Monday, September 16, 2013

உற்சாகத் திருவிழா..!
ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று யானைகள் ஊர்வலம் ஆகும். யானைகள் தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றன.

ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் பண்டிகையாக  விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்து மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார்  பக்த பிரகலாதரின் பேரனான மன்னன்  மகாபலி..

இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்த மஹாவிஷ்ணு  குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார்.

தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார்.

விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் அசுரகுரு சுக்கிராச் சாரியார்.

வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

மகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார் மகாபலி.

மகாபலியிடம்  வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.

குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார்.

ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார்.

 ‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.

கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார்.

மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. ‘நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆண்டுதோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்’ என வேண்டியவாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு.

தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.

அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.

மக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை.

இதனால் தெருக்கள்தோறும் மக்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.

கலை, கலாசார நிகழ்ச்சிகள், படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள் நடத்தி உற்சாகம் அடைகிறார்கள்.

மகாபலிபோல வேடமிட்டு வருபவர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும்

திருவோணத் திருநாளில் வீடுகளை அலங்கரித்து மலர்க்கோலமிட்டு மாவலியை வரவேற்பார்கள்.

ஓணம் சத்யா என்று சிறப்பான உணவு வகைகளைப் பரிமாறி சுவைப்பார்கள். ஆனைச் சண்டைகளும் பந்தயங்களும் கேரளத்தில் அமளிப்படும். கேரளத்தில் எந்தப் பண்டிகையை விடவும் ஓணம் பண்டிகை சிறப்பானது.

25 comments:

 1. GOOD MORNING !

  உற்சாகத்திருவிழா நல்வாழ்த்துகள்.

  VERY VERY HAPPY ONAM !

  ReplyDelete
 2. அடுத்துள்ள இரட்டையர்கள் .......... படம் !

  எங்கேயோ .... எப்போதோ .... பார்த்த ஞாபகம். ;)))))

  ஏனோ எனக்கு

  அட்டகாச
  அலம்பல்
  அலட்டல்
  அல்டாப்
  அதிரடி
  அதிரஸ
  அதிரா

  ஞாபகமும் வருகிறது!

  http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

  >>>>>

  ReplyDelete
 3. நேந்திரங்காய் சிப்ஸ் + முந்திரி மிதக்கும் பால்பாயஸம் மட்டும் கொஞ்சூண்டு எடுத்து டேஸ்ட் செய்துகொண்டேன்.

  இரண்டுமே சூப்பரோ சூப்பர்.

  அதனால் நானே உரிமையுடன் அவை அத்தனையையும் ஃபினிஷ் செய்து விட்டேன். நன்றி. ;)

  >>>>>

  ReplyDelete
 4. கீழிருந்து ஆறாவது படம் அசத்தல். அழகோ அழகான அருமையான பூக்கோலம். சுற்றியுள்ள தட்டுக்களில் உள்ள உதிரிப்புஷ்பங்கள் அதைவிட அருமையாக காசுகள் போல உள்ளன.

  நடுவில் எரியும் மலையாள விளக்கும் அதன் பிரகாசமும் அட்டகாசம் போங்கோ! மகிழ்ச்சிப்பகிர்வு தான்.


  >>>>>

  ReplyDelete
 5. கீழிருந்து ஏழாவது படமான அன்னபக்ஷியுடன் ஓர் பெண் - பூக்கோலம் - தானே தன் கையால் வரைந்ததாக நம் கைரசி விஜி அவர்கள் தன் பதிவினில் சொல்லியிருந்தார்கள்.

  வரைந்த + வெளியிட்டுள்ள, நெருங்கிய தோழிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்புச் சகோதரி விஜிக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 6. அலங்கார யானைகள், கேரள மங்கைகள் நடனம், மஹாபலிசக்ரவர்த்தியின் கதைகள், வாமனாவதாரச் சிறப்புகள், குஞ்சுக்காலால் குட்டை வாமனர் உலகையே அளந்த சுவையான கதைகள் எல்லாமே வழக்கம் போல அருமை.

  >>>>>

  ReplyDelete
 7. கீழிருந்து எட்டாவது வரிசையில் முந்திரி மிதக்கும் பால் பாயஸ உருளிப்படம் மட்டும் நன்கு தெரிகிறது.

  அதற்கு இடதுபுறத்தில் உள்ள ஒரே ஒரு படம் மட்டும் திறக்காமல் உள்ளதுங்கோ !

  >>>>>

  ReplyDelete

 8. ’உற்சாகம் அளிக்கும் திருவிழா’வுக்கு அழைத்துச்சென்று அனைத்தையும் அழகாகச் சுற்றிக்காண்பித்து, கண்ணுக்கும், கருத்துக்கும், விருந்து படைத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்பான இனிய ஓணம் நல்வாழ்த்துகள்.

  பரவஸப்படுத்தும் பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  -oOo-

  ReplyDelete
 9. மனதிற்கு மிகவும் உற்சாகம் அளித்தது... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. பல தகவல்கள் உங்களினால் அறிந்துகொண்டேன்.
  படங்கள் பார்கப் பரவசமாக இருக்கின்றன. அருமை!

  உங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. ஓணம் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. பால் பாயஸ உருளிக்கு அருகில் கேஸரியோ? அழகாக ஸ்பூன் போட்டு கண்ணாடிக்கப்பில் கொடுத்துள்ளீர்கள்.

  இப்போது தான் எனக்குச் சுடச்சுடச் சூடாகக் கிடைத்தது. ருசியோ ருசியாக உள்ளது. மிக்க நன்றி.

  [கொஞ்சம் முந்திரி திராக்ஷை மேலாகத் தூவி இருக்கலாமே, அதனால் பரவாயில்லை. பார்த்தாலே பசி தீரும் விதமாக உள்ளது. மகிழ்ச்சி ;) ]

  ReplyDelete
 13. ?????

  நான் இன்று கொடுத்தது 9 + 1 = 10 கமெண்ட்ஸ்.

  ஆனால் அதிகாலை கொடுத்த 2வது கமெண்ட் ஒரே ஒரு வாக்கியம் மட்டும், ஏனோ காணாமல் போச்சு. சாதாரணமானதோர் கமெண்ட் தான். அதனால் பரவாயில்லை. எங்காவது ஸ்பாமில் இருக்கும். போனால் போகட்டும். தகவலுக்காக மட்டுமே.

  ?????

  ReplyDelete
 14. ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 15. ஒணம் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. பால் பாயசமும் அருகில்
  கண்கவரும் பாதாம் அல்வாவும்
  சுவைத்து கலகலப்பாக ஓணத்திருவிழாவை
  கொண்டாடவைத்த அருமையான பகிர்வுகள்..

  ஓண நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 17. ஆன்மீகத் தென்றல் தவழும் கேரளத்தின் கண்கொள்ளாக் காட்சிகள் - கண் முன்னே!.. நிறைவான பதிவு!..

  ReplyDelete
 18. திருஓணம் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. அன்பு இராஜராஜேஸ்வரி
  மனம் மகிழும் மூர்த்திகளால் பதிவை நிரப்பி இருக்கிறீர்கள். வாமன,த்ரிவிக்ரம,மாவலி ஓணம் பண்டிகையைப் பதிவிலியே நான் கொண்டாடிவிட்டேன். மிக மிக நன்றி. தங்களது இனிய உழைப்பு
  எங்களை நாளை மணங்கொண்டதாக ஆக்கிவிட்டது.
  இறைவன் உங்களுக்கு எப்பொழுதும் பூரண அருள் புரியட்டும்.

  ReplyDelete
 20. ஓணம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திய தங்கள் பகிர்வு. சிறப்புங்க.

  ReplyDelete
 21. நீங்கள் இந்தப் பதிவிற்கு போட்டிருக்கும் புகைப்படங்கள் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் உணர்வை கொடுக்கிறது.
  விருந்து அருமை!

  ReplyDelete
 22. ஈங்கோய் மலை அசல் மரகதலிங்கம் களவு போய்விட்டது. இப்போது இருப்பது நகல்தான்.

  மலை அடிவாரத்தில் உண்டு உறைவிடப் பள்ளிக்கூடம் உள்ளது.அத‌னை பெண்துறவியர் அமைப்பு நடத்துகின்றது. ஸ்ரீ லலிதாம்பிகை வழிபடுதெய்வம்.
  பலரும் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றை இங்கே நடத்திக் கொள்கின்றனர். சன்யாசினிகளே ஹோமம் செய்து நடத்திக் கொடுக்கின்றனர். சுவாமி சிவானந்தரிடம் தீட்சை பெற்ற மூத்த சன்னியாசினி உள்ளார்.

  ReplyDelete
 23. *****பால் பாயஸ உருளிக்கு அருகில் கேஸரியோ? அழகாக ஸ்பூன் போட்டு கண்ணாடிக்கப்பில் கொடுத்துள்ளீர்கள்.

  இப்போது தான் எனக்குச் சுடச்சுடச் சூடாகக் கிடைத்தது. ருசியோ ருசியாக உள்ளது. மிக்க நன்றி.

  [கொஞ்சம் முந்திரி திராக்ஷை மேலாகத் தூவி இருக்கலாமே, அதனால் பரவாயில்லை. பார்த்தாலே பசி தீரும் விதமாக உள்ளது. மகிழ்ச்சி ;) ]

  -VGK *****

  ’பால்பாயஸமும் அருகில் கண்கவரும் பாதாம் அல்வாவும்’ என்று ஒருவரை எழுத வைத்து, கேஸரியோ என்ற என் சந்தேகத்தைத் தீர்த்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  ஏன் இதை நேரிடையாக எனக்குச் சொல்லக்கூடாதோ?

  பாதாம் ஹல்வா கேட்டு, நேரே புறப்பட்டு வந்துடுவேன் என்ற பயமோ? ;)

  எனினும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். பால்பாயஸம் + பாதாம் ஹல்வா இரண்டுமே தங்களின் கரத்தால் வாங்கிச் சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. மிக்க நன்றி.

  ReplyDelete
 24. ஓணம் பற்றிய பல அரிய தகவல்களை அற்புதமான படங்களுடன் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete