Tuesday, July 15, 2014

வண்ணமிகு தேரோட்ட வைபவம்


சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே

ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க  நடைபெறும்..
விழா நாள்களில் வெள்ளிச் சப்பர வாகனம், வெள்ளி கற்பகவிருட்ச வாகனம், வெள்ளிக் கமல வாகனம், தங்கபூத வாகனம், குதிரை, காமதேனு, ரிஷப வாகனங்கள், இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா வருவர்கள்..
விழாவில் தினமும் மாலை பஞ்சமூர்த்திகளுக்கு 
சோடச தீபாராதனை நடைபெறும்.

தினமும் மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்திக் கலைநிகழ்ச்சிகளும், இரவில் சுவாமி, அம்பாள் வீதியுலாவின் போது திருநெல்வேலி சிவபூசை செல்வர் திருக்கூட்டத்தாரின் 
பன்னிரு திருமுறை பாராயணமும் நடைபெறுவது சிறப்பு..

சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளல், 
உள்பிரகாரம் உலா வருதல்,  பச்சை சாத்தி எழுந்தருளி திருவீதி உலாவும்  நடைபெறும்... 
 சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் வீதி உலாவும், 
 தேர் கடாட்சமும் நடைபெறும்.. 

அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து  சுவாமி தேரும், மற்ற
 4 தேர்களும்  நிலையை அடையும்..  பின் சப்தாவர்ண பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறும்..

அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனி தேர்த் திருவிழா  கொடியேற்றத்துக்குப் பின்னர் நடைபெற்ற மஹாதீபாராதனை.
அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனி தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை கொடியேற்றத்துக்குப் பின்னர் நடைபெற்ற மஹாதீபாராதனை.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின்சிறப்பு நிகழ்ச்சியாக  நடைபெற்ற தேரோட்டம். -தேரில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) தேரில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர்.









15 comments:

  1. வண்ணமிகு தேரோட்டம் செய்திகளும்படங்களும் அழகோ அழகு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. தேரோட்ட வைபவத்தை அழகான படங்களுடன் கூடிய வர்ணனையுடன் நாங்களும் கண்டுகளித்தோம் அம்மா. பகிர்ந்துக்கொந்த்தற்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல காலைப் பொழுதில் உங்கள் தளத்திற்கு வந்தேன். சிவனும் பார்வதியும் தேரோட்டத்தில் காட்சி கொடுத்தார்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  4. ஆனிப் பெருந்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியை கண்டேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
  5. தேரோட்டம் கண் குளிற தரிசித்தோம் நன்றி

    ReplyDelete
  6. தேரோட்டத்துடன் திவ்விய தரிசம் சகோதரி!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நெல்லையப்பர் தேரோட்டத்தின் அழகு - இனிய பதிவு.
    கண்கொள்ளாக் காட்சி.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  8. இம்மாதிரி விழாக்கள் மக்கள் ஒற்றுமையையை வலியுறுத்தும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மனதில் தங்கிடும் தங்கமான தலைப்பு அருமை.

    >>>>>

    ReplyDelete
  10. முத்தான முதல் படத்திலிருந்து அத்தனையும் அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  11. நெல்லையப்பர் தேர்த்திருவிழாவும், மஹா தீபாராதனையும் காணக்கண்கோடி வேண்டும் எனத்தோன்றுகிறது.

    >>>>>

    ReplyDelete
  12. கரு-கருவென கரு ம்/ப் பு யானைகளும், கடைசி கோபுரமும் அசத்தல்.

    >>>>>

    ReplyDelete
  13. இன்றைய அழகான பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள். வாழ்க !

    ;) 1338 ;)

    ooOoo

    ReplyDelete
  14. தேரோட்ட விவரணமும் 2 யானைப் படங்களும் மிக அழகு.
    இனிய நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. இக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். தீபாராதனை,தேரோட்ட வைபவம் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கு. நன்றி.

    ReplyDelete