Tuesday, August 27, 2013

ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்
 ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.  
எண்ணி எண்ணி இன்புறத் தக்க வகையில் கண்ணனின் லீலைகளைக் கூறும் வரிகள் ஒவ்வொரு வரியும்! கூடியிருந்து குளிர வேண்டும்!
பகவானின் குண அனுபவங்களை அழகான வரிகளில் உணர்த்துகிறது..

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
முன்னொரு காலத்தில் தேவகி தேவியின் திருக்கர்ப்பத்தில் உதித்தான்!
கோபீ க்ருஹே வர்த்தனம் - 
யசோதா பிராட்டியாகிய கோபியின் வீட்டில் வளர்ந்தான்!
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
மாயையுடன் வந்த பூதனையின் உயிரைக் கவர்ந்தான்!

கோவர்த்தனோத்தாரணம் - கோவர்த்தன மலையைத் தூக்கினான்!

கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
கம்சனை அழித்து கௌரவர் முதலானவர்களை ஒழித்தான்!

குந்தீ ஸுதா பாலனம்
குந்தியின் மைந்தர்களான பாண்டவர்களைக் காத்தான்!

ஏதத் பாகவதம் புராண கதிதம் - 
இதுவே புராணங்களில் சிறந்ததான பாகவதம்!

 ஸ்ரீக்ருஷ்ண லீலாம்ருதம் ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகள் என்னும் அமுதம்!
கண்ணனின் பிறந்த நாள் கோகுலாஷ்டமி! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி! ஜன்மாஷ்டமி! என சிறப்பாகக்கொண்டாடுகிறோம்..!

கண்ணனின் லீலைகளைக் கூறும் புராணம் பாகவத புராணம்! 
வேதங்கள் அனைத்தையும் நான்காகப் பகுத்த பின்னரும், 
அவற்றின் உட்பொருளை சூத்திர வடிவில் பிரம்ம சூத்திரமாக எழுதிய பின்னரும், 
உபவேதமான ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை எழுதிய பின்னரும் 
முழு மன நிறைவும் பெறாத வியாஸ பகவான் நாரத மகரிஷியின் அறிவுரைக்கிணங்க இயற்றியதே கிருஷ்ண லீலாம்ருதமாகிய 
ஸ்ரீமத் பாகவதம்!
மிதமான அறிவு பெற்றவர்களானாலும் தமது சக்திக்கு ஏற்ப கிருஷ்ணனுடைய கதைகளை அனுபவிப்பது உசிதம்தான். 

அமுதம் கிடைக்குமேயானால் சாதாரணமானவர்கள் 
அதை பருகாமல் விட்டுவிடுவோமா என்ன?.

ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
 - ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்
எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குபவரே, 
சூரியனைப் போல பிரகாசிப்பவரே, 
பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, 
கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்றுபவரே, 
இனிமையாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

(கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம் துதியை பாராயணம் செய்தால் விருப்பமெல்லாம் நிறைவேறும்; கண்ணனின் திருவருள் கிட்டும்.)
கோகுலாஷ்டமியில் தோன்றியவனும் வைஜயந்தி என்ற வனமாலையை அணிந்தவனும் பிருந்தாவனத்தில் சஞ்சாரம் செய்த இடைச்சிறுமிகளுக்கு வல்லபனாய் திகழ்ந்த சோதியான கண்ணனை வணங்குகிறேன்। 

(ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ ரோஹிணியோடு கூடிய அஷ்டமி நாளுக்கு ஜெயந்தி என்று பெயர். ப்ருந்தம் என்றால் கூட்டம். கூட்டம் கூட்டமாக கூடும் இடம். அவனம் என்றால் காத்தல். கூட்டம் கூட்டமாக காத்த இடம் என்றும் கொள்ளலாம். எட்டாவதாக அவதரிக்கின்றவன் அஷ்டமியை வரித்தான்.


தனது பிறப்பிற்கு ஏற்றதாக அஷ்டமி திதியை ஸங்கல்பித்துக் கொண்டான். அஷ்டமி இதனால் ப்ரதமையாகி விட்டாள். ஆதலால்தான் யோகநித்ரை நவமியில் தோன்றினாள். நவமி த்விதியை ஆகிவிட்டது.
 எட்டாவது கர்ப்பம் கொல்லப்போகிறது என்ற ஆகாச வாணியை ஸத்யமாக்க எட்டிலேயே பிறக்க எண்ணினார். 
எட்டாவதாகப் பிறக்கப் போவதாலும் அஷ்டமியை வரித்தார். 
அஷ்ட வஸுக்களுக்கும் வஸுதேவர், தேவர் என்பதால் அந்நிலையை உணர்த்த அஷ்டமியை விரும்பினார். 
எட்டு எட்டு என்று எண்ணியே கம்சன் எட்டாத இடத்தை அடையப் போகிறபடியால் அஷ்டமியை தனது ஜன்மத்திற்கு ஏற்றதாக்கினார். 
Sri krishna janmashtami scraps, greetings, cards
அந்த அஷ்டமி திதிகள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கியது. 
Sri krishna janmashtami scraps, greetings, cards
அஷ்டமி ப்ரதமையாவதும் நவமி த்விதியை ஆவதும் ஆச்சர்யம் தானே!.
ஸ்ரீய:பதி  எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன்.எங்கும் இருப்பவன்.தனக்கு நிகர் எவருமில்லாத தனிப்பட்டவன்.முதலில் தானே தன்னிடத்திலேயே ஒரு சித்திரம் தீட்டுகிறான்.சித்திரம் வரைவதற்கு எழுதுகோலும்,வர்ணமும் வேண்டும்.
விளையாட்டு அவனுக்கு எழுதுகோல்.
வர்ணம் அவனது கருணை.
அவன் எழுதிய சித்திரம்தான் படைப்பு. அதுதான் இவ்வுலகம். 

16 comments:

 1. அற்புதமான பதிவு!! பகிர்வு!!. ஸ்ரீகிருஷ்ண லீலாம்ருதம் எத்தனை பருகினாலும் ஆனந்தமே. படங்களும் கொள்ளை அழகு!!. என் மனமார்ந்த நன்றி அம்மா!!

  ReplyDelete
 2. ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம், ருசியோ ருசி, சுவையோ சுவை.

  தங்களின் திருக்கரங்கள் பட்டு பதிவாக்கித் தந்துள்ளதால் மேலும் மேலும் பன்மடங்கு ருசியாக உள்ளது.

  அஷ்டமி, நவமி .... முறையே பிரதமை த்விதியை ஆனது ;)

  எட்டாத இடத்தினை எட்டப்போகும் கம்சன் ... அதனால் எட்டைத் தேர்ந்தெடுத்தான் கண்ணன். ;)

  போன்றவை ருசியை மேலும் ருசியாக்கியுள்ள தகவல்கள், தகவல் களஞ்சியத்திடமிருந்து.

  அஷ்டகங்களாகவே அள்ளி அள்ளி அருளியுள்ளார் ஆதிசங்கரர் !

  அங்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் போன்றே இங்கு ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகமா ! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

  இனிய ஸ்ரீஜயந்தி நல்வாழ்த்துகள்.

  வெல்லச்சீடையாய் இனிக்கும் பதிவுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி அவன் அருள் பெறுவோம்!

  ReplyDelete
 4. அழகிய படங்கள்! கிருஷ்ண் ஜெயந்திக்கு அருமையான சமர்ப்பணங்கள்!!

  ReplyDelete
 5. கிருஷ்ணர் என்றாலே கொள்ளை அழகுதான்...
  அத்தனையும் சொக்க வைக்கும் அழகு!

  பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 6. " இதுவே புராணங்களில் சிறந்ததான பாகவதம்
  ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகள் என்னும் அமுதம்''
  பாகவதத்தை சுருக்கமாக தந்து அதற்கு அர்தத்தையும் கொடுத்து அழகிய படங்களைப்போட்டு பதிவை அமர்க்களப்படுத்தி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. Aha...
  Nice post...
  I remember my olden days...
  wearing like Krishna and myfrined Banu as Radha....
  Danced for so many asongs like astapathy, and all...
  Even now I feel yound on seeing your pictures here and immeresed on those olden days.
  Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 8. அத்தனை படங்களும் மனதை அள்ளுகின்றனவே!

  ReplyDelete
 9. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நல்ல படங்களுடன் அருமையான பதிவு!..

  ReplyDelete
 10. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நல்ல படங்களுடன் அருமையான பதிவு!..

  ReplyDelete
 11. ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள். கோகுலத்தில் கண்ணன் வளர்ந்த அற்புதங்களை , அவன் லீலைகளை கண்டு களித்தோம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வணக்கம்
  அம்மா
  கருத்துக்கள் மிக அருமையாக உள்ளது படங்கள் மிக உயிரோட்டம் உள்ளவாறு உள்ளதுஅருமை வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 13. வணங்கி மகிழ்வோம்.

  ReplyDelete
 14. மிக அற்புதமான பதிவு

  ReplyDelete
 15. கண்கொள்ளா அழகோடு கண்ணனைத் தரிசனம் செய்தோம். அத்தனை பக்தி ஸ்லோகங்களும் அமிர்தம்.
  கிருஷ்ணாமிர்தத்தை உங்களை அல்லால் யார் தர முடியும். படங்களோ சொல்லிமுடியாது. மிக மிக நன்றி.
  இனிய கிருஷ்ணனின் ஆசிகள் உங்கள் மூலம் எங்களையும் வந்தைவடைந்தன.

  ReplyDelete