Saturday, July 26, 2014

சௌமாங்கல்யங்கள் வர்ஷிக்கும் ஆடி அமாவாசை..



ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது.

ஆடி மாதத்தில் ஆத்மாக் காரகனாகிய சூரியன் சந்திரனின் ராசியான கடகத்தைக் கடந்து கொண்டிருப்பார்;அந்த சூரியனுடன் மனக்காரகனாகிய சந்திரன் ஒன்று சேரும் நாள் தான் ஆடி அமாவாசை ஆகும்;

வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. 

ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். அந்த சுழற்சி முறைப்படி ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். 

அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.

மிகவும் முக்கியத்துவம், சிறப்பம்சம் நிறைந்ததாக கூறப்படும் திதி அமாவாசை. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது அமாவாசை திதியாகும். 
ஆண்டுக்கொரு முறை அவர்களது திதி நாளில் திவசம், சிரார்த்தம் செய்தாலும் மாதந்தோறும் அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்வது புண்ணிய காரியமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமாகும்.
சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

இந்த இரண்டு கிரகங்கள் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது  செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. 
இத்தகைய வழிபாடுகளால் முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும். அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தாய், தந்தை இறந்த தேதி, திதி ஆகியவற்றை மறந்தவர்கள், தவற விட்டவர்கள்  ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். 
இறந்தவர்களை நினைத்து அன்றைய தினம் வீட்டில் அவர்கள் படத்துக்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலைவாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்துக்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசையன்று பல கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. 

குறிப்பாக கிராமங்களில் சக்தி, அம்மன், கிராம தேவதைகள், ஐயனார், முனீஸ்வரன், கருப்பண்ணசாமி போன்ற காவல் தெய்வங்களுக்கு படையலிட்டு, பலி கொடுத்து பூஜைகள் இன்றளவும் விமரிசையாக நடக்கின்றன. 

அமாவாசை நடுநிசி பூஜைகளும் சில இடங்களில் விசேஷமாக நடத்தப்படுகின்றன. அதேபோல் திருஷ்டி, தோஷம் கழிப்பு போன்ற மந்திர, தந்திர சடங்குகளையும் அமாவாசையில்தான் செய்வார்கள், தொடங்குவார்கள்.

‘அமாவாசை என்பது நிறைந்த நாள்’ என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக உள்ளது. சாஸ்திரத்தில் இதற்கான ஆதாரம், சான்றுகள் இல்லை. 

அமாவாசை என்பது இருட்டு நாள். நீத்தார் நினைவு நாள் என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரதோஷ கால பூஜையில் திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புது காரியமும் தொடங்க கூடாது என பிரதோஷ வழிபாடு வலியுறுத்துகிறது. 

ஆகையால் அமாவாசையை நீத்தார் நினைவு கூர்வதற்கு மட்டுமே பயன்படுத்துவது நலம் தரும். ஆடி அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபட்டு. அவர்களது ஆசியையும், இறைவனின் அருளையும் பெறுவோம்.;

  விண்ணில் பித்ருக்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் இறந்த முன்னோர்கள் பித்ரு தேவதைகள்,எமதர்மராஜா போன்றவர்களின் அனுமதியோடு பூமிக்கு வரும் மூன்று நாட்களில் முதன்மையானது ஆடி அமாவாசை!!

அவ்வாறு வருகை தந்து பூமியில் வாழ்ந்து வரும் தனது வம்சாவழியினரில் ஒருவராவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கிறார்களா? என்பதை கவனிப்பார்கள்;

அவ்வாறு யாராவது ஒருவர் செய்தாலும் அதைப்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பரிபூரண ஆசி வழங்குவார்கள்;இந்த ஆசியினால் அந்த குடும்பத்திற்கு அடுத்த ஒரு வருடத்திற்கு வளங்கள் பெருகும்;நலங்கள் அதிகரிக்கும்;அதே சமயம் வர இருக்கும் ஆபத்துக்கள்/விபத்துக்களில் இருந்து பித்ருக்களின் ஆசி தடுத்து காப்பாற்றிவிடும்; 

ஒரே ஒரு ஆடி அமாவாசை நாளன்று  செய்யும் அன்னதானமானது,பித்ருக்கள் உலகில் வசிப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்குரிய உணவாகப் போய்ச் சேருகிறது;



இந்த நன்னாளில் இல்லறத்தார் ஒவ்வொருவருமே முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) தர்ப்பணம் செய்ய வேண்டும்;

ஒவ்வொருவருமே சிவனடி சேர்ந்த தனது பெற்றோர்களின் நினைவாகவோ அல்லது தாத்தா பாட்டியின் நினைவாகவோ அவர்கள் சிவனடி சேர்ந்த திதியை அறிந்து கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டும் அந்த திதி வரும் நாளில் அவரவர்களுக்கு முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்; ஒரு ஆண்டில் ஆறு வெவ்வேறு நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;

  அனைவரது நியாயமான கோரிக்கைகளும் சில நாட்கள்/வாரங்களுக்குள் முன்னோர்களின் ஆசியாலும், குருவின் அருளாசியாலும் நிறைவேறின பல ஆண்டு வாழ்வியல் சிக்கல்கள் நிரந்தரமாகத் தீர்ந்தன;வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைத்தன;திருமணத்தடை பலருக்கு நீங்கியது;குழந்தைப் பாக்கியம் வேண்டி வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் புத்திர யோகம் கிடைத்தன;பூர்வீகச் சொத்து சிக்கல்கள் பலருக்கு தீர்ந்தன;



அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள். 

ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும்விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். 

பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. 

இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார். 

முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. 

உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். 

இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

18 comments:

  1. ஆடி அமாவாசை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. ஆடி அமாவாசையின் சிறப்புகள் பற்றிய சிறப்பான பதிவு. நான் புனர்பூச கடகன்! கடக ராசி, கடக லக்னம்!

    ReplyDelete
  3. அடியிலேந்து வருகிறேனாக்கும் ! ;)

    திருஷ்டிப்பூசணிக்காய்கள் மூன்றையும்
    திருஷ்டிபடும்படியாக அழகாக
    அலங்கரித்துள்ளார்களே !

    அதன் அடியிலே ஒன்றைப் பிளந்து
    பொடிப்பொடியா நறுக்கி, காரசாரமா
    மோர்க்கூட்டு பண்ணினா ஜோரா இருக்குமாக்கும்.

    >>>>>

    ReplyDelete
  4. அதென்ன அதற்கு மேலே உள்ள படத்தில்
    பெண் வேடமிட்ட ஹனுமாரா ?

    புடவைகட்டி, வடை மாலையும்,
    வளையல் மாலையுமா?

    ஏதேதோ நடத்துங்கோ ..... நடத்துங்கோ .......

    காலையிலேயே வடை தரிஸனம்
    காட்டி என் பசியைக்கிளப்பிட்டீங்கோ ;)

    >>>>>

    ReplyDelete
  5. கீழிருந்து மூன்றாவது ......
    அம்பாளு .... நம்பாளு .....
    எங்கேயோ பார்த்த ஞாபகம் ....
    வேறெங்கே ? உங்களிடமே தான்.
    உங்கப் பதிவுலேயே தான்.....
    ஆனாக்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ....
    பார்க்காம ..... கண்ணே பூத்துப்போச்சு !
    தெரியுமோ ?

    >>>>>

    ReplyDelete
  6. ஆஹா அதற்கும் மேலே அன்னதானம் .......
    இலை போட்டு ...... பரிமாறி .......
    ரெடியா ரெண்டு காக்கா .....
    ஜோடியோ ....... சூப்பர் தான் !!!!!

    >>>>>

    ReplyDelete
  7. நீத்தார் கடன் .... திதி .... பூஜை ....

    ஆஹா ஆடி அமாவாசை அல்லவா இன்று ....

    நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்கோ.

    ஸ்நானம் பண்ணிட்டு மடியா நானும் இப்போ
    தர்ப்பணம் பண்ணனுமாக்கும் !

    >>>>>

    ReplyDelete
  8. தலைப்பும் முதல் நான்கு அம்பாள் படங்களும் அருமையோ அருமை.

    அனைத்து விளக்கங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.

    வாழ்க ! வாழ்க!! வாழ்க !!!

    ;) 1349 ;)

    ooo ooo

    ReplyDelete
  9. விளக்கமான ஆடி அமாவாசையின் சிறப்புகள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

    ReplyDelete
  10. ஆடி அமாவாசையின் சிறப்புகளை மிக அற்புதமாக சொன்னீர்கள்.
    ஜபம், தபம், தானம், தருமம் செய்து எல்லோரும் முன்னோர்கள், குரு, கடவுள் ஆசி பெற்று வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று வாழ ஏற்ற கட்டுரை. நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வணக்கம்
    அம்மா
    ஆடிஅமாவாசை பற்றிய விளக்கம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. மகத்துவம் மிக்க ஆடி அமாவாசையின் சிறப்புக்களுடன் -
    அழகான படங்கள்.. அரிய செய்திகள்.. இனிய பதிவு..

    ReplyDelete
  13. விரிவான விளக்கங்களுடன் கூடிய நல்ல பதிவு. நன்றி அம்மா.

    ReplyDelete
  14. ஆடி அமாவாசை பற்றிய விளக்கமான தகவல்கள்! வழக்கம் போல அசத்தலான படங்கள், திருப்பூந்துருத்தி தல தகவல் விசேஷம்! அருமை! நன்றி!

    ReplyDelete
  15. பித்ரு தோஷம், பித்ரு சாபம் , பித்ரு கடன் போன்றவை நம்மை துயர் செய்யாமல் இருக்க பாரம்பரியமாய் கூறியுள்ளவற்றை வரும் சந்ததியினர் உணரவும் அறியவும் அருமையான பதிவு.

    நாங்க செதலபதி(திலதர்ப்பணபுரி) - திருவாரூர் மாவட்டம் போய் வந்தோம். மன நிறைவுடன் பித்ருக்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்றோம்.

    ReplyDelete
  16. ஆடி அமாவாசையைப் பற்றி அறிந்தேன், மிக்க
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  17. விரிந்த வினளக்கமான ஆடி அமாவாசை.
    மிகுந்த நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. ஆடி அமாவாசை சிறப்புகள் அறியப்பெற்றேன். அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete