Tuesday, July 29, 2014

ஆடிப்பூர வழிபாடுதேவி ஜெகன்மாதா ஜெய ஜெய தேவி ஜெகன்மாதா
தேவி ஜெகன்மாதா ஜெய தேவி ஜெகன்மாதா

இயற்கையின் இன்பத்தில் ஆழ்ந்திருந்தேன் எழில் 
அன்னத்தில் ஏறி வந்தாள் அன்னை

அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக்கே ஆட்படுவாள் ஆனந்த கல்யாணி அவள்
அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் ஆடிப் பூர தினத்தில்  அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தி வழிபாடுகள் நடைபெறும் -வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள்.

அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.

ஆண்டாள் பாடிய வாரணமாயிரம்’ என  தொடங்கும் 
பத்து பாடல்கள் திருமண பாடல்களாகும். 

பக்தி சிரத்தையுடன் படிக்க தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும், கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமண பிராப்தம் கூடிவரும் என்பது ஐதீகமாகும். 

ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் 
சிறப்பு வழிபாடு நடக்கும். 

ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருத்தேரோட்ட உற்சவம் நடக்கும். அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. 

எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாளுக்கு 
வளையல் சாற்றுவார்கள்,

பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். 
அணிந்துகொண்டால் இல்லத்தில்  மங்களங்கள்  நிறையும் 
என்பது நம்பிக்கை. 

ஆடிப்பூர நாளில் சகல நலங்களையும், வளங்களையும், 
நீங்காத செல்வத்தையும் அருள்வாள் அன்னை..!
Valai Malai to Devi today being Aadi Pooram-100_2144.jpg

13 comments:

 1. ஆடிப்பூரம்.. ஆனந்த தரிசனம்!..

  ReplyDelete
 2. ஆடிப்பூர தரிசனம் சிறப்பு. வளையல் நாயகியின் வண்ணமிகு படங்கள். சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. வளையல் அலங்காரம் மிக மிக அழகு.

  தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 4. ஆடிப்பூர தகவல்கள் சிறப்பு! அம்பாளின் வளையல் அலங்கார படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!

  ReplyDelete
 5. திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே! ஆடிப்பூர பதிவு அருமை! நன்றி!

  ReplyDelete
 6. கீழிருந்து மூன்றாவது கோல டிசைன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  அதிலும் நான்கு மூலைகளிலும் நான்கு தங்கத்தாமரைகள் ......

  மேலும் ஜொலிக்க வைக்கின்றன.

  பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 7. ஆஹா ! அது என்ன ? மாவிளக்கு மாவா ?

  சூப்பரான சுவையான படமாக உள்ளது.

  கொஞ்சூண்டு பிரஸாதமாக தங்கள் திருக்கரங்களால் எனக்கும் தரக்கூடாதா ?

  >>>>>

  ReplyDelete
 8. ஆடிப்பூரம், வளையல் அலங்காரம் எல்லாமே சூப்பரோ சூப்பராக உள்ளன.

  தங்களின் தங்கமான விளக்கங்களையும், படங்களையும் பார்த்து நான் ’ஆடி’ப் போய்விட்டேனாக்கும்.

  தொடர்புடைய பதிவுகளின் தொடர்பு ஏதும் இல்லாமலேயே வெளியிட்டுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 9. சிவா விஷ்ணு டெம்பிள் ஆடிப்பூர வளையல் அலங்காரக் காணொளியும் அதன் கீழே காட்டியுள்ள மூன்றாவது தனிப்படமும் புதுமை, இனிமை, இன்றைய பதிவுக்கே பெருமை அளிப்பதாக அமைந்துள்ளன.

  >>>>>

  ReplyDelete
 10. ’ஆடிப்பூர வழிபாடு’ தலைப்பின் ஆரம்ப முதல் படத்தில் சுழலும் தீபாராதனைத் தாம்பாளம், சும்மா சுழண்டு சுழண்டு தங்களைப்போலவே ஓய்வில்லாமல் சுற்றிச்சுற்றி வருகிறதே ...................

  சபாஷ் !

  >>>>>

  ReplyDelete
 11. ஆடி மாதப்பதிவுகள் அனைத்துக்கும் என் நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  எங்கிருந்தாலும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!

  ;) 1352 ;)

  ooo ooo

  ReplyDelete
 12. வாழ்விலேயே முதற்தடவையாக வளையல் மாலை, வளையல் அலுங்காரத் திருவுருவக் காட்சி காணுகிறேன்.
  மிக்க நன்றி.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. வளையல் அலங்காரம் மிக அழகு.
  எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அம்மனுக்கு செவ்வாய் கிழமை வாரவழிப்படு செய்வோம் எல்லோரும் சேர்ந்து வளையல் அலங்காரம் செய்வோம் ஆடிப்பூரம் அன்று.

  ReplyDelete