ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி.
ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிஸயநே சேஷபர்யங்க பாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்.
ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை- காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும்.
சூரிய உதயத்திற்கு சுமார் ஒன் றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.
எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும்.
சூரிய உதயத்திற்கு சுமார் ஒன் றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.
ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்தி லிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்.
ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின் தென்பகுதி யிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானைமீது வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன் படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள்.
அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்கக் குடை, தங்கச் சாமரம், தங்கத் தடி என அனைத்தும் தங்கமயமானதாக இருக்கும்.
பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை தங்கக் கவசத்தால் அலங்கரித்திருப்பார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்குமுன் நேபாள மன்னர் கோவிலுக்கு அளித்த சாளக்கிராம மாலையை பெருமாளுக்கு அணிவித்திருப்பார்கள்.
முழுக்க முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பெருமாளை துலா மாதமான ஐப்பசியில் மட்டுமே தரிசிக்க முடியுமென்பது தனிச்சிறப்பாகும்.
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தென்பகுதியில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் நீராடி பெருமாளை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைப்பதாக தர்மசாஸ்திரம் குறிப்பிடுகிறது....
பள்ளி கொண்ட பெருமாளின் பொற்பாத தரிசனம் அருமை. தாயாரின் சந்நிதியும் ,
ReplyDeleteஸ்ரீ ரங்க கோயிலின் தங்க விமான படமும் தரிசித்ததில் மகிழ்ச்சி..இன்று இனிய காலை தரிசனம்.
நல்ல படங்கள், அருமையான பதிவு... தொடருங்கள்....
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteஜொலிக்கிறது பதிவு.
ReplyDeleteஸ்ரீரங்கநாதர் தரிசனத்திற்கு மிக்க நன்றி மேடம்.
இனிய காலை வேளையில் ரங்கநாதரின் தரிசனம் கிடைத்த்து.பதிவும் தங்கமாக ஜொலிக்கின்றது
ReplyDeleteபச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
ReplyDeleteஅச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
- தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
என்றே நானும் அரங்கனைப் பாடுகின்றேன்.
ReplyDeleteபெருமாளை தரிசிப்பதே பெரும்பாடாயிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் பதிவின் படங்கள் மூலம் கிடைக்கும் காட்சியும் தரிசனமும் அருமை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ஐப்பசி இறுதியில் வருவது "முடவன் முழுக்கு".
ReplyDeleteகாவிரியில் எப்போது முழுகினாலும் புண்ணியம் தான்; நீர் இருந்தால்!
தங்கத்தால் ஜொலிக்கும் சிறீரங்கநாதர் தர்சனம் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தோம்.
ReplyDeleteரங்கநாதர் பற்றிய மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteசிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள்.
ReplyDeleteதல(ள) மே ஜொலிக்கிறது....
ReplyDeleteநன்றி அம்மா...
தங்கத்தால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கநாதர் என்று சொல்லி பதிவு முழுக்க ஜொலிக்க வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteஎல்லாமே ஒரே பளப்பளா தான் ! ;)
>>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteதங்கத்தால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கநாதர் என்று சொல்லி பதிவு முழுக்க ஜொலிக்க வைத்துள்ளீர்கள்.
எல்லாமே ஒரே பளப்பளா தான் ! ;)
வணக்கம் ஐயா ..!
பளபளப்பான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
ஐப்பசி மாத துலா ஸ்நானத்திற்கு ஸ்ரீரஙநாதருக்கு உதவும் யானைகள் புண்ணியம் செய்தவை.
ReplyDeleteஐப்பசி பூராவும் ஒரே தங்கமா?
தங்கமே தங்கத்தின் தங்கமயமான பதிவினைப்பார்த்ததும் சொக்கிப்போய் மடிக்கணினியைக்கூட மூடாமல் அப்படியே தூங்கியும் போனேன்.
நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல உறக்கம். இன்பக்கனாக்களும் வந்தன.
>>> மீண்டும் பிறகு தொடர்வேன் >>>
முதல் மூன்று படங்களும், கடைசி நான்கு படங்களும் படா ஜோர்.
ReplyDeleteதனியாகக்காட்டியுள்ள பின்னல் அலங்காரம் சூப்பர்!
>>>>>
மேலிருந்து மூன்றாவது படத்தில் அந்தத் தாயார் எவ்ளோ அழகு பாருங்கோ!
ReplyDeleteசிம்பிளாக ஏதோ ஒரு சீட்டிப்பாவாடை போலத்தான் உள்ளது. இருப்பினும், நகைகளும், காசு மாலையும், மலர் மாலைகளும், திருமாங்கல்யமும் கிரீடமும், அபயஹஸ்தங்கள் இரண்டிலும் ஜொலிக்கும் வைரம் + முத்துக்கற்களுமாக, எப்படீங்கோ இதுபோன்ற மிகச்சிறந்த படங்களையெல்லாம் சேகரித்து, அவ்வப்போது எடுத்து விட்டு அசத்திறீங்கோ!!
ஒவ்வொன்றையும் பார்க்கும் போது எனக்கு எப்படி உங்களைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
YOU ARE SO ஓஓஓ GREATடூஊஊஊ !
oooo