Thursday, April 4, 2013

குறைகளை அகற்றும் திருக்குறையலூர்சுலோகம் - தமிழ் - Narasimha - Tamil - Sloka - Sloga - நரசிம்மர் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம்  திருக்குறையலூர்..மூலவர் - ஸ்ரீஉக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் தலத்தின் தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார். 

பார்வதியைப் பிரிந்த ஈசனுக்கு ஆறுதல் அளிக்க நரசிம்மர் அவருக்கு காட்டியருளிய திருக்கோலம்கொண்டு வைகுண்ட நரசிம்மராக அருள்கிறார்.
திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன. குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் 
கருட சேவைக்கு புறப்படும் காருண்ய கோலம்
[100-0048_IMG.JPG]
தை அமாவாசையன்றுதிருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள்கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையாழ்வார்,

சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர். 

குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. முற்றிலும் குறையற்ற ஊர்..

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபட்டு நலம் பெறுகிறார்கள்..

சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு திருக்குறையலூர் வழியாக சென்று கடலில் கலக்கும் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர்.
குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் தரிசனம் செய்து நிறைவுற்ற தலம்.
[Gal1]13 comments:

 1. VERY GOOD MORNING !

  குறைகளை அகற்றும் திருக்குறையலூர் வரை சென்றுவிட்டு குறைகள் அகன்றதும் மீண்டும் திரும்பி வருவேன்.

  >>>>> அதுவரை இடைவேளையாக்கும் >>>>>

  ReplyDelete
 2. இங்கு திருச்சி காவிரியின் தென் கரையில் உள்ள ஸ்ரீ ஆற்றழகிய சிங்கர் கோயிலிலும் இந்த சரணாகதி ஸ்லோகம் அதன் தமிழ் அர்த்தத்துடன் எழுதி வைக்கப்பட்டுள்ளது:

  சரணாகதி ஸ்லோகம் [வடமொழியில்]
  ====================================
  1. மாதா நிருஸிம்ஹ: பிதா நிருஸிம்ஹ
  2. ப்ராதா நிருஸிம்ஹ: ஸகா நிருஸிம்ஹ
  3. வித்யா நிருஸிம்ஹ: த்ரவிணம் நிருஸிம்ஹ
  4. ஸ்வாமி நிருஸிம்ஹ: ஸகலம் நிருஸிம்ஹ
  5. இதோ நிருஸிம்ஹ: பரதோ நிருஸிம்ஹ
  6. யதோ யதோ யாஹி; ததோ நிருஸிம்ஹ
  7. நிருஸிம்ஹ தேவாத் ந பரஞ்ச கிஞ்சித்
  8. தஸ்மான் நிருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

  அதன் தமிழாக்கம்.... இதோ இங்கே
  ================================
  1. நரசிம்மனே தாய். நரசிம்மனே தந்தை
  2. சகோதரனும் நரசிம்மனே தோழனும் நரசிம்மனே
  3. அறிவும் நரசிம்மனே செல்வமும் நரசிம்மனே
  4. எஜமானும் நரசிம்மனே எல்லாமும் நரசிம்மனே
  5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
  6. எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் நரசிம்மனே
  7. நரசிம்மனைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை
  8. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்!

  http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

  ReplyDelete
 3. ஏராளமான நரசிம்ஹர்களை தாராளமாகக் காட்டி பிரமிக்க வைத்து விட்டீர்கள். தரிஸனம் அளித்திடும் அத்தனை நரசிம்ஹர்களும் மிக அற்புதமாக உள்ளனர்.

  ஆங்காங்கே ஒரு சில படங்கள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளதுங்க.

  அதன் பட்டியலைத்தனியே கீழே தருகிறேன்:

  >>>>>>

  ReplyDelete
 4. இப்போது காட்சியளிக்கும் மிகவும் பிரும்மாண்ட படங்கள் 10 மட்டுமே.

  திறக்க மறுக்கும் படங்கள்: 2, 3, 4, 5, 7 + 8 ஆகிய ஆறு படங்கள் மட்டும். மொத்தம் 16 க்கு 10 ரொம்ப ஜோராகத் தெரிகின்றன.

  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  >>>>>>

  ReplyDelete
 5. கோயிலின் இருப்பிடம் பற்றியும், மற்ற சிறப்புக்கள் பற்றியும் மிகச் சுருக்கமாக எழுதி ஜொலிக்கும் படங்களாகத்தந்து அசத்தியுள்ளீர்கள்.

  திவ்ய தரிஸனமாக அமைந்துள்ளது.

  குழந்தைப் பிரகலாதன் தலையில் பெருமாள் கைவைத்து அனுக்கிரஹிக்கும் படம் தவிர, மீதியெல்லாம் அகலம் நீளம் உயரம் ஆழம் எல்லாமே மிக மிக அதிகம்.

  பிரும்மாண்டமாகக் காட்சியளிக்கின்றன. ஜொலிக்கின்றன.

  >>>>>>

  ReplyDelete
 6. ஸாந்த ஸ்வரூபியாக காட்டப்பட்டுள்ள முதல் படமும் கடைசிப்படமும் EXCELLENT.

  அவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. ரொம்ப ரொம்ப திவ்யமாக காட்சியளிக்கின்றன.

  இன்றைய பதிவு மொத்தத்தில் வெகு ஜோராக உள்ளது.

  மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்.

  அன்பான நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் தங்களின் அயராத உழைப்புக்கும் நன்றியோ நன்றிகள்.

  பானகப்பிரஸாதம் தயவுசெய்து தங்கள் கையால் தாருங்கள்.

  அப்போது தான் பெருமாளுக்கு உக்கிரம் தணிந்து மனம் குளிருமாக்கும். ;)))))

  ooooo 869 ooooo

  ReplyDelete
 7. வைகோ குறிப்பிட்ட படங்கள் வரவில்லை... Refresh செய்தும் பார்த்தேன்... ...ம்ஹீம்...

  வந்த படங்கள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 8. திருக்குறையலூர். புதிய இடம் பற்றிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 9. வழிகளுடன் விழி அகலவைக்கும் படங்கள் விளக்கங்கள் நன்றி

  ReplyDelete
 10. திருக்குறையலூர் உறையும் ஸ்ரீஉக்கிர நரசிம்மர் அனைவரின் குறைகளையும் நீக்கி நிரைவாழ்வுதர ப்ரார்த்திக்கின்றேன்.

  அழகிய நல்ல படங்களுடனான நல்ல பதிவு சகோதரி.
  பகிர்விற்கு மிக்கநன்றி!

  ReplyDelete

 11. ஒன்பது படங்கள் இருக்கின்றன. இல்லாத படங்களுக்கான காலியிடங்களும் இல்லை. எல்லாப் படங்களும் அருமை. எத்தனை படங்கள் பதிவிட்டீர்கள்.? எண்ணிக்கை சரியா என்று தெரியத்தான். வாழ்த்துக்கள். .

  ReplyDelete
 12. நரசிம்மனை 'அழகியவன்' என்றே ஆழ்வார்கள் போற்றுவர். திருக்குறையலூர் நரசிம்மனும் மிக அழகாக இருக்கிறார். தகவல்களை முழுதாகப் படிக்க முடிகிறது. ஆனால் புகைப்படங்கள் எல்லாம் திறக்கவில்லை.

  குறைவறக் கொடுக்கும் ஸ்ரீ நரசிம்ம சுவாமி எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்து குறைவற அருளட்டும்.

  ReplyDelete
 13. குறைகளை அகற்றும் திருக்குறையலூர் நரசிம்மன் தரிசனம் செய்து பல வ்அருடங்கள் ஆகி விட்டது இன்று உங்கள் பதிவின் மூலம் கண்டேன் நன்றி.

  திருமங்கை ஆழவார் பிறந்த ஊர்.

  ReplyDelete