வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்
மகிஷனை அழித்த தேவி விரதம் இருந்த காலம் நவராத்திரி. ஒன்பதாவது நாள் மகாநவமி.
வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது.
எனவே ஆயுத பூஜை என்கிறோம்.
அசுரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி.
வெற்றி அளிக்கப் போகும் ஆயுதங்களை வைத்து தேவி பூஜை செய்த நாள் அது.
எனவே ஆயுத பூஜை என்கிறோம்.
அசுரனை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி.
வாழ்வில் நமது பணிகளில் நம்மை முழுமையை நோக்கி உந்தும் ஆற்றலாகவும், அதனை முடிப்பதற்கான சக்தியாகவும் மகா சரஸ்வதி திகழ்கிறார்.
எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கான கடவுளாக சரஸ்வதியை வணங்குகிறோம்.
எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கான கடவுளாக சரஸ்வதியை வணங்குகிறோம்.
நாம் பயன்படுத்தும் கருவிகளை தூய்மை படுத்தி ஆயுத பூஜை கொண்டாடுகிறோம்.
இதுவே நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பண்டிகைகளின் ஆன்மீக அடிப்படை !
ஆயுத பூஜை அன்று தொழிற்கூடங்கள் மற்றம் இயந்திரங்கள், வாகனங்கள் ஆகிவை சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்படும்.
சரஸ்வதியை வணங்குபவர்கள் மனதில் அமைதியும், சாந்தமும், மகிழ்ச்சியும் அறிவு வேட்கையும் உருவாகும் வண்ணம் உள்ளது
சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுகிறது...
சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்
இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை தரட்டும்
மூன்றாவது சரஸ்வதி படம் தத்ரூபமாக அசைவுகளுடன் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது.
ReplyDeleteஅற்புதம்! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு சிறப்பு... (முக்கியமாக முடிவில் உள்ள சரஸ்வதி பூஜை படம்)
ReplyDeleteவிழாக்கால வாழ்த்துக்கள்...
நன்றி...
படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள். நன்றி
ReplyDeleteசக்தி நிறைந்த நவராத்திரி பதிவு கண்கவரும் படங்களுடன் மிகவும் நன்றாக இருக்கிறது, இராஜராஜேஸ்வரி!
ReplyDeleteஉங்களுக்கும் சரஸ்வதி பூஜை, விஜய தசமி வாழ்த்துக்கள்!
அருமையான படங்களை தேர்வு செய்துள்ளீர்கள் சகோதரி .
ReplyDeleteமனம் கவர்ந்த பகிர்வுக்கு மிக்க நன்றி .உங்களுக்கும் எங்கள்
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
படங்களுடன் பகிர்வு சிறப்பு...சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.......
ReplyDeleteபடங்களும் பகிர்வுகளும் அருமை.
ReplyDeleteஎல்லா படங்களும் அருமை.
ReplyDeleteபடங்கள் அனைத்துமே மிக அருமை.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி அம்மா.
மின் வெட்டு எங்களைப் பாடாய்ப் படுத்துகிறது.
அன்பின் இராஜ ராஜேஸ்வரி - சரஸ்வதி பூஜை - படங்கள் ஜொலிக்கும் பதிவு - பல தகவல்களுடன் கூடிய பதிவு - மிக மிக இரசித்துப் பார்த்தேன் - படித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஜொலிக்கும் சரஸ்வதி தேவியுடன் கூடிய
ReplyDelete”சக்தி நிறைந்த நவராத்திரி”
என்ற இந்தப்பதிவும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.