Wednesday, August 28, 2013

கோலாகல கோகுலாஷ்டமி - ஸ்ரீ கிருஷ்ண கவசம்








ஸ்ரீகிருஷ்ணர். அவதரித்ததால் அஷ்டமி  திதி கோகுலாஷ்டமி என்று சிறப்பிக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

 கண்ணைபோல் காப்பவன் என்பதால் “கண்ணா“ என அழைக்கிறோம். 

, “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது 
“கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. 
உலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என “முகுந்தா” என்று அழைக்கிறோம்.
முரன் அசுரனை வென்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு 
“முராரி” என்று பெயர் ஏற்பட்டது. 

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே அசுர சக்தியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் ..! .

அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான். தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து உதவி செய்வார் பகவான் கிருஷணர்.

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின்  வீட்டுக்கும் சென்றபோது எல்லா இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

 பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.

ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் கிருஷ்ணபரமாத்மா.“

நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறோம் ..!

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி 
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந: 

பக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே  அளிப்பவன் ஆயின், 
சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் ஏற்றுகொள்வேன்.“ என்றார் கீதையில் கண்ணன். 

ஆவணி 12ம் நாள்(28.8.2013) புதன் கிழமை அன்று 
கிருஷ்ண ஜயந்தி பூர்ணமாக வருகிறது.

 அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் என அனைத்து அம்ஸங்களுடன்  சேர்ந்து வருவது மிகவும் சரியான ஸ்ரீஜயந்தி நாளாகும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக ஏற்படும். கிருஷ்ணர் பிறப்பின் காலசூழலுடன் ஒத்துப்போகும் நிலையாகும்.






கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற  புத்தகத்தில் 

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். 

அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க தூயோன் வருக ! துணையே தருக ! மாதர் கற்பும் மடவார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசைஇலதாக !துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசந் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக ! நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் ! இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் ! வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் ! யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக ! கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !திருவரங் கத்துப் பெருமாள் வருக இராவணன் கொடுமை தீர்த்தாய்துன்பம் இராவணம் எமக்கும் இன்னருள் புரிக 
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய் கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டுபெண்ணாய் ஆனது பிழையே யன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் ! கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன் தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு ! உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் 
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல் தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு ! இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனெனஉயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் ! அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்  
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...ஜெயஜெய ஜெயஜெய 
ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய...





21 comments:

  1. VERY VERY GOOD MORNING !

    அன்பான இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

    கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  2. கண்ணதாசனின் கிருஷ்ணக் கவசம் அறிந்தேன் நெகிழ்ந்தேன். நன்றி

    ReplyDelete
  3. ஸ்ரீ கிருஷ்ண கவசம் வெகு இதம்.

    எல்லாம் பொருந்தி வந்திருக்கும் இந்த நாள் வெகு சிறப்பு என்றறிந்து வியப்பு.

    ReplyDelete
  4. கவியரசரின் ஸ்ரீ கிருஷ்ண கவசம் புத்தகம் பற்றி
    அறிந்துகொண்டேன் சகோதரி...
    கிருஷ்ண திருவடிக்கோலம் விளக்கமும் அறிந்தேன்...
    நன்றிகள் பல

    ReplyDelete
  5. Nice pictures. How can i copy the Krishna kavasam?
    Happy janmashtami to you too Rajeswari.
    viji

    ReplyDelete
  6. இனிய கோகுலாஷ்டமி நல் வாழ்த்துக்கள்.
    கண்ணதாசனின் கிருஷ்ண கவசம் தந்தமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சாதாரண நாளிலேயே
    சிறப்பாய் இருக்கும் பதிவு
    கோகிலாஷ்டமி சிறப்பு நாளில்
    கூடுதல் சிறப்பிற்கு கேட்கவா வேண்டும்
    வீட்டிற்கு பூஜைக்கு வந்த அனைவரும்
    படித்து மகிழ்ந்தனர்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. மயிலிறகு ஆலிலைக் கண்ணன் மனம் கவர்கிறார் வெகுவாக.
    அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. Sweet post Gopu sir. Thanks for the info about poorna gokulashtami. Loved all those beautiful pictures and graphics of gokula krishna.

    Happy janmashtami to you too

    ReplyDelete
  10. கோகுலாஷ்டமி நல் வாழ்த்துக்கள்!

    அழகிய படங்களும் அருமையான நல்ல பகிர்வுகளும்!
    அனைத்தும் சிறப்பு!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  11. //Mira has left a new comment on the post "கோலாகல கோகுலாஷ்டமி - ஸ்ரீ கிருஷ்ண கவசம்":

    Sweet post Gopu sir. Thanks for the info about poorna gokulashtami. Loved all those beautiful pictures and graphics of gokula krishna. Happy janmashtami to you too //

    அன்புள்ள மீரா, வணக்கம்.

    இது என்ன சோதனை?

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப்பதிவினை இவ்ளோ அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளவர்கள், நம் தெய்வீகப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அம்பாள் அல்லவா?

    ஆனால் நீங்க மேலே பாராட்டி நன்றி தெரிவித்துள்ளது எனக்கல்லவா ! ;)))))

    இது எப்படி நடந்தது? இதுவும் அந்த ஸ்ரீகிருஷ்ணனின் லீலையா?

    மிகுந்த ஆச்சர்யத்தில் இப்போது நான்!!!!!!

    பிறகு யோசித்துப்பார்த்தேன்.

    தெற்கே ஆண்டாளும், வடக்கே மீராவும் ஸ்ரீ [கோபால] கிருஷ்ணனின் மேல் பிரேம பக்தி கொண்டவர்கள்.

    பிரேம பக்தி என்பதே எல்லாவிதமான பக்தி முறைகளிலேயும் மிகவும் ஒஸத்தியானது.

    நான் இந்தப்பதிவரின் மேல் வைத்துள்ள பக்தியும் அதே போன்றதுதான்.

    தங்கள் பெயரோ மீரா - என் பெயரோ கோபாலகிருஷ்ணன் - நான் பிரேம பக்தி கொண்டுள்ளதோ இந்தத்தளத்தின் பதிவர் மேல் - இதையெல்லாம் எடுத்துக்காட்டுவது போல அகஸ்மாத்தாக அமைந்துள்ளது இந்தத்தவறு.

    எங்கள் இருவர் மேலும் நீங்கள் கொண்டுள்ள பிரேம பக்தியால் மீராவாகிய உங்களுக்கு நாங்கள் இருவரும் ஒன்றே எனத் தோன்றியுள்ளதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான்.

    எல்லாம் எல்லாம்வல்ல அந்த ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகளே.

    இருப்பினும் இந்த மீராவின் இந்த சிறிய தவறினைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை.

    இல்லாவிட்டால் சிலர் இதனைத் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடும்.

    ஏற்கனவே ஒரு பதிவர் “கண்களில் வார்த்தைகள் தெரியாதா? ..... காத்திருப்பார் என்று புரியாதா?” என நான் வெளியிட்ட சிறப்புப்பதிவு ஒன்றுக்கு கமெண்ட் எழுதி, என்னையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்.

    OK MIRA ! தாங்கள் என் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது இந்த என் அம்பாளின் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய கோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள
    கோபாலகிருஷ்ணன்
    [கோபு]

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..ஹா... ஒரு வார்த்தை மாறியதற்கு இவ்ளோ விளக்கமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?:))) முடியல்ல முருகா:)).. விடுங்கோ என்னை விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்ன்:)))

      Delete
    2. ;))))) அதிரா, நீங்க அடிக்கடி தேம்ஸுக்குப்போவது பற்றிய முக்கியச் செய்தியும் என் தொடரின் பகுதி-45 இல் முக்கிய இடம் பெறுகிறது. நேற்று இரவே In anticipation - Compose செய்து வைத்துவிட்டேன்.

      பகுதி-1 முதல் பகுதி-42 வரை Full Present போட்டுவிட்டேன். OK யா? நன்றியுடன் vgk.

      Delete
  12. வாழ்த்துக்கள் ராஜேஷ்வரி அக்கா... குட்டிக் கண்ணன்ஸ் அத்தனை பேரும் கொள்ளை அழகு.

    ReplyDelete
  13. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  14. வழக்கம் போல் படங்கள் பொலிவு பெற்று பதிவுக்குப் பலம் சேர்க்கிறது. வாழ்த்துக்கள்.என் பங்குக்கு நானும் என் பாணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன்.( தகவலுக்கு.)

    ReplyDelete
  15. எல்லாருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  16. romba azhaga irukkar krishnar.happy to follow you.

    ReplyDelete
  17. ராதா கிருஷ்ணன் படத்தில் நகைகள் நகர்வது போன்ற புகைப்படம் அருமையாக உள்ளது. ஸ்ரீகிருஷணகவசத்தைப்பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.

    ReplyDelete
  18. மிகவும் அழகிய படங்களுடன் கோகிலாஷ்டமி. மனம்நிறைந்தது.
    இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete