விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)
ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா
என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி,
சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)
ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி
சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)
கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)
ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)
இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)
பாட்டின் பொருளில் பாயசத்திற்கான குறிப்புகளை நீக்கிவிட்டுப் படித்தால் தாசர் கூறவரும் பக்தியின் தத்துவம்; ராம நாமத்தின் மகிமை ஆகியவை புரியும்.
அதாவது இப்படி:
கவனத்துடனும், வைராக்யத்துடனும் செய்ய வேண்டியது என்னவென்றால்; இதயத்தில் (ராமா) என்கிற எண்ணத்தை விதைத்து; புத்தியால் அதன் மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, வரும் சந்தோஷத்தை / ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது? மறுபடி ராமா, ராமா என்கிற புரந்தர விட்டலனை நினைத்துதான்.
பாயசம். பால் பாயசம். இப்படி சொன்னவுடன் சாதாரண மக்களுக்கு.
வாயில் எச்சில் ஊறுமாம்.
ஆனால் புரந்தரதாசருக்கோ..!!
வேதங்கள், புராண இதிகாசங்கள் அனைத்தையும் கற்றதோடு இல்லாமல், அவற்றின் சாரத்தை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிய கன்னடத்தில், பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்துக் கொடுப்பவராயிற்றே.
அவருக்கு இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போதே
வாயில் எச்சில் ஊறுகிறதாம்.
ராமா. கிருஷ்ணா. விட்டலா.
இந்தப் பெயர்களை அடிக்கடி சொன்னால், பால் பாயசத்தைக்
குடித்தது போல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.
கேரள மாநிலத்தில் ஆடி மாதத்தின்போது தினந்தோறும் மாலையில் நிலவிளக்கு எனும் குத்துவிளக்கேற்றி, "அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு' நூலை வாசிக்கும் வழக்கம் இருந்துவருகிறது.
எனவே, ஆடி மாதம் (கேரளத்தில் கர்க்கடக மாதம்) "ராமாயண மாதம்' என அறியப்படுகிறது.
எனவே, ஆடி மாதம் (கேரளத்தில் கர்க்கடக மாதம்) "ராமாயண மாதம்' என அறியப்படுகிறது.
பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய அத்யாத்ம ராமாயணம் நூலை அனைவரும் வாசிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், கோயில்கள், கலாசார அமைப்புகள் ஆகியவை மாநிலம் முழுவதும் அத்யாத்ம ராமாயணம் வாசிப்புக்கும் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளன.
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், கோயில்கள், கலாசார அமைப்புகள் ஆகியவை மாநிலம் முழுவதும் அத்யாத்ம ராமாயணம் வாசிப்புக்கும் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளன.
ஆன்மிகத்துடன் ஆயுர்வேதம் கலந்த ஒரு புது வாழ்க்கை துவங்குகிறது
கேரளாவில் மலையாள மாதமான கற்கடக மாதம் (தமிழில் ஆடி மாதம்) ராமாயண மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் வீடுகளிலும், கோயில்களிலும் ராமாயண பாராயணம் நடப்பது வழக்கம்.
ஆடி மாதம் பிறந்தது முதல் ராமாயண பாராயணம் துவங்குகிறது.
இந்த ஒரு மாதமும் எல்லா பகுதிகளிலும் ராமாயணம் எதிரொலிக்கும். ராமாயண பாராயணம். ஆன்மிக உரையாடங்கள், சத்சங்கங்கள் என்று இந்த மாதம் முழுவதும் ஆன்மிகத்தில் மக்கள் ஊறி திளைப்பார்கள்.
ஆடி மாதம் முழுவதும் ஆன்மிக ஆரோக்கியம்
குறித்து சிந்திக்கும் விதத்தில் அமையும்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கோயில்களில் ராமாயண மாதத்தை முன்னிட்டு ராமாயண பாராயணம் நடந்து வருகிறது.

இந்த ராமாயண மாதத்தில் மக்கள் தங்கள் வழக்கமான உணவு முறை, வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவர்.
ஏராளமான கேரள மக்கள் இந்த ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பர்.
இந்த ஒரு மாதமும் சைவ உணவை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.
பலர் ஆயுர்வேதம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளையும்
ஆடி மாதம் தான் துவங்குவார்கள்
.மழை பெய்து சுற்றுச்சூழல் குளிர்ச்சியாக இருப்பதால் ஆயுர்வேத சிகிச்சைக்கு இந்த காலநிலை சிறந்ததாக கருதப்படுகிறது.
நோய் இல்லாவிட்டாலும் சுக சிகிச்சைக்காக இந்த மாதத்தில்
ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளை நாடுவோர் ஏராளம்.
கேரளாவில் பரவலாக காணப்படும் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் சிகிச்சைக்கு வருவோரை வரவேற்க சிறப்பாக தயாராகும்..
கற்கடக கஞ்சி == கற்கடக மாதத்தில் மருந்து கஞ்சி குடிப்பது கேரளாவில் விசேஷமான அம்சம்.
உடலை தூய்மைப்படுத்தும் சக்தி உள்ளதாக நம்பப்படும் கற்கடக கஞ்சியை ராமாயண மாதத்தில் அருந்துவோர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.
ஆயுர்வேத மையங்கள் கற்கட கஞ்சி தயாரிக்கும் பணியிலும்
தீவிரமாக ஈடுபடும்...
தசபுஷ்பம், தழுதாமை, கைதோநி, முயல் செவியன், முக்கூட்டு, விஷ்ணுகாந்தி, கீழாநெல்லி உள்ளிட்டி 30க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய், கிராம்பு, சுக்கு, கிராம்பு, ஜீரகம் ஆகியன சேர்த்து இந்த மருந்து கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயாளிளுக்கு என தனி கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது
.இந்த கஞ்சி குடிக்கும்போது அசைவம்,
போதை பொருட்களை பயன்படுத்தமாட்டார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான மூலிகைகளை
கஞ்சியில் சேர்க்கின்றனர்.

ஆயுர்வேத மருத்துவப்படி இது உடலைப்பழுதுபார்க்கும் மாதம்.
உழிச்சலுக்கும் பிழிச்சலுக்கும் போய் உடலைப் பேணுகிற காலம்.
சாதாரணர்களுக்கு இருக்கவே இருக்கிறது கர்க்கிடகக் கஞ்சி.
இப்போது அதுவும் ·பாஸ்ட் ·புட்போல எளிதாகக் கிடைக்கிறது.
உழிச்சலுக்கும் பிழிச்சலுக்கும் போய் உடலைப் பேணுகிற காலம்.
சாதாரணர்களுக்கு இருக்கவே இருக்கிறது கர்க்கிடகக் கஞ்சி.
இப்போது அதுவும் ·பாஸ்ட் ·புட்போல எளிதாகக் கிடைக்கிறது.
மத நம்பிக்கைப்படி இது ராமாயண மாதம். இந்த மாதம் முழுவதும்
வீடுகளில் ராமாயண வாசிப்பு நடக்கும்.
இதை வணிகமயமாக்கியதில்
தொலைக்காட்சிகளுக்கும் பதிப்பாளர்களுக்கும் பங்குண்டு.
எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ராமாயண பாராயணம். எல்லா பதிப்பகங்களிலிருந்தும் ராமாயணப் பிரதிகள் வெளியீடு. மலையாளத்தின் தந்தையான எழுத்தச்சன் தான் கர்க்கடக மாத பெஸ்ட் செல்லர்.
மலையாளத்தின் தந்தை என அறியப்படும் கவிஞர்
துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்
ராமாயணம் எல்லா விதமான பதிப்புகளிலும் - ராமனின் அரசாட்சிதான் சிலாக்கியமானது என்பது பொது வழக்கு.
காந்தி கனவு கண்டது ராமராஜ்ஜியத்தைத் தானே.
ஆனால் அதைவிடச் சிறப்பான ஆட்சி பரதன் நடத்தியது
என்கிறார் எழுத்தச்சன்.

ராமனின் ஆட்சியில் ஒரு சலவைத் தொழிலாளியாவது
ஆட்சேபம் தெரிவிக்கிறான்.
சீதையின் கற்பைப் பற்றி அவன் எழுப்புகிற
சந்தேகம்தான் அக்கினிப்பிரவேசத்துக்குக் காரணம்.
ஆனால் பரதனின் ஆட்சிக் காலத்தில் ஒரு ஆள் கூட ஆட்சேபம் தெரிவித்ததாகக் கதையில்லை.
ஆகவே அதுவே சிறப்பான அரசாட்சி என்னும்
வித்யாசமான பார்வை சிறப்பாகும்...

துளசிதாசர் இயற்றிய இந்தி இராமாயணமும்
எழுத்தச்சன் எழுதிய மலையாள இராமாயணமும்
தியாகையரின் இராமரைப் பற்றிய பாடல்களும்
பக்தி ரசம் ததும்பப் பாடப்பட்டவை
தொடர்புடைய பதிவுகள்
ஆற்றல் சிறக்கும் கிஷ்கிந்தாகாண்டம்
சுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..
மணிராஜ்: ராமாயண மாதம்
இராமாயண மாதம் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)
ReplyDeleteராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்; விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)
ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம) கவனம் (ஒருமுனைப்படுத்தல்) ................................
சூப்பரோ சூப்பர் !
சப்புக்கொட்ட வைத்து விட்டீர்கள்.
எனக்கு நாக்கில் நிஜமாகவே எச்சில் ஊறுகிறதாக்கும் !;)))))
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteஜாடி+மூடி மற்றும் வெங்கல கிண்டிப் படங்கள் வெகு அழகாக உள்ளன.
Deleteகேரள இராமாயண பாராயண முறைகள், மருத்துவ முறைகள், மூலிகைக் கஞ்சி என எத்தனை எத்தனைத் தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteஅத்தனையும் அழகோ அழகு. ருசியோ ருசி.
அந்தக்கஞ்சியில் கொஞ்சம் தாங்கள் தந்து நான் பருகுவது போல கற்பனை செய்துகொண்டேன்.
அதுவே படா ஜோராக்கீதூஊஊஊ. மனதுக்கு மிகவும் தெம்பாக்கீதூஊஊஊ. ;)
>>>>>
கவிஞர் துச்சத்து இராமனுஜன் எழுத்தச்சன் படம் எங்கிருந்து தான் பிடித்தீர்களோ !
ReplyDeleteஅனைத்துப் படங்களும் இன்று வழக்கம்போல பிரமாதமாக உள்ளன.
>>>>>
குத்துவிளக்கு ஏற்றி அத்யாத்ம இராமாயணம் கிளிப்பாட்டு படிக்கும் கிழவியே இவ்வளவு தெளிவாகவும் தேஜஸாகவும் இருக்கிறார் என்றால் அதற்குக்காரணமான ஸ்ரீமத் இராமயணத்தின் மஹிமையையும், சிறப்பினையும் என்னவென்று நாம் சொல்வது.
ReplyDeleteஇராமாயணம் எத்தனை முறை வாசித்தாலும், கேட்டாலும் அலுக்கவே அலுக்காதே ..... தங்களின் பதிவுகள் போலவே !
>>>>>
காணொளி முதல் தொடர்புடைய பதிவுகள் வரை அனைத்துமே தந்து அசத்தியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
இந்தப்பதிவினால் இன்று பல நல்ல வெற்றிச்செய்திகள் நம்மை வந்தடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. ;)))))
நீடூழி வாழ்க !
;) 1346 ;)
oooOooo
அழகிய படங்களுடன் ராம நாமத்தின் மகிமை சிறப்பு அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்கள் அட்டகாசம்.
ReplyDeleteபாயச உவமை நன்றாகத்தானே இருக்கிறது?
ராமாயண மாதம் கேள்விப்பட்டதில்லை.
கீதா பிரஸ் வெளியிட்ட அத்யாத்ம ராமாயணம் விரும்பிப் படித்திருக்கிறேன். யார் எழுதியது நினைவில்லை.
ReplyDeleteபுதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றிம்மா.
ReplyDeleteகோவில்களிலும் சில வீடுகளிலும் ராமாயண பாராயணம் செய்வது கண்டதுண்டு. ஆனால் அது ஆடி மாதத்தில் என்பது அறியாத தகவல் . வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தாசர் பாடல்,பாயச பாடல் நன்ராகத்தான் இருக்கிறது.
ReplyDeleteராமநாமம் ருசி ருசி என்று தியாகராஜர் கூறியது போல் இருக்கிறது.
ராமா, கிருஷ்ணா, விட்டலா எனும் போது ருசி அற்புதம் தான்.
கர்க்கிடககஞ்சி தெரிந்து கொண்டேன்.
ராமயண பாராயணம காலம் தகவல் அருமை.
வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_5.html?showComment=1407198730380#c3047236352083437617
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-