Sunday, September 22, 2013

ரோஜா ...ரோஜா ...!!






வண்ணம் கொண்ட வானவில் வானம் விட்டு மண் தொட்டு மலராய் மனம் மயக்கும் மணம் கொண்டு மலர்ந்ததோ என வியக்கும் வண்ணம் வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் அள்ளித்தருவதால் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது , அன்பபை அறிவிப்பது வரை ரோஜாப்பூங்கொத்து அளிக்கப்படுகிறது...!!

விழாக்கள் எதுவானாலும்  மணம் மிக்க எழிலான ரோஜாப்பூங்கொத்து  வழங்குவது நிறைவான வாழ்த்துகளாக திகழ்கிறது..

மணம் வீசி மனம் கொள்ளைகொள்ளும் மயக்கும் ரோஜா சமையலிலும் இடம் பிடிக்கும் ..கேக், புடிங், பானங்கள், ரோஸ் வாட்டர், எசன்ஸ், என மணக்கும் ..!

மலர்களின் ராஜாவான ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது.

பூவையரை புன்னகை பூக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ரோஜாவின் ராஜா முகம்..திங்கள் போல் சிரிக்கும்..
செவ்வாயில் மலர் மணக்கும்...ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்

தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
அழகான மலர் மாலை  வாங்குவோம்
தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் தந்திடும் ஓவியம்  மலரல்லவோ..!!

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
மௌனமே சம்மதம் என்று பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு 

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே 
 காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கயிலே 
மென்மெல்லிய சத்தம் வரும் 
மஞ்சள்  ரோஜா நட்பையும், வெள்ளை  ரோஜா சமாதானத்தையும் குறிக்கிறது.

ஃப்ரான்ஸ் நாட்டின் தேசிய மலர் ரோஜா தான்.
ரோஜா டீயும் , ரோஜா பானங்களும் அங்கே பிரபலமானவை..!
உலகிலேயே நெதர்லாந்துதான் ரோஜா ஏற்றுமதியில்
முனனனியில் இருக்கிறது..

சின்ன, ரோஜாவில் இருந்து, பெரிய ரோஜா வரை பல வகைகள்  உலகம் முழுவதும் கண்கவர் வண்ணங்களில் மனம் மயக்கும்..!

காஷ்மீர் ரோஜா, ஊட்டி ரோஜா ,வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல வண்ண ரோஜாக்களில்  கறுப்பு  ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் பிரபலமாக கவருகிறதாம்..!


பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் குக்குக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம் அட சரிகமபதநிசரீ.

ரோஜா ..ரோஜா ரோஜாகூட்டம்
அருகே அருகே ரோஜாகூட்டம்
நடுவில் நடுவே முள்ளின் கூட்டம்


நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான் 
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான் 

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்


ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே


24 comments:

  1. வணக்கம்
    அம்மா
    ரோஜா மலரின் அருமை பெருமை பற்றி விளக்கியுள்ளிர்கள் படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அழகின் மறுபெயர் ரோஜா.
    நன்றி

    ReplyDelete
  3. ரோஜா மலரே ராஜ குமாரி

    என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

    ஒன்னு இரண்டு திருடிக்கிட்டு,

    பாக்கெட்டுலே வச்சுக்கிட்டு

    பதிவுசா திரும்பி விட்டேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. அழகான தோட்டத்தில் அழகு அழகான ரோஜாக்கள்.

    வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது...

    அழகான படங்களும் அழகான பாடல் வரிகளும் அழகோ அழகு.

    ReplyDelete
  5. எத்தனை ரோஜாக்கள் அம்மா.
    அத்தனையும் அழகு. உங்கள் பதிவைப் போலவே.வாழ்த்துகள் .

    ReplyDelete
  6. ரோஜா ..... ரோஜா

    மிகவும் அருமையான அழகான தேன் சிந்தும் பதிவு.

    படங்கள் எல்லாமே மனதை வருடிச்செல்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  7. உலகிலேயே நெதர்லாந்து ரோஜா ஏற்றுமதியில் முன்னனியில் நிற்கிறது என்ற வரிகளுக்குக்கீழே காட்டியுள்ள படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அன்பின் அடையாளமாக ஹாட்டின் வடிவ நுழைவாயில்கள். ;)))))

    அடடா, மிகவும் அசத்தல்.

    படத்தேர்வுகள் அனைத்தும் மிகவும் அருமை.

    ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  9. மலர்களின் ராஜா இந்த ரோஜா என்பதில் ஐயம் ஏதுமில்லை.. படங்களும் பாடல்களும் அருமை அம்மா!!

    ReplyDelete
  10. 6}

    ரோஜா...ரோஜா...

    ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)

    கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

    உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்
    திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

    உனை வேறு கைகளில் தரமாட்டேன்
    நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
    ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...

    >>>>>

    ReplyDelete
  11. 11]

    யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
    கார் கால காட்டில் ஏன் வாடுதோ
    மேகம் தன்னில் மேகம் மோதி
    மின்னல் மின்னுதோ

    மின்னல் இந்த நேரம் எந்தன்
    கண்ணில் மின்னுதோ
    ஒரு ராகம் புது ராகம்
    அதில் சோகம் தான் ஏனோ (யார் வீட்டில்)

    >>>>>

    ReplyDelete
  12. 21]

    அழகான சூரியன் கண்ணால் பேச
    அலங்கார வெண்ணிலா கைகள் சேர
    புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே
    என் நன்றியே பாடலா ஆனதே
    (அழகான..)

    மின்சாரம் பூப்பூக்குமா பூத்ததே
    உன்னாலேதான் என் குரல் பாடுதே
    (அழகான..)

    ரோஜா பூவின் மென்மை எல்லாம்
    உந்தன் மனம்தானே

    காலை பனியின் தூய்மை எல்லாம்
    உந்தன் குணம்தானே

    உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி
    உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி

    உன் பாச கைகளில் பூப்பூக்க
    பூந்தோட்டம் ஆயவள் வந்தாள்

    உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய
    காதல் தீபமாய் நின்றாள்

    மூங்கில்கள் என்பது தென்றலால் பாடுது
    மேகங்கள் என்பது தூரலால் பாடுது
    எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்
    இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்

    நன்றி சொல்ல வார்த்தை இன்றி நானும் பாடினேன்
    பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி உன் மேல் தூவினேன்
    (அழகான..)


    >>>>>

    ReplyDelete
  13. அழகான ரோஜாக்களின் படங்களுடன் இன்றைய நாள் சிறப்பு.

    தில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் ஒரு பகுதியான மொஹல் கார்டனில் பலவகையான ரோஜாக்களை கண்டு களித்திருக்கிறேன்.

    ReplyDelete

  14. ரோஜாக்கள் அழகு என்றால் ரோஜாவைக் குறிக்கும் பாடலால் பதிவும் அழகு கூடுகிறது. சினிமாப் பாடல்களும் அத்துப்படியா மேடம்? பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இங்கே சேரும் .....

    ரோஜா மலரே ராஜகுமாரி
    ஆசைக் கிளியே அழகிய ராணி ....

    இன்னும் இன்னும் ரோஜாவின் சிறப்புக்கள் நீளும் ...நீளும் . !

    ReplyDelete
  16. பதிவு முழுவதும் ரோஜாக்களின் நறுமணம்!.. வண்ண மயமான பதிவு!..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  17. ரோஜாக்கள் அழகு, பாடல்கள் அருமை.
    வந்தது வசந்தம், தந்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. ரோஜாக்கள் அழகு அம்மா...
    அருமையான பகிர்வு...

    ReplyDelete
  19. படங்களும் பாடல்களும் அருமை.

    ReplyDelete
  20. பலவண்ண ரோஜாக்களின் அழகிய படங்கள் மனதைக் கவர்கின்றன. ரோஜா பற்றிய தகவல்கள் சுவை கூட்டுகின்றன.

    ReplyDelete
  21. அப்பா! எத்தனை வகையான ரோஜாக்கள். மனதை கொள்ளை கொண்டன. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete