Tuesday, July 22, 2014

மங்கலங்கள் தேடித்தரும் ஆடிச் செவ்வாய்


  
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும் கருப்பஞ் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந் தனமே
கற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும்  ஸ்ரீ க்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும்.

தூய சாக்த நெறியின் தனிவழிபாடு ஸ்ரீ சக்ர வழிபாடாகத் திகழ்கிறது...
 ஸ்ரீ சக்ரம் சகல மந்திர தந்திர சக்திகளின் பிறப்பிடத்தின் மூலமாதலால் செவ்வாயன்று பூஜை செய்ய மூன்று சக்திகள், மும்மூர்த்திகள், பஞ்ச பூதங்கள், நவ கிரகங்கள், 51 தத்வங்கள், முப்பத்து முக்கோடி தேவர்களை பூஜித்த பலன் கிட்டும் என்று திருமூலர் தனது திருமந்திரத்திலே கூறுகின்றார்.  ஸ்ரீசக்ரத்தை பூஜை செய்து தேவியின் அருளை பெறலாம்..!
காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமாட்சி முன்பாக ஆதிசங்கரர்   ஸ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார்

திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் 
  ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருக்கிறது..
சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி ஆடிமாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். 
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். 

முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் 
செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடங்கி
4:30 மணி வரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது 

பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.

செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றி வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைப்பதாக  நம்புகின்றனர். 
ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.

விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெறவும், (என்றும் அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும்), மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும்  செவ்வாய் விரத்தை மேற்கொள்கின்றனர்.

ஆடிச் செவ்வாய் விரதத்தை புரட்டாசிச் சனி விரதம்போல் என்ணெய் வைத்து, சந்தனம் பூசி தோய்ந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கம்...

"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி  விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. 

செவ்வாய், சனி போன்ற  கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள்  தீவிரமாக தாக்குவதனால் அந்த ஜாதகர் உடல்,  உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். 

தீய கிரகங்களில் இருந்து வரும்   தீய கதிர்கள்  உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே  நல்லெண்ணைமுழுக்கு ...

ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தொடர்புடைய பதிவுகள்..
ஆடிச் செவ்வாய் தேடி ...

11 comments:

  1. ஆடிச் செவ்வாயின் அருமை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம் அம்மா... நன்றி...

    ReplyDelete
  3. மங்கலங்கள் தேடித்தரும் ஆடிச்செவ்வாய்
    என்ற மங்களகரமான இன்றைய தலைப்பும்,
    இந்த நாளுக்கு ஏற்ற மங்களவாரப் பதிவும் வெகு அழகு.

    >>>>>

    ReplyDelete
  4. முதல் படத்தில் உள்ள அம்பாளே மனதைக் கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது ......

    எனக்காகவே அமைத்துள்ளீர்கள் என நினைத்து மகிழ்ந்தேன் ;)

    >>>>>

    ReplyDelete
  5. ஸ்ரீசக்ர பூஜையின் விசேஷத்தினையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்.

    இனிப்புப்புட்டு சாப்பிட்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. எனக்குப் புட்டு தராமல் பல வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளீர்கள் ........... நினைவிருக்கட்டும்.

    >>>>>

    ReplyDelete
  6. அன்னை காஞ்சி காமாக்ஷி முன்பாகவும், திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி தாடகங்களிலும் [காதணிகளிலும்] ஸ்ரீசக்ரம் அமைந்துள்ளதாக எடுத்துச்சொல்லியுள்ளது இனிமை.

    >>>>>

    ReplyDelete
  7. ஆடிச்செவ்வாய் விசேஷங்கள் யாவும் வெகு அழகாகக் கோர்வையாகக் கொடுத்துள்ளது மேலும் சிறப்பாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  8. தொடர்புடைய பதிவான ‘ஆடிச்செவ்வாய் தேடி’ என்பதையும் தேடிப்பிடித்துப் பார்த்து மகிழ்ந்தேன். இணைப்பு கொடுத்துள்ளது மகிழ்வளிக்கிறது.

    இதுபோலவே இணைப்புகள் பதிவுகள் மூலமாவது என்றும் நீடிக்கட்டும். தொடர்ந்து மகிழ்வளிக்கட்டும்.

    >>>>>

    ReplyDelete
  9. ஆடிப்போக வைத்த அழகான ஆடிச்செவ்வாய் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். அனைத்துப்படங்களும் ஜோர் ஜோர். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    வாழ்க ! வாழ்க!! வாழ்க!!!

    ;) 1345 ;)

    oooOooo

    ReplyDelete
  10. ஆடிச்செவ்வாய் விரதத்தின் மகத்துவங்கள் அறிந்து மகிழ்ச்சி..
    வாழ்க.. வாழ்க நலம்..

    ReplyDelete
  11. ஆடி செவ்வாய் கிழமை குறித்த தகவல்கள் பயனுள்ளவை! படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete