Monday, August 19, 2013

கணினியே கதை சொல்லு ..!






என் குழந்தைகளுக்கு மதிய நேரம் உணவு கொடுக்க பள்ளிக்குச் சென்ற போது அங்கிருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ஆசிரியர் பெண் பழக்கமானார்..
வீட்டில் இருக்கும் டைப்ரைட்டரில் டைப் செய்யும் போது விரல் மாற்றி எழுத்துகளைஅடிப்பதை கேலி செய்ததால் அந்தப் பெண்ணிடம் டைப் கிளாசுக்கு வருகிறேன் என்று பணம் கட்டி சேர்ந்தேன்..அங்கே பள்ளி மாணவர்கள் மட்டுமே கற்றுக்கொண்டிருந்தார்கள்..
முதல் நாள் எழுத்துகள், அடுத்த  நாள் வார்த்தைகள், வாக்கியங்கள் , படிவங்கள்,கடிதங்கள் என்று கற்றுக்கொண்டேன் ..
 சுருக்கெழுத்தும் சொல்லித் தந்தார்..!
பக்கத்தில் இருந்தவர் எங்களை எல்லாம் ஒருவாரம் எழுத்துகளை மட்டுமே பயிற்சி செய்ய வைக்கிறீர்கள்.. இவங்க மட்டும் இவ்வளவு வேகமாக கற்றுக்கொண்டாங்களே என்று கேட்டார் ..

அதற்கு ஆசிரியர் அவங்க டைப்ரைட்டிங் தேர்வுக்குச் செல்லப்படிக்கவில்லை.
ஆனால் நீங்கள் தேர்வுக்குச்சென்று கீ போர்டு எழுத்துகளை பார்க்காமல் வேகமாக அடித்தால்தான் பாஸ் செய்யமுடியும் ..அதற்கு உங்களுக்கு ஆரம்பப்பயிற்சி - பிங்கரிங் - அவசியம் ..என்று சொல்லிவிட்டார் ..
இல்லத்திலிருந்த அலுவலகத்தில் கணிணி பயன்பாட்டுக்கு வந்தது ..
அலுவலக நேரம் போக மற்ற நேரம் முழுவதும் மகன்களின் ஆக்ரமிப்பு ..
எந்த நேரமும் கணினி முன் அமர்ந்து இருக்கும் அவர்களை சாப்பிட அழைத்தால் தந்தை மடியில் அமர்ந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்த  என் மழலை அம்மா ஒரு தத்துவம் சொல்லுகிறேன் ,,கேட்டுக்கோங்க..எங்க எல்லோரையும் ஒரே சமயத்தில் சாப்பிடக் கூப்பிடக்கூடாது ..  ஒருத்தர் ஒருத்தராய்தான் வரமுடியும் மாற்றவர்கள் மும்முரமாய் கணிணியில் இருக்கும் போது எதற்கும் கூப்பிடக்கூடாது தெரியுமா என்றது ..எல்லோருக்கும் ஒரே சிரிப்பு...
அந்தக்குழந்தை இப்போது லேட்டஸ்ட்டாய் மினி ஐ பேட்  ஒன்று வாங்கி  எங்களுக்குப் பரிசளித்திருக்கிறது ..!.. 
கைக்குழந்தையாய் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த குட்டி ஐ பேடை 
கையில் வைத்திருக்கிறார்கள்.எனக்கு இன்னும் அது வசப்படவில்லை..
புது வர்ஷன் வந்தபிறகு இது கவனிக்கப்படாமல் இருக்கும் ..
அப்போது கற்றுக்கொள்ளலாம என நினைத்திருக்கிறேன் .. 
மகன்களுக்கு திருமணத்திற்கு வரன் பார்க்க ஒவ்வொரு முறையும்
மேட்ரிமோனி  தளம் திறக்க மகன்களின் உதவி தேவைப்பட்டது ..

நாமே இயக்கலாம் என முடிவு செய்தபோது ஏதாவது செய்து வீட்டுக் கணினி ரிப்பேராகிவிட்டால் என்ன செய்வது !!?? எனவே கற்று பயிற்சி பெற  நானும் கணவரும் முடிவெடுத்து கணிணி மையத்திற்கு சுபயோக சுப தினமான விஜயதசமித்திருநாளன்று சென்றோம்..

மகள் அனைவரது இ மெயில் முகவரிகளை  எழுதிக்கொடுத்து முகவரி எழுதும்போது எங்கும் ஸ்பேஸ் விடக்கூடாது .. சரியான எழுத்துகளை கவனமாக பதிக்கவேண்டும் ..நியூமராஜிப்படி எழுத்துகளை கூட்டியும் குறைத்தும் எழுதுவது போல் எழுதக்கூடாது என்று பாடம் நடத்தி அனுப்பிவைத்தார்..

அன்று மகனின் பிறந்தநாள் ..
மகனுக்கு  பிறந்த நாள் வாழ்த்து இமெயில்அனுப்ப சொல்லிக்கொடுத்தார்கள்..
மகனிடமிருந்து சந்தோஷமாக பதில் மெயில்  வந்தது ...

பிறகு பயிற்சியாளர் எங்கள் பக்கமே வரவில்லை ..!.

நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும் போதே நேரம் முடிந்தது
என்று சொல்லிவிடுவார்கள்..

மகன் தான் தைரியம் சொன்னார் ஷாக் அடிக்காது வெடிக்காது ஒன்றும் ஆகாது  நீங்களே கற்றுக்கொள்ள வேண்டியதுதான் ..என்றார்..

ஐகான் அடிக்கடி காணாமல் போனதால் மவுஸ் பழக்கம் வர கலர் நிரப்பும்  பயிற்சியில் வண்ணங்கள் அறிமுகமாயின..! 
ஆஸ்திரேலிய பயணத்தின் போது சிங்கப்பூரில் நிறைய நேரம் ஸ்டாப் ஓவர் இருந்ததால் ஆங்காங்கு இருந்த கணிணிகளில் இந்தியாவுக்கும் , ஆஸ்திரேலியாவுக்கும் ஒரே சமயத்தில் சாட் செய்யமுடிந்தது பயனளித்தது . ஆச்சரியமளித்தது ..ஏனெனில் விமான நிலைய தொலைபேசி அப்போது லைன் கிடைக்கவில்லை ..!

ஆஸ்திரேலியவில் மகன் தனது அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார்..

முதலில் டிஸின்பெக்சன் திரவத்தில் கைகளை தேய்த்துக்கொண்டு , தூய்மைப்படுத்தும் பேப்பரினால் கணினியைத்துடைத்து தனது சிம்மாசனத்தில் அமரவைத்து  கணிணி இயக்குவதுபோல படம் எடுத்து தந்தார். அருமையான காபி in ஆஸ்திரேலியா - போட்டுத்தந்தார்..!

இல்லத்திலும் எனக்கு தனியாக கணினி தந்திருந்தார் மகன் ..!

அங்கே தினசரி பேப்பர் படிக்க கணினி உபயோகிக்கும் போதுதான்
பதிவுகள் அறிமுகமாயின..
சித்தர்களைப்பற்றி அறிய தேடித்தேடி படிக்கமுடிந்தது ..

 பதிவுகளைப்படித்தவுடன் கருத்துரை பின்னூட்டம் இட விரும்பவே 
இ -கலப்பை  பதிவிறக்கித் தந்தார் மகன் ..

புத்தகம் படித்துக்கொண்டிருந்த என்னிடம் ஏதாவது சொல்லுங்கள் என்றார் .. 
வாசிப்பதென்பது சுவாசிப்பது ..சுவாசிப்பதென்பது வாசிப்பது .. வாசிக்காமலிருப்பது சுவாசிக்காமலிருக்கும் போதுதான் சாத்தியமாகும் எனக்கு ...என்றேன்..

அதையே தலைப்பாக்கி 2011 ஜனவரி மாதம் எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பித்துக்கொடுத்தார்..

இப்போதானால் இவ்வளவு நீள சொந்தப் பெயரில் பிளாக் ஆரம்பித்திருக்கமாட்டேன்..சுருக்கமான புனை பெயர் வைத்திருபேன் ..!

ஒவ்வொரு எழுத்தாக கேட்டுக்கேட்டு காயத்ரி மந்திரத்தை
முதல் பதிவாக எழுதினேன்..

முதல் அடியில்தானே ஆரம்பிக்கிறது ..
ஆயிரம் மைல்களைக்கொண்ட பிரயாணமும் ....!

ஆயிரத்து எட்டாவது பதிவும்  சுபிட்சம் அருளும் 
காயத்ரிமந்திரம் பற்றித்தான் ...! 

ஆயிரமாவது பதிவாக அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு 
விநாயகர் அகவல் பொருளுடன் பதிவாக்கினேன் ..

ஆயிரமாவது பதிவுக்கு அசாதரண  திரு . வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் ஆயிரம் நிலவே வா ! ... ... ... ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!
என்றொரு தனி பதிவை ஆராய்ச்சி கட்டுரையாகவே வெளியிட்டு
அருமையான பரிசாக இனிமை சேர்த்திருக்கிறார் ..

நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை ..எத்தனை நன்றிகள் கூறினாலும் அவரின் சிரத்தை நிறைந்த கடின உழைப்பிற்கு  ஈடாகாது என்பது 
நிச்சயம் ..!
ஐயாவுக்கே உரித்தான தனிச்சிறப்பான பணியும் 
பாணியும் அலாதியானவை..!!

அவர் தொடர்பு எல்லையில் இருந்த பதிவர்களுக்கு மெயில் மூலமும் , தொலை பேசி மூலமும் தொடர்பு கொண்டு பதிவுக்கு வரவழைத்து விழாக்கோலமாய் கொண்டாடி ஜொலிக்கவைத்துவிட்டார்..

6000 க்கு மேற்பட்ட கருத்துரைகளை மணிராஜ் தளத்திற்கு வழங்கியிருப்பது  மிகப் பெரிய சாதனை ..!இது ஐயாவின் கணக்குதான் ..!!

கணக்கெடுப்பது களைப்படையவைக்கும்  பணி அல்லவா..!!

மகன்கள் கேம்ஸ் விளையாடும் போது உற்சாகமானாலும் தட்டுவார்கள் , தோற்றாலும் கோபத்திலும் ஓங்கி தட்டி லேப்டாப் பார்ட் பார்ட்டாக ஆகிவிட்டது .. இடைவிடாமல் உழைத்தது ஓரம் கட்டப்பட்டது ..

போட்ட பதிவுகளின் வேகத்திலும் கணிணி கீபோர்டெல்லாம் தனித்தனியாக அக்குவேறு ஆணிவேறு ஆக ஆகிவிட்டது ..!

ஆரம்பத்தில் பதிவு எழுதி வெளியிட்டபிறகு படம் சேர்த்துத்தருவார்கள்.. ஏனெனில் எனக்குப் படங்கள் சேர்க்கத்தெரியவில்லை ..

படங்கள் கிடைத்திருக்கின்றன கொஞ்ச நேரம் கழித்து இந்தப்படங்கள் கேட்டால் கிடைக்காது..இப்போதே சேமித்துக் கொள்ளுங்கள் ..
பதிவுக்கு பயன்படும் என்று படங்கள் தருவார்கள் ..
படங்களுக்காக பதிவுகள் தயாரிப்பேன் ..

பதிவுகளுக்கு கருத்துரைகள் என்னும் பின்னூட்டம்  வரும் - நமக்கும் பின் தொடர்பவர்கள் கிடைப்பார்கள் .. அதற்கெல்லாம் சந்தோஷப்படவேண்டும் என்று  மற்ற பதிவர்கள்  பதிவில் நீங்கள் பதிவுலகில் பிரபலமாக வேண்டுமா என்கிற தலைப்பில் படித்துத் தெரிந்துகொள்ளும் முன்பே
நூறுபின் தொடர்பவர்கள் கிடத்து நூறு பதிவுகளையும் தாண்டியிருந்தேன்..

ஆரம்பத்தில் என் டைரியில் எழுதியிருந்தவைகளை பார்த்துப்பார்த்து எழுதி பதிவாக்கினேன்...

http://jaghamani.blogspot.com/2011/06/blog-post_06.html
கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல் 

என்று நாங்கள் பலமுறை பயணம் செய்து திரட்டிய தகவல்களை பதிவாக்கியதற்கு மூன்றாம் கோணம் வலைப்பத்திரிகை பயணப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது...

http://jaghamani.blogspot.com/2011/10/2011.html
பீமனின் பராக்ரமம் ( சவால் சிறுகதைப் போட்டி .2011 )
என்று யுடான்ஸ் தளம் அறிவித்த சவால் சிறுகதைப் போட்டியிலும் பரிசு கிடைத்தது..

எங்கள் பிளாக்  - இரண்டுமுறை புத்தகப் பரிசு அளித்தது ...

ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 
Pageviews yesterday 2,734 - பக்கப் பார்வைகளும்
குறைந்தபட்சமாக 1000 பக்கப்பார்வைகளும் கிடைக்கின்றன...!

இதுவரை மணிராஜ் தளத்தின் பார்வைப் பதிவுகள்...
வெளியான கருத்துரைகள் - Published comments 23359

பதிவுலகம் அறிமுகமாகும் முன்பே பெண்கள் தினம் , தண்ணீர் தினம் பற்றி பள்ளி கல்லூரிகளில் கட்டுரைகள் எழுதி பரிசு பெற்றதுண்டு..

கம்பராமாயணத்திற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் உள்ள  ஒற்றுமை வேற்றுமை பற்றி கட்டுரை எழுதும் போட்டியிலும் கலந்துகொண்டது
உண்டு ..1

அப் டேட் ஆக புது லேப்டாப்கள் , புது டெஸ்க் டாப்ஸ்கள் வந்துவிட்டன.
என் தொல்லைகளிலிருந்து என் குடும்பத்துக்கு விடுதலை..

எப்பவும் கேம்ஸ் விளையாடி கண்களை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.. நேரத்திற்குச்சாப்பிடுங்கள்.. சீக்கிரம் தூங்கி காலையில் நேரமாக எழுந்திருங்கள் என்றெல்லாம் இப்போது  தொல்லை கொடுப்பதில்லை ..


17 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே. மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு கணினி முன் அமரும் போது, பார்வைக்கு வரும் முதல் தளம் தங்களுடையதுதான். தெய்வீக மணம் கமழும் தளம்.
    போட்ட பதிவுகளின் வேகத்தில் கணினி கீபோர்ட் எல்லாம் தனித்தனியாக அக்குவேறு ஆணிவேறாகிவிட்டது.
    ஆச்சரியமில்லைதான்.
    அயிரம் பதிவுகள்
    23 ஆயிரத்திருற்கும் மேற்பட்டக் கருத்துரைகள்
    தொடரட்டும் தங்களின் சாதனை.

    ReplyDelete
  2. தங்களுடைய கணிணி அனுபவத்தை அசத்தும் படங்களுடன் தனித்தன்மையாக சொல்லியிருப்பது அருமை!..

    ReplyDelete
  3. உங்களின் கணினி அனுபவம் மிகவும் விரிவாக கோர்வையாக ,அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை நீங்கள்
    எழுதியிருக்கும் பதிவுகள் வரை விவரித்து எழுதியிருப்பது படிக்க நல்ல சுவாரஸ்யம்.

    2000 பதிவை நோக்கி பீடுநடை போடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வழக்கம் போல இப்பதிவிலும் பல தகவல்களையும் படங்களையும் சேர்த்து அசத்திவிட்டீர்கள். கழுத்தை அசைக்கும் பூனைகள், பியானோவாசிப்பது, அசையும் போன்றவை திரும்ப திரும்ப பார்க்க வைக்கின்றன.
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. படங்களும் சாதனைகளும் பிரமிக்க வைக்கின்றன... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  6. கணினி சொன்ன கதை அசத்தல். அருமையாக இருந்தது உங்கள் நினைவலைகள். அதற்கெனத் தேர்ந்த படங்களும் சிறப்பு.

    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  7. சிறுகதை கட்டுரை போட்டோ சேகரிப்பு இப்படி பலப்பல வித்தைகளை கற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கணினியே கதை சொல்லு ..!

    என்ற தலைப்பினில், இன்று தாங்கள் வெளியிட்டுள்ள பதிவு, இதுவரை கணினி அனுபவங்கள் பற்றி, பலரும் இதே போலவே வெளியிட்டுள்ள, தொடர்பதிவுகளிலேயே தலைசிறந்ததாக உள்ளது.

    உங்களுடைய ஸ்பெஷாலிடியே தாங்கள் தந்திடும் உலகத்தரம் வாய்ந்த உன்னதமான அனிமேஷன் படங்களே.

    இந்தப்பதிவினிலும் பல்வேறு படங்களைக்கொடுத்து அசத்தோ அசத்தென அசத்தியுள்ளீர்கள்.

    ஆனாலும் நீங்க சமத்தோ சமத்து, ரொம்பச் சமத்து, கட்டிச்சமத்து, அழுந்தச்சமத்து. ;)

    பார்த்ததுமே பிரமித்துப்போனேன்.

    படித்ததும் களிப்பாகியும் களைப்பாகியும் போனேன்.

    படங்களெல்லாம் பார்த்ததும் ஓர் சின்னக்குழந்தை போல ஒரே குஷியாகி குதூகலப்பட்டேன். ;)

    எவ்வளோ இன்னும் வரிக்குவரி பாராட்டலாம் தான், சொல்லலாம் தான், ஏனோ எதுவோ என்னைத் தடுத்து நிறுத்தி வருகிறது.

    எதற்குமே இன்று நேரம் இல்லை.

    எனக்கான பொறுப்புகளும் நாளுக்கு நாள் மிக அதிகமாகிக்கொண்டே போய் வருகின்றன.

    எனக்கான வேகம் மிகஅதிகமாகவே இருப்பினும், விவேகம் ’இது போதும்’ ’இது போதும்’ எனச்சொல்லிக்கொண்டே இருக்கிறது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்,

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    எங்கிருந்தாலும் வாழ்க !

    ReplyDelete

  9. என்ன சொன்னாலும் கணினியை நீங்கள் கையாளும் முறை வித்தியாசம்தான். நான் உங்கள் பதிவுகளுக்கு படங்கள் பார்க்கவே வருகை தருகிறேன். உங்கள் பதிவுகள் பார்க்கப் பார்க்க திகட்டாதவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஆரம்பம் முதல் இன்று வரையான உங்கள் பயணத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. மிகவும் சுவாரசியமான அனுபவங்கள்! தரமான எழுத்துக்கள் ஆயிரமாவது பதிவைத்தொட்டு சாதனை புரிந்திருக்கின்றன! இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான அனுபவம்...... வாழ்த்துகள்.....

    ReplyDelete
  13. அருமையான அனுபவப் பகிர்வு அம்மா.. ஆயிரம் தாண்டியும் அபார வேகத்தில் செல்லும் உங்க பதிவு எக்ஸ்பிரஸ் இன்னும் பல ஆயிரம் மைல் செல்ல விரும்புகிறோம்..

    ReplyDelete
  14. உங்களின் வழக்கமான அல்லாத வேறு விதமான பதிவுகளைப் படிக்கும் பொழுது அவையும் உங்களின் கை வண்ணத்தில் அலாதியான சுவையாக இருக்கின்றன. மாறுதலாகவும்; தினமும் ஒயிட் பேண்ட், ஒயிட் ஷர்ட் அணிபவர் அதிசயமாக காக்கி பேண்ட், கலர் சட்டை போட்ட மாதிரி.

    குறும்பு கொப்பளிக்கும் படங்கள். நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருப்பது தான் விசேஷம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கணனி கற்றுக் கொண்ட விதம் பற்றிய பதிவு சுவாரஸ்யாமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை மிகவும் போற்றத்தக்கது. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. இன்றுதான் உங்களின் இந்தப் பதிவைப் படித்திட நேரம் கிடைத்தது. உங்கள் கணினி அனுபவம் என்பதைவிட ஆர்வம் பாராட்டிற்கு உரியது. இதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த உங்கள் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்! ஆன்மீகப் படங்கள் என்றாலே உங்கள் வலைததளம்தான். திரு VGK (வை கோபாலகிருஷ்ணன்) அவர்கள் கருத்துரைகளே உங்கள் புகழ் சொல்லும். இந்த பதிவில் உள்ள அசையும் அசையாத படங்களை மீண்டும் நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன். நன்றி!

    ReplyDelete