Showing posts with label தட்சிணாமூர்த்தி. Show all posts
Showing posts with label தட்சிணாமூர்த்தி. Show all posts

Thursday, October 9, 2014

தேப்பெருமாநல்லூர் அன்னதான தட்சிணாமூர்த்தி


தோற்றத்தில் இளைஞரும் ஒளி பொருந்தியவரும்,
வயதிலே மிக மூத்த சீடர்களைக் கொண்டவரும்,
வேதங்கள் அனைத்திற்கும் ஆதியாக நின்றவரும்,
எப்போதும் புன்சிரிப்போடு காட்சி அளிப்பவரும்,

கல்லால மரத்தின் கீழ் குழுவோடு அமர்ந்தவரும்,
காலின் கீழ் முயலகனை அழுந்தும்படி வைத்தவரும்,
கண்டார் எவரும் உடன் மயங்கும்படி திகழ்பவரும்,
கிழக்குக்கு வலப்புறத்தே எப்போதும் இருப்பவரும்,

சீடர்களின் மனதிலே தோன்றும் வினாவுக்கெல்லாம்,
தம் மௌன மொழியாலே விடையை இனிதுணர்த்தும்,
வியாழனில் மஞ்சள் உடை சார்த்தி நாங்களெல்லாம்,
அறியாதவை நீக்கி அருள்கின்றவரே! வணங்குகிறோம். 

வாய் வலிக்க வலிக்க தொடர்ந்தே புகழ்ந்தாலும்,
உம் அரிய, பெரிய மௌனத்தின் சிறப்பு தன்னை,
யாம் முழுதாக அறிவதுவும் என்றோ? ஆனாலும்,
உம் காலடி பணிந்தே இருப்பதில் தான் நன்மை.

- (தட்சிணாமூர்த்தி துதி)
ஆன்மாக்கள் வடக்கு நோக்கிச் செல்வதை சரண யாத்திரை என்றும், தெற்கு நோக்கிப் போவதை மரண யாத்திரை என்றும் ஞானநூல்கள் கூறுகின்றன. ஆன்மாக்கள் தன்னை நோக்கி சரணடைய விரும்புவதால், அவர்களை ரட்சிப்பதற்காக தட்சிணாமூர்த்தி தெற்குநோக்கி அருள் புரிகிறார். தட்சிணாமூர்த்தியை வழிபட குரு கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். கல்வி, கேள்வி, ஞானம், புதிய- அரிய கலைகளில் தேர்ச்சி பெறலாம். மேலும், புகழையும் பொருளையும் ஒருசேர அடைய தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறந்தது..

நியாயத்திற்கு  தலைவரான தட்சிணா மூர்த்தியை  வழிபட வழக்குகளில் நல்ல தீர்ப்பினைப்   பெறலாம்.

உடல் வளம் பெறவும், வலுவுடன் திகழவும் தட்சிணாமூர்த்தியின் அருள் அவசியம் தேவை.

மங்களகரமான மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருளிருந்தால் வாழ்நாள் முழுவதும் மங்களம் நிறைந் திருக்கும்; மனம் ஒருநிலைப்படும்; ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்; இறையருள் நிறைந்திருக்கும்; மனம் சலனப் படாது.
குடந்தையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள தேப்பெருமாநல்லூர் தலத்தில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவருக்கு பழைய சோறு- அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.
சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப 
கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம். 
Human Intrest detail news

யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்பது நம்பிக்கை..

சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.
மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் அருள்புரியும் வேதாந்த நாயகி அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில்  நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. 
நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்லும் அன்னையின் உபதேசக் கருணைப் பார்வையால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். 

 அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் 
மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். 
சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். 

அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். 

அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார்

சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். 

சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். 

சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். 

அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. 

அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். 

அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். 
அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்ட சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். 

அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார்

. அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். 

இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். 

வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். 

அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். 

இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். 

ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார்

ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச்
சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. 

ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். 

இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.
காது இல்லாத நந்தி
பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். 

இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். 

இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.
இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். 

ஆலயத்தில் வடபகுதியில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். 

இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். 

இந்தச் சிவாலயத்திற்கு அருகில்உள்ள பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். 

 பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்கு சுற்றில்  எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி  இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். 

சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு சுர்றில்  எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.

கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

திருக்கோவிலின் தலமரம் வன்னி. 
தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

Thursday, July 10, 2014

பூந்தோட்டம் ராசிமண்டல குரு பகவான்








தப்த காஞ்சன வர்ணாபம் சதுர் புஜ சமந் விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம் ச கமண்டலு வரான்விதாம்
பீதாம்பர தரம் தேவம் பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம் விசித்ரமகு டோஜ்வலம்

ஸ்வர்ணா ஸ்வர தமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம்
மேரோ: ப்ரதகஷிணம் ஸம்யகா சாந்தம் ஸுஸோப நம
அபிஷ்ட வரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்தியர்த்தம் ப்ரணாம் குருஸதா

என்னும்  குரு பகவான் தியான மந்திரத்தை கூறி  தினமும் குரு பகவானை தியானித்து வர  நன்மைகள் மேலோங்கும். 

மனதில் அமைதி தழைத்தோங்கும். செல்வச் செழிப்பு உண்டாகும்


ஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக அருட்பார்வை பெற்றால்தான் ஜாதகரின் கிரகதோஷங்கள் தீரும்.‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்பது பழமொழி. 

தமிழகத்தில் குருபகவான் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் திருஇரும்பூளை எனப்படும் ஆலங்குடி, தஞ்சைக்கு அருகேயுள்ள இருப்புப் பாதையில் உள்ள தென்குடித்திட்டை, காரைக்குடிக்கு அருகிலுள்ள பட்டமங்கலம் போன்ற திருத்தலங்கள் குரு பரிகாரத் திருத்தலங்களாக பிரபலமடைந்துள்ளன.

 குருவிற்கு உகந்த நாள் வியாழக்கிழமையாகும். 

ராசிகளின் உருவங்கள் தான் அமர்ந்திருக்கும் பாறையில் பொறிக்கப்பட்டு, ராசிமண்டல குருபகவான் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார் குருபகவான்..!

தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தில் கண்குளிரதரிசித்து மனம் நிறைய அருள் பெறலாம்..!. 
பூந்தோட்டத்திலிருந்து நன்னிலம் செல்லும் பிரதான சாலையிலேயே பழமையும் பெருமையும் கொண்ட  ஆலயம் அமைந்துள்ளது.

ஆலய நாயகனாக அகஸ்தீஸ்வரரும் நாயகியாக தர்மசம்வர்த்தினியும் அருள்கின்றனர். ஈசன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

அருகிலேயே இறைவி தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறாள்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி வலது பாதத்தை முயலகன் மீது வைத்து இடதுகாலை மடக்கி வலது தொடையின் மீது வைத்தும் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடுகளை ஏந்தியும் காட்சியளிப்பார்.

இத்திருத்தலத்திலோ ராசிகள் அனைத்தும் பொறிக்கப்பட்ட ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்துள்ள நந்தியின் மீது உட்கார்ந்தபடி சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கும் மோன நிலையில் இந்த ராசி மண்டல குரு பகவான் கம்பீரமாகக் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 ராசிமண்டல குன்றின் மீது நந்திபகவானின் மீது எழுந்தருளியுள்ள 
குரு பகவான் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.

பின்னிரு கரங்களில் சர்ப்பம், அக்னி ஏந்தி, வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடுகளுடன் அருட்கோலம் கொண்டுள்ளார். 

இவ்வாறு ராசிமண்டலத்துடன் நந்தியுடன் வேறு எந்த தலத்திலுமே குருபகவான் இல்லை என்றே கூறலாம். 

சனிபகவானுக்கு அடுத்தபடியாக, கிரகநாதர்களில் மக்கள் மிகவும் பயபக்தியுடன் வழிபடுவது, குரு பகவானைத்தான்.

வியாழக்கிழமைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நாளன்றும் இவரது சந்நதியில் சிறப்பு வழிபாடுகள், பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.

  ஆலயத்தில் திருமணத்தடை நீங்க, மகப்பேறு கிட்ட, பெருஞ்செல்வம், புகழ் அடைய என பல்வேறு பிரார்த்தனைகளுடன் ஈசனையும் ராசிமண்டல குருபகவானையும் பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

 எழுந்தருளியிருக்கும் ராசிமண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்து வழிபட அனைத்து வித நன்மைகளும் கிட்டுவதால், பிரதோஷ வேளைகளில் இவருக்கும் இவர் எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமானுக்கும் விசேஷ வழிபாடுகள் செய்கின்றனர். 
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும்  அறம்வளர்த்த நாயகி சமேத அகஸ்தீஸ்வரரை, அகத்தியர் தனது மனைவி லோபாமுத்திரையுடன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

 ஆலயத்திற்குள் தொன்மை வாய்ந்த சந்நதிகள் உள்ளன.

அகத்தியர் வழிபட்ட தலங்கள் அகஸ்தீஸ்வரங்கள் என அழைக்கப்படுகின்றன.  ஆலயம் ராசிமண்டல குருபகவான் ஆலயம் என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பூந்தோட்டம் -
நன்னிலம் பாதையில் அமைந்திருக்கிறது,

Lord Shiva as Abathsahayeswarar -Elavarkuzhali Ammai in Alangudi
Elavarkuzhali Ammai

திருவேங்கைவாசல் குரு தட்சிணாமூர்த்தி சந்தன காப்பு அலங்காரம்.


 .

Thursday, July 3, 2014

ஞான தேவதைகள்



வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பவள்
வீணை செய்யு மொலியிலிருப்பாள்
உள்ளதாம் பொருள் வேதத்தினின் றொளிர்வாள்'


என்று பாரதி கூறிப்பிடும் கலைமகள் மொழி வடிவானவள். 
எழுத்துகள் 51. அவற்றை அட்சரங்கள் என்று சொல்வது மரபு. 

ஆகவே அந்த 51 அட்சரங்களைக் குறிக்கும் விதத்தில் 
தன் கையில் 51 மணிகள் கொண்ட அட்சரமாலையை தரித்திருக்கிறாள். 
அவள் வேதத்தின் உட்பொருளானவள்

சரஸ்வதி தன் கையில் வீணையை வைத்து வாசித்துக்கொண்டிருப்பது- கலைக்கு நாதனாக இறைவனின் உடலாய் அமைந்துள்ளது என்பதைக் காட்டுவதே. 

அவளே கலைகளின் நாயகி என்பதை உணர்த்தவும் அவளது கையில் வீணை இசைக்கிறது.. . வீணா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்துடன் விளங்கும் தட்சிணாமூர்த்தியின் கையிலும் வீணை உள்ளது

சரஸ்வதி கையில் உள்ள வீணைக்கு கச்சபி என்று பெயர். 

வீணை தட்சிணாமூர்த்தியாக இருந்து இசை நுணுக்கங்களை உபதேசித்த பின்னர், இறைவன் தான் உருவாக்கிய கச்சபி என்ற வீணையைத் தனது சகோதரியான சரஸ்வதி தேவிக்கு அளித்துவிட்டதாகப் புராண வரலாறு கூறும்.

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே தம் திருக்கரங்களில் அட்சமாலை ஏந்தியுள்ளனர். "சர்வ வித்யை அளிக்கும் பிரபு (ஈஸ்வரன்) சதாசிவனாகிய தட்சிணாமூர்த்தியே' என்று வேதம் புகழ்கிறது. 
வித்யா தேவதையான சரஸ்வதி தேவதையே வாக்தேவதையாக விளங்குகிறாள். அவள் அருள் இல்லாமல் நம்மால் பேச முடியாது.

ஞான தேவதைகளான இருவருமே  மெய்ஞ்ஞானத்தை 
அருளவல்ல அருட்தெய்வங்கள்
ஞாலம் நாறு நலங்கெழு  நல்லிசை 
நான்மறை முதநூல் முக்கட் செல்வன் ஆலமுற்றம்
என்று அகநானூறு அறிமுகப்படுத்துகிறது..! 
 "ஆலமர் தெய்வம்' என்று புறநானூறு  குறிப்பிடுகிறது..


thenkudi thittai tirutthala raja guru
Theni  Prajna Dakshinamoorthy.
tirutthuraiyur thala dakshinamoorthy