ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ராஜித புண்ய மூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
கிழக்கு நோக்கி யோகானந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மரை வழிபட்டவர்களின் வாழ்வில் சோகம் இருந்த இடம் தெரியாமல் மறையும் என்பது ஐதீகம்.
மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய படைப்புக்கடவுளான நான்முகப்பிரம்மன் வேதங்களின் உதவி கொண்டு படைப்புத் தொழிலை செய்துவந்தார்.
அசுரர்கள் பிரம்மாவின் வேதங்களைத் திருடிச் சென்றதனால், பிரம்மாவின் படைப்புத்தொழில் நின்று போனது.
தொழிலை இழந்த பிரம்மாவுக்கு தாங்க முடியாத
சோகம் தொற்றிக் கொண்டது.
பெருமாளைக் குறித்து தவம் செய்து , ""பூலோகத்திலுள்ள லட்சுமிசரசின் கரையில் அருளும் யோகநரசிம்மனை வேண்டி சோகம் போக்கிக் கொள்ளும் வரம் பெற்றார்....
. காஞ்சிபுரம் அருகிலுள்ள வந்தவாசியை ஒட்டிய சோகத்தூரில் உள்ளகுளத்தில் நீராடி யோகநரசிம்மனை வேண்டி மீண்டும் வேதங்களைப் பெற்று படைப்புத்தொழிலைத் தொடங்கினார் பிரம்மா.
பிரம்மாவின் சோகம் தீர்த்த இத்தலம் "சோகத்தூர்' என்று அழைக்கப்படுகிறது.
வடமொழியில் ""சோஹ அபஹத்ருபுரம்'' என்று பெயர். இதன் பொருள் "துக்கத்தைப் போக்கும் திருத்தலம்' என்பதாகும்.
இதுவரை தெரிந்திராத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அருமை...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மகிழ்ச்சி மலர்விக்கும் மஹாசிம்மன் படங்கள் எல்லாம் பார்த்தவுடம் மகிழ்ச்சியை வரவழைத்தது மிக உண்மை.
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு.
இன்னல்களை போக்கி, இனிய முகத்துடன் நல்வாழ்வு மலரச் செய்யும் எம்பெருமானின் சிறப்பைக் கூறும் சிறப்பான பகிர்வு. பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஆஹா! முதல் படமே வெகு அருமை. சிங்கராஜனின் முகத்தின் கருணை சிலிர்க்கவைக்கிறது.
ReplyDeleteஒரு சின்ன யோசனை: நகரும் படங்களை நடுவில் போட்டால் அதன் நகரும் தன்மை தெரியும்.[ANIMATION] இது சரிவர தெரிய சிறிது நேரம் பிடிக்கும்
ReplyDeleteஅறியாத தலம் (சோகத்தூர்)... மிக்க நன்றி அம்மா...
ReplyDeleteமுதல் படம் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteமகிழ்ச்சி மலர்விக்கும் மஹாசிம்மன்
ReplyDeleteபற்றிய பதிவில் வழக்கம்போல படங்கள் + விளக்கங்கள் எல்லாமே அருமை.
வந்தவாசி >> சோகத்தூர் >> பெருமாள்.
தரிஸித்தால் சோகம் மறையும்
பயனுள்ள தகவல்
பாராட்டுக்கள்.
>>>>>