Showing posts with label ஸ்ரீ ராமர். Show all posts
Showing posts with label ஸ்ரீ ராமர். Show all posts

Thursday, August 7, 2014

அற்புததரிசனம் அருளும் ஸ்ரீஅனந்தராமர்..!

   

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்

ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம

வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் அருள்பாலிக்கிறார்.

துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.


















கலியுகத்தின் அடிப்படையில் மோகினி அவதார சிலை அமைந்துள்ளது.

திரேதா யுகத்தில் ராமபிரான் இலங்கை சென்று

அனுமன் அகம் மகிழ, அமர்வீரர் அகம் மகிழ
அணுகின அத்தனையும், அனந்த ராமன் ஆனதே!
அணுப் பொழுதில்  இராகவன்
அணுவுக்குள் அணுவாகி ஒன்றாகி நின்றனன்!

அங்கு-காணினும் ராகவா, இங்கு-காணினும் ராகவா
எங்கெங்கு காணினும் என் ராகவா ராகவா!!!
என்று வீரமாகப் போரிட்டு வெற்றியுடன் சீதாதேவியை மீட்டு .  திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். 
சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடன் கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச்  சென்றார். 
இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு- கிழக்காக பள்ளி கொண்டார். 
சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள்.
அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான்

களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.
புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமன்























இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்துள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி. இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆலயம் அமைக்க 
திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒரு பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன.

பல ஆண்டுகள் கடந்தபின் சிற்றரசர் ஒருவர் தன் மகள் வேங்கடம் மாவுக்கு சீதனமாக வழங்கிய இந்த பகுதியில்  இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். 

மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், 
ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே  நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். 

பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்யோடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை  செய்யப்பட்டார்.

கலியுக வரலாற்றின்படி, ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவிஷ்ணு. அதைக் குறிக்கும் வண்ணம் ஆலயத்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகினி அவதார விக்ரகம் உள்ளது.

முற்காலத்தில்  திருவேங்கடத்தின் நினைவாக வேங்கடபுரி என்னும் பெயரில் விளங்கியது. 

பின்னர் ஆலயத் திருப்பணி செய்த வேங்கடம்மாளின் நினைவாக வேங்கடம்மாள்பேட்டை என்று அழைக்கப்பட்டு, தற்போது வெங்கட்டாம்பேட்டை என மருவி வழங்குகிறது.
""இங்குள்ள ராமபிரான் சயனக் கோலத் திருவடிவத்தை 
வேறெங்கும் காண்பது அரிது. 

இவரை தரிசிக்கும்போது மன நிம்மதி உண்டாவதை 
 அனுபவப்பூர்வமாக உணரலாம். 

பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். 

காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து ராமபிரான் ஓய்வெடுத்த இடம் இது. 

"சீதையை மீட்டுவிட்டோம்; இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கும் நிம்மதி' என்ற எண்ணத்தோடு  ராமபிரான் துயில் மேற்கொண்டதால்,  ராமபிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும்  மனநிறைவும் அவரை தரிசிப்போருக்கும் கிட்டுகிறது''     


""பெருமாளைத்தான் நின்ற    கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று கண்டுள்ளோம். 

ராமபிரானின் சயன கோலத்தை மிக அரிதாகவே தரிசிக்கலாம். 

அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. 

இங்கு வந்து வழிபடுவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும்.
மன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு போன்ற எல்லாமே சித்திக்கும்'' .
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வெங்கட்டாம்பேட்டை  உள்ளது.


https://www.youtube.com/watch?v=wmRL2qSGsMk&list=FLnXPlXoKHsHXJF4y5iFiI0A&index=3



ஏழு நிலை ராஜகோபுரம்
The seven-tier rajagopuram of Vengadampettai temple.
ஊஞ்சல் மண்டபம்
Calls for attention: The seven-tier rajagopuram and (right) the unjal mandapam at the Vengadampettai temple.The view of the Unjal Mandapam with the seven-tier rajagopuram of Vengadampettai temple. Photo: Special Arrangement

Saturday, July 19, 2014

ஆலிலை ஸ்ரீசந்தான ராமஸ்வாமி



ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே

அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். 
ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு  ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. 
மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. 
அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.

(குழந்தைப் பேறு அளிக்கும் மந்திரங்கள்..)
தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ
தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

கதா காலேமாத: கதய கலிதாலக்த கரசம்
பிபேயம் வித்யார்த்தீ தவசரண நிர்ணே ஜன ஜலம் !
ப்ரக்ருத்யா மூகானம்பி ச கவிதா காரண தயா
கதா தந்தே வாணீ - முககமல தாம்பூலா ஸதாம்.

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-

த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்

த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா

மந்திரம்

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்
(புன்னை மரத்தடியில் ஜபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜபம் செய்ய ஏற்ற காலம்.


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் சந்தான ராமஸ்வாமி வரலாற்று சிறப்புடையவர்!

தஞ்சையை ஆண்ட மஹாராஷ்டிர மன்னர் பிரதாப சிம்ம மஹாராஜாவுக்கு  பலகாலம் புத்திரப்பேறு  இல்லாமையால் அரசரும், அவரது தேவியார் யமுனாம்பாளும் நீடாமங்கலம் சந்தான ராமரை வழிபட்டு, புத்திரப்பேறு பெற்றார்கள்! 

சந்தான பாக்கியம் பெற்ற அரசர் கோயிலை சிறப்பாகக் கட்டி குடமுழுக்கும் செய்ததாக வரலாறு சொல்கின்றது. 

நீடாமங்கலத்துக்கு தன் மனைவியின் பெயரால் ‘யமுனாம்பாள்புரம்’ என்று பெயரிட்டு, கோயிலில் வருமானத்துக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெறவும் வழிசெய்தார்.
கோயில் துவஜஸ்தம்பத்தை அடுத்து இரு நிலைகளைக் கடந்து சென்றால் சந்தான ராமன் அருள் தரிசனம் தருகிறார். 
மூலவர் ராமர், லட்சுமணர்&சீதா தேவியுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆஞ்சநேயர் சற்று தள்ளி நின்று கொண்டிருக்கிறார்.

உற்சவர் அழகான திருமேனியுடன் லட்சுமணர்&சீதா தேவி மற்றும்
 சற்று தள்ளி நிற்கும் ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். 
பக்கத்தில் ஆலிலை கண்ணன் ரூபத்தில் ஸ்ரீராமன்! குழந்தை பாக்கியம் வேண்டுவோர், இந்த ஆலிலை ராமகிருஷ்ணனை கையில் ஏந்தி வழிபடுகிறார்கள். 
சந்தான ராமனை சேவித்தால் சந்தான பாக்கியம் கிடைப்பது உறுதி என்று நம்பப்படுவதால் இக்கோயில் மிகச்சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது. 
சந்தான ராமன் குழந்தை வரம் கொடுக்கும் ராமனாக இருப்பதால் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர் இங்கிதம் உணர்ந்து சற்று தள்ளி நிற்பதாகவும் கூறப்படுகின்றது.


ஒரே பிராகாரம் கொண்ட பெரிய கோயில் இது. 

கோயிலில் நாலுகால பூஜை நடைபெறுவதுடன் பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகின்றது. 
சூர்ய பிரபை, கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், 
ஹனுமந்த வாகனம் என்று ஸ்ரீராமனை வாகனத்தில் அலங்கரித்து, 
வீதி உலா நடைபெறும். 
ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் 
சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. 
 நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் 
ஸ்ரீமத் நிகமாந்த தேசிகன் ஆகியோர் திருநட்சத்திர நாட்களிலும்  
சிறப்பு திருமஞ்சனமும் நடத்துகிறார்கள்.

இங்கு நேர்ந்து கொண்டு புத்திர பாக்கியம் பெற்றவர்கள், இக்கோயிலில் மரத் தொட்டில்களும் வெள்ளி தொட்டில்களும் கட்டுகிறார்கள்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் இக்கோயிலின் நாயகனான சந்தான ராமஸ்வாமி பெயரில் சந்தான ராமஸ்வாமி வனம் என்ற கீர்த்தனம் (ஹிந்தோள வஸந்த ராகத்தில்) பாடித் துதித்திருக்கிறார்.

கும்பகோணம்-மன்னார்குடி பேருந்து வழியில் நீடாமங்கலம் 
பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது,
ஸ்ரீ சக்கர ரேகையுடன் ஸ்ரீசந்தான கோபால சாளக்கிரமங்கள்..
Kalki Deva Salagrama                                                       Varaha Deva Salagrama