Friday, September 27, 2013

உலக சுற்றுலா தினம்









உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி சர்வதேச சுற்றுலா தினம் (World Tourism Day Tour Tourist) 
ஆகக்  கொண்டாடப்படுகிறது.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய தொழில் சுற்றுலா. 

(முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்த் துறை)


சுற்றுலா மூலமாக வேலை வாய்ப்பு, அந்நியச் செலவாணி வருமானம், மக்களின் வாழ்க்கை தரம் உயர்தல் என  ஏராளமான பலன்கள் நாட்டுக்குக் கிடைக்கும் ! 

வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய மூலஆதாரமாக சுற்றுலா விளங்குகிறது. 

இந்திய அரசு சிறந்த சுற்றுலாப் பகுதிகளுக்கு என தேர்வு செய்துள்ள சுமார் 60 இடங்களில் சுமார் 20 இடங்கள் தமிழகத்தில் உள்ளது பெருமைப்படத்தக்கது ..!

கோவில் நகரங்கள். கலாச்சார மையங்கள், மலை வாஸ்தலங்கள், வர்த்தக மையங்கள் போன்றவை முக்கிய சுற்றுலா இடங்களாக திகழ்ந்து வருகின்றன.  
குறிப்பாக, தஞ்சாவூர், கும்பகோணம், காஞ்சீபுரம், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, தரங்கம்பாடி திருவரங்கம், திருத்தணி, பழனி, சிதம்பரம், மதுரை போன்ற சரித்திரப் புகழ்பெற்ற சுமார் 15 நகரங்களைத் தொன்மை குறையாமல் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. 
குடுமப்த்தோடு ம்னம் நிறைந்து பொழுது போக்கவும், 
வழக்கமான பணி சுமையிலிருந்து ஒரு மாற்றத்துக்காகவும் 
கல்வியறிவு பெறவும். தொழில் தொடர்பு கொள்ளவும் 
சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல சிறப்பு திட்டங்களுடன் இயங்கி வருகிறது. 

சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் சென்றுவர சுற்றுலா துறையே தங்கும் விடுதிகள் மற்றும் வாகன வசதிகளை செய்து தருகிறது. 

தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதிக்காக மோட்டல்கள் (சாலையோர விடுதிகள்) பல் இடங்களில் மிகச் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சுற்றுலா ஒரு முக்கிய தொழிலாக நடந்து வருகிறது.





13 comments:

  1. VERY GOOD MORNING !

    BE H A P P Y !!

    HAVE A VERY NICE DAY !!!

    'FRIDAY' !!!!

    >>>>>

    ReplyDelete
  2. கீழிருந்து மூன்றாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நாய் ஒன்று தன் நாய்குட்டியை [பேபி நாயை] தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சுற்றுலா செல்கிறதா!!!!! படத்தேர்வு மிக அருமை.

    உங்களுக்குன்னு எங்கு தான் இதுபோன்ற படங்கள் கிடைக்கின்றனவோ ! பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. கடைசி படமான ’வானத்தையும் வெற்றிகொள்’ என்பதும் அருமையான படத்தேர்வு தான்.

    கீழிருந்து இரண்டாவது படத்தில் கடற்கரை + தங்கும் குடில்கள் சூப்பராக உள்ளது. இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி ஏகாந்தமாகப் போய் அங்கு தங்கிவிட மாட்டோமோ என்ற ஆவலைத்தூண்டுகிறது.

    >>>>>

    ReplyDelete
  4. கீழிருந்து ஐந்தாவது வரிசைப்படமும் அழகு தான்.

    யானைகள், ஒட்டச்சிவிங்கிகள், வான்கோழிகள் என வகைக்கு இரண்டாக ஒருபுறமாக நிற்க, கப்பலிலிருந்து மேலும் சில யானைகள் சிங்கங்கள் போன்ற ஏதேதோ சுறுசுறுப்பாக இறங்கி இங்குமங்கும் செல்வதும், மேலே ஒரு பறவை பறப்பதும் ஜோர் ஜோர்

    >>>>>

    ReplyDelete
  5. இன்று உலகச் சுற்றுலா தினம் என்று நினைவூட்டியதற்கும், அதைப்பற்றி அழகாக பல்வேறு தகவல்களை எடுத்துச்சொல்லி, கண்கவரும் அனிமேஷன் படங்களை காட்டி அசத்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள்.

    HAVE A LOVELY DAY ! ;)))))

    -oOo-

    ReplyDelete
  6. அடடா, இன்னைக்கு பார்த்து ஊர் சுற்ற போகலையே!! :-)

    ReplyDelete
  7. சிறப்பான நாளில் அருமையான படங்களின் மூலம் பகிர்வு மிகவும் அருமை அம்மா... வாழ்த்துக்கள்... நன்றி....

    ReplyDelete
  8. அழகான படங்கள் அருமையான தகவல்கள். நன்றி அம்மா

    ReplyDelete
  9. தகவல்களும் பகிர்வும் நன்று.

    ReplyDelete
  10. சுற்றுலா தகவல்கள், படங்கள் எல்லாம், அழகு.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  11. சுற்றுலாவிற்கு என்று ஒரு தினமா? இன்றைக்கு தெரிந்து கொண்டேன்.
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  12. சுற்றுலாதின வாழ்த்துகள்.

    ReplyDelete