கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. :
மென்மேலும், மென்மேலும் சுடர் விட்டு வளர்கின்ற ஒளியாக அனைவரது உள்ளங்களிலும் இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஒளி வெள்ளத்திற்கும் இருப்பிடமாகத் திகழ்கின்றது
ஜோதியாய், வெளியாய், வான் முதல் பூதங்களாய் இருந்தாலும், அந்த மா சக்தியானது, எனது மிகச் சிறிய அறிவிற்கும் எட்டக்கூடியதாக இருக்கிறதே. எனக்கும் கூட புரியும் அளவிற்கு எளிமையானதாக இருக்கின்றதே என்று அதிசயித்துப் பாடி நம் உள்ங்களிலும் அன்னையின் ஒளி வெள்ளத்தை உணருமாறு பாடுகிறார் அபிராமிப் பட்டர்.
இயற்கையிலேயே, ஒளி தரும் பொருட்களாக
சூரியன் தனது ஒளியினாலே, அனைத்து உலகங்களுக்கும் ஒளி தந்து, உயிர்கள் வாழ அருள் செய்கிறது..
சந்திரன். தனது தண்மையான ஒளியினால், உலகம் அனைத்திற்கும் குளிர்ச்சி தந்து, கலைகளையும், இனிமையையும் வாழ வைக்கிறது...
ஓஷதிகளைப் போஷிக்கிறது...பயிர்களின் வளர்ச்சியை சந்திர ஒளி ஊக்குவிக்கிறது !
நெருப்பு - அக்னி. அனைவரையும் வாழ வைப்பது இந்த வெம்மை !
உணவு கொடுப்பது இந்த ஒளிதானே!
மூவிதமான ஒளியாகவும் அபிராமி அன்னையே இருக்கிறாள் என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது.
பானு மண்டல மத்யஸ்தா என்றும்,
சந்த்ர மண்டல மத்யகா என்றும்,
வஹ்நி மண்டல வாசினீ என்றும் குறைப்பிடுகின்றது...
இந்த லலிதா சஹஸ்ரநாமத்தின் கூற்றையேதான், பட்டர் "ஒளிரும் ஒளியே" என்று குறிப்பிட்டுப் போற்றுகிறார்...
: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே,
அன்னையின் ஒளியில் தோய்ந்து நமக்கும் மனதில் காட்சி கொடுக்கவைக்கிறார்..
/// மணியே...
ReplyDeleteமணியின் ஒளியே...
ஒளிரும் மணி புனைந்த அணியே...
அணியும் அணிக்கு அழகே... ///
ரசித்தேன்...
விளக்கின் ஒளியில் ஒளிரும் அம்மன்; ஒளிக்கு ஒளிதான்.
ReplyDeleteஅன்னையின் அருள்
ReplyDeleteஅகிலத்தோர் அனைவரும் பெற
ஆவலுடன் செயல்படும் தங்களுக்கு அந்த
இமவான் பெற்றெடுத்த கோமளவல்லி
ஈசனின் இடபாக நாயகி
உலகாளும் உமையாள் உண்ணாமுலையாள்
என்றுமருள் புரிவாள்.
சுப்பு ரத்தினம்.
படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களும் பதிவும் நெஞ்சை அள்ளியது! நன்றி! என்னுடைய வலைப்பூவில் "தனிமை!"
ReplyDeleteபகிர்விற்கு நன்றி!
அழகான அம்பாள் படங்களுடன்,
ReplyDeleteஅருமையாக இருக்கு பதிவு..
அம்பாளின் முகம் தெரியும் அழகு.....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க.
ஒளிரும் ஒளி..
ReplyDeleteபடங்களும் விளக்கமும் அருமை.
எண்ணெய் விளக்குகளின் ஒளியில் மட்டும் அம்பாளைப் பார்ப்பது ஆனந்தம்!
ReplyDeleteகொஞ்சம் மனம் ஒன்றி பார்த்தால் உங்கள் பகிர்வுகள் நல்ல தியான உணர்வை கொடுக்கிறது...
ReplyDeleteநல்ல நிறைவான படங்கள்...
தொடருங்கள்,,
( எங்கே காத்து நம்ம பக்கம் வீசவில்லை..?)
படங்களும் விளக்கமும் அருமை.
ReplyDeleteவணக்கம், தினபதிவு திரட்டிக்கு உங்களை வரவேற்கிறோம்..
வணக்கம், தினபதிவு திரட்டிக்கு உங்களை வரவேற்கிறோம்..
தினபதிவு திரட்டி
அம்பாளின் அழகுப்புன்னகை சிந்தும் முகம் காணும்போது மனம் லேசாகிறதுப்பா...
ReplyDeleteஅழகிய அம்பாள் படங்களின் தொகுப்பும் கட்டுரையும் மிக மிக அருமை இராஜராஜேஸ்வரிம்மா...
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா..
பட்டரின் பரவசம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது படங்களைப் பார்க்கும்போது... சிரத்தையான தங்கள் பதிவுகளுக்கான பலன்கள் அநேக கோடி!!
ReplyDelete”ஒளிரும் ஒளி” உண்மையிலேயே நன்கு ஒளிர்வதாகவே உள்ளது.
ReplyDeleteமணியே,
ஜகமணியே
மணியின் ஒளியே,
ஒளிரும் மணி புனைந்த அணியே,
அணியும் அணிக்கு அழகே
மணிராஜ் என்ற பதிவரே!
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
நன்றியோ நன்றிகள்.