அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வதீ ப்ராண நாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யுர் கரிஷ்யதி
_ மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில்
நல்ல பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளும்
ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எம பயம் போக்கும் மூர்த்தியாகத் திகழ்கிறார்..!
சிவன் பாதி, அம்பாள் பாதியாக அருள் வழங்கும் திருத்தலமான வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் என்ற அர்த்தநாரீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி விழா நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை இருக்கிறாள்.
சிவனுக்குரிய வலப்பாகத்தில் சந்திரனும்,
அம்பாளுக்கு பின்புறம் ஜடையும் உள்ளது.
சிவப்பகுதி கரங்களில் சூலம், கபாலமும்,
காதில் தாடங்கமும் இருக்கிறது.
அம்பாள் பகுதியிலுள்ள கைகளில் பாசம், அங்குசம், பூச்செண்டும்,
காதில் தோடும் உள்ளன.
சுவாமி பகுதி காலில் தண்டம், சதங்கையும்,
அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது.
சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.
அம்பாள் பகுதியை "இடபாகவல்லி' என்கின்றனர்.
சிவபக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான்.
மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன்.
ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார்.
அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது.
பின்பு மன்னன் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோயில் கட்டினான்.
பிருங்கி மகரிஷி, ஆலயத்தின் உற்சவராக இருக்கிறார்.
மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார்.
பார்வதி, சிவனிடம் பிருங்கிக்கு உண்மையை உணர்த்தும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை.
எனவே பார்வதி தேவி , சிவனைப் பிரிந்து பூலோகம் வந்து
ஒரு புளிய மரத்தின் அடியில் தவமிருந்தாள்.
அன்னைக்கு காட்சி தந்த சிவன், தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அர்த்தநாரீஸ்வரரை "சிந்தாமணிநாதர்' என்று அழைக்கின்றனர்.
ஆனி பிரம்மோற்ஸவத்தின்போது சிவனையும் அம்பாளையும் அருகருகில் வைப்பார்கள்.
பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் வகையில் பாவனை செய்வார்கள். இதனால், பார்வதி கோபமடைவது போலவும், சிவன் அர்த்தநாரியாக அம்பாளை ஏற்பதுமான சடங்குகள் செய்யப்படும்.
பின்னர், பிருங்கி மனம் திருந்தி அர்த்தநாரியை வழிபடுவார்.
இந்த வைபவம் மிக விசேஷமாக நடக்கும்.
புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி, "கருப்பை ஆறு' (கருப்பாநதி)என்று அழைக்கப்படுகிறது.
சிவராத்திரியன்று விசேஷ பூஜை நடக்கிறது.
இவருக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, சித்திரைப்பிறப்பன்று காலையில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், "சிந்தாமணிநாதர்' என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு "சிந்தை மரம்' என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும்.
தல புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.
சந்தன நடராஜர்,
நாய் வாகனம் இல்லாத பைரவர்,
கைகூப்பிய நிலையில் யோக சண்டிகேஸ்வரர்
அனைத்தும் வித்தியாசமான சிற்ப அமைப்புகளாகும்
யோக தட்சிணாமூர்த்தி,
சப்தமாதர்கள்..
மகாலட்சுமி,
கிளியுடன் சனீஸ்வரர்.
நாகராஜா, நாகராணி
சாஸ்தா, சித்தி விநாயகர், ஜூரதேவர், சூரியன், வீரபத்திரர், பஞ்சலிங்கம்,
ஆகியவை அருள்பொழிய அமைந்துள்ளர்..!
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாகத்திகழும் தேரோட்டம் திருத்தேரில் அம்மையப்பன் எழுந்தருளி அருள் பாலிப்பார்...
திருத்தேர் அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க தேர் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையத்துக்கு வந்து திருவாடுதுறை ஆதினம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்..!
சப்தவர்ணம் (தீர்த்தவாரி) நிகழ்ச்சியில் தீர்த்தவாரி கனகபல்லக்கிலும், அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்திலும் அம்மையப்பன் வீதியுலா நடைபெறும்...
தெப்பத்திருவிழா தேரோட்டத்துடன் திருவிழா நிறைவடையும்...
வாசுதேவ நல்லூர் அர்த்தநாரீசுவரர் பிரம்மோற்சவம் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வாசுதேவ நல்லூர் என்றதும் கவிஞர் மீரா நினைவுக்கு வருகிறார்! பதிவும் படங்களும் வழக்கம் போலவே அருமை.
ReplyDeleteவழக்கம் போல ஒரு சிறப்புமிகு பதிவு! பிருங்கி மகரிஷி மற்றும் அர்த்த நாரீசுவரரின் சிறப்பினை விளக்கும் பதிவு. பதிவுகளில் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் போக்குவரத்து விவரங்கள் கூடுதலாக சேர்த்திட்டால், ஆன்மீக அன்பர்களுக்கு உதவும் சகோதரியாரே! மேலும், பல ஆலயங்களுக்கு வெப்சைட்டுகள் உள்ளன. அந்த வெப்சைட் பற்றிய லிங்கும் கிடைத்தால் பகிரவும். நன்றி சகோதரி!
ReplyDeleteமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரத்துடன் ஆரம்பித்துள்ள இன்றைய பதிவு அருமை.
ReplyDelete>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteவாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் பற்றிய பல புதிய செய்திகளை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.
Deleteஅர்தநாரீஸ்வரராக இருப்பதால் சிவனும் சக்தியும் ஒன்றெனக் கலந்ததால் ’வாசுதேவல்லூர்’ என ஆகி தலைப்பில் ‘ந’ மறைந்து விட்டதோ என முதலில் நான் நினைத்தேன்.
இதைப்பற்றிக் கேட்கவும் நினைத்தேன்.
அதற்குள் தலைப்பே மாறி ‘ந’ அங்கு இடம் பெற்று விட்டது.
நன்றி.
இடபாகவல்லி ! ;)))))
ReplyDeleteசூப்பரான பெயர்.
>>>>>
ராஜா ரவிவர்மன், பிருங்கி முனிவர் கதைகள் சுவாரஸ்யம்.
ReplyDelete>>>>>
புளியமரம் = சிந்தைமரம் !
ReplyDeleteஎன் சிந்தையிலும் தங்கள் மூலம் இதனை இன்று ஏற்றிக்கொண்டேன்.
>>>>>
இந்தக்கோயில் எங்குள்ளதோ? தெரியவில்லை.
ReplyDeleteஎங்கு வேண்டுமானாலும் அது இருந்துவிட்டுப் போகட்டும். இங்குதான் இந்தப்பதிவினில் உள்ளதே, அதுவே எனக்குப் போதும்.
எனக்கென்ன, தங்களுடன் இங்கெல்லாம் நேரில் போய்ப்பார்க்கும் வாய்ப்பா கிட்டப்போகிறது?
>>>>>
இன்றைய விலையில்லா [இலவச] இணைப்பாகக் காசியும் திருச்செங்கோடும் கொடுத்துள்ளது ’அம்மா’வின் கருணைக்கு எடுத்துக்காட்டுகள்.
ReplyDelete>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமேலிருந்து கீழ் இரண்டாவது படமும், கீழே கடைசி படத்தின் இடதுபுற ஒரு படமும், கீழிருந்து மேல் நாலாவது படமும் இன்னும் திறக்கவே இல்லையாக்கும்.
Deleteஇருப்பினும் பல படங்கள் காட்சியளித்தவரை OK OK.
முதல் படம் தொடங்கி அனைத்துப்படங்களும் ஜோர் ஜோர்
எல்லாவற்றிற்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். வாழ்க !
;) 1334 ;)
oo oo oo oo
இப்போது எல்லாப்படங்களும் இனிதே காட்சியளிக்கின்றன.
Deleteசுபம் லாபம் உள்பட.
குறையொன்றும் இல்லை
வாசுதேவநல்லூரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை அந்த பக்கம் சென்றதில்லை. தங்கள் பதிவின் மூலம் அந்த ஊர் சிவனின் தரிசனம் கண்டேன். நன்றி!
ReplyDeleteஅழகான - மிக அழகான அர்த்தநாரீஸ்வரர் படங்களுடன் இனிய பதிவு..
ReplyDeleteமகிழ்ச்சி..
சிறப்புமிகு பதிவு....
ReplyDeleteஅழகான படங்களில் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வைத்தீர்கள் அம்மா...
ReplyDeleteஅருமை...
அர்தநாரீஸ்வரர் தத்துவமே மிக உயரிய தத்துவம் அம்மா! அழகான படங்களுடன், உத்சவம் பற்றிய தகவல்கள் பற்றித் தந்ததற்கு மிக்க நன்றி! சென்றதில்லை. செல்ல வேண்டும் என்று குறித்துக் கொண்டோம்.
ReplyDelete