Monday, June 17, 2013

மதுரையில் மானசலிங்கம்

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம் காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம் வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம் தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம் பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போற்றிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம் தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம் எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம் தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமண அதனாய் பரவிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும் சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன் சிவன் அருளும் கொள்வார்கள்.
--லிங்காஷ்டகம் (தமிழ்)

நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட வியாபித்திருக்கும்  இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. 

ஆண்டவனே இல்லையே தில்லை தாண்டவனே உன்போல்
தாரணி மீதினிலே ஆண்டவனே இல்லையே

சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்ற ஔவை நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார்.
 உலகாளும்  சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருப்பது சிவத்தை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றார்கள்..

சிவன் இல்லாத  இடம் இருப்பதாக தெரியவில்லையே!  அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார் ஔவை..

இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் சுழலும் லிங்கம் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது.

லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.

லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம் ..

 கிழக்கு நோக்கி நாம் நின்றால் நம் பக்கம் ஆவுடை திரும்பி விடும், 
மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். 
குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். 
இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. 

சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. 

இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. 

சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். 

கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

15 comments:

 1. மதுரையில் இருக்கும் பலருக்குமே
  தெரியாத அதிசம் இது
  அழகாக அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சூழலும் லிங்கம் பார்த்திருக்கிறேன். அற்புதம்

  ReplyDelete
 3. வியக்க வைக்கும் தகவலுடன் படங்கள் அருமை.... நன்றி அம்மா.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. Really it is great in formation.
  I went to Madurai but not had seen the Sulalum Lingam.
  Sure at my next visit i will watch it and prety. Thanks for the information.
  viji

  ReplyDelete
 5. ரமணி சார் சொன்னது போல மதுரையில் இருக்கும் பலருக்கு இந்த ஓவிய விஷயம், விசேசம் தெரியாது.

  காலையில் பல நல்ல தகவல்கள் அதுவும் லிங்காஷ்டக பாடலுடன். சிவன் எங்கும் நிறைந்தவர்.

  பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. ”மதுரையில் மானசலிங்கம்” என்ற இந்தப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 7. கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படம் சூப்பர் கவரேஜ்.

  >>>>>

  ReplyDelete
 8. விளக்கங்கள் அத்தனையும் அருமையோ அருமை.

  >>>>>

  ReplyDelete
 9. சிவன் எங்கும் இருக்கிறார் என்பதை விளக்கும் ஓவியம். ;)))))

  சுழலும் லிங்கம் நம் மனதை சுழல வைக்கிறது. ;)))))

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ooooo 943 ooooo

  ReplyDelete
 10. நாகலிங்கப்பூ பார்த்திருக்கிறேன். சுழலும் லிங்கம் பார்த்ததில்லை. கோவில் தளத்தின் மேல் புற படங்கள் வெகு சிறப்பு.

  ReplyDelete
 11. sulalum lingam thanks for sharing this new information

  ReplyDelete
 12. அற்புதமான லிங்கங்கள். விளக்கம் அருமை.

  சுழலும் லிங்கம் தகவல் இப்பொழுதுதான் அறிந்தேன். கண்டு இன்புற்றோம்.நன்றி.

  ReplyDelete
 13. சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 14. சிறப்பான , நிறைவான பதிவு !

  ReplyDelete