Monday, September 9, 2013

மகிழ்ச்சி முகிழ்க்கும் விநாயக சது‌ர்‌த்த‌ி ‌ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
விநாயகர் அவதரித்த நாளான  ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே  விநாயக சதுர்த்தி என ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளாக விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று சுக்ல பட்ச சதுர்த்தி கோலாகலமாக நாடெங்கும் இல்லந்தோறும்  இனிய பூஜையாகக் கொண்டாடப்படுகிறது 
நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் இரண்டு இதிகாசங்களும் போற்றும் முழுமுதற் கடவுளான விநாயகர்ரே...!.

நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை மிக்க விநாயகருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம்.
Ganesh Chaturthi orkut scraps, images, greetings
ஆவணிமாத விநாயக சதுர்த்தி விரதத்தின் மகிமையால் ஆ‌திசேஷ‌ன்
அவ‌னியை‌த் தா‌ங்கவு‌ம், ‌விநாயகரு‌க்கு உதரப‌ந்தனமாக
இரு‌க்கவு‌ம் ‌திருமா‌லி‌ன் படு‌க்கையாகவு‌ம் ஆகு‌ம் வர‌மும் பெ‌ற்றா‌ர்.
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். 
ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். 

வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். 
அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா! 

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். 
மறுநாள் புனர் பூஜை என்று  சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். 
கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.
உலகத்துக்குப் பதில் அம்மை அப்பனை சுற்றிய ஆனை முகத்தானுக்கு உலகம் முழுதும் வழிபாடுகளும், விழாக்களும், கோயில்களும் உகந்து நடைபெறுகின்றன ..! 
சீனா, ஜப்பானில் ஆரம்பித்து  உலகம் சுற்றியிருக்கிறார் உமை மைந்தன் ..

உலகின் பழமையான கண்டமான ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோயிலும் வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோயிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோயிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு வினயாகர் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன .
விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனிபகவான்  பிடிப்பதில்லை! 
விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்!
புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய  ப்ரணவ மந்திரம். "ஓம்' என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது.

பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. 
 ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவை இரண்டும் வேண்டும். 
நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.

புதுவை மணக்குள விநாயகர் ஆலயச் சுவரில் 200 விதமான விநாயகரின் ஓவியங்களைக் கண்டு ரசிக்கலாம்.
26 comments:

 1. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. chanting ainthu karathanai song and
  ganesa charanam charanam ganesa
  Om ganesaya namaha.

  Great

  subbu thatha.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 3. விதம் விதமான இனிப்புகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். தங்களுக்கு எனது உளங் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. பகிர்வும் மிகவும் சிறப்பு...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. கண நாதனின் திரு அருள் நிறைய பெற்றிருப்பவர் எம் சகோதரி! அவரின் அருளால் பிறவிப்பயன் உய்யும் பொருட்டு, அறிந்தார் முதல் அறியாதோர் என பாகுபாடின்றி தானறிந்ததனை, அனைவரும் அறியச்செய்யும் எழுத்துப் பணியினை திறமையாய் நவீனமாய் அரும்பணியாற்றி, மென்மேலும் சீரும் சிறப்பும், நல்வாழ்வும் பெற்று வாழ கண நாதனை பிரார்த்திக்கிறேன்.

  வளர்க உம் தொண்டு! வாழ்க பல்லாண்டு!

  சிறப்பான பகிர்விற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 6. எத்தனை விதமான படங்கள் உண்டோ அத்தனையும் ஒருங்கே உங்கள் தளத்தில் காண்கிறேன்.

  அற்புதம்! அழகு! அருமை!

  விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. சிறப்பான பகிர்வு. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. பிள்ளையார் சதுர்த்திக்காக ஒரு ஜோக்:

  இங்க எங்காத்துல ஒரு கொழந்தை. பொண் கொழந்தை.

  ஒரு வயது ஆண்டு நிறைவின் போது அதை இழுத்துப்பிடிச்சு காது குத்தியாச்சு.

  பிறகு கொஞ்சம் வயசான போது மூக்குக் குத்திக்க ஆசாரிகிட்ட அழைச்சிண்டு போனோம்.

  கூடவே இன்னொரு பாப்பா, அதாவது சமவயதுள்ள வேறு வீட்டுக் குழந்தை .... அதையும் சேர்த்து.

  அந்த இன்னொரு குழந்தை தான் சமத்தா ”நான் தான் ஃபர்ஸ்டூஊஊ”ன்னு [நம்ம அதிரா போல] முதலில் ஆசாரிகிட்டே மூக்கை நீட்டிச்சு

  ஆசாரி அவளுக்கு மூக்கை குத்தியதும், அதுபோட்ட சத்தத்திலே இது ஓட்டமா ஓடிவந்திடுச்சு.

  அதற்குப்பிறகு கல்யாணமெல்லாம் ஆகியும் கூட இன்னி வரைக்கும் மூக்கே குத்திக்கலை, இந்த எங்க ஆத்துக் கொழந்தை.

  கேட்டாக்கச் சொல்லுது:

  "பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை பண்றோமில்லே!

  அந்தக்கொழுக்கட்டைகளுக்கும் மூக்கு பண்றோமில்லே !

  அந்தக்கொழக்கட்டை மூக்குக்கு மூக்குத்தியா நாம் குத்தி விடுகிறோம் ? அதுபோலத்தான் இதுவும். அதனாலே ’கண்ணம்மா .... கம்முன்னுகெட"ன்னு சொல்லுது.

  அந்தக்கொழந்தையோட அம்மா, மாமியார் எல்லோரும் ”மூக்குக் குத்திண்டா தான் பார்க்க லக்ஷணமா லக்ஷ்மிகரமா இருக்கும்"ன்னு, எவ்வளவோ புலம்பிப்பார்த்தும், ஒரு பிரயோசனமும் இல்லை.

  எல்லோருக்குமே ஒரே பதில் ‘கம்முன்னுகெட’ மட்டுமே தான்.

  ஆமா...... இந்த ஜோக் எப்படியிருக்கு! ;)))))

  வெல்லத்தையே பிள்ளையாராக ஆக்கி, அதுலேயே கொஞ்சம் புட்டு, நைவேத்யம் பண்ணி, ஜோக்காக ஆக்கிக் கொடுத்துடுவோம்லே !!

  ReplyDelete
 9. Arumaiyana padangaludan padhivu. Amarkalamaaga ulladhu. Vinaayagar chadhurthy vaazhthukkal

  ReplyDelete
 10. எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்... மீ கொழுக்கட்டை செய்யப் போறேன்ன்ன்.. வாழ்க்கையில் முதல் தடவையாஆஆஆஆஆஆஆஅ:))

  ReplyDelete
 11. மிக அருமை ராஜி :)

  ReplyDelete
 12. வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !
  படங்கள் அற்புதம்.

  ReplyDelete
 13. ”மகிழ்ச்சி முகிழ்[வி]க்கும் விநாயக சதுர்த்தி” தங்கம்மான தலைப்’பூ’ ;)

  ReplyDelete
 14. படங்கள் அத்தனையும் அழகோ அழகு !

  ReplyDelete
 15. கீழிருந்து 13, 14, 15 + 17 வரிசைப்படங்கள் திறக்கவே இல்லை.

  ReplyDelete
 16. பிரஸாதங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டேன். சுவையாக தித்திப்பாக உள்ளன. மிக்க நன்றி.

  ReplyDelete
 17. கீழிருந்து இரண்டாவது பிள்ளையாரப்பா சும்மா என்னைப்பார்த்து கண்ணடித்துக்கொண்டே இருக்கிறார். கண்டித்து வைக்கவும்.

  ReplyDelete

 18. கீழிருந்து ஏழாவது படம் மிகவும் அருமை.

  அந்தக்கால தஞ்சாவூர் ஓவியம் போல மிகவும் அசத்தலான படம்.

  ReplyDelete
 19. கிரிக்கெட் விளையாட பேட்டுடன் கிளம்பும் விநாயகர் ... சூப்பர் காமெடி.

  ReplyDelete
 20. இன்றைய பகிர்வு முழுவதுமே மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  oooOooo

  ReplyDelete
 21. படங்களும் பதிவும் அற்புதம்!

  ReplyDelete
 22. பா விநாயகர், கற்பக விநாயகர் என்று விநாயக சதுர்த்திக்கு முன்பிருந்தே பதிவுகள் போட்டு, முத்தாய்ப்பாக இன்று பல உருவங்களில் விநாயகரைப் போட்டு (கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், மௌசை வைத்துக் கொண்டு தன் மௌசை ஆட்டிவைக்கும் பிள்ளையார், முத்து அலங்காரப் பிள்ளையார்) மனதை நிறைக்கச் செய்துவிட்டீர்கள்.
  வாழ்த்துக்கள்!
  'கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்
  குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே..'

  ReplyDelete
 23. அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 24. தொந்திக் கணபதியை துதித்து நிற்போம். அனைவருக்கும் வெற்றி கிடைக்கட்டும்.
  இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்... இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... அழகான படங்கள்...

  மகிழ்ச்சி பொங்கட்டும்...

  ReplyDelete