Wednesday, December 14, 2011

சகலகலா வல்லி "தட்சிண மூகாம்பிகா'
படிக நிறமும், பவளச்செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையும்-துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும் சொல் லாதோ கவி?


என்று பாரதியார் போற்றுவார் கலைகளுக்கதிபதியான கல்விக்கரசி கலைமகளை ..

அகலிடைச் சுடர் போல அறிவினைத் தூண்டும்,
சகல கலா வல்லி சரஸ்வதி .தேவியை 
ஆதிசங்கரர் கர்நாடக மாநிலத்திலுள்ள புகழ் பெற்ற புனிதத்தலமான கொல்லூர் சென்று தவம் செய்தபோது, மூகாம்பிகா பிரத்யட்சமானாள். 


அவர் பார்த்த தேவியின் உருவை அவள் கட்டளைப்படி கொல்லூரில் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரர் வழிவந்த பல மலையாளக் குடும்பங்களுக்கு இன்றும் அவளே குலதெய்வ மாக விளங்குகிறாள்.
[Image1]
நம் நாட்டு விடுதலைக்கு முன்னிருந்த சமஸ் தானங்களில் ஒன்றான திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வட எல்லையிலிருந்த பரவூரை ஆட்சி செய்த தம்பிரான்களுக்கும் அவளே குல தெய்வமானாள். அவர்கள் பல இன்னல்களுக் கிடையேயும் அடிக்கடி கொல்லூர் சென்று மூகாம்பிகையைத் தரிசித்தனர்.

ஒருசமயம் அக்குடும்பத்தைச் சேர்ந்த வயோதிகர் ஒருவர் உடல் நலமின்றித் துன்புற்றபோது, அவர் அன்னையின் சந்நிதானத்தில் வீழ்ந்து வணங்கி, "அன்னையே! ஆதிபராசக்தியே! உன்னைக் காண என்னால் வர முடியாதபடி எனது உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டது. 
எங்கள் பரவூரி லேயே உன்னைத் தொழ வரமருள வேண்டும்' 
என்று கண்ணீர் வடித்தார்.

அன்னையின் கருணைதான் என்னே! அந்த முதியவர் பரவூருக்குத் திரும்பும்போது கூடவே அன்னையும் அவருடன் வருவதை உணர்ந்தார். தற்போது அம்பாள் குடிகொண்டிருக்கும் பரவூரின் புனித ஸ்தானத்தை அடைந்தபோது அவர் திரும்பிப் பார்த்தார். 


உடன் வந்த அம்பாள் மறைந்துவிட்டிருந்தாள். அன்னையின் விருப்பத்தை அறிந்த தம்பிரானும் அங்கு அழகிய கோவிலைக் கட்டினார். 
அவ்வாறு அமைந்ததே பரவூர் மூகாம்பிகை ஆலயம்.
பரவூரில் தேவியை தரிசிக்கும் பரவச வாய்ப்பு அமைந்தது..

கேரள மாநிலத்தில், ஆலுவா என்னுமிடத்திலி ருந்து வடகிழக்கில் சுமார் பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இயற்கை வளம் நிறைந்த சிற்றூர்தான் பரவூர். 


கொல்லூர் தென்னிந்தியாவில் இருந்தாலும், அதற்கும் தெற்கே உள்ள பரவூரில் கோவில் கொண்டிருக்கும் மூகாம்பிகாவை "தட்சிண மூகாம்பிகா' என்று 
சிறப் புடன் அழைக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் சரஸ்வதியை முதன்மை வழிபடு தெய்வமாகக் கொண்டுள்ள கோவில்  "தட்சிண மூகாம்பிகா' ஒன்றுதான்.

"வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்' என்று பாரதி பாடியதற்கு ஏற்ப, பரவூரில் கலைமகள் நான்கு கரங்களுடன் தாமரை மலர்க் குளத்தின் நடுவில் கோவில் கொண்டுள்ளாள். "
[Gal1]
பத்ம தீர்த்தம்' என்ற பெருமையுடன் அழைக்கப்பெறும் குளத்திலிருந்து மேலே எழுப்பப்பட்ட கருவறைக்குச் செல்ல ஐந்து அடி அகலமுள்ள கான்கிரீட் பாலமும், அதன் மேல் கூரையும் அமைக்கப்பட் டுள்ளது. 
அதை "நட பந்தல்' என்று சொல்வர். 
துள்ளியோடும் மீன்கள் நிறைந்த அந்தத் தடாகத்தின் எழில் அனைவரையும் ஈர்க்கும்.

 •  தாமரையின் மீது சரஸ்வதியை அமர்த்தும் நோக்கத்தில், ஒரு சிறிய தாமரை குளத்தை அமைத்து, குளத்தின் நடுவில் சரஸ்வதி அமர்ந்துள்ள கர்ப்பக்கிரகம் இருப்பது போல் வடிவமைத்துள்ளனர். 
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் நிர்வாகத் திற்கு உட்பட்டது  
"தட்சிண மூகாம்பிகா'கோவில். 
இதன் நுழைவாயில் கேரள கட்டிட பாணியில் கம்பீர மாக உள்ளது. 
கோவிலினுள் நுழைந்தவுடன், உச்சியில் அன்னப்பட்சி வடிவம் கொண்ட கொடிமரத்தைக் காணலாம்.

கோவிலின் உட்பிராகாரத்தில் விநாயகருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது. வெளிப்பிராகாரத்தின் நான்கு மூலைகளிலும் ஆறுமுகன், மகாவிஷ்ணு, அனுமன், வீரபத்திரர் ஆகிய கடவுளர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. மகாவிஷ்ணுவின் சந்நிதிக்கு அருகில் உருவமற்ற "யஷி'யும் தனிச்சந்நிதியில் காணப்படுகிறாள்.
[Gal1]
கலைமகள் கோவிலான பரவூர் மூகாம்பிகா ஆலயத்தில் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடுவதில் வியப்பில்லைதான்


விஜய தசமி உள்ளிட்ட பத்து நாட்களும் பல கலைஞர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி மண்டபத்தில் நடைபெறுகின்றன. 


 பரவூர் மூகாம்பிகா ஆலயத்தில்  மிகச் சிறப்பாக நிறைவேற்றப் படும் சடங்கு வித்யாரம்பம்.


தங்கள் குழந்தைகளுக்குக் கலைமகள் சந்நிதானத்திலே எழுத்தறிவிக்கும் புனிதச் சடங்கை யார்தான் விரும்பமாட்டார்கள்? 


விஜய தசமியன்று, சாதி, சமய வேறுபாடின்றி அதிகாலையிலேயே பெற்றோர்கள் தங்கள் சிறார்களுடன் வரிசையில் நிற்கும் காட்சியைக் காணும்போது, கேரள மாநிலம் ஏன் கல்வியில் மற்ற மாநிலங்களைவிட மிஞ்சியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

கோவிலிலுள்ள நம்பூதிரிகள், குழந்தைகளின் நாக்கில் ஹரி என்றும் ஸ்ரீ என்றும் தங்க மோதிரத்தினால் எழுதும்போது வந்திருக்கும் பக்தர்கள் பரவச நிலையை எய்துகின்றனர்.


தை மாதத்தில் நடைபெறும் ஆண்டு விழாவும் பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் திருமஞ்சனமாடும் உத்திரட்டாதி நட்சத்திர "ஆராட்டு' வைபவத்தோடு அப்பெருவிழா நிறைவு பெறுகிறது.

ஸ்ரீவித்யா மந்திரம், சரஸ்வதி பூஜை, பகவதி சேவை ஆகியவற்றுக்குக் காணிக்கை அளிப்ப தோடு, அக்கோவிலுக்கே உரித்தான மூகாம்பிகை கஷாயத்திற்கும் வேண்டுதலாகக் காணிக்கை செலுத்துகின்றனர். கற்றாழை போன்ற பல நாட்டு மூலிகைகளால் தயாரிக்கப்படும் "மூகாம்பிகா கஷாயம்' தீராத நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றது!தீராத நோய் உள்ளவர்களும், செயல்களில் தடங்கல் உள்ளவர்களும் கோயிலிலேயே தரப்படும் அர்ச்சனை பொருட்களை வாங்கி, பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

பிரசாத தட்டை, கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விட வேண்டும். இப்படி செய்தால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.

இங்கு தினமும் இரவில் கலைவாணிக்கு "மூலிகை கஷாயம்' நைவேத்யம் செய்யப்படுகிறது. மறுநாள் காலை இந்த கஷாயத்தை மாணவர்கள் வாங்கி அருந்தினால் ஞாபகசக்தி பெருகும் என்பதும், மந்தபுத்தி விலகி கல்வியறிவு சிறக்கும் என்பதும் ஐதீகம்.

வெளியூர் பக்தர்களுக்கு கஷாயத்தை பாட்டிலில் தருகிறார்கள். இசையில் தேர்ச்சி பெற விரும்புபவர்களும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

படிமம்:Enten backwaters.JPG

Aayiravilli Temple, Koonayil, Paravur


Kollur Mookambika Devi Temple in Karnataka

25 comments:

 1. சகல கலாவல்லி தந்துள்ள பதிவைப் பொறுமையாக பார்த்து படித்து விட்டு மீண்டும் வருவேன். vgk

  ReplyDelete
 2. படங்களும் பதிவும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 3. பரவூர் மூகம்பிகை பற்றிய பதிவு,அழகிய படங்களுடன் சிறப்பாக இருக்கு மேடம்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 4. முதல் படத்தில் முழு நிலவின் பிரகாஸத்துடன் நக்ஷத்திரக்கூட்டங்கள் ஜொலிக்க, கையில் வீணையுடன், வெண்பட்டு வஸ்திரம் அணிந்து, அன்ன பக்ஷியுடன் ஆற்றில் மிதந்த வண்ணம் வெந்தாமரையில் வீற்று, கையில் ஓலைச்சுவடியுடன், வெகு அழகாகக் காட்சி தருவது ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. ஆதி சங்கரருக்கு காட்சியளித்த கொல்லூர் மூகாம்பிகை அவள் கட்டளைப்படி அவரே பிரதிஷ்டை செய்தது பற்றிய செய்திகள் அருமை.

  பரவஸம் ஏற்படுத்தும் பரவூர் மூகாம்பிகை ஆலயம் தோன்றிய செய்திகள், அழகு.

  தக்ஷிண மூகாம்பிகா படத்தில் முகத்தில் நல்ல ஒரு தெய்வ சாந்நித்யம் தெரிகிறது. கைகளில் சங்கு சக்கரம், அபய ஹஸ்தங்கள், மார்பினில் பச்சை மரகதக்கல்,சிவப்புப்புடவையில், பச்சைத்தலைப்பு, வயிற்றுப்பகுதியில் சிம்ஹம், கீழே கருணை வடிவுடன் அம்பாள் ஆபரணங்கள் அணிந்து, திருவாசி மற்றும் திரு விளக்குகளுடன், பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
 6. ’பத்ம தீர்த்தம்’, ’நட பந்தல்’ மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழோ! கேட்கவே இனிமையாக உள்ளது!

  அன்னபக்ஷி வடிவம் கொண்ட கொடிமரம்,உருவமற்ற யஷி

  கலைமகளுக்கான கோயில் “பரவூர் மூகாம்பிகா”

  விஜய தஸமி உள்பட 10 நாட்கள் நவராத்திரி வழிபாடுகள், மிகச்சிறப்பான வித்யாரம்பம் ! தங்க மோதிரத்தால் குழந்தயின் நாக்கில் ஸ்ரீ+ஹரி என்று எழுதுவது, போன்ற அனைத்துத்தகவல்களும் மிகவும் பரவஸமேற்படுத்துபவைகள் தான்.

  எனக்கு ஒரு சந்தேகம். மிகச்சிறப்புகளும், தனித்தன்மையும், தெய்வாம்சமும், அறிவும், ஆற்றலும்,அடக்கமும், ஆர்வமும் ஒருங்கே அமைந்துள்ள அந்தக் கலைவாணியே அவதாரம் எடுத்துள்ளது போல விளங்கும், ஆன்மீகப்பதிவரான நீங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது எந்தக் கோயிலுக்குக் கூட்டிப்போய், இந்த வித்யாரம்பம் என்ற அழகான சடங்கை தங்கள் பெற்றோர்கள் செய்துவிட்டு வந்தார்கள்?

  நாவினில் எந்த உலோகங்களால் எழுதினார்கள்? தங்கம், வைரம், வைடூர்யம் போன்ற நவரத்தினத்தினால் தானே எழுதியிருப்பார்கள்! ஸ்ரீ+ஹரி யைத்தவிர என்னவெல்லாம் எழுதி வந்தார்கள்?

  இந்த தேவரகசியத்தை எங்களுக்கும் சொன்னால், எங்கள் சிற்றறிவைப் சற்றே பெருக்கிக்கொள்ளவும், எங்களின் வாரிசுகளின் சிற்றறிவினை, தங்களைப்போலவே ஜொலிக்கச் செய்யும் வாய்ப்பு அமையலாம் தானே!
  ;)))))

  ReplyDelete
 7. மூகாம்பிகைக் கஷாயம், உடல்நலத்தைப்பேணும் கஷாயம், ஞாபக சக்தி பெருக மூலிகைக்கஷாய இரவு அபிஷேகம், மறுநாள் மாணவர்களுக்கு விநியோகம் போன்ற வெகு அருமையான தகவல்.

  ஞாபக மறதி இல்லாமல் அனைவரும் போய் வாங்கி சாப்பிட வேண்டும்! அது தான் முக்கியம். ;))))

  அடுத்த படத்தில் இயற்கைக்காட்சிகள் அருமை.

  முரட்டு யானையை அலங்கரித்து அதன் மேல் ஸ்வாமி ஊர்வலம், அடடா! ரொம்பவும் அழகோ அழகு!;))
  பக்கவாட்டில் ஓர் குட்டியானையும் புறப்படுகிறது. காணத்தவறாதீர்கள்!

  சீருடை அணிந்தவர்களின் குச்சிச் சண்டையோ! கோலாட்டமோ!
  அதுவும் அழகே!!

  கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகா தேவி கோயிலின் வெளிப்புறத் தோற்றமும், பக்தர்களின் கூட்டமும், அங்கப்பிரதக்ஷணம் செய்யும் ஒருவரும், படத்தில் வெகு அழகாகவே காட்டியுள்ளீர்கள்.

  கடைசிபட இயற்கைக்காட்சி அருமை.

  எல்லாமே வழக்கம் போல் வெகு அழகாக, வெகு ஸ்ரத்தையாக, அரிய படங்களுடனும், விளக்கங்களுடனும் கொடுத்து அசத்தி விட்டீர்காள்.

  இந்த 2011 ஆம் ஆண்டின் வெற்றிகரமான 363 ஆவது பதிவு இது.
  வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 8. பரவூர் மூகம்பிகை பற்றிய தெய்வீக பதிவு.
  படங்கள் மனதில் கண்களை எடுத்த பின்னும் நிழலாடிக்
  கொண்டிருக்கின்றன சகோதரி.

  ReplyDelete
 9. படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  சகல கலா வல்லியின் பரி பூரண ஆசி தங்களுக்கு
  இருக்கிறது இல்லையெனில் பத்வுலகில் இத்தனை
  அசுர சாதனை செய்ய சாத்தியமே இல்லை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முதல் படத்தில் முழு நிலவின் பிரகாஸத்துடன் நக்ஷத்திரக்கூட்டங்கள் ஜொலிக்க, கையில் வீணையுடன், வெண்பட்டு வஸ்திரம் அணிந்து, அன்ன பக்ஷியுடன் ஆற்றில் மிதந்த வண்ணம் வெந்தாமரையில் வீற்று, கையில் ஓலைச்சுவடியுடன், வெகு அழகாகக் காட்சி தருவது ரொம்ப நல்லா இருக்கு.

  வெகு அழகாக அத்தனை கருத்துரைகளையும்
  பார்த்துப் பார்த்து
  பரவசத்துடன் பதித்து
  பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 11. Lakshmi said...
  படங்களும் பதிவும் நல்லா இருக்கு.

  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா...

  ReplyDelete
 12. RAMVI said...
  பரவூர் மூகம்பிகை பற்றிய பதிவு,அழகிய படங்களுடன் சிறப்பாக இருக்கு மேடம்.நன்றி பகிர்வுக்கு./

  சிறப்பான கருத்துரைக்கு
  மனம் நிறைந்த நன்றிகள்

  ReplyDelete
 13. மகேந்திரன் said...
  பரவூர் மூகம்பிகை பற்றிய தெய்வீக பதிவு.
  படங்கள் மனதில் கண்களை எடுத்த பின்னும் நிழலாடிக்
  கொண்டிருக்கின்றன சகோதரி.///

  தெய்வீக கருத்துரைக்கு
  மனம் நிறைந்த நன்றிகள்

  ReplyDelete
 14. Ramani said...
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  சகல கலா வல்லியின் பரி பூரண ஆசி தங்களுக்கு
  இருக்கிறது இல்லையெனில் பத்வுலகில் இத்தனை
  அசுர சாதனை செய்ய சாத்தியமே இல்லை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்////

  மனம் கவர்ந்த கருத்துரைக்கு
  மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 15. GOVINDARAJ,MADURAI. said...
  நல்ல பகிர்வுகள் நண்பரே வாழ்த்துக்கள்/

  வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் //

  ReplyDelete
 16. மூகாம்பிகாவும் சரஸ்வதியும் ஒரே கடவுளா! இதுவரை அறியாத விவரம்.

  ReplyDelete
 17. அசத்தலான படங்களுடன் அருமையான பகிர்வு சகோ..

  ReplyDelete
 18. பதிவும் படங்களும் ரொம்பவும் அருமை..

  ReplyDelete
 19. கொல்லூரில் அம்மன் முன் என்னை மறந்து கண்களில் நீர் வழிய நின்றதுண்டு. பரவூர் பற்றி இப்போ துதான் அறிகிறேன்.நன்றி.வாய்ப்பு எப்போது கிடைக்குமோ?

  ReplyDelete
 20. தெரியாத தகவ்ல்கள். தெரிந்து கொண்டேன் நன்றி

  ReplyDelete
 21. படங்களுடன் பகிர்வு அசத்தல்.

  ReplyDelete
 22. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 23. ;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!

  ReplyDelete
 24. 1608+6+1=1615 ;)

  எனக்கான தங்களின் பதில் ஒன்று தான் என்றாகினும் நன்று. மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete