Wednesday, October 17, 2012

அன்னை அபிராமி
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

உலகத்தைப் படைத்த தாய்; பராசக்தி. 
அவள் புகழ், பூத்த மலரின் புதுமணம்போல் எங்கும் பரவி நிறைந்திருக்கிறது. 
அவள் மாதுளம் பூ போன்ற இளம் சிவப்பு நிறமுடையவள். உலக உயிர்கள் அனைத்தையும் காத்தருள்கின்றவள். 
ஐந்து மலர்க் கணைகள், பாசம், அங்குசம், கரும்பு இவைகளை அழகிய கைகளில் சேர்த்தவள். கதிரவன், மதி, கனல் மூன்றையும் கண்களாகக் கொண்டவள்.
 இத்தகு சிறப்புடைய அபிராமியை வணங்கித் துதிப்பவர்க்கு ஒரு சிறு துன்பமும் வரவே வராது

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 
அபிராமியை வழிபடுவோர்க்கு வாழ்வில் எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்கலங்களே பொங்கி வரும். மாசற்ற வாழ்க்கை அமைந்து அவர்கள் தேசுடன் புகழ் வீசும் வண்ணம், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வார்கள்Posted by sury Siva to மணிராஜ் at October 17, 2012 10:56 AM
YouTube - Videos from this email20 comments:

 1. சிறப்பான பகிர்வுக்கு நன்றி அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அழகான படங்களுடன் சிறப்பான பதிவு. நவராத்திரி நல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. உங்கள் பதிவில் நவராத்திரி களை கட்டி விட்டது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்....
  அற்புதமான வரிகள் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள் மனசாந்தி தரும் தங்கள் தளம்.

  ReplyDelete
 5. http://youtu.be/tyDqmx31pAk

  Pl listen here your song and abhirami andhathi song.

  subbu rathinam

  ReplyDelete
 6. கொலுப்படப் பகிர்வுகள் நன்றாக இருக்கின்றன...

  ReplyDelete
 7. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 8. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - நவராத்ரி களை கட்டி விட்டதா ? புகைப்படங்கள் அத்தனையும் அருமை. அபிராமியும் மீனாட்சியும் காண்பவர் அனைவருக்கும் அருள் புரியட்டும். சுண்டலும் இனிப்பும் வாரம் முழுவதற்குமா ? எத்தனை வகைப் பலகாரங்கள் ....... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. படங்கள் மிக மிக அருமை.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 10. மிக அருமையான பதிவு...

  EllameyTamil.Com

  ReplyDelete
 11. அழகான படங்களுடன் சிறப்பான பதிவு.

  ReplyDelete
 12. அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க நவராத்திரி திரு நாளில் பிரார்த்தனை செய்கிறேன்! அழகிய பதிவிற்கு நன்றி!

  ReplyDelete

 13. பதிகம் நீங்கள் பாடியதா.? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. G.M Balasubramaniam said...

  பதிகம் நீங்கள் பாடியதா.? வாழ்த்துக்கள்.

  வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா..

  //sury Siva said...
  http://youtu.be/tyDqmx31pAk

  Pl listen here your song and abhirami andhathi song.

  subbu rathinam//

  /sury Siva ஐயா அவர்கள் எமது நிறைய பதிவுகளில் சிறப்பாகப் பாடி

  youtu.be லிங்க்கும் அனுப்பியிருக்கிறார்..

  அவருக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

  ReplyDelete
 15. அன்னையின் அருள் நவராத்திரியில் அனைவருக்கும் கிடைத்திருக்கும்.
  மிக நல்ல படங்களும் பதிகமும்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. அன்னையின் அருள் நவராத்திரியில் அனைவருக்கும் கிடைத்திருக்கும்.
  மிக நல்ல படங்களும் பதிகமும்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 18. ”அன்னை அபிராமி” மிகச்சிறப்பான பதிவு. நவராத்திரி களை கட்டிவிட்ட பதிவு போலிருக்கு.

  கொலு + சுண்டல்கள் அழகோ அழகு தான்.

  கொலுவுக்கு மேல் காட்டப்பட்டுள்ள அம்பாள் மட்டுமே தெரிகிறது.

  அது அழகாக உள்ளது.


  விளக்குக்கு அடுத்த படம் திறக்க மறுக்கிறது. பரவாயில்லை.


  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete