Sunday, July 1, 2012

தில்லையம்பல நடராஜர்







அல்லலென் செயும் மருவிணையென் செயுந்
தொல்லை வல்வினை தொந்த்ந்தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனாருக்கு
எல்லையில்லாததோர் அடிமை பூண்டேனுக்கே

தில்லை நடன சபாபதியை பற்றி பாடப்பட்டுள்ளன. இறைவனுடைய பெருமைகளையெல்லாம் அந்த ஆயிரம் நாவு படைத்த ஆதிஷேஷனாலேயே முழுதும் கூற முடியாது
Shiva
நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் முதலில் தாருகாவனத்தில்தான் நடந்தது. . 

தாருகாவனத்து முனிவர்கள் கடவுள் கிடையாது தாங்கள் செய்கின்ற வேள்விகளினாலேயே எல்லாபலன்களும் கிட்டுகின்றன எனவே கடவுளை வணங்க வேண்டியதில்லை என்று இறுமாந்திருந்தனர். 

முனி பத்தினிகளும் தங்கள் கற்பின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். 

அகந்தை கொண்ட முனிவர்களை அஞ்ஞானத்தை போக்க சிவ பெருமான் சுந்தர மூர்த்தியாகவும்(பிக்ஷ‘டணர்), மஹா விஷ்ணு மோகினியாகவும் தாருகவனத்துக்கு சென்றனர் ஐயனின் அழகைக் கண்ட முனி பத்னிகள் மதி மயங்கி, தன்னிலை இழந்து அவர் பின்னே செல்ல தொடங்கினர், 

முனிவர்களும், மோகினியின் மாய அழகிலே ஈர்க்கப்பட்டு அவள் பின்னே சென்றனர்.

 பின் தாங்கள் தோல்வி அடைந்ததை உண்ர்ந்த அவர்கள் ஒரு யாகம் நடத்தி பிக்ஷாடனரையும் , மோகினியையும் கொல்ல முதலில் புலியை அனுப்பினர், அதை தோலாக்கி இடையிலே அணிந்தார் சிவபெருமான், 

மானின் கொம்புகளை உடைத்து அதை சாந்தமாக்கி வலக்கையிலே தாங்கினார், மழுவை இடக்கையிலே ஏந்தினார், வேள்வி குண்டத்தில் இருந்து வந்த பாம்புகள் ஆபரணமாகின, முயலகன் என்ற பூதம் அடக்கப்பட்டு காலிலே மிதிக்கப்பட்டான். 

வேத மந்திரங்களே ஐயனின் பாத சிலம்புகள் ஆயின. 

பிறகு அந்த வேள்வியியே அழித்து அந்த தீயை கையிலே எந்தி முனிவர்களின் அகந்தையை வென்ற பிறகு முதன் முதலில் ஆனந்த தாண்டவம் ஆடினார் 
செம்பவள மேனி எம்பெருமான் என்று புராணங்கள் கூறும் இந்நிகழ்ச்சியே ஆனி உத்திர திருவிழாவின் போது எட்டாம் நாள் நிகழ்ச்சி பிக்ஷ‘டணர் கோலமாக நடைபெறுகின்றது.

ஓம் என்ற பிரணவத்தின் வடிவமே நடராஜர். 

மாயா மலத்தை ஓட்டி, கன்ம மலத்தை சுட்டு, ஆணவ மலத்தை அதன் வலி கெடுமாறு அழுத்தி, ஆன்மாக்களை அருளாலே மேலே தூக்கி ஆனந்தக்கடலிலே மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும். 


திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர், 

அவர் சொல்லச் சொல்ல இதை எழுதியவர் தில்லையம்பல நடராஜப்பெருமானே அந்தணர் வடிவத்தில் வந்து ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார். 

"மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு சிற்சபையின் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்து விட்டார். 

திருவாசக ஏட்டைக் கண்ட கோயில் அந்தணர்கள் மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர். 

அவரும் தில்லை நடராஜரின் சன்னதிக்கு வந்துநின்று "அம்பலக்கூத்தனே" அதன் பொருள் என்று கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். 
அதனால் "தில்லை பாதி திருவாசகம் பாதி" என்ற பழமொழி உண்டானது. 

திருவாசகம் வேறு, தில்லை நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. திருவாசகம் முழுவதும் சிதம்பரப்பெருமானின் திருவடியையே போற்றுகிறது. 

17 comments:

  1. அழகிய ஆக்கம்!

    அளித்தது தாக்கம்!!

    கண்களுக்கு விருந்து!

    கவலைகளுக்கு மருந்து!!

    ReplyDelete
  2. எங்கெங்கு நோக்கினும் சிவமயமே!

    ReplyDelete
  3. ஆனித்திருமஞ்சனத்தில்

    ஆரம்பித்த

    ஆடலரசன் பற்றிய

    ஆஹா போடவைத்த பதிவு

    ஏழாம் நாள் திருவிழா போல
    இன்றும் கூட இனிமையாய்!



    நாளையும் நீடிக்குமா என்பது

    சிதம்பர ரகசியமே!!

    ReplyDelete
  4. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆனித்திருமஞ்சனத்தில்

    ஆரம்பித்த

    ஆடலரசன் பற்றிய

    ஆஹா போடவைத்த பதிவு

    ஏழாம் நாள் திருவிழா போல
    இன்றும் கூட இனிமையாய்!



    நாளையும் நீடிக்குமா என்பது

    சிதம்பர ரகசியமே!!

    பத்து நாள் உற்சவம் கொண்டாட்டம் !

    இனிமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  5. Just now I returned home from Temple for pradosha pooja.
    Here Easen, Sabesan marupadium....
    Enna perum peru ennakku.
    Thanks Rajeswari for the posts.

    ReplyDelete
  6. பிரதோஷ நன்னாளில் மிகச்சிறந்த பதிவை படித்த திருப்தி ஏற்பட்டது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. கடைசிப் படம் மிக அழகு.

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு. ஓம் என்ற பிரணவமே நடராஜர் என்ற விஷயம் அறிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
  9. நெய்வேலி நடராஜர் தரிசனத்திற்குப் பிறகு தில்லை நடராஜரின் தரிசனம்...

    நல்ல பகிர்வு மற்றும் படங்கள்.

    ReplyDelete
  10. நெருப்புக் கோளங்களின் முன் தில்லை நடராசனின் நடனம். பார்த்துக் கொண்டே இருக்க வைத்த அருமையான படம். தாருகா முனிவர்களின் கர்வம் அடக்கிய கதையும் படிக்க எளிமை.

    ReplyDelete
  11. படுத்திருக்கும் பரமன் படு அழகு.

    ReplyDelete
  12. 3529+2+1=3532 ;)

    ஓர் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete