Sunday, July 13, 2014

ஞான தீபம் விவேகானந்தர்..




சுவாமி விவேகானந்தர் அகில உலகத்திற்கும் ஒளி காட்டும் விளக்காக சுடர்விட்டுப் பிரகாசிக்கிறார்.  

நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் 

ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டு கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். 

அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது.

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்தவர்..  

வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி,  சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்டவர்  சுவாமி விவேகானந்தர்
1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காக வியப்பான கரவொலி பெற்றார். 
ஸ்வாமிஜி  பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார்

எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
உலகில்சுவாமி விவேகானந்தர் மிகவும் வெறுத்தது ஒன்று உண்டுஎன்றால், அது 'பயம்'தான்! ''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்'' என்றார் விவேகானந்தர்.

பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? 
தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என் ஆனால் நான் கூறுகிறேன்... முதலில் உன்னிடமே நீநம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் விவேகாந்தர். 

நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட  தலைவர்கள் அத்தனைபேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் - சுவாமி விகானந்தரே தான். 
சுபாஷ் சந்திரபோஷ் – காந்திஜி ஆகியவர்களில் ஆரம்பித்து சுவாமி சின்மயானந்தா வரையிலும், மேலும், சி.வி.ராமனில் ஆரம்பித்து ஜாம்ஜெட்ஜி டாட்டா என்று ஈடு இணையற்ற சாதனையாளர்களின்  வழிகாட்டியாக ,ஒளியூட்டியாக , சுவாமி விவேகான்ந்தரின் உந்து சக்தி எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து ஓடும் நதியாக, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கான மக்களின் இருதயங்களை ஈர்த்து ஒளிவிடுகிறது.

19 comments:

  1. மிக மிக அரிய, உன்னதமான மேன்மை தாங்கிய மாமஹானைப் பற்றி தாங்கள் பதிவு இட்டதற்கு எங்கள் முதற்கண் நன்றி! இன்று காலை எழுந்ததுமே கணினியை உயிர்ப்பித்ததுமே முதலில் கண்ணில் பட்டது நாங்கள் குருவாக வணங்கும் இம் மஹானைப் பற்றிய தங்கள் இந்தப் பதிவுதான். மனம் மிகவும் சந்தோஷப்பட்டது மட்டுமல்லாமல், மனதில் ஒரு நேர்மறை எண்ணங்களின் அதிர்வுடனும் ஆரம்பமாகிறது......நமது நாடு இவரையும் குருவாகிய மாமஹான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும் ஈன்றதற்காகவே தலை நிமிர்ந்து நிற்கலாம். ஆன்மீகம் என்பது என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி தெளிவானச் சிந்தனைகள் வளர ஒளியேற்றிய மஹான். நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒளி ஏற்றியவர், ஏற்றுபவர்! இவரைப் பெற்றதற்கு நமது நாடு புண்ணிய பூமி, நாடு மட்டுமல்ல, நாமும் புண்ணியம் செய்திருக்கின்றோம் என்று சொன்னால் மிகையல்ல!

    மிக்க மிக்க நன்றி! அம்மா!

    ReplyDelete
  2. அறியாதன அறிந்தேன்
    படங்களுடன் பதிவைப் படித்து முடித்ததும்
    ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வீரத்துறவி விவேகானந்தரின் பொன்மொழிகளோடு இன்றைய பொழுது புலர்ந்தது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. விவேகானந்தர் பற்றிய அருமையான பதிவு சகோதரியாரே
    படங்கள்அனைத்தும் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. // எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள். //

    ஆகா...! அவரின் சிறப்புகளை சொல்ல ஓராயிரம் பகிர்வும் வேண்டும் அம்மா...

    நன்றி...

    ReplyDelete
  6. விவேகாநந்தர் பற்றிய இன்றைய பதிவு அழகான படங்களுடனும் அருமையான கருத்துக்களுடனும் மிகச்சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. ஆன்மிக எண்ணங்களுக்கும், நம் இந்தியத் திருநாட்டுக்கும், பெருமை சேர்த்தவர்களில் இவரும் ஒருவர் என்பதை நினைத்து நாமும் பெருமை கொள்ளலாம்.

    >>>>>

    ReplyDelete
  8. ’எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்’

    என்று அவர் அன்று சொன்னார்.

    ஆனால் இன்று நாம் ..........

    உண்மையான நண்பர்களையே,
    நலம் விரும்பிகளையே
    புரிந்துகொள்ளாமல்,
    எதிரியாக நினைத்து
    விலகிக்கொள்வதால்
    நம்மை நாமே
    ஏமாற்றிக்கொள்கிறோம்.

    >>>>>

    ReplyDelete
  9. ’முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை’

    நம்பிக்கையே தும்பிக்கையாகும் ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  10. கடலுக்கு மேல் செவ்வானத்தில் 'முண்டக உபனிஷத்' வாக்கியங்களுடன், ஓம் என்று எழுதியுள்ள படம் பார்க்க மனதுக்கு மகிழ்வளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. ஞான தீபமாக இன்று ஓர் பதிவினைக்கொடுத்துள்ள தங்களுக்கு என் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். வாழ்க !

    ;) 1335 ;)

    ooo ooo

    ReplyDelete
  12. விவேகாநந்தர் : நல்ல சிவப்பாக, உயரமாக, கம்பீரமாக, நேர்கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கிறார். ஆயுஷு தான் கம்மியாகிவிட்டது ;( பாவம்.

    நீண்ண்ண்ண்ண்ண்ண்ட மூக்கு ! அவரைப்போலவே ..... !!

    ReplyDelete
  13. தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு.
    பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.’’
    அவரின் அருமையான பொன்மொழி, அழகான படங்கள் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமையான பொன்மொழிகளுடன் - ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி பதிவு மனதில் மகிழ்ச்சியை அளிக்கின்றது.. வாழ்க நலம்..

    ReplyDelete
  15. விவேகானந்தர் பற்றிய அருமையான தகவல்களுடன் அவரது பொன்மொழிகளையும் பகிர்ந்து சிறப்பான பதிவிட்ட தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் மேடம்.

    ReplyDelete
  16. அமெரிக்காவில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய மாமனிதரைப் பற்றி அழகான படங்களுடன் அமைந்த பதிவு அருமை.

    ReplyDelete
  17. சிறிய வயதில் என்னைக் கவர்ந்தவர்களுள் ஒருவர் விவேகாநந்தர். அவரது எழுத்துக்கள் பலவற்றைப் படித்ததால்தான் எனக்கு கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் முனைப்பே வந்தது. நூறு இளைஞர்கள் போதும் இந்தியாவை தூக்கி விடலாம் என்றவர் அவர். அவரது எதிர்பார்ப்பை கொடுக்கும் அந்த நூறு இளைஞர்கள் இல்லாதது பெரிய குறையே. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. விவேகானந்தரின் எழுத்துகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. படிக்கும் யாருக்குமே அசுரத்தனமான தன்னம்பிக்கை பிறக்கும். அவரைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. பாடசாலையில் படிக்கும்போது விவேகானந்தரைப்பற்றி படித்தது இன்னும் பசுமையாக இருக்கு. அவைகளை மீட்கும்படி அமைந்துவிட்டது உங்க பதிவு. நன்றி.

    ReplyDelete