நிறங்களின் தாக்கத்திற்கும் இடம்,காலம்,கலாச்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பச்சை நிறம் இயற்கையை குறிக்கிறது.கண்ணுக்கு எளிய நிறம்.பார்வையால் அதிகம் உணரப்படும் நிறம்.மன அமைதியும் புத்துணர்வும் தரும்..ரத்தத்தில் ஹிஸ்டமின் அளவை அதிகரித்து அலர்ஜி தாக்குதல்களைக் குறைக்கிறது.ஆன்டிஜென்களை தூண்டி நோயெதிர்ப்புத் தன்மையை அதிகரித்து குணமாக உதவுகிறது. கரும் பச்சை வலிமையையும்,பழமையையும்,செல்வத்தையும் உணர்த்தும்
"மஞ்சள் நிறம்" நம்மைக் கவர்ந்து நல்ல விஷயங்களுக்குக் கொண்டுசெல்லும் ரகசிய மனோபாவம்.நாம் பார்க்கும் காட்சிகளில் மஞ்சள் நிறமிருந்தால் உடனே அது மூளைக்குச் சென்று அறிந்துகொள்ளும் சக்தியைக் கொண்ட முதல் வண்ணம், மஞ்சள் நிறமாகத்தான் இருக்கும். பளீரென்று கற்பூரமாக, மூளை இதைப் பிடித்து வாங்கிக்கொள்கிறது.
தன்னம்பிக்கையை வளர்த்து குதூகலமான உணர்ச்சிகளைப் பொங்கி பிரகாசிக்கச் செய்யும் திறனுடைய மஞ்சள் வர்ணம் மனதிருப்தியைத் தரவல்ல அற்புதமான நிறம்.
மஞ்சள் அடிப்படையில் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் மங்களகரமான, தெய்வீகமுமான நிறம். விவேகம், கூர்மையான அறிவு சிந்திக்கும் தன்மையோடு குழப்பமில்லாத ஒரு தெளிவான சிந்தனா சக்தியை ஏற்படுத்தவல்லது. உயர்ந்த ஒழுக்க சிந்தனைகளைத் தூண்டி நுண்ணறிவைப் புலப்படச்செய்து நம் அறிவாற்றலை வெளி உலகுக்குத் தெளிவுபடுத்தக்கூடிய சக்தி படைத்தது..
நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் : குளிர்ந்த நிறம் நீலம், அறிவுத்திறனையும், நம்பிக்கையையும்,திறமையான தர்க்க ரீதியான செயல் பாட்டையும் குறிப்பிடுகிறது.
நீல நிறம் மனதிற்கு இதமளிக்கக் கூடியது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டங்களைச் சீராக்கி சிந்திக்கும் திறனை உயர்த்துகிறது.
இள நீலமானது, மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது. அதிக அலை நீளமுள்ள நிறமாதலால், தொலைவில் உள்ள நீல நிறப்பொருட்கள் நம் கண்ணில் படுவதில்லை.
இதனால்தான் போக்குவரத்து விளக்குகள் நீல நிறத்தைப் பயன்படுத்துவதில்லை. அதே அதிக அலை நீளம்தான், வானத்தை நீல நிறமாகத் தோன்றச் செய்யவும் காரணம்.
உலக முழுவதும் அதிக அளவிலான மக்கள் நீல நிறத்தை விரும்புவதாக ஆய்வுகள் கணிக்கின்றன
வர்ணமான வர்ணனை.
ReplyDeleteஅத்தனை உலகமும் வர்ண களஞ்சியம் என்ற பாரதி வாசகத்தை நினைவிற்கு கொண்டு வந்தீர், நன்றிகள்!
ReplyDeleteவண்ணங்களுடனான எண்ணங்கள் நல்ல தகவல்கள்.
ReplyDeleteவானவில் வர்ணங்கள் கொள்ளை கொள்கின்றன.
ReplyDeleteவர்ணங்களும் வர்ணனைகளும் சிறப்பு
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
வர்ண ஜால பகிர்வு...
ReplyDeleteமயில் படம் சூப்பர்...
வண்ணங்கள் பகிர்ந்த எண்ணங்கள் சிறப்பு..பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஅலைபாயும் எண்ணங்களுக்கும் அமைதியான வண்ணங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.
ReplyDeleteஅழகு.., பதிவும் சரி..படங்களும் சரி! :)
ReplyDeleteகிளிகூட சரியாக வண்ணத்தை தெரிந்து கொள்கிறதே! அழகுதான்.
ReplyDeleteவண்ணங்களில் இத்தனை தகவல்களா .. அருமை . கிளியின் அறிவுத்திறன் பார்க்க அழகு .மயிலின் தோகையழகும் , வானவில்லின் அழகும் கண்கொள்ளாக் காட்சி. பகிர்விற்கு நன்றி .
ReplyDeleteeththanai padangal!
ReplyDeleteeththanaiyo karuthukkal!
nantri!
பாட்டில்களில் கலர்க் கலராகத் தண்ணீரை அடைத்து 'கலர் வைத்தியம்' என்றே ஒன்று உண்டு-- கேள்விப் பட்டிருக்கிறீர்களா?..
ReplyDeleteசிவப்பைப் பற்றிச் சொல்லாதது குறை.
அழகு அந்த மயில்.
ReplyDelete”வண்ணங்கள் ... எண்ணங்கள்”
ReplyDeleteஎன்ற இந்தத்தங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
>>>>>
முதல் மூன்று சுழலும் படங்களும் சூப்பர்.
ReplyDeleteஅதிலும் அந்தக்கிளி நிறம் அறிந்து வளையங்களை அதனதன் வண்ணம் உள்ள கிண்ணங்களில் வேகவேகமாகப் போடுவது மிகச்சிறப்பாக உள்ளது.
நீண்ட நேரம் ரஸித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
>>>>>
மிகப்பெரிய தோகையுடன் அந்த மயில் வீற்றிருக்கும் அழகோ படா ஜோர்.
ReplyDelete>>>>>
ஒவ்வொரு நிறத்திற்கும் உள்ள குணாதிசயங்கள், அவற்றைத் தாங்கள் விளக்கியுள்ள விதம் மிக அருமை.
ReplyDeleteமஞ்சள் நிறத்திற்கு உள்ள தனி மகத்துவமும் அறிய முடிந்தது.
>>>>>
கடைசி படத்தில் வானவில்லும், அதற்கு முந்திய படத்தில் வெவ்வேறு நிறப்பழங்களும் அருமையாக தேர்ந்தெடுத்துக் காட்டியுள்ளது சிறப்போ சிறப்பு.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.