Wednesday, April 10, 2013

பாவை விளக்குகள்விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும் 
என்பது ஆன்றோர் வாக்கு.

 சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கு மாயா விளக்கே”

மனமாகிய விளக்கை அறியாமை என்னும் இருள் நீங்க  ஏற்றி, 
கோபமெனும் விளக்கை வெறுத்து அழித்து , 
மற்றைய ஐம்புல விளக்குகளின் திரிகளையும் ஒரே நேரத்தில் தூண்டினால் நமது மனத்தின் உள்ளொளி விளக்கானது அணையா விளக்காக நின்று சுடர்விடும். என திருமந்திரத்தில் திருமூலர் விளக்கிக் கூறியுள்ளார் இறைவன் முருகனை அருணகிரிநாதர், "தீப மங்கள ஜோதி நமோ நம' என்று போற்றுகிறார்.

மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை "ஒளி வளர் விளக்கே' என்றும்; "சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே' என்றும் பலவாறு போற்றியுள்ளார்.
ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்து அருள் ஒளி பெறுகிறோம் ..தலைமுடியை விளக்குத் திரியாக்கி எரித்த கணம்புல்ல நாயனார்அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய கணம்புல்ல நாயனார்!

சோதிவடிவான இறைவன் அருளொளி விளக்காக, அறிவொளியாக நம் மனதில் சுடர்விடுவான் என்பதையே இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக பாவையர் ஏற்றி வழிபடும் பாவை விளக்கு காட்டி விளக்குகிறது ...


தீப விளக்குகள் - திருவிளக்கு, அகல் விளக்கு, அன்ன விளக்கு, கலங்கரை விளக்கு, பாவை விளக்கு தோழி விளக்கு,  குடவிளக்கு, குத்து விளக்கு எனப் பலவகையாக ஒளிவீசி இருள் நீக்கும்

விளக்கு இருளை நீக்குவதால் அதில் இலட்சுமி இருப்பதாகக் கருதி திருவிளக்கு என சிறப்பிக்கிறோம் ..

 மின்மினிப் பூச்சிபோல் விட்டுவிட்டு பிரகாசிக்கும் விளக்கே அன்னவிளக்காகும்.

 பெண் உருவம் (பாவை) விளக்கினை ஏந்திய நிலையிலிருப்பதால்
பாவை விளக்கு என பெயர் பெற்றது.


“பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல
இடம் சிறந்து உயரிய ஏழுநிலை மாடத்து”        -
என முல்லைப்பாட்டு பாவைவிளக்கை விளக்குகிறது.

 செம்பினால் செய்யப்பட்ட பாவைவிளக்குகளும் கோயில் தூண்களில் கற்சிற்பங்களாக இருக்கும் பாவை விளக்குகளும் காட்சிப்படுகின்றன..

பாவை விளக்கு தீப இலட்சுமி, தீப நாச்சியார் என்று அழைக்கப்படுகிறது ...

ஆண் பாவை விளக்குகளும் உண்டு.
அதனை திருவிளக்குச் சீலர் என்றும், ஸ்ரீ விளக்குச் சீலர் என்றும் அழைப்பர்.

கோயில்களில் செய்த வேண்டுதல் நிறைவு பெற்றதற்காக பாவைவிளக்கை செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

அதனை பெண்களே செய்திருப்பதை பாவைவிளக்குப் படிமத்தின் பீடத்தில் உள்ள குறிப்புகளும் கல்வெட்டுகளும் எடுத்துச் சொல்கின்றன.

திருவாரூர் கோயிலுக்கு பரவைநங்கை என்ற பெண் பல பாவைவிளக்குகளை செய்து கொடுத்திருப்பதாக கல்வெட்டு காட்டுகிறது.

முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்தரசியாகிய உலகமாதேவி கோயிலுக்கு கொடுத்த விளக்குகளின் பட்டியலில் இடம்பெறும் தோழி விளக்கு, ஈழச்சியல் விளக்கு இரண்டும் ஈழத்தைச் சேர்ந்த விளக்குகளாகும். பாவைவிளக்குகள் இரண்டு முதுகுப்புறமாக ஒட்டியிருப்பது தோழி விளக்காகும்.

மராட்டிய இளவரசி தன் காதல் நிறைவேறினால் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றுவதாக திருவிடைமருதூர் கோயிலில் வேண்டிக்கொண்டாள்.

அவளின் காதல் நிறைவேறி பிரதாபசிம்மனை மணந்ததும், கோயிலில் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றி அப்பாவை விளக்குகளிடையே தானும் ஒரு பாவைவிளக்காக அகல்விளக்கேந்தி நின்றாள்.

திருவிடைமருதூர் கோயில் சந்நிதி முன், தீபஒளி ஏந்தி நிற்கும் பாவைவிளக்கின் பீடத்தில் இச்செய்தியை இன்றும் காணலாம்.

ஸ்ரீ ரங்கத்தில் தங்கக்கொடிமரத்தின் அருகில் இருக்கும் பாவைவிளக்கு எழில் மிக்கது .. அதில் நெய் இட்டு விளக்கு ஏற்றுவது எங்களுக்கு மிகவும் விருப்பமானது ..

ஸ்ரீ ரங்கநாதர் கருவறை அர்த்த மண்டபத்திலும் 
ஒரு பாவை விளக்கை பார்த்திருக்கிறேன் ..

21 comments:

 1. விளக்கு / பாவை விளக்கு முதலியன பற்றி விளக்கோ விளக்கென விளக்கி அசத்தியுள்ள பாவைக்குக் காலை வந்தனங்கள்.

  ஒருமுறை முற்றிலுமாகப் படித்து விட்டு அசந்து போனேன்.

  மீண்டும் ஒரு முறை படித்து ரஸித்துவிட்டு மீண்டும் கருத்துச்சொல்ல வருவேன்.

  ஆனால் இன்று சற்றே தாமதம் ஆகும்.

  >>>>>>

  ReplyDelete
 2. இன்று தாங்கள் காட்டியுள்ள பாவை விளக்குகள் ஏராளம்.

  அவை ஒவ்வொன்றும் சிலையாகத்தோன்றாமல் உயிருள்ள கலையாகவே தெரிகின்றன.

  கலை நுணுக்கங்களும் தாராளமாகவே உள்ளன. ;)))))

  >>>>>

  ReplyDelete
 3. ஒவ்வொரு படமும் அழகோ அழகு.

  கடைசிப்படத்தில் மின்னொளியில் கோபுரங்கள் .... ஆஹா மிகவும் அழகோ அழகு.

  அதற்கு அடுத்த மேல் படத்தில், மேகங்களைக் கண்டு ஆடிடும் மயில்களே ஒய்யார டிசைன்களில் மேகங்களாய் காட்டப்பட்டுள்ளன ;)

  அதற்கு அடுத்த கீழிருந்துமேல் 3ம் படத்தில் கனகாம்பரமும் சொரைக்கொன்னையும் சேர்ந்து கலர் காம்பினேஷனில் இருக்க அதற்கு பாவை விளக்கு ஏற்றிக்காட்டும், அந்தப்பாவை, நல்ல வழவழப்பாக, பளபளப்பாக, ஜொலிஜொலிப்பாக .... எண்ணெய் தேய்த்துக்குளியலுக்கு முன்போல மொழுமொழுன்னு ..... சூப்பரோ சூப்பர் பீங்கான் பொம்மையாக இருக்கும் ;)))))

  >>>>>>

  ReplyDelete
 4. கீழிருந்து 4ம் படத்தில் விளக்குகளின் அழகிய அணிவகுப்ப்பு
  ஹைய்ய்ய்ய்ய்ய்யோ எக்ஸெல்லெண்ட்.

  கீழிருந்து 5ல், கூழாங்கற்குவியலில் சக்கரத்துடன் கூடிய யானை பொம்மை சும்மா கருங்கல் போல.

  யானைமீதே ஏறி நிற்கத்துணிந்த பாவை. சும்மா கிண்ணுனு இருக்குதுங்கோ.

  அடுத்ததில் அன்ன பக்ஷிகள் இரண்டும் விளக்குடன் அருமை

  >>>>>>>>>>>

  ReplyDelete
 5. //ஸ்ரீ ரங்கத்தில் தங்கக்கொடிமரத்தின் அருகில் இருக்கும் பாவைவிளக்கு எழில் மிக்கது .. அதில் நெய் இட்டு விளக்கு ஏற்றுவது எங்களுக்கு மிகவும் விருப்பமானது .. ஸ்ரீ ரங்கநாதர் கருவறை அர்த்த மண்டபத்திலும் ஒரு பாவை விளக்கை பார்த்திருக்கிறேன் ..//
  .
  நீங்கள் பார்க்காத விளக்கா, நீங்கள் ஏற்றாத விளக்கா? உங்களுக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் கூட ஏற்றியிருப்பீர்களே! ;))))))

  >>>>>>>>>

  ReplyDelete
 6. //மராட்டிய இளவரசி தன் காதல் நிறைவேறினால் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றுவதாக திருவிடைமருதூர் கோயிலில் வேண்டிக்கொண்டாள்.

  அவளின் காதல் நிறைவேறி பிரதாபசிம்மனை மணந்ததும், கோயிலில் இலட்சம் பாவைவிளக்கு ஏற்றி அப்...பாவை விளக்குகளிடையே தானும் ஒரு பாவைவிளக்காக அகல்விளக்கேந்தி நின்றாள்.//

  காதல் நிறைவேறுவது என்பது சும்மாவா? காதலுக்காக இதுபோலச்செய்வது கேட்க மகிழ்ச்சி தான்.

  இருப்பினும் லட்ச விளக்குகளை எண்ணெயிட்டு திரிபோட்டு ஏற்றி முடிப்பதற்குள் வாழ்க்கையில் பாதி, காதல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் கடந்து போய் விடுமே!

  ராணியார் குடும்பம் அல்லவா, அவளே அவளா லட்சம் விளக்குகள் ஏற்றியிருக்கப்போகிறாள்? ஆயிரக்கணக்கானப் பணிப்பெண்கள் அல்லவோ ஏற்றியிருப்பார்கள்.!!

  >>>>>

  ReplyDelete
 7. //பாவைவிளக்குகள் இரண்டு முதுகுப்புறமாக ஒட்டியிருப்பது தோழி விளக்காகும்.//

  தோழிகள் என்றாலே ஒட்டியிருப்பவர்கள் மட்டும் தான். மீதி பேரெல்லாம் தோழிகள் அல்ல. அவர்கள் கோழிகள் - சண்டைக்கோழிகள். ;)

  >>>>>>>

  ReplyDelete
 8. //ஆண் பாவை விளக்குகளும் உண்டு. அதனை திருவிளக்குச் சீலர் என்றும், ஸ்ரீ விளக்குச் சீலர் என்றும் அழைப்பர்.//

  ஆஹா, இதைக்கேள்விப்பட்டதோ, பார்த்ததோ இல்லை.

  பார்க்காவிட்டால் தான் என்ன! அவை பெண் பாவை விளக்குகள் போல கண்ணுக்கு விருந்தாக நிச்சயம் இருக்கப்போவது இல்லை.

  அழகோ கலையுணர்வோ ஒன்றும் இல்லாமல் சுத்த வழுவட்டையாக அல்லவா இருக்கும். ;))))))

  >>>>>

  ReplyDelete
 9. //தீப விளக்குகள் - திருவிளக்கு, அகல் விளக்கு, அன்ன விளக்கு, கலங்கரை விளக்கு, பாவை விளக்கு தோழி விளக்கு, குடவிளக்கு, குத்து விளக்கு எனப் பலவகையாக ஒளிவீசி இருள் நீக்கும்//

  அடேங்கப்பா! எத்தனை எத்தனை விளக்குகள், விளக்கங்கள். ;)))))

  //விளக்கு இருளை நீக்குவதால் அதில் இலட்சுமி இருப்பதாகக் கருதி திருவிளக்கு என சிறப்பிக்கிறோம் ..//

  தங்களின் இந்த அரிய, பெரிய, அற்புத, அசத்தலான விளக்கங்களே திருவிளக்குத்தான். ;))))))

  >>>>>>>

  ReplyDelete
 10. // சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.//

  //மனமாகிய விளக்கை அறியாமை என்னும் இருள் நீங்க ஏற்றி, கோபமெனும் விளக்கை வெறுத்து அழித்து, மற்றைய ஐம்புல விளக்குகளின் திரிகளையும் ஒரே நேரத்தில் தூண்டினால் நமது மனத்தின் உள்ளொளி விளக்கானது அணையா விளக்காக நின்று சுடர்விடும். என திருமந்திரத்தில் திருமூலர் விளக்கிக் கூறியுள்ளார் //

  மிகவும் அழகான தகவல்கள், இன்று எங்கள் தகவல் களஞ்சியத்திடமிருந்து.;)
  ஸ்பெஷல் பாராட்டுக்கள் .

  >>>>>>

  ReplyDelete
 11. நீங்கள் இன்று காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  மிகக்கடுமையாகவே உழைத்துள்ளீர்கள் என்பது தீபங்களின் வெளிச்சங்கள் மூலம் தெரிகிறது.

  இன்றைய தங்களின் இந்த சிறப்புப்பதிவு 875 ஆவது பதிவு என்ற சிறப்பினையும் பெற்று, தீபமங்கள ஜோதியாகப் பிரகாசிக்க வைத்துள்ளது உங்களை.

  அதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான் நல் வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  ooooo 875 ooooo

  [அப்பாடி, ஒருவழியா இந்த அம்மாமேல் எனக்குள்ள ஈடுபாட்டால் இந்தப் பதிவுக்கு பின்னூட்டங்கள் கொடுத்தாச்சு.

  இனி என் அம்மா மேலும் எனக்குக்கொஞ்சம் ஆசையுள்ளதால், நான் ’அமாவாசை’க் காரியங்களைக் கவனிக்கப்போகணுமாக்கும்.]

  ReplyDelete
 12. ஆண் பாவைவிளக்கு இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். சுவாரசியமாக இருக்கிறது. என்ன காரணத்தினால் உருவாகியிருக்கும்?
  விளக்குகள் வெளியிடும் எண்ணைப் புகையும் பிசுக்கும் சூழலுக்கு அத்தனை உகந்ததல்ல. மின்சார பாவை விளக்குகளை உபயோகித்தால்.. மின்சாரத் தட்டுப்பாடோ? :)

  ReplyDelete
 13. ஒவ்வொரு படமும் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...

  VGK ஐயாவின் ரசிக்க வைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி...

  ReplyDelete
 14. அழகழகான பாவை விளக்குகளும் அதன் விளக்கங்களும்...
  மிகவும் சிறப்பு. மிக்க நல்ல பதிவு + பகிர்வு.
  நன்றிகள் பல...

  ReplyDelete
 15. விள க்களுக்கு விளக்கம் கொடுத்து விளக்கு எத்திடீங்க பாவை விளக்கை விட்டு பார்வை விலக்க முடியவில்லை நன்றி

  ReplyDelete
 16. பாவை விளக்கு விளக்கம் மிக அருமை.அழகிய படங்கள் .
  875 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. பாவை விளக்குகள் அழகு. 875வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. பாவை விளக்கின் பின்னாடி இத்தனை கடஹிகள் இருக்கிறதா?நான் ஏதோ
  அழகுக்காக இந்த பாவை விளக்குகள் என்று தான் நினைத்திருந்தேன்.
  நல்லதொரு பதிவு.
  பாவைகள் அனைவரும் பேரழகிகள்.

  ReplyDelete
 19. 875 வது பதிவுக்கு முதலில் வாழ்த்துகள்.
  எந்த விஷயமானாலும் நுணுக்கமான அத்தனை தகவல்களையும் திரட்டித் தரும் உங்கள் பாங்கு மிகவும் போற்றத்தக்கது.
  ஈழச்சியல் விளக்கு, தோழி விளக்கு போன்ற தகவல்கள் புதியதாகவும், வியப்பூட்டுபவையாகவும் இருந்தன.
  பல புகைப்படங்களுடன், பல அரிய தகவல்களையும் அள்ளித் தரும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்!

  ReplyDelete
 20. கண்கவரும் படங்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete