ளது மேலும் சிறப்பாக அமைந்துள்ளன.

  >>>>>

  ReplyDelete
 6. ஏற்கனவே பார்த்துப்பார்த்து பலமுறை பரவஸம் அடைந்துள்ள அனைத்து ஆண்டாள்களின் கம்பீரமான தரிஸனங்களும் அக்கார அடிசலாக தித்திக்கின்றன.

  எவ்வளவு முறை பார்த்தாலும் திகட்டவே திகட்டாத காட்சிகள்.

  >>>>>

  ReplyDelete
 7. அதுவும் ஆண்டாள் தன் கழுத்தில் மாலையணிந்து கண்ணாடி சேவை செய்யும் போது, அவள் மனதில் உள்ள மணாளனே அதே மாலையுடன் காட்சி தரும் படம் A1 ;) எவ்வளவு ஒரு ஆத்மார்த்தமான பக்தியுடன் கூடிய காதல் ;)

  >>>>>

  ReplyDelete
 8. அற்புதமான
  அழகான
  அசத்தலான
  அலங்காரங்களுடன் கூடிய
  அம்பாள்
  ஆண்டாள் பற்றிய
  என் அம்பாளின் கிளி கொஞ்சும்
  பதிவுக்கு நன்றியோ நன்றிகள் !

  >>>>>

  ReplyDelete
 9. ஆடிப்பூர மஹிமைகளை அறியத்தந்து எங்களை
  ஆடிப்போக வைத்து ..... அந்த
  ஆண்டாள் [கண்] ஆடியில்
  தன் உருவத்தைக்காணாமல்
  பெருமாளையே மாலையுடன்
  காணும் சம்பவம் பார்க்கும் நம்
  மனதை மயங்கிச் சொக்க வைக்கிறதே !

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 10. அனைத்து விளக்கங்களும் படங்களும் மிக அருமையாக சிரத்தையாகக் கொடுத்து மகிழ்வித்துள்ள அம்பாளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

  பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்டாளின் பெருமைகள் இந்த உலகினில் பேசப்பட்டு வருவது போல, பதிவுலகிலும் என்றும் தங்கள் சேவை பலராலும் பேசப்பட்டு வரும்.

  எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எந்த நினைவில் இருந்தாலும், எந்த மனதுடன் இருந்தாலும், எந்தவொரு சூழ்நிலையில் இருந்தாலும் அதில் ஓர் மகிழ்ச்சியுடனும் இனிய பல நினைவலைகளுடனும் வாழ்க ! வாழ்க!! வாழ்க!!!

  ;) 1353 ;)

  oo oo oo oo oo

  ReplyDelete
 11. பக்தி மயமான பதிவு.. ஆண்டாளின் அடிமலர் போற்றும் மனதில் ஆனந்த கோலாகலம்.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  ReplyDelete
 12. ஆடிப்பூரம் நன்னாளில் அருமையாக உங்கள் பதிவு! நன்றி!

  ReplyDelete
 13. ஆடிப்பூர நாயகியின் அற்புதமான படங்களுடன்
  அருமையான பதிவு!

  நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 14. அப்பா..........அழகோ அழகு..........

  ReplyDelete
 15. ஆடிப்பூர நாயகியின் அழகான படங்கள், சிறப்பான தகவல்கள். ஆண்டாளின் தரிசனத்தை காண உண்மையில் கண்கோடி வேண்டும்.
  நல்பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 16. ஆடிப்பூர நாயகி ஆண்டாளின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.
  கோதையின் படங்கள் அழகு.
  ரங்கமன்னாரை மணந்த ஆடிப்பூர நாயகி ஆண்டாள் திருவடிகளே சரணம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அழகான படங்கள். கண்கொள்ளா காட்சி. மனம் நிறைவாக இருக்கிறது.நன்றி.

  ReplyDelete
 18. ஆடிப்பூர நாகியும், அவர் கதையுமறிந்தது.
  மகிழ்வு. இனிய பாராட்டுடன்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. இன்று வலைப் பதிவுகளில் ஆண்டாள் பற்றியும் ஆடிப்பூரம் பற்றியும் பதிவுகள்பல வந்துவிட்டன,. இருந்தாலும் ஆன்மீகப் பதிவுகளில் அழகு படங்களுடன் இனிய விளக்கங்களுடன் இப்பதிவு அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. ஆடிப்பூரம் உங்கள் நினைவே வந்தது. வந்துவிட்டேன். நன்றி.

  ReplyDelete
 21. ஆடிப்பூரத்தன்று ஆண்டாளையும் அவள் கைக் கிளியையும் தரிசனம் செய்ததே எங்கள் புண்ணியம். அவளது கண்வீச்சில் மயங்கி மடியில் தூங்குகிறார் வடபத்ர சாயி. மாட்சிமை அவள் பார்வையில் மேலோங்குகிறது. இத்தனை அழகிய கோலங்களை எங்களுக்குக் காண்பித்துக் கொடுத்த உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 22. ஆடிப் பூர நாயகி அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 23. உங்களின் தளத்தை இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.
  இணைப்பு இதோ http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_5.html

  ReplyDelete