ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே
அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார்.
ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே
திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன.
மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு.
அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.
(குழந்தைப் பேறு அளிக்கும் மந்திரங்கள்..)
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்
கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.
அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா
மந்திரம்
ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்
(புன்னை மரத்தடியில் ஜபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜபம் செய்ய ஏற்ற காலம்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் சந்தான ராமஸ்வாமி வரலாற்று சிறப்புடையவர்!
தஞ்சையை ஆண்ட மஹாராஷ்டிர மன்னர் பிரதாப சிம்ம மஹாராஜாவுக்கு பலகாலம் புத்திரப்பேறு இல்லாமையால் அரசரும், அவரது தேவியார் யமுனாம்பாளும் நீடாமங்கலம் சந்தான ராமரை வழிபட்டு, புத்திரப்பேறு பெற்றார்கள்!
சந்தான பாக்கியம் பெற்ற அரசர் கோயிலை சிறப்பாகக் கட்டி குடமுழுக்கும் செய்ததாக வரலாறு சொல்கின்றது.
நீடாமங்கலத்துக்கு தன் மனைவியின் பெயரால் ‘யமுனாம்பாள்புரம்’ என்று பெயரிட்டு, கோயிலில் வருமானத்துக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெறவும் வழிசெய்தார்.
கோயில் துவஜஸ்தம்பத்தை அடுத்து இரு நிலைகளைக் கடந்து சென்றால் சந்தான ராமன் அருள் தரிசனம் தருகிறார்.
மூலவர் ராமர், லட்சுமணர்&சீதா தேவியுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆஞ்சநேயர் சற்று தள்ளி நின்று கொண்டிருக்கிறார்.
உற்சவர் அழகான திருமேனியுடன் லட்சுமணர்&சீதா தேவி மற்றும்
சற்று தள்ளி நிற்கும் ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார்.
பக்கத்தில் ஆலிலை கண்ணன் ரூபத்தில் ஸ்ரீராமன்! குழந்தை பாக்கியம் வேண்டுவோர், இந்த ஆலிலை ராமகிருஷ்ணனை கையில் ஏந்தி வழிபடுகிறார்கள்.
சந்தான ராமனை சேவித்தால் சந்தான பாக்கியம் கிடைப்பது உறுதி என்று நம்பப்படுவதால் இக்கோயில் மிகச்சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது.
சந்தான ராமன் குழந்தை வரம் கொடுக்கும் ராமனாக இருப்பதால் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர் இங்கிதம் உணர்ந்து சற்று தள்ளி நிற்பதாகவும் கூறப்படுகின்றது.
ஒரே பிராகாரம் கொண்ட பெரிய கோயில் இது.
கோயிலில் நாலுகால பூஜை நடைபெறுவதுடன் பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகின்றது.
சூர்ய பிரபை, கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம்,
ஹனுமந்த வாகனம் என்று ஸ்ரீராமனை வாகனத்தில் அலங்கரித்து,
வீதி உலா நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில்
சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும்
ஸ்ரீமத் நிகமாந்த தேசிகன் ஆகியோர் திருநட்சத்திர நாட்களிலும்
சிறப்பு திருமஞ்சனமும் நடத்துகிறார்கள்.
இங்கு நேர்ந்து கொண்டு புத்திர பாக்கியம் பெற்றவர்கள், இக்கோயிலில் மரத் தொட்டில்களும் வெள்ளி தொட்டில்களும் கட்டுகிறார்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் இக்கோயிலின் நாயகனான சந்தான ராமஸ்வாமி பெயரில் சந்தான ராமஸ்வாமி வனம் என்ற கீர்த்தனம் (ஹிந்தோள வஸந்த ராகத்தில்) பாடித் துதித்திருக்கிறார்.
கும்பகோணம்-மன்னார்குடி பேருந்து வழியில் நீடாமங்கலம்
பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது,
ஸ்ரீ சக்கர ரேகையுடன் ஸ்ரீசந்தான கோபால சாளக்கிரமங்கள்..
நீடாமங்கலத்தில் உள்ள சந்தான ராமஸ்வாமி கோயிலின் சிறப்புகளை அறிந்தேன் அம்மா... நன்றி...
ReplyDeleteநீடாமங்கல ஸ்ரீராமர் தரிசனம் பெற்றேன்.
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள்.
பாடல்பகிர்வு, படங்கள் மிக அருமை.
ஆலிலை சந்தாண இராமசாமி அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அப்பப்பா எத்தனைக் கோவில்கள்....! எத்தனைக் கடவுள்கள். இங்கெல்லாம் போய்வர இந்த ஆயுள் போதாதே. சந்தான கிருஷ்ணன் நிறையவே கேள்விப்பட்டது. சந்தான ராமன் இப்போது அறிவது. இவர்கள் இருவரையும் இணைத்து சந்தான ராமகிருஷ்ணன் . பேஷ் பேஷ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇக்கோயில் இதுவரை நான் சென்றதில்லை.அடுத்த பயணத்தின்போது இக்கோயிலுக்குச் செல்வேன். நன்றி.
ReplyDeleteநித்யஸ்ரீ அவர்களின் சந்தான ராமஸ்வாமி பாடல் ‘சுகம்’ அளிப்பதாக உள்ளது.
ReplyDelete>>>>>
100 சதவீத பிள்ளை வரம் அருளும் சந்தான கோபாலஸ்வாமி ஸ்தோத்ர காணொளியும் அதில் உள்ள படங்களும் அழகோ அழகாக உள்ளன.
ReplyDelete>>>>>
ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹாமந்த்ரத்தை சங்கல்பத்துடன் கொடுத்துள்ளது படிக்க இன்பமும் உற்சாகமும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளன.
ReplyDelete>>>>>
பொதுவாக சந்தான கோபாலகிருஷ்ணன் என்றுதான் கேள்விப்பட்டதுண்டு. சந்தான ராமன் புதிதாக உள்ளது. சந்தான ராமகிருஷ்ணன் என்பது ஸ்ரீராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் சேர்ந்து அருளுவதாக உள்ளது.
ReplyDelete>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteகையில் ஏந்தி வழிபடுவதாகச்சொல்லும் ஆலிலை இராமன் விக்ரஹம் மிக அழகாக உள்ளது.
Deleteஒவ்வொரு மாதமும் புனர்பூசத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது கேட்க மகிழ்ச்சி.
ReplyDelete>>>>>
ஸ்ரீ சக்ர ரேகைகளுடன் கூடிய சந்தான கோபால சாளக்கி[ர]ராமங்கள் காட்டியுள்ளவை காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் அல்லவா !
ReplyDeleteஎன் அப்பா செய்துவந்த பஞ்சாயதன பூஜையில் சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமியாக ஒரு சாளக்கிராமம் இன்னும் உள்ளது.
பல்வேறு சாளக்கிராமங்களைக் காட்டியுள்ள பகிர்வுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
முதல் படம் மட்டும் ஏனோ இதுவரை திறக்கப்படவில்லை. கடைசி இரண்டு படங்களும் மிக அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
ReplyDelete;) 1342 ;)
ooo ooo ooo
முதல் படம் இப்போது நன்கு காட்சியளிக்கிறது. கண்குளிரக் கண்டு மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி + நன்றி.
ReplyDeleteoo oo oo oo oo
நீடாமங்கலம் சந்தான ராமனை பற்றி சிறப்பான தகவல்களும், படங்களும்... நன்றிம்மா.
ReplyDeleteகுழந்தை ராமனின் துயில்கொள்ளும் படம் கண்ணை விட்டு நீங்கவில்லை.
நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி திருக்கோயிலைப் பற்றிய இனிய பதிவு!.. மகிழ்ச்சி..
ReplyDeleteசந்தான ராமஸ்வாமி பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...
ReplyDeleteபடங்களுடன் அருமையான பகிர்வு.
வணக்கம்.... உங்களது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் புகைப்படத்தை வலைபதிவில் கண்டோம் (அதிகம் பேர் உள்ள) , அது போல ஒரு புகைப்படம் எங்களுக்கு தேவைபடுகிறது (அளவு 20க்கு 20க்கு இன்ச்) என் நண்பரும் பல இடங்களில் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை. எனவே தயவு செய்து எங்களுக்கு அந்த புகைப்படம் பற்றிய விவரங்களை சொன்னால் நன்றாக இருக்கும். என்னுடைய நண்பரும் தற்போது கோவையில் தான் வசித்து வருகிறார். (திரு.செல்வராஜ் - 9943105020) இவரிடம் நீங்கள் தகவல் சொன்னாலும் போதும். இல்லையென்றால் உங்களுடைய அலை பேசி எண்ணை கொடுத்தாலும் உங்களிடம் அவரை பேச சொல்கிறேன். எங்களுக்கு உடனடியாக தேவை. நன்றி.......உங்களது சேவை மென்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவணக்கம்.... உங்களது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் புகைப்படத்தை வலைபதிவில் கண்டோம் (அதிகம் பேர் உள்ள) , அது போல ஒரு புகைப்படம் எங்களுக்கு தேவைபடுகிறது (அளவு 20க்கு 20க்கு இன்ச்) என் நண்பரும் பல இடங்களில் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை. எனவே தயவு செய்து எங்களுக்கு அந்த புகைப்படம் பற்றிய விவரங்களை சொன்னால் நன்றாக இருக்கும். என்னுடைய நண்பரும் தற்போது கோவையில் தான் வசித்து வருகிறார். (திரு.செல்வராஜ் - 9943105020) இவரிடம் நீங்கள் தகவல் சொன்னாலும் போதும். இல்லையென்றால் உங்களுடைய அலை பேசி எண்ணை கொடுத்தாலும் உங்களிடம் அவரை பேச சொல்கிறேன். எங்களுக்கு உடனடியாக தேவை. நன்றி.......உங்களது சேவை மென்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவணக்கம்.... உங்களது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் புகைப்படத்தை வலைபதிவில் கண்டோம் (அதிகம் பேர் உள்ள) , அது போல ஒரு புகைப்படம் எங்களுக்கு தேவைபடுகிறது (அளவு 20க்கு 20க்கு இன்ச்) என் நண்பரும் பல இடங்களில் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை. எனவே தயவு செய்து எங்களுக்கு அந்த புகைப்படம் பற்றிய விவரங்களை சொன்னால் நன்றாக இருக்கும். என்னுடைய நண்பரும் தற்போது கோவையில் தான் வசித்து வருகிறார். (திரு.செல்வராஜ் - 9943105020) இவரிடம் நீங்கள் தகவல் சொன்னாலும் போதும். இல்லையென்றால் உங்களுடைய அலை பேசி எண்ணை கொடுத்தாலும் உங்களிடம் அவரை பேச சொல்கிறேன். எங்களுக்கு உடனடியாக தேவை. நன்றி.......உங்களது சேவை மென்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவணக்கம்.... உங்களது ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் புகைப்படத்தை வலைபதிவில் கண்டோம் (அதிகம் பேர் உள்ள) , அது போல ஒரு புகைப்படம் எங்களுக்கு தேவைபடுகிறது (அளவு 20க்கு 20க்கு இன்ச்) என் நண்பரும் பல இடங்களில் தேடிபர்த்தும் கிடைக்கவில்லை. எனவே தயவு செய்து எங்களுக்கு அந்த புகைப்படம் பற்றிய விவரங்களை சொன்னால் நன்றாக இருக்கும். என்னுடைய நண்பரும் தற்போது கோவையில் தான் வசித்து வருகிறார். (திரு.செல்வராஜ் - 9943105020) இவரிடம் நீங்கள் தகவல் சொன்னாலும் போதும். இல்லையென்றால் உங்களுடைய அலை பேசி எண்ணை கொடுத்தாலும் உங்களிடம் அவரை பேச சொல்கிறேன். எங்களுக்கு உடனடியாக தேவை. நன்றி.......உங்களது சேவை மென்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவணக்கம் .. வாழ்க வளமுடன்
Deleteதங்கள் e mail id தாருங்கள்..படம் அனுப்பி வைக்கிறோம்..
அம்மா உங்களுக்கு எங்களது நன்றி,,,,,, இது எனது மின் அஞ்சல் முகவரி, (rajawinindia@gmail.com and raja@mypenta.net) இதருக்கு அனுப்பி வையுங்கள்.......நீங்கள் அனுப்பும் புகைப்படம் 20க்கு 20 இன்ச் அளவுக்கு நன்றாக இருக்குமா? ....உங்களது சேவைக்கு எங்களது கோடான கோடி நன்றிகள்......
Deleteஅம்மா , நீங்கள் அனுப்பிய புகைப்படம் கிடைத்தது......மிக்க நன்றி .... நாங்கள் இதை வைத்து பெரிய புகைப்படம் எடுக்க முயற்சி செய்கிறோம், ஒரு வேலை படம் தெளிவாக இல்லையென்றால் தாங்கள் தயவு செய்து உங்களின் விலாசத்தை கொடுங்கள்.நீங்கள் என் மின் அஞ்சலுக்கு அனுப்பினால் போதும்.... இது ஒரு கிராமத்தின் ஆசை.....இல்லையென்றால் வேறு எப்படி தெளிவாக இந்த புகைப்படத்தை பெறலாம் என்பதை எங்களுக்கு தெரியபடுத்துங்கள்........ நன்றி
ReplyDelete