Friday, October 12, 2012

மங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகி











ஸரஸிஜ நயனே ஸரோஜ ஹஸ்தே
தவளதராம்சுக கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதகரி ப்ரஸீத மஹ்யம்

சிலிர்த்துப் பறக்கும் எழில் பொன் வண்டுகளைப்போன்று
மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள்
திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின்
மலர் விழிப் பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும் 

அன்னை பத்மாவதி தேவியின் பார்வை விழும் இடங்களில் எல்லாம் வறுமையும்,துக்கமும் ,நோயும்  இல்லாமல் தூளாகப் போய்விடுமாம்.



கார்மேக வர்ணனின் கண்ணனின் பரந்த மார்பில்
ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி
பார்க்கவ மகரிஷியின் பார்காக்கும் திருமகளே
நின் பார்வை எனக்கு பல வளங்கள் சேர்க்கட்டும்

எப்பொழுதுமே அவளின் பண் பாடினால்  அழியாத இன்பம் கிடைக்கும் என்பது  தீவிர நம்பிக்கை.....

கருணை மழைக்காக ஏங்கும் சாதகப் பறவை என்னை
வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே
பெருமை பொங்க உலகில் வாழவைப்பாயே நின்
குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும்

ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்
உலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!


பத்மாவதி தாயார் என்றுதானே அவளை  விளிக்கிறோம். 
அன்னையைச்சரண் புகுந்தால்   அதிக வரம் பெறலாம்.

எழில் தாமரை ஒத்த முகமதியாளே வணக்கம்
திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம்
அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின்
அருட்பார்வை எனக்கு ஆயகலைகள் அருளட்டும்


தங்க சேஷ வாஹனம்,

பத்மாவதி தாயார் கோவில், திருச்சானூர், திருப்பதி.

 
ஸ்ரீ பத்மாவதி லக்ஷ்மி தாயார்  முத்தங்கி அலங்காரம்,பெங்களூர் 
 

14 comments:

  1. பத்மாவதி தாயார் தரிசனம் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

    ReplyDelete
  2. படங்களுடன் நல்ல பகிர்வு...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  3. மனம் கவர்ந்த ஆன்மிகப் பதிவு! படங்கள் அருமை! பகிர்விற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    என்னுடைய வலைப்பூவில் "இதயத்தில் நீ" மற்றும் "பனிக்கொடை" கவிதைகள்!

    ReplyDelete
  4. மனம் கவர்ந்த ஆன்மிகப் பதிவு! படங்கள் அருமை! பகிர்விற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  5. அன்னையே
    அருள்வாய்.
    அழைப்பாய்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. வழக்கம் போல படங்களுடன் பகிர்வு நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
    பத்மாவதி தாயார் அருள் என்றும் உண்டு.

    ReplyDelete
  8. மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் படங்களும் பதிவும்.

    ReplyDelete
  9. அழகான பகிர்வு.

    ReplyDelete
  10. I am getting addicted to these temple pictures, so beautiful!

    ReplyDelete
  11. மங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகிக்கு என் அன்பான வந்தனங்கள்.


    >>>>>

    ReplyDelete
  12. மங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகிக்கு என் அன்பான வந்தனங்கள்.


    >>>>>

    ReplyDelete
  13. எல்லாப்படங்களும் அழகு !

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தங்க சேஷ வாஹனம் அழகோ அழகு !

    தங்கமே தங்கம் தான் !!

    அதிலும் தங்கப்பாம்புக்குட்டி பாருங்கோ ;)))))

    >>>>

    ReplyDelete
  14. இரண்டாவது படத்தில் எல்லாமே அழகு. அதிலும் அம்பாளின் பட்டுப்பாவாடை அசத்தல்.

    நான்காவது படத்தில் காசு மாலை கல் அட்டிகை முரட்டுப்புஷ்ப அலங்காரம் அபயஹஸ்தம் அத்தனையும் ஜோர் ஜோர்.

    மொத்தத்தில் மிகவும் அழகான பதிவு.

    அருமையான விளக்கங்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo

    ReplyDelete