Tuesday, July 8, 2014

மாங்கனித் திருவிழா வைபவம்
காலையே போன்றிலங்குமேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு, மாலையின்
ஆங்குருவே போலுஞ் சடைக்கற்றை, மற்றவற்கு
வீங்கிருளே போலுமிடறு...

சூரிய உதயம், கடும்பகலின் சூடு, அந்திமாலையின் அற்புதம், 
கும்மிருட்டு இவை ஒரு நாளின் பல்வேறு காட்சிக்கோலங்கள். 

சிவனை நோக்கி எவ்வுருவோ நின் உருவம் எனக் கேட்டு எங்கும் எதிலும் சிவனையே காண்கிறார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான பேயார்(காரைக்கால் அம்மையார்) தேவாரகாலத்திற்கு முற்பட்டவர். அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்தோன்றியவர்.
சைவசமய எழுச்சிக்கும், பத்திமார்க்கத்திற்கும் வித்திட்ட பெண்மணி 
என்ற பெருமை இறைவனால் புனிதவதி என்று அழைக்கப்பட்ட காரைக்காலம்மையாரையே சாரும்..

"தாயுமிலி, தந்தையிலி தான் தனியன்" ஆன சிவனால் அம்மையே 
என அன்புருக விளிக்கப்படுகின்றார்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உண்டு. 
மாப்பிள்ளைஅழைப்பு,..
பரமதத்தர்-காரைக்கால்அம்மையார் திருக்கல்யாண உத்சவம் 
பதிபக்தியும் சிவபக்தியும் கொண்டவர் புனிதவதியார்..

ஆனி மாதம் வரும் பவுர்ணமி நாளில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி பவுர்ணமி தினத்தன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் காரைக்கால் நகர் முழுவதும் திரண்டுள்ள பக்தர்கள் கூடை கூடையாக இறைவன் மீது மாம்பழங்களை அள்ளி வீசி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
வாத்தியங்கள் முழங்க எங்கும் பக்திப்பரவசம்,புனிதவதி அமுது படைக்கும் வைபவமும் மாங்கனிக்கொடுக்கும் வைபவமும் நடந்து ஈசனுக்கு மகாநைவேத்தியமும் சிறப்பு  பூஜையும் நடக்கும் 
மறுநாள் பேயுரு கொண்ட அம்மையார் திருவந்தாதி  இரட்டை மணிமாலை பாடியபடியே கைலாசம் போகும் நிகழ்ச்சி நடைபெறும்..
பிரம்மமுகூர்த்தத்தில் பஞ்சமூர்த்திகளின் தரிசனமும் அம்மையாருக்குக் காட்சிக்கொடுத்து வாழ்த்தும்  நிகழ்ச்சி - காரைக்கால் அம்மையாரின் ஊர்வலம்
ஆகியவை சிறப்பான தரிசனம்..!
 
இந்தத் திருவிழாவில்  குழந்தை வேண்டி நிற்போரும் 
திருமணம் ஆக வேண்டுபவர்களுக்கும் கை மேல் பலனுண்டாம் ..

மேலதிகத்தகவல்ல்களுக்கு.. தொடர்புடைய பதிவுகள்..


. .
பவழக்கால் சப்பரம்

கணவர் மதுரையில் இருப்பதை அறிந்த அம்மையார், புஷ்ப பல்லக்கில் அவ்வூருக்குச் செல்கிறார். 

அம்மையார் வருவதை அறிந்த கணவர், தம் மனைவி, குழந்தையுடன் வந்து அவர் காலில் விழுகிறார். 

கணவனே காலில் விழுந்து வணங்கிய பிறகு இல்லற வாழ்வில் இனி ஈடுபடுதல் கூடாது என்ற எண்ணத்தில் சிவனிடம் வேண்டி தம் அழகுத் திருமேனியை உதிர்த்து பேயுருவம் கொண்டு பாதங்கள் பதிய கூடாது என்று நினைத்து அம்மையார் தலைகீழாக இரண்டு கைகளை கொண்டு நடந்து கைலாயம் செல்கிறார். 

அப்பொழுது சிவபெருமான் எழுந்தருளி "அம்மையே" என்று அழைக்க- அம்மையார் தனக்கு பிறவாத வரம் வேண்டும் என்றும், சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண வேண்டும் மற்றும் வீடுபேறு அருளுமாறு இறைவனிடம் கேட்டார்...

 சிவபெருமான் அம்மையாரிடம் திரு ஆலங்காடு என்ற தலத்திற்கு வருமாறும் அங்கு  ஆனந்த தாண்டவ காட்சியை அருள்வதாக பணித்தார்...

அம்மையார் திருவாலங்காடு தலத்திற்கு வந்தார் அங்கு அம்மையாரை சோதிக்க விரும்பிய ஐயன் இடுகாட்டில் நள்ளிரவில் பேய்களை கொண்டு சோதித்தார்... அந்த சோதனையை அம்மையார் இறைவன் மீது கொண்ட பக்தியால் வென்றார்.. 

 சிவபெருமான் உமையாளோடு ஆனந்த தாண்டவ காட்சியை அம்மையாருக்கு அளித்தார்... தாண்டவ காட்சியை கண்ட அம்மையார் சோதி வடிவாக கொண்டு பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கூத்தனின் குஞ்சித பாதங்களில் வீடுபேறு பெற்றார்...

இன்றும் திருவாலங்காட்டில் பங்குனி சுவாதி அன்று "காரைக்கால் அம்மையார் குரு பூசை" வெகு விமரிசையாக நடைபெறுகிறது...

16 comments:

 1. அருமையான படங்களுடன் காரைக்கால் அம்மையார் அவர்களின் சிறப்பை அறிந்தேன்... நன்றி அம்மா...

  ReplyDelete
 2. ’மாங்கனித் திருவிழா வைபவம்.’

  ஆஹா ! தலைப்பிலேயே இனிப்பு !

  அதுவும் சேலம் மாவட்டத்தில் பிறந்த மாங்கனியால் கொடுக்கப்பட்டுள்ள பதிவாகையால் ’சேலத்து மாம்பழம்’ போல இனிப்போ இனிப்பு ...... அவ்வளவு ஒரு இனிப்பு ! ;)))))

  நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் வருவேன். ஜாக்கிரதை ! ;)

  >>>>>

  ReplyDelete
 3. மாங்கனித் திருவிழா பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 4. பேயாய நற்கணத்தார் என்னும் காரைக்கால அம்மையார் பற்றிய நாடகக் காணொளி கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. அதை பிறகு நான் பொறுமையாகப் பார்த்து ரஸிப்பேன்.

  >>>>>

  ReplyDelete
 5. மிகவும் பொருத்தமான படங்களை பொறுமையாகத் தேடித்தேடி இணைத்துத்தந்துள்ள தங்களின் தங்கமான குணத்திற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 6. மாம்பழத்தேர் இதுவரை நான் நேரில் பார்த்தது இல்லை. இங்கு தங்களின் பதிவினில் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சூப்பர் படம்.

  >>>>>

  ReplyDelete
 7. 63 நாயன்மார்களில் ஒருவரான அந்த காரைக்கால் அம்மையார் அன்று இறைவனால் ’புனிதவதி’ என்று அழைக்கப்பட்டுள்ளார்.

  இன்று எங்களால் குறிப்பாக என்னால் தாங்கள் ’புனிதவதி’யாகவே நினைக்கப்படுகிறீர்கள். தாங்கள் செய்து வருவதும் ஏதோவொரு நவீன முறையில் இறைத்தொண்டு தானே! தாங்கள் என்றும் நீடூழி வாழ வேண்டும். சோர்வில்லாமல் இதுபோன்ற பதிவுகள் தரவேண்டும். வாழ்க ! வாழ்க!! வாழ்க!!!

  >>>>>

  ReplyDelete
 8. கடைசி நடராஜர் படத்திற்கு முன்னால் காட்டியுள்ள தொந்திப் பிள்ளையாரப்பா நல்ல அழகோ அழகு ! ;)

  >>>>>

  ReplyDelete

 9. தன் கணவரே காலில் வந்து விழுந்ததால் அம்மையார் பேயுருவம் கொண்டார் என்ற கதையைக்கேட்டதும் எனக்கு மிகவும் சிரிப்பு வந்தது.

  தன் மனைவி பேயுருவம் எடுத்து விடுவாளோ என்ற பயத்திலேயே இன்றும் பல [டாஸ்மாக் வாடிக்கையாளர்களான] கணவன்மார்கள் மனைவியின் காலில் விழவும் அஞ்சுவது இல்லை என்பதை நினைத்ததால் சிரிப்பு வந்தது.

  >>>>>

  ReplyDelete
 10. பவழக்கால் சப்பரம் ;)

  அருமையான அழகான கதைகளைச்சொல்லி, சிறப்பான படங்களுடன் தித்திப்பான சேலத்து மல்கோவா மாம்பழம் போன்ற பதிவினைக் கொடுத்துள்ளதற்கு என் நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள். வாழ்க !

  ;) 1329 ;)

  oo oo oo oo

  ReplyDelete
 11. மாங்கனித் திருவிழாவினை நேரில் கண்டது போல இருந்தது.

  ReplyDelete
 12. சிறப்பான தகவல்கள் அருமையான படங்கள் எல்லாமே பதிவுக்கு அழகு சேர்க்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அம்மா என்று சிவபெருமானால் அழைக்கப்பட்ட காரைக்காலம்மையாரைப் பற்றிய பதிவு மிகவும் அருமை. படங்களும் சிறப்பாக உள்ளன.

  ReplyDelete
 14. மாம்பழத்தேர் முதற்தடவையாக பார்க்கிறேன். மாங்கனித்திருவிழா, காரைக்காலம்மையார் பற்றிய சிறப்பான பதிவு.அழகான படங்கள்.நன்றி.

  ReplyDelete
 15. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (30/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete