தப்த காஞ்சன வர்ணாபம் சதுர் புஜ சமந் விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம் ச கமண்டலு வரான்விதாம்
பீதாம்பர தரம் தேவம் பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம் விசித்ரமகு டோஜ்வலம்
ஸ்வர்ணா ஸ்வர தமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதகஷிணம் ஸம்யகா சாந்தம் ஸுஸோப நம
அபிஷ்ட வரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்தியர்த்தம் ப்ரணாம் குருஸதா
என்னும் குரு பகவான் தியான மந்திரத்தை கூறி தினமும் குரு பகவானை தியானித்து வர நன்மைகள் மேலோங்கும்.
மனதில் அமைதி தழைத்தோங்கும். செல்வச் செழிப்பு உண்டாகும்
ஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக அருட்பார்வை பெற்றால்தான் ஜாதகரின் கிரகதோஷங்கள் தீரும்.‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்பது பழமொழி.
தமிழகத்தில் குருபகவான் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் திருஇரும்பூளை எனப்படும் ஆலங்குடி, தஞ்சைக்கு அருகேயுள்ள இருப்புப் பாதையில் உள்ள தென்குடித்திட்டை, காரைக்குடிக்கு அருகிலுள்ள பட்டமங்கலம் போன்ற திருத்தலங்கள் குரு பரிகாரத் திருத்தலங்களாக பிரபலமடைந்துள்ளன.
குருவிற்கு உகந்த நாள் வியாழக்கிழமையாகும்.
குருவிற்கு உகந்த நாள் வியாழக்கிழமையாகும்.
ராசிகளின் உருவங்கள் தான் அமர்ந்திருக்கும் பாறையில் பொறிக்கப்பட்டு, ராசிமண்டல குருபகவான் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார் குருபகவான்..!
தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தில் கண்குளிரதரிசித்து மனம் நிறைய அருள் பெறலாம்..!.
தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தில் கண்குளிரதரிசித்து மனம் நிறைய அருள் பெறலாம்..!.
பூந்தோட்டத்திலிருந்து நன்னிலம் செல்லும் பிரதான சாலையிலேயே பழமையும் பெருமையும் கொண்ட ஆலயம் அமைந்துள்ளது.
ஆலய நாயகனாக அகஸ்தீஸ்வரரும் நாயகியாக தர்மசம்வர்த்தினியும் அருள்கின்றனர். ஈசன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.
அருகிலேயே இறைவி தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறாள்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி வலது பாதத்தை முயலகன் மீது வைத்து இடதுகாலை மடக்கி வலது தொடையின் மீது வைத்தும் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடுகளை ஏந்தியும் காட்சியளிப்பார்.
இத்திருத்தலத்திலோ ராசிகள் அனைத்தும் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்துள்ள நந்தியின் மீது உட்கார்ந்தபடி சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கும் மோன நிலையில் இந்த ராசி மண்டல குரு பகவான் கம்பீரமாகக் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ராசிமண்டல குன்றின் மீது நந்திபகவானின் மீது எழுந்தருளியுள்ள
குரு பகவான் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.
பின்னிரு கரங்களில் சர்ப்பம், அக்னி ஏந்தி, வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடுகளுடன் அருட்கோலம் கொண்டுள்ளார்.
இவ்வாறு ராசிமண்டலத்துடன் நந்தியுடன் வேறு எந்த தலத்திலுமே குருபகவான் இல்லை என்றே கூறலாம்.

சனிபகவானுக்கு அடுத்தபடியாக, கிரகநாதர்களில் மக்கள் மிகவும் பயபக்தியுடன் வழிபடுவது, குரு பகவானைத்தான்.
வியாழக்கிழமைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நாளன்றும் இவரது சந்நதியில் சிறப்பு வழிபாடுகள், பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தில் திருமணத்தடை நீங்க, மகப்பேறு கிட்ட, பெருஞ்செல்வம், புகழ் அடைய என பல்வேறு பிரார்த்தனைகளுடன் ஈசனையும் ராசிமண்டல குருபகவானையும் பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.
எழுந்தருளியிருக்கும் ராசிமண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்து வழிபட அனைத்து வித நன்மைகளும் கிட்டுவதால், பிரதோஷ வேளைகளில் இவருக்கும் இவர் எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமானுக்கும் விசேஷ வழிபாடுகள் செய்கின்றனர்.

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் அறம்வளர்த்த நாயகி சமேத அகஸ்தீஸ்வரரை, அகத்தியர் தனது மனைவி லோபாமுத்திரையுடன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆலயத்திற்குள் தொன்மை வாய்ந்த சந்நதிகள் உள்ளன.
அகத்தியர் வழிபட்ட தலங்கள் அகஸ்தீஸ்வரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆலயம் ராசிமண்டல குருபகவான் ஆலயம் என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
ஆலயத்திற்குள் தொன்மை வாய்ந்த சந்நதிகள் உள்ளன.
அகத்தியர் வழிபட்ட தலங்கள் அகஸ்தீஸ்வரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஆலயம் ராசிமண்டல குருபகவான் ஆலயம் என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பூந்தோட்டம் -
நன்னிலம் பாதையில் அமைந்திருக்கிறது,
Lord Shiva as Abathsahayeswarar -Elavarkuzhali Ammai in Alangudi
திருவேங்கைவாசல் குரு தட்சிணாமூர்த்தி சந்தன காப்பு அலங்காரம்.
.
நன்னிலம் பாதையில் அமைந்திருக்கிறது,
Lord Shiva as Abathsahayeswarar -Elavarkuzhali Ammai in Alangudi
திருவேங்கைவாசல் குரு தட்சிணாமூர்த்தி சந்தன காப்பு அலங்காரம்.
.
ராசி மண்டல குரு பகவான் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
இன்று குருவாரம் வியாழக்கிழமைக்கு ஏற்ற அருமையான பகிர்வு.
ReplyDeleteகுருவருள் இருப்பின் நிறைய கருத்துக்களை அருள நானும் மீண்டும் வருவேனாக்கும் ...... ஜாக்கிரதை !!!!!!
ஆவலுடன் எதிர்பாருங்கள். காணத்தவறாதீர்கள். !
[அப்பாடி ........ இப்போதைக்கு எஸ்கேப் ;) ]
அற்புதமான படங்கள் + விளக்கங்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteபூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாக மணம் மிக்க, மனம் மகிழ்விக்கும், தலைப்பூஊஊஊ !
ReplyDelete>>>>>
ஜொலிக்கும் முதல் படமே அருமையோ அருமை. எங்கிருந்துதான் சேகரிப்பீர்களோ !!!!! இந்தத் தொழில் இரகசியத்தை எனக்குக்கூடச் சொல்லக்கூடாதா ? என்னவோ போங்க ! ;)
ReplyDelete>>>>>
SPB அவர்களின் குரு பகவானே சரணம் பாடல் காணொளி இனிமையோ இனிமை.
ReplyDeleteஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா மேல் இவர் பாடியுள்ள அருமையான [தேன் இசை] பல பாடல்களை மெய்மறந்து நாங்கள் அடிக்கடி போட்டுக் கேட்பதுண்டு.
>>>>>
மற்றொரு ‘குரு பூர்ணிமா’ காணொளியை நான் பார்க்க விரும்பாததால், அதைத் திறக்க முயற்சிக்கவே இல்லை. மன்னிக்கணும்.
ReplyDelete>>>>>
குரு பகவான் தியான மந்திரங்களுடன் பதிவின் ஆரம்பமே அருமை.
ReplyDelete>>>>>
குருர் பிரும்மா குருர் விஷ்ணு ...... காணொளிக்காட்சிகள் ஜோர் ஜோர் !
ReplyDeleteவரவர எவ்வளவு காணொளிகளை இணைக்கிறீர்கள் !
ரொம்பத்தான் ................. ஓவர் படுத்தல் !!
>>>>>
This comment has been removed by the author.
ReplyDelete’குரு பார்த்தால் கோடி நன்மை’ சந்தோஷம்.
Deleteதங்கள் பதிவுகளைப்பார்த்தாலே எனக்கு அது கிடைத்து விடுகிறதாக்கும்.
இவ்வாறு தங்கள் மூலம் கோடிக்கணக்கில் கிடைக்கும் நன்மைகளை வைக்கத்தான் நம் வீட்டில் இடமில்லை.
>>>>>
தென்குடித்திட்டை, பட்டமங்கலம் என அடிக்கடி பட்டையைக்கிளப்பி வருகிறீர்கள்.
ReplyDeleteபடிக்கப்படிக்க மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. சந்தோஷமாக உள்ளது.
>>>>>
தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திலிருந்து நன்னிலம் பாதையில் என்னைத்தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் தர்மசம்வர்த்தினி நாயகி ஸமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரரை தரிஸிக்க வைத்தது அபாரம் ! அசத்தல் !!
ReplyDeleteநம் _ _ _ _ க்கு ரங்கநாயகி போல .......
இந்த அம்பாளுக்கு அறம் வளர்த்த நாயகி என்று இன்னொரு பெயரா ?
அப்பப்பா ... எவ்ளோ தகவல்கள் தந்து உதவி வருகிறீர்கள் ..... அடி .... அம்மாடியோ !
>>>>>
ஆலங்குடி, நம்மூர் நாமக்கல் ;) , ஆலைமலை, திருவேங்கை வாசல் என விலையில்லா [இலவச] இணைப்புகளும் அம்மா இன்று கொடுத்தருளியுள்ளது அவர்களின் கருணையைக்காட்டுகிறது.
ReplyDeleteமகிழ்ச்சி.
>>>>>
அருமையான, அசத்தலான, அழகான இன்றைய தங்களின் பதிவுக்கு என் நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநாளை மீண்டும் சந்திப்போம். எங்கிருந்தாலும் ....... வாழ்க !
;) 1331 ;)
ooo ooo ooo ooo
குரு பார்க்க கோடி நன்மை உங்க பதிவு மூலமாக எங்களுக்கும் கிடைத்துவிட்டது,எங்கேந்து தான் படங்கள் சேகரிக்கிரீங்களோ? நன்றி நன்றி
ReplyDeleteதிரு வேங்கை வாசல் குரு தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்பு அலங்காரம் பார்க்க பார்க்க பரவசம்
ReplyDeleteஅருமையான விளக்கங்கள், அழகிய படங்கள்.
ReplyDeleteநாங்களும் இந்த கோவிலுக்கு போய் குரு பகவானை தரிசனம் செய்து இருக்கிறோம். ஒரு காதில் குளையும், ஒரு காதில் டோடும் அணிந்து இருப்பார் இது விஷேசம் என்று குருக்கள் காட்டினார்.
ராசி மண்டல குருபகவான் கோயில் இதுவரை அறிந்தது இல்லை! பூந்தோட்டம் சரஸ்வதி கோயிலுக்கு சென்றிருக்கிறேன்! இங்கு சென்றதில்லை! அருமையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteதென்குடித்திட்டைக்கு சென்றுள்ளோம்.ராசிமண்டல குருபகவான் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றிம்மா.
ReplyDeleteபூந்தோட்டம் திருக்கோயிலைப் பற்றிய அறிமுகம் இனிமை..
ReplyDeleteமங்கலகரமான படங்கள் மனதில் நிறைகின்றன. மகிழ்ச்சி..
மேகமழை வர்ஷிக்கிறதோ இல்லையோ, பதிவைத் திறந்த உடனே சிவபெருமானின் அருள் மழை வர்ஷிக்கிறது.
ReplyDeleteமுதல் படம் கண்ணை விற்று அகலமாட்டேங்குது அம்மா.
ReplyDeleteபூந்தோட்டம் கோயிலைப் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி
தஞ்சைக்கருகிலுள்ள குருவிற்கான கோவில்கள் பற்றித்தெரியும். ஆனால் பூந்தோட்டம் நன்னிலம் பிரதான சாலையில் குருவிற்கான கோவில் அமைந்திருப்பது தெரியாத தகவல்.
ReplyDeleteதகவல்களும் படங்களும் அழகு!
முதலாவது படம் மனதைக்கொள்ளை கொள்கிறது. அதுபோல சந்தனக்காப்பு அலங்காரம் மிகவும் அழகாக இருக்கு.அழகான படங்கள் சிறப்புத்தகவல்கள். காணொளிகள் அருமை. நல்பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபூந்தொட்ட குருவின் மகிமைகள் அறிந்து கொண்டேன். நன்றி பகிர்விற்கு.
ReplyDelete