Saturday, August 31, 2013

ஸ்ரீலட்சுமி கணபதி
ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

ஸ்ரீலட்சுமி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 
12 வது திருவுருவமாகத் திகழ்கிறார்..!

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இருதேவிமார்களோடு விளங்கி அருள்புரிகிறார்..!.
லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், 
பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி 
ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், 
மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் 
ஏந்தி தன் இரு புறமும் இரு தேவிகளை அணைத்துக் 
கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். 
லட்சுமி கணபதியை வழிபடுவதால் பணம், பொருள்  அபிவிருத்தியாகும்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்கிர தேவதையாக விளங்கியபோது, ஆதி சங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்த வினாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்று பெயர்.  
மனசாந்தி வேண்டுவோர்  உக்கிரம் தணித்த விநாயகரை வழிபடுவது சிறந்த பலன்களைத்தரும்... 17 comments:

 1. ஸ்ரீ லக்ஷ்மி கணபதிக்கு வந்தனங்கள்.

  ReplyDelete
 2. பிள்ளையாரப்பா! தொந்திப்பிள்ளையாரப்பா!!

  உன்னைப் பார்த்து, உன் செயல்களைப்பார்த்து, அடுத்தடுத்து நீர் நகர்த்திவரும் காய்களைப்பார்த்து. பிரமித்துப்போகிறேனே அப்பா!

  எப்போதும் என் மனதினில் முதல் இஷ்ட தெய்வமாக நிறைந்திருக்கிறாய். ஆழமாகவும் வேறூன்றி விட்டாய்.

  ஆனாலும், அடிக்கடி என்னை சோதிக்கிறாய்.

  எல்லாற்றையும் பொறுத்துப்போகிறேனே அப்பா.

  அடியேனுக்குக் கருணை காட்டி அருளமாட்டாயோ !

  ReplyDelete
 3. எனக்கு மனசாந்தி வேண்டியுள்ளது.

  உக்கிரம் தணிந்த விநாயகரின் ஜோரான போட்டோ ஒன்று உங்கள் கையால் அனுப்பி வையுங்கள்.

  இரண்டு வருஷம் முன்பு ‘தைப்பூசத்தில்’ தாங்கள் வெளியிட்டதைத்தான் கணினியில் SAVE செய்து வைத்துக்கொண்டு, தினமும் ஒருமுறையாவது பார்த்து , தரிஸித்து மகிழ்ந்து வருகிறேன்.

  அந்தக் கொழுகொழு மொழுமொழுப் பிள்ளையார் ஜோராக இருப்பினும், நான் எதிர்பார்க்கும் Clarity அதில் இல்லை. அதனால் புதிதாக வேண்டுமாக்கும். ;)

  ReplyDelete
 4. பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்ட கடைசிபடம், ஜோரக உள்ளது.

  எவ்ளோ முழுத்தேங்காய்கள், எவ்ளோ பளிச் பளிச் என்ற தேங்காய் மூடிகள் !!!!! ;)))))

  ReplyDelete
 5. லட்சுமி கணிபதி அறிந்தேன். வணங்குவோம்

  ReplyDelete
 6. காலையில் காணும் உங்கள் தளத்தின் காட்சிகள் அத்தனையும் அருமை

  ReplyDelete
 7. Om Srim gam ganapathaye namaha

  subbu thatha

  ReplyDelete
 8. ஓம் கம் கணபதயே நமஹ!.. காலையில் கணபதி தரிசனம்!.. அருமை!..

  ReplyDelete
 9. சங்கு விநாயகரும் ஊஞ்சல் விநாயகரும் அருமை.
  உக்கிரம் தணித்த விநாயகர் தகவல் எனக்குப் புதிது.
  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 10. இலட்சுமி கணபதி.
  பதிவு அருமை.
  படங்கள் அதை விட அருமை.
  மகிழ்வுடன் மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 11. கீழிருந்து மேலாக உள்ள ஒவ்வொரு படமும் அற்புதம்.. விளக்கங்களும் சிறப்பு. நன்றிங்க.

  ReplyDelete
 12. உங்களைப்பார்த்து நான் பொறாமைப்படுவதே எப்படி படங்கள் போடுகிறீர்கள் என்பதை நினைத்துதான். லவ்லி ...

  ReplyDelete
 13. லட்சுமி கணபதி பதிவு அருமை உக்கிர கணபதி மனசாந்தி வேண்டுவோருக்கு அருளட்டும். கணபதி படங்கள் எல்லாம், அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. படங்கள் அனைத்தும் அழகு...
  விளக்கமும் அருமை.

  ReplyDelete
 15. திருவானைக்கோவில் உக்கிரம் தணித்த விநாயகர் வரலாறு தெரிந்து கொண்டேன். நன்றி!

  ReplyDelete