Monday, August 12, 2013

அம்மன் அருட்கனல் - பூ மிதி திருவிழா.





மண்ணதிர மேளங்கொட்டி விண் அதிர வெடி வெடிச்சி
பொங்கலிட்டு பூச செஞ்சோம் மாரியம்மா
அங்கம்மெல்லாம் அலகுக்குத்தி   அக்கினியில் இறங்கவந்தோம்
அக்னியை முக்கனியாய் மாற்றிடம்மா
எட்டுப்பட்டி கட்டியாளும் செட்டிப்பட்டி மாரியம்மா  
தொட்டு வச்ச மண்ணுயெல்லாம்   பொன்னாய் இங்கே மாறுதம்மா
மாரி மகமாரி நீ எங்க முத்து மாரி காளி மகா காளி நீ வீரபத்ரக்காளி
சிங்கத்தின் மேல் ஏறி சிறப்புடனே வீற்றிருக்கும்
எங்கள் குல தெய்வமம்மா மாரியம்மா
சூலத்தைக்கையில் ஏந்தி சூர வதம் செஞ்சவளே
வேப்பிள்ளையில் வினைத்தீர்க்கும் தேவியம்மா
மண் விளையப்பொழிய வேணும்    மாதம்பூ மாரியம்மா
ஆத்தா உன் சன்னதியில் அற்ப்புதங்கள் நடக்குதம்மா  
மண் விளையப்பொழிய வேணும்  
தீ மிதித்தலை ‘பூ மிதித்தல்’ என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. 
தீயை மிதிக்கும் போது அம்மன் அதைப் பூவாக மாற்றி பக்தர்களுக்கு 
இதம் தருகின்றாள் என்பதே இதன் பொருள்.

தீ மிதி - பூ மிதி எனப்படும் பிரார்த்தனை  அம்மன் திருக்கோயில்களில் 
ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா.
 
உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சியாக நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்து அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். 
குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்லும் நேர்த்திக் கடன் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. 
நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும்.

நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர்.

 அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
தீ மிதித்தல் என்பது தமிழர்களின் பாரம்பரியமான வழிபாடு. தீ மிதிப்பவருக்கு இருக்கின்ற அதே மன நிலைதான் தீமிதித் திருவிழாவை வேடிக்கை பார்க்கின்றவர்களுக்கும் இருப்பதாக ஆய்வுத் தகவல் அறிவிக்கிறது.
மேள தாளங்கள், குலவைச் சத்தம், உடுக்கை ஒலி, வாணவேடிக்கை என தீமிதித் திருவிழாவை ஒரு மாபெரும் பண்டிகையாகவே கிராமங்களில் கொண்டாடி வருகிறார்கள் தமிழர்கள். 

தீமிதித் திருவிழாவில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், என்று பலரும்  கூடுகிறார்கள். 

தீமிதி வேளையில் திடீரென மழை பொழிந்து சூழ்நிலை இதமாகுவதும்  அம்மனின் கருணை என்று சொல்லி பக்தர்கள் நெகிழ்வார்கள்!

தமிழ்நாட்டில் வழிபாட்டில் இருந்து வரும் எண்ணற்ற நாட்டுப்புற பெண் தெய்வங்கள்  கிராமங்களில் இன்றைக்கும் எந்த ஒரு நல்ல நிகழ்வு என்றாலும் அதைத் தொடங்குவதற்கு வழிபடும்  பெண் தெய்வங்களின் அவதாரக் கதைகள், பெரும்பாலும் ஏதோ ஒரு காலத்தில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து சில கொடுமைகளுக்கு உள்ளானவர்களாகவே இருக்கும் பெண் தெய்வங்கள் ‘அம்மன்’ என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். 

காளியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், முப்பிடாரியம்மன், சீலைக்காரியம்மன், முத்தாலம்மன், திரௌபதியம்மன், நாகாத்தம்மன், வேம்புலியம்மன் - இப்படி பெண் தெய்வங்கள் ஏராளம்! ஏராளம்!

தீமிதித் திருவிழா தமிழகத்தில் மட்டுமல்லாமல்  ஸ்ரீலங்கா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென்னாப்பிரிக்கா என்று உலகம் முழுக்க தென்னிந்தியர்கள் எங்கெங்கு வசித்து வருகிறார்களோ, அங்கெல்லாம் உள்ள திரௌபதி அம்மன் அல்லது மாரியம்மன் கோயில்களில் வருடத்துக்கு ஒருமுறை தீமிதித் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. 
பெரும்பாலும், ஆடி, ஐப்பசி, பங்குனி மாதங்களில் வருகின்ற அந்தந்த ஆலயத்தின் பிரதான திருவிழாக்களை ஒட்டி தீமிதி நடத்தப்படுகிறது.
இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர், விழுப்புரம் அருகே, மரகதபுரம் என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் மொகரம் மாதம் 8ஆம் நாள் மசூதி முன்பு இந்துக்களுடன் சேர்ந்து தீ மிதிக்கிறார்கள். 

அருகில் உள்ள ஆற்றங்கரையில் இறங்கி புனித நீராடிவிட்டு 
தீமிதி வைபவம் நடைபெறுகிறது. ஆண்கள் மட்டும் தீமிதிக்கிறார்கள். 
பெண்கள் தீமிதிக்கும் வழக்கம் இங்கு இல்லை.
தீ மிதியில் கலந்து கொள்ள நேர்ந்து கொண்டிருப்பவர்கள் 
முதலில் காப்புக் கட்டிக்கொள்வார்கள். 
ஒரு மண்டல காலத்துக்கு விரதம், ஒருவேளை மட்டுமே உணவு, மூன்று வேளைக் குளியல் அல்லது இரு வேளைக் குளியல், காலணி அணியாமல் இருப்பது மனக் கட்டுப்பாடுகள் முக்கியம்.

தீமிதி நடக்க இருக்கும் கோயிலுக்கு முன்னே நீளமான ஒரு குழியைத் திரு விழாவுக்குச் சில நாட்கள் முன்னதாகவே வெட்டி விடுவார்கள். 
அடுத்தநாள் விறகுக் கட்டைகள் குழியின் முன்னதாகக் குவித்து வைக்கப்படும். தீமிதி தினத்தன்று முதல்நாள் மாலையே விறகுக் கட்டைகளைக் குழியினுள் போட்டு தீ வைத்து தகதகவென்று எரிந்து கொண்டிருக்கும். 
தீமிதியின்போது நெருப்பு செக்கச் செவேல் என்று கனன்று கொண்டிருக்கும். எந்த விதமான ஆபத்தும், காயமும் இல்லாமல் இன்றைய தீமிதித் திருவிழாக்கள் எல்லாமே நல்ல முறையில் நடந்து முடிவது என்பது அம்மனின் அருளன்றி, வேறில்லை.
தீமிதித் திருவிழா  நடப்பதற்கு முழு முதற்காரணமாக இருப்பவள் - திரௌபதி! 
பஞ்சபாண்டவர் ஐவரின் மனைவியாக பாஞ்சாலி என வணங்கப்படுகிறாள்..

சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீபண்ணாரியம்மன் 
திருக்கோயில் பிரம்மாண்டமான தீமிதித் திருவிழா மிகவும் புகழ் பெற்றது.  
 ஐந்து லட்சம்பேர் வரை தீ மிதிப்பார்களாம்.
பக்தர்கள் காணிக்கையாகத் தரும் வேம்பு, ஊஞ்சல் மரத் துண்டுகளைக் கொண்டு தீ வளர்க்கப்படும். ஐம்பதுடன் மரம் தேவைப்படுமாம். குண்டத்தில் மஞ்சள், பூண்டு, புகையிலை, உப்பு ஆகியவற்றை நேர்த்திக் கடனாகப் பக்தர்கள் செலுத்துவர்.

தீ மிதிப்பதற்கு பக்தர்கள் வரிசையில் வர வேண்டும். இதற்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே வரிசையில் வந்து நிற்கும் பக்தர்களும் உண்டு. தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்வர். இறுதியாக ஆடு மாடு போன்ற கால்நடைகளையும் குண்டத்தில் இறக்கி நடக்க வைப்பார்கள்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவின்போது தீ மிதிப்பார்கள். சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். 
சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்து  தீ மிதிக்க வருகின்றனர்.


பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை மாசாணியம்மன் கோயில் 
குண்டம் திருவிழாவும் மிக விசேஷமானது.

ஊத்துக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் தீமிதி திருவிழா

திருத்தணி காந்தி நகரில் உள்ள
திரவுபதி அம்மன் கோவிலில்  திருவிழா

திருத்தணி அடுத்த பட்டாபி ராமபுரம் கிராமத்தில்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஞ்சாலி அம்மன்
ஆலயத்தில் வசந்த தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த குமாரநாயக்கன் பேட்டை
வெக்காளி அம்மன் கோவில் தீமிதி திருவிழா



15 comments:

  1. தீமிதி திருவிழா பற்றி இவ்வளவு தகவல்களா? வியந்தேன். பொருத்தமான மாதத்தில் பொருத்தமான பதிவு.

    ReplyDelete
  2. அருமை.தீமிதி குறித்த தகவல் சுவாரஸ்யம்.. ஆனால் தீமிதியில் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒடி குண்டத்தில் விழுந்ததாக சில புகைப்படங்கள் ஊடகத்தில் பார்த்த போது மனது வலித்தது.

    ReplyDelete
  3. தீமிதி திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் பார்த்து பரவசமானேன்.....

    ReplyDelete
  4. மிகப் பிரம்மாண்டமான ஒரு தீமிதி திருவிழாவினைக் கண் முன்னே கொண்டு வந்து காட்டி விட்டீர்கள்!..தீ மிதிப்பவர்களுடைய மனநிலையில்தான் அதைப் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள் - சத்தியமான வார்த்தைகள்!..அற்புதம்!..

    ReplyDelete
  5. தெளிவான விளக்கங்களுடன்
    அருமையான படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. ”அம்மன் அருட்கனல் - பூ மிதித் திருவிழா” என்ற தலைப்பும், காட்டியுள்ள படங்களும், கொடுத்துள்ள ஏராளமான + தாராளமான விளக்கங்களும், படிக்கப்படிக்க மெய்சிலிரிக்க வைக்கின்றன.

    >>>>>>

    ReplyDelete
  7. எத்தனை எத்தனைப்படங்கள், எத்தனை எத்தனை ஊர்கள், நாடுகள், கோயில்கள் அடேங்கப்பா, அடேங்கப்பா !!!

    அறியாத பலவிஷயங்கள் + புரியாத பல புதிர்களுக்கு ஓரளவு விடையளித்துள்ளது, தங்களின் த்னிச்சிறப்பு.

    >>>>>>

    ReplyDelete
  8. படிக்கும் போதே மனதில் ஒருவித திகில் .....

    படிக்கும் நாமே தீ மிதித்தது போன்ற ஓர் உணர்வு.

    நம் உள்ளங்கால்களிலேயே தீப்பற்றிக்கொண்டது போல ஓருவித சூடு ..... ஆனாலும் அவை ஒருசில நிமிடங்களுக்கு மட்டுமே.

    பிறகு அம்பாள் அருளால், அவள் தரும் மனவலிமையால், அம்பாள் பேரில் வைக்கும் முழு நம்பிக்கையால் சூடேதும் தெரியாத ஓர் சுகமான நிலை.

    நேரில் சென்று பார்ப்பது போன்ற ஓர் காட்சியை எழுத்திலும், படங்களிலும் கொண்டு வந்து தந்துள்ளது தங்களின், தனிச்சிறப்பு.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete
  9. தீ மிதிப்பவர்க்ளின் மனோநிலை தான் அதைப்பார்ப்பவர்களுக்கும் இருக்கும் என்று மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

    தங்களின் இந்தப்பதிவினை பார்த்த எனக்கும் அதே மனநிலை தான் உள்ளது.

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    பதிவு என்னும் தீயினில் கால் [கண்] வைத்துவிட்ட என்னால் அதிலிருந்து ஒரே ஓட்டமாக ஓடிச்சென்று தப்ப இயலவில்லை.

    நிறுத்தி ஒவ்வொரு வரியாக ரஸித்து, மனதில் ஏற்றிக்கொண்டே படித்தேன்.

    நீண்ட நேரம் அதிலேயே என் மனம் உடல் உணர்வுகள் எல்லாம் தீக்கனலில் சிக்கிக்கொண்டு விட்டன.

    இவ்வளவு அழகான அற்புதமானதோர் பதிவினை த்ங்களைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

    அம்பாள் அருளால் மட்டுமே, பிரத்யக்ஷ அம்பாளான தாங்கள், அதுவும் எங்களுக்காக கடினமாக உழைத்து, தகவல்கள் சேகரித்துக் கொடுத்து அருளியுள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தீயென மனதில் டக்கென்று பற்றிக்கொள்ள வைத்த அருமையான பதிவினை அழகான படங்களுடனும் விளக்கங்களுடனும் கொடுத்துள்ள என் பிரத்யக்ஷ அம்பாளுக்கு என் வந்தனங்கள் + விசேஷ நன்றிகள்.

    நாளை ஒருநாள் பொழுதும், நல்ல பொழுதாக நமக்கு விடியட்டும்.

    மீண்டும் சந்திப்போம்.

    ;)))))) ooooo 999 ooooo ;)))))

    ReplyDelete
  11. thanks for posting rare pictures of agni thiruvila

    ReplyDelete
  12. Yesterday was the theemethi next to my house. I being at 2nd floor, i am able to view at from my Balcony, very emotionally i was viewing and as you sayy, when they enter into fire, rain showered and all are safe and happy. I was not slept yesterday night. Felt very very emotional.
    The Devi came at might night to the streets, and I am able to view from my floor balcony...
    It was as it is at your 4th picture. samr green saree, same decaration....
    So So nice.
    I was not seen these at Chennai city.
    Yesterday i had seen it in person and now from your photos.
    very nice dear,
    so many informations.....
    I heard about Bannary amman, masaniamman poo midhi vizha when i was young at Coimbatore. Yesterday viewed personnally.
    viji

    ReplyDelete
  13. உங்களின் பதிவுகளின் சிறப்பே படங்கள்தான், அப்படியே மனதை அள்ளுகிறது சார் !

    ReplyDelete
  14. படஙகள் எல்லாம் பூமிதி திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வை கொடுத்தது. நன்றி.

    ReplyDelete
  15. ஆயிரமாவது பதிவிற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete