Thursday, September 26, 2013

வீணை தட்சிணாமூர்த்தி

பாட்டும் இசையும் பரதம் கலைகளும்
மீட்டிடும் தட்சணா வீணைமூர்த்தி- நாட்டிடும்
கல்வியில் முன்னேற்றம் காட்டும் உயர்பதவி
வெல்வதற்கு தட்சணர் வீடு!

முனிச்ரேஷ்டர்களான தும்புரு, நாரதர் முதலியோர் தம்கையில் வைத்திருக்கும் வீணையின் லட்சணத்தினை யும், பெருமையையும் உணர்த்த வீணையைக் கையிலேந்தி எழுந் தருளிய கோலமே - 
வீணை தாங்கு தட்சணா மூர்த்தம்.

திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய போது நாரதர். சுக்ரமுனிவர்களின் இசைஞானத்தை உணரவும், சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார். 

உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார். 

அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்றும் விளக்கிக்கொண்டு வந்தார். 

 கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார். 

அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும். 

இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். 

எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும்.

முக்கியமான வீணையுடன் பாடும்போது உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு.

இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டியதைக்கண்ட, கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். தங்கள்

கண்களையே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர்.

இவ்வாறு நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சிதருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.

ஸ்ரீ வீணா தட்சிணா மூர்த்தி
திருச்சிக்கருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தியை. வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார்.

வியாழக்கிழமைகளில்  தட்சிணாமூர்த்திக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும்.

வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும்.

வீணை தட்சிணாமூர்த்திக்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

வீணா தட்சிணாமூர்த்தி - திருப்பழனம்.
படிமம்:வீணா தட்சிணாமூர்த்தி - திருப்பழனம்.JPG


27 comments:

 1. வீணையில் இவ்வளவு இருக்கா?

  ReplyDelete
 2. விளக்கங்கள் மிகவும் அருமை அம்மா... நன்றி...

  ReplyDelete
 3. வியாழனன்று வீணை தட்சணாமூர்த்தி தரிசனம்.வீணையை பற்றி தெரியாதன தெரிந்துகொண்டேன்.நன்றி

  ReplyDelete
 4. வீணையில் இத்தனை விஷயங்களா? வீணை தட்சிணா மூர்த்தி பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி!

  ReplyDelete
 5. வீணை சங்கதிகள் மீட்டலாக இருந்தது.
  8-9ம் வகுப்பில் மாதாந்தக் கூட்டத்திற்கு வீணை தலைப்பில் பேச்சுப் பேசினேன்
  அது அப்படியே இங்கு வந்துள்ளது. மிக்கநன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. அருமையா இருக்கு படிக்க. நன்றி

  ReplyDelete
 7. ஆஹா, பதிவென்றால் இதுவல்லவோ பதிவு!

  இன்று குருவாரம், வியாழக்கிழமைக்கு ஏற்ற மிக நல்லதொரு பதிவு.

  >>>>>

  ReplyDelete
 8. வீணை தக்ஷிணாமூர்த்திக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

  வீணானப் பதிவுகள் [மொக்கை] ஏதும் தராமல் உறுப்படியான விஷயங்களை மட்டும் பதிவிடும் உங்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும். ;)))))

  >>>>>

  ReplyDelete
 9. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  அவை படங்கள் அல்ல - பாடங்கள்.

  பல்வேறு வீணைகள், அவற்றில் கையாளப்படும் நரம்புகள், அந்த நரம்புகளின் எண்ணிக்கைகள் என எவ்ளோ விஷயங்களைச் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

  இதை ஆர்வத்துடன் படித்த என் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப்போனதே ;)

  >>>>>

  ReplyDelete
 10. கடைசி இரண்டு படங்களும் மிகவும் அழகாக உள்ளன.

  கடைசியிலிருந்து இரண்டாவது படத்தில் உள்ள அன்னபக்ஷியின் மீது அமர்ந்து வீணை மீட்கும் வெங்கலச்சிலையான சாக்ஷாத் கலைவாணியாகவே உங்களை எங்களால் காண முடிகிறது.

  உங்களையன்றி வேறு யாரால் இவ்ளோ விஷயங்களை, அழகாக அருமையாக புட்டுப்புட்டு படங்களுடன் விளக்கி அசத்த முடியும்?

  NO CHANCE AT ALL.

  >>>>>

  ReplyDelete
 11. வீணா கானமாக இன்று தாங்கள் பொழிந்துள்ள பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  சகல செளபாக்யங்களுடன் நீங்கள் நீடூழி வாழ்க !

  -oOo-

  ReplyDelete
 12. பதிவு சுகஸ்வரமாக இருந்தது.

  ReplyDelete
 13. வீணையைப் பார்க்கும்போது நான் என் பழைய நினைவுகளைச் சேர்ந்தே மீட்டிவிட்டேன்...
  அற்புத வாத்யம்... அதை மீட்டிடும்போது மனம் எங்கோ சஞ்சரிக்கும்... உலகையே மறந்து... மணிக்கணக்கில் மனம் பறந்துகொண்டிருக்கும்.... எல்லாம் ஒருகாலம்...!.

  வீணைகள் பற்றிய விளக்கம் அருமை!

  தக்ஷணாமூர்த்தியின் சிறப்பும் பெருமையும் அற்புதம்! படங்கள் அழகு!

  பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 14. அழகான வீணைகள். வீணைக் கண்காட்சிக்கு ஒன்றனுக்கு சென்று வந்தது போன்ற உணர்வு. கருத்துரை சொன்ன திரு VGK, அவர் ஊர் பக்கத்தில் உள்ள லால்குடி சிவன் கோயிலைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது ஏமாற்றமாக உள்ளது.

  ReplyDelete
 15. அழகான வீணைகள். வீணைக் கண்காட்சிக்கு ஒன்றனுக்கு சென்று வந்தது போன்ற உணர்வு. கருத்துரை சொன்ன திரு VGK, அவர் ஊர் பக்கத்தில் உள்ள லால்குடி சிவன் கோயிலைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது ஏமாற்றமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. //தி.தமிழ் இளங்கோ has left a new comment on the post "வீணை தட்சிணாமூர்த்தி":

   அழகான வீணைகள். வீணைக் கண்காட்சிக்கு ஒன்றனுக்கு சென்று வந்தது போன்ற உணர்வு. கருத்துரை சொன்ன திரு VGK, அவர் ஊர் பக்கத்தில் உள்ள லால்குடி சிவன் கோயிலைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது ஏமாற்றமாக உள்ளது. //

   ஐயா, வணக்கம். லால்குடிக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். அங்குள்ள சிவன் கோயிலுக்கும் ஓரிரு முறை சென்று வந்த ஞாபகம் உள்ளது. ஆனால் இவர்கள் சொல்லும் வீணா தக்ஷிணாமூர்த்தியின் சிறப்பினை அடியேன் இதுவரை அறியேன்.

   அந்த லால்குடி சிவன் கோயில் தக்ஷிணாமூர்த்தி உள்பட எதுவுமே இவர்கள் சொன்னால் மட்டுமே நமக்குப்புரிபடும். பிரபலமாகவும் தெரியும். ;)))))

   அடுத்த முறை லால்குடி செல்லும்போது, பிராப்தம் இருந்தால் தரிஸித்து விட்டு, பின்பு இதே பதிவினில் கருத்துக்கூறுகிறேன்.

   அதுவரை தயவுசெய்து பொறுத்தருளுங்கள் ஐயா.

   அன்புடன் VGK

   Delete
  2. [1]

   அன்புள்ள தமிழ் இளங்கோ ஐயா,

   வணக்கம்.

   திருச்சி மாவட்டத்தில் எவ்வளவோ கோயில்கள் உள்ளன. அவற்றில் எவ்வளவோ கோயில்கள் ஏற்கனவே பிரபலமாக உள்ளன.

   மிகப்பழமை வாய்ந்த சில கோயில்கள் மட்டும் இன்று மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளன என்பதும் மறுக்கவே முடியாது.

   மக்கள் அதிகமாக வருகை தராமல் இருப்பதால், இதுபோன்ற கோயில்களில் நிறைய விளக்குகள் ஏற்றவோ, தினமும் ஒரு வேளையாவது ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யவோ, பூஜைகள் நடத்தவோ, கோயிலை சுத்தமாகப் பராமறிக்கவோ முடியாமல், அங்குள்ள நிர்வாகங்களும் திணறி வருகின்றன.

   அங்குள்ள அர்ச்சகர்களின் ஏழ்மை நிலை அதைவிட மோசமாக உள்ளன.

   >>>>>

   Delete
  3. [2]

   கோயிலில் குடிகொண்டுள்ளது இறைவனே ஆனாலும், அவருக்கும், அவர் கோயில் கொண்டுள்ள பகுதிக்கும் ஓர் மிகப்பெரிய விளம்பரம் தேவைப்படுகிறது என்பதே உண்மை, ஐயா.

   இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பல தினசரிகள், வார இதழ்கள் + மாத இதழ்கள் ஆன்மிகச் செய்திகளையும், பல்வேறு கோயில்களின் சிறப்புகள் பற்றியும் எழுதி வருவதால் மட்டுமே சில கோயில்கள் பிரபலமாகி உள்ளன என்பதை நாம் மறுக்கவே முடியாது, ஐயா.

   நம் திருச்சி உறையூரில் உள்ள குங்குமவல்லித்தாயார் கோயில் இதுபோன்ற பல பத்திரிகைகளின் உதவியாலேயே மிகச்சமீப காலமாக மட்டும் மிகப்பிரபலமாகியுள்ளது.

   ஓர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதுபோல இங்கு ஒரு கோயில் உள்ளது என்பதே திருச்சியில் உள்ள யாருக்குமே தெரியாமல் இருந்தது.

   [http://jaghamani.blogspot.com/2011/07/blog-post.html
   குங்குமம் காப்பாள் குங்குமவல்லி]

   இன்று வெளியூரிலிருந்தெல்லாம் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்தக் கோயிலைப்பற்றி எழுதாத பக்தி மலர்களே கிடையாது. ஒருவேளை கோயில் நிர்வாகமே இதுபோலெல்லாம் எழுதச்சொல்லி சொல்வார்களோ என சிலர் சந்தேகப்படுவதிலும் ஆச்சர்யம் இல்லை தான்.

   >>>>>

   Delete
  4. [3]

   எனக்கு என் மனதில் ஓர் ஆசை உண்டு, ஐயா!

   இந்தப்பதிவர் தன் படைப்புகளை பல்வேறு ஆன்மிக மலர்களில் வெளியிட வேண்டும்.

   பல லக்ஷக்கணக்கான வாசகர்களை அவை சென்றடைய வேண்டும்.

   இவர்களும் பிரமலமாகி அந்த கோயில்களும் பிரபலமாக வேண்டும்.

   இவர்களுக்கும் அதனால் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஓர் கணிசமாக ஊக்கத்தொகை கிடைக்க வேண்டும்.

   >>>>>

   Delete
  5. [4]

   எனக்கு மேலும் ஒரு ஆசை உண்டு, ஐயா !

   இவர்களை ஓரிரு மாதங்கள் திருச்சியில் உள்ள மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து நான் உபசரிக்க வேண்டும்.

   தினமும் ஒரு BMW காரில் இவர்களை அழைத்துக்கொண்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நலிவடைந்த கோயில்களுக்கும் நான் கூட்டிச்செல்ல வேண்டும்.

   மடிக்கணனி மூலம் இவர்களின் புகழைப்பற்றி அங்குள்ள கோயில் நிர்வாகத்திடம் நான் எடுத்துச்சொல்ல வேண்டும்.

   இவர்கள் தன் இஷ்டப்படி, நான் அளிக்கும் மிக உயர்ந்த கேமராவினால் புகைப்படங்கள் எடுத்துத்தள்ள வேண்டும்.

   இதுபோன்று நான் இவர்களை அழைத்துச்செல்லும், அனைத்து நலிவடைந்த கோயில்களைப்பற்றியும் இவர்கள் தனக்கே உரித்தான முழுத்திறமைகளையும் உபயோகித்து எழுத வேண்டும்.

   அவை இவர்களின் வலைப்பதிவினின் மட்டுமின்றி, அனைத்து ஆன்மிக இதழ்களிலும் வெளியாக வேண்டும்.

   பல லக்ஷம் வாசகர்கள் அவற்றைப் படித்து மகிழ வேண்டும்.

   இதற்கான அனைத்துச்செலவுகளையும் [எவ்வளவு லக்ஷங்கள் ஆனாலும்] நானே ஏற்க வேண்டும்.

   இதனால் அந்த நலிவுற்ற கோயில்களில் தினமும் நிறைய தீபங்கள் ஏற்றப்பட்டு, முறைப்படி ஒரு வேளையாவது ஸ்வாமிக்கு பூஜையும், நைவேத்யமும் நடக்க வேண்டும்.

   இதெல்லாம் என் ஆசைகள். ஆனால் நடக்குமா?

   ”நினைப்பதெல்லாம் ............ நடந்துவிட்டால் ......... தெய்வம் ஏதும் இல்லை” என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

   >>>>>

   Delete
  6. 5]

   நான் ஒரே ஒரு கோயிலைப்பற்றி என் பதிவினில் ஒரே ஒரு முறை வெளியிட்டிருந்தேன்.

   இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

   தலைப்பு:

   ”காவேரிக்கரை இருக்கு!
   கரைமேலே ___ இருக்கு!!”

   அதன் பிறகு அந்தக்கோயிலுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை சற்றே அதிகமாகியிருப்பதாகவும் கோயில் நிர்வாகத்தினர் என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்கள்.

   நான் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒருமுறை அங்கு செல்லும் போது என்னை மிகச்சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.

   எனக்கே, இந்த என் சுண்டைக்காய் பதிவருக்கே, இப்படி என்றால், இவர்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் எவ்வளவு ஒரு மிகப்பெரிய வரவேற்பும், மரியாதைகளும் தந்து கவனிக்கப்படும் என சற்றே நினைத்துப்பாருங்கள், ஐயா.


   -oOo-

   Delete
 16. ஒவ்வொரு வகை வீணைக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் நரம்புகள்...
  வீணை பற்றியும், தட்சிணாமூர்த்தி பற்றியும் தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete
 17. தட்சிணாமூர்த்தி தரிசனம் வியாழன் கிடைத்தது மகிழ்ச்சி.
  படங்கள், விளக்கங்கள் மிக அருமை.
  நன்றி.

  ReplyDelete
 18. வீணை வகைகள், இசை எப்படி இருக்க வேண்டும் என்றும் இதுவரை தெரிந்திராத தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
  வீணை தட்சிணாமூர்த்தி திருவுருவம் மிக அழகு.

  ReplyDelete
 19. படங்கள் கலக்கல் அம்மா

  ReplyDelete
 20. வீணாதர தக்ஷிணாமூர்த்திக்கு சந்தனக் காப்பிட - நினைத்த நல்ல காரியம் நிறைவேறும்!.. //

  நல்லதொரு தகவல்!.. நன்றியும் மகிழ்ச்சியும்!..

  ReplyDelete