Saturday, December 10, 2011

ஷண்முக கணபதிDiwali Virtual Puja!Happy Diwali!

ganesh ji


கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
 

கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்
பிள்ளையாருக்கும் ஆறுமுகம்
அரசமரத்தின் அடியில் குளக்கரையிலோ, ஆற்றங்கரையிலோ விநாயகர் அமர்ந்திருப்பார். ஒருமுகம் முதல் ஆறுமுகங்கள் வரை மாறுபட்ட வடிவத்தில் கோயில்களில் அருள்பாலிக்கிறார். 
எல்லாக் கோயில்களிலும் விநாயகருக்கு ஆனைமுகத்தோடு இருக்க, திருச்செங்காட்டங்குடியில் மட்டும் நரமுக கணபதி மனிதமுகத்தோடு வீற்றிருக்கிறார். 
மகாராஷ்டிராவில் துவிமுக கணபதி இருமுகங்களோடு இருக்கிறார். பச்சை வண்ணத்துடன் இருக்கும் இவர் தந்தம், பாசம், அங்குசம், ரத்தினபாத்திரம் ஏந்தியிருப்பார். 
திரிமுக கணபதி சிவந்த நிறம் கொண்டவர். பாசம், அங்குசம், அமுதகலசம், அட்சமாலை ஏந்தியிருப்பார். பொற்றாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இவர் மூன்று முகங்களைப் பெற்றிருப்பார். ஜப்பான் மக்கள் இவரை வழிபடுகின்றனர். 
நான்கு முகங்களோடு இருக்கும் விநாயகரே சதுர்முக கணபதி. இவரை சீனர்கள் வழிபடுகின்றனர்.
ஐந்து முகங்களைக் கொண்ட விநாயகரை ஹேரம்ப கணபதி என்று அழைப்பர். மத்தியபிரதேசத்தில் நர்மதா நதிக்கரையோரம் அமைந் துள்ள அமலேஸ்வரம் என்னும் ஊரில் கோயில் உள்ளது. 
திருவானைக்காவலிலும்,புதுக் கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலிலும் பஞ்சமுகவிநாயகருக்கு சன்னதி உள்ளது. நேபாளத்தில் பஞ்சமுக கணபதி வழிபாடு அதிகம். 

ஆறுமுகங்களைக் கொண்ட பிள்ளையாருக்கு சண்முக கணபதி என்று பெயர். இவருக்கு திருக்கழுக்குன்றத்தில் கோயில் உள்ளது.

கஷ்டம் கஷ்டம் என்கிறீர்களா? கடலில் விழ தயாராகுங்க!
விதுரர்..மகாபாரத திருதராஷ்டிரனின் தம்பியான இவர் மிகவும் நல்லவர். "மகாத்மா' என புகழப்படுபவர். யாருடைய மனமும் புண்படாமல் பேசும் பொறுமைசாலி. 
இப்படிப்பட்ட பொறுமைசாலிக்கு இரண்டு பேர் மீது மட்டும் கோபம் வருகிறது. அவர்கள் கழுத்தில் பெரிய கல்லைக் கட்டி கடலில் தள்ள வேண்டும் என்கிறார். அவர்கள் யார் தெரியுமா? 
தனது "விதுரநீதி' என்ற நூலிலே அதுபற்றி சொல்கிறார்.

பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் இருந்தால் அவர்களையும், வறுமையான நிலை வரும் போது, அந்த வறுமையையே பெரிதுபடுத்திக் கொண்டு "கஷ்டம்... கஷ்டம்' என்று புலம்புபவர்களையும் குறிப்பிடுகிறார். 

இவர்களில், இரண்டாம் பிரிவினர் தங்களுக்கு கஷ்டம் வரும் நேரத்தில் கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாமல், அதைத் தீர்க்க வேண்டுமென இறைவனிடம் முறையிட்டு அவன் பெயரை ஜபித்துவிட்டு, தங்கள் பணியைத் தொடரச்சொல்கிறார். 
Ganesh Wallpapers, Lakshmi wallpapersGanesh Wallpapers, Lakshmi wallpapers
இனியும் கஷ்டம், கஷ்டம் என புலம்பாமல் பிரார்த்திக்கும் 
பக்குவத்தைப் பெறலாம்...
கண்களால் தண்ணருள் பொழியும் இலை விநாயகர்

பூந்தி விநாயகர், இனிப்பு பூந்தியினால் செய்யப்பட்ட
 15 அடி விநாயகர் சென்னை தியாகராய நகர்.
 • விநாயகர் சதுர்த்திக்காக மும்பையில் முழுக்க,முழுக்க சாக்லேட் மற்றும் பிஸ்கட்டுகளால் தயாரிக்கப்பட்ட இந்த விநாயகரை குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்

நர்த்தன விநாயகர், சேலம்.
,JAI GANESHA!!!

PAPERCUP GANESHA, HYDERABAD

கொட்டும் மழையில் விநாயகருக்குபூஜை 


Navratri Thali

Lord Ganesh Ji
coconut ganesh ji
44 comments:

 1. ஆஹா ! ஷண்முக கணபதியா? தலைப்பே வித்யாசமாக உள்ளதே!
  தரிஸித்து விட்டு வருகிறேன். vgk

  ReplyDelete
 2. அடடா, சிவபூஜை செய்யும் தொந்திப்பிள்ளையார், அதுவும் டபுள் ஆக்டில். அணைந்து அணைந்து எரிவது என்னை அப்படியே அணைத்துக்கொள்வதாக உள்ளதே!

  ReplyDelete
 3. ஆஹா அடுத்து வரும் டபுள் ஆக்ட் பிள்ளையார், கண்ணடிக்கிறார், கையை அசைத்து டாடா சொல்கிறார், எனக்குப் பிடித்தமான தாமரை மலர்கிறது.

  மேலே போ சீக்கிரம் படி சீக்கிரம் அவங்களுக்கு பதில் எழுது என்பது போலல்லவா உள்ளது. ஓ.கே. பிள்ளையாரே! இதோ போகிறேன்!

  ReplyDelete
 4. சண்முக கணபதி -தம்பி பாசத்தால் அப்படி பெயரா? அத்தனை கணபதி படங்களும் அருமை.பிரார்த்தனை நல்ல விஷயம்.

  ReplyDelete
 5. எனது இஷ்ட தெய்வம் கணபதியை பற்றிய உங்களின் பதிவும் , படங்களும் அருமை ... மிக்க நன்றி ...!

  ReplyDelete
 6. ஜம்பூ பலம் என்றால் நாவற்பழம் என்று தெரியும். கபித்த என்றால் விளாம்பழமா?

  ’...... போனபோது விளாம்பழம் கிடைத்தது போல’ என்று ஒரு பழமொழி உண்டு. அது போல இந்தப் புதுத்தகவல் எனக்குக் கிடைத்துள்ளது.

  தொந்திப்பிள்ளையாரை எனக்குப் பிடிக்கும் ஆனால் அவருக்குப் பிடித்தமான இந்த விளாம்பழமும், அவரின் வாகனமான மூஞ்சூறும் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை.

  ReplyDelete
 7. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  பிள்ளையாருக்கு இத்தனை வடிவங்களா ? இத்தனை முகங்களா ? இத்தனை படங்களா ? எங்கள் வீட்டில் எங்கள் பேத்தி வந்த போது வீட்டில் உள்ள பிள்ளையார் சிலைகளை எண்ணி - யூ ஹாவ் செவெண்டி சிக்ஸ் பிள்ளயார்ஸ் எனச் சொன்னது நினைவிற்கு வந்தது. அட்டகாசமான பதிவு - அழகான விளக்கங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. என்னது! நரமுக கணபதியா?
  அடடா புதுப்புதுத்தகவல்களாகக் கொடுத்து அசத்துகிறீர்களே! ;))))

  துவிமுகம், திரிமுகம், சதுர்முகம், ஹேரம்பம் என ஏகப்பட்ட முகங்களுடன் கணபதிகளை அள்ளித்தந்து விட்டீர்களே இப்படி!! ;)))))

  ஆஹா அப்படியே போனால் எங்கள் திருவானைக்கோயில் பஞ்சமுக கணபதியின் தனிச்சந்நதிக்கே கூட்டிப்போய் விட்டீர்களே! ;))))

  அதுமட்டுமா இப்போது தலைப்புக்கு வந்துவிட்டீர்களே!! சண்முக கணபதி என்று. திருக்கழுங்குன்றத்தில் அந்த முனிவர்களான இரு கழுகார் வந்து பொங்கல் சாப்பிட்ட்தை என் அம்மாவுடன் சென்று தரிஸித்தேன். ஆனால் இந்த சண்முக கணபதியைப் பார்க்காமல் வந்து விட்டேனே.

  அதனால் என்ன, நீங்கள் தான் அருமையாகக் காட்டிவிட்டீர்களே.
  திவ்ய தரிஸனம் எனக்கு, உங்களால்.

  ReplyDelete
 9. சீனா ஐயா அவர்கள் இன்று உங்களிடமிருந்து என்னைப் பிரித்து விட்டார்களே; இது மிகவும் அநியாயம் அல்லவோ! ;((((

  ReplyDelete
 10. முத்து முத்தாக மங்கல வளைகள் அணிந்த அந்த மகளிர் ஏற்றிடும் குத்து விளக்கு வெகு அருமை. அழகாகச் சுடர்விடுகிறதே!

  இன்றும் பொரி உருண்டைகள் + பருப்புத்தேங்காய்களைக் காட்டி, பசி வேளையில் கிளறி விட்டு விட்டீர்களே.
  கிரஹண பிடித்த ஸ்நானம், தர்ப்பணம், விட்ட ஸ்நானம் செய்து விட்டு இன்னும் சாப்பிடக்கூட இல்லை. அதற்குள் இந்தப்பதிவைப்போட்டு, நெல்பொரி உருண்டைகளைக்காட்டி, போங்க!
  நான் போய் சாப்பிட்டு விட்டு தெம்பாக வந்து மற்ற கருத்துக்களைக் கூறுகிறேன். பசியைக் கிளறி விட்டு விட்டீர்கள். இன்று காலை 10 மணிக்கு நான் சாப்பிட்டது தான்.

  ReplyDelete
 11. வை.கோபாலகிருஷ்ணன் said...
  சீனா ஐயா அவர்கள் இன்று உங்களிடமிருந்து என்னைப் பிரித்து விட்டார்களே; இது மிகவும் அநியாயம் அல்லவோ! ;((((//

  சீனா ஐயா அவர்களை தங்களின் அருமையான கருத்துரைகளால்
  பதிவுக்கு அழைத்து வந்து பதிவினை ஒளிரச்செய்து பெருமைப்படுத்திய தங்களின் பெருந்தன்மைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 12. shanmugavel said...
  சண்முக கணபதி -தம்பி பாசத்தால் அப்படி பெயரா? அத்தனை கணபதி படங்களும் அருமை.பிரார்த்தனை நல்ல விஷயம்./


  இந்து மதத்தைஆறு பிரிவாக ஸ்தாபித்ததால் ஆதி சங்கரரை ஷண்மத ஸ்தாபகர் என்று அழைப்பார்கள்..

  ஆறுமுகங்கள் அமைந்த கணபதிக்கு ஷண்முக கணபதி என்று பெயர்..

  கருத்துரைக்கு நிரைந்த நன்றிகள்..

  ReplyDelete
 13. ananthu said...
  எனது இஷ்ட தெய்வம் கணபதியை பற்றிய உங்களின் பதிவும் , படங்களும் அருமை ... மிக்க நன்றி ...!/

  கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 14. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ஜம்பூ பலம் என்றால் நாவற்பழம் என்று தெரியும். கபித்த என்றால் விளாம்பழமா?

  ’...... போனபோது விளாம்பழம் கிடைத்தது போல’ என்று ஒரு பழமொழி உண்டு. அது போல இந்தப் புதுத்தகவல் எனக்குக் கிடைத்துள்ளது.

  தொந்திப்பிள்ளையாரை எனக்குப் பிடிக்கும் ஆனால் அவருக்குப் பிடித்தமான இந்த விளாம்பழமும், அவரின் வாகனமான மூஞ்சூறும் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை./

  யானை உண்ட விளாங்கனி போல
  என்று பழமொழி உண்டு..

  தோலிருக்க சுளை உண்பது போல..

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...
  என்னது! நரமுக கணபதியா?
  அடடா புதுப்புதுத்தகவல்களாகக் கொடுத்து அசத்துகிறீர்களே! ;))))

  அசத்தலாக அளித்த அத்தனை கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த
  நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 16. ஆனைமுகனின் அத்தனை வடிவங்களும்
  மனதில் நிலைகுத்தி நின்றது சகோதரி..
  தீப வடிவ விநாயகர் மிகவும் பிடித்துப் போனது..

  ReplyDelete
 17. மகேந்திரன் said...
  ஆனைமுகனின் அத்தனை வடிவங்களும்
  மனதில் நிலைகுத்தி நின்றது சகோதரி..
  தீப வடிவ விநாயகர் மிகவும் பிடித்துப் போனது../

  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 18. கோபித்துக்கொள்ளாதீர்கள். பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்களே, அதுபோல நானும் பசி வந்து இன்று பாதியில் பறந்து விட்டேன்.

  தொந்திப்பிள்ளையார் போல அனைத்தும் திருப்தியாக சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து விட்டேன்.

  நடுவில் “என் உயிர்த்தோழி” ஐக் கொஞ்சம் பார்க்கப்போனதில் இன்னும் தாமதமாகிவிட்டது.

  ’என் உயிர்த்தோழி’ யான தாங்களும் என்னை என்றும் தவறாக நினைக்கவே மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  மஹாத்மாவான விதுரர் பற்றியும், விதுரநீதி பற்றியும், அறியச்செய்துள்ளது அருமை.

  கஷ்டம் கஷ்டம் என்று இனி யாருமே சொல்ல மாட்டார்கள். விதுரர போலவே இன்று நீங்கள், கஷ்டம் கஷ்டம் என்பவர்களை கடவுளின் திருநாமத்தை ஜபிக்கச் சொல்லியுள்ளீர்கள்.

  பணம் படைத்தவர்கள் ஏழைக்கு தானம் செய்வது கூட பெரிதல்ல. பணத்தை விட மேலான பக்தி மார்க்கம் பற்றி தாங்கள் தினமும் எங்களுக்கு தானம் செய்யும் தொண்டே மிகச்சிறந்த தானமாக நினைத்து மகிழ்கிறோம்.

  பிறவிப்பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர தங்களின் அன்றாடத் ஆன்மீகத் தகவல்கள் அல்லவா உதவப்போகிறது எங்களுக்கு! ; ))))))

  ReplyDelete
 19. செம்பருத்திப்பூவாலும், அருகம்புல்லாலும், எருக்கம்பூக்களாலும் காட்டப்பட்டுள்ள விநாயகர் நல்ல ஸ்டைலாக உள்ளார். ;)))))

  மான்கள், கிளிகள், முயலுடன், மரத்தடியில் சிறுவர் சிறுமியர் சிவ பூஜை செய்ய, நம் தொந்திப்பிள்ளையார் குட்டைக்கால்களுடன், பரந்த மேனியுடன் அணைத்து அழைத்துவருவது தன் தம்பி முருகனையோ! அந்தப்படமும் அருமை.

  அடுத்த பத்தில் பஞ்சமுக கணபதி, ஐந்து தலை நாகத்தைக் குடைபோல ஏற்று, அடியில் இரண்டு அன்னபக்ஷிகளையும் கைகளால் அழகாகப் பிடித்துக்கொண்டு, அடடா! அருமையே!!

  பஞ்சாயத பூஜை பற்றிய விளக்கம் அருமை. அதில் விநாயகர் ரக்த சிவப்பு வர்ணத்தில் மலைச்சரிவு போல இருப்பார். சூர்யன் ஸ்படிக ரூபமாக இருப்பார், சிவன் ஆவுடையாராகவோ, லிங்க ரூபமாகவோ இருப்பார், அம்பாள் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டதாய் சிறியதாகவும், ஜொலிப்புடனும் இருப்பாள், மஹாவிஷ்ணு சாலிக்கிராம ரூபத்தில் கருப்பாக வழுவழுப்பாக உருண்டையாக இருப்பார். என் அப்பா தினமும் மிகவும் ஸ்ரத்தையாகச் செய்து வந்தார். பிறகு என் பெரிய அண்ணாவிடம் கொடுத்து அவர் தினமும் விடாமல் செய்து வந்து, இப்போது அவரும் போய், அவர் பிள்ளை, [வேத சாஸ்திரங்கள் படித்தவன்] மிகச்சிறப்பாக விடாமல் ஸ்ரத்தையுடன் செய்து வருகிறான்.

  அடுத்து ருத்ராக்ஷ விநாயகர், இலை வடிவ விநாயகர், ரூபாய் நோட்டுக்களால் காட்டப்பட்டுள்ள கும்பகோணம் பணக்கார விநாயகர் [எங்க ஊர் ஏழைப் பிள்ளையாருக்கு எதிர்ப்பதமோ இவர்] எல்லாம் அழகு தான்.

  அடுத்து பூந்தி விநாயகர். அடடா!

  ’அட ராஜாவே ..... சிற்றெறும்பு என்னைக் கடிக்குது’ பாட்டுபோல ஆகிவிடாமல்,

  சீக்கரமாக எல்லோருக்கும் அவரைப்புட்டுப்புட்டு பிரஸாதமாகக் கொடுக்கணுமே.

  குழந்தைகளுக்குப் பிடித்தமான சாக்லேட் மற்றும் பிஸ்கட் விநாயகர் .. எப்படியெல்லாம் தோன்றி மனதை மகிழ்விக்கிறார், அந்தக் கஷ்கு முஷ்கான குழந்தை விநாயகர் !;))))

  அந்த நர்த்தன விநாயகர் உங்கள் பிறந்தாத்துப்பக்கம் என்று நினைக்கிறேன். சரியா?

  ReplyDelete
 20. பேப்பர் கப் விநாயகர் ஏற்கனவே பிள்ளையார் சதுர்த்தி சமயம் காட்டியிருந்தீர்கள். மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியே. எவ்வளவு பொறுமையாகச் செய்துள்ளார்கள். எவ்வளவு பெரியதாக கம்பீரமாக உள்ளது!

  அந்தச்சிறப்புக்கலைஞர்களுக்கு என் பாராட்டுக்கள்.

  கொட்டும் மழையில் விநாயக ஸ்வரூபமான யானையார் இருவரால் விநாயகருக்கு பூஜை. சூப்பரோ சூப்பர்.

  அப்பம் கொழுக்கட்டைகள் லட்டுகள் எதுவும் எனக்கு வேண்டாம். தித்திப்பு மோதகக் கொழுக்கட்டையின் உள்ளே வைப்பார்களே, அந்த உள்ளே வைக்கும் [தேங்காய்_வெல்லம்+ஏலக்காய் போட்ட] பூர்ணம் மட்டுமே தனியாக வேணும். அது தான் நான் விரும்பிச் சாப்பிடுவேன்.

  தங்களுக்கு சொப்பு செய்யும் வேலையும் மிச்சம் தானே!

  இதென்ன பிரமாதம் உடனே புறப்பட்டு வாருங்கள். செய்து தந்துவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை உங்களிடமிருந்து வராதே! என்கிறார், ஏற்கனவே பொரிடீலிங் உங்களுடன் போட்டுள்ள ஒரு தோழி! இதில் நான் வேறு நடுவில் என்கிறீர்களா? அதுவும் சரிதான். படத்தில் பார்ப்பதே சாப்பிட்டது போல நிறைவைத் தருகிறதே! ;))))) எனக்கு அதுவே போதும்.

  ReplyDelete
 21. பேப்பர் கப் விநாயகர் ஏற்கனவே பிள்ளையார் சதுர்த்தி சமயம் காட்டியிருந்தீர்கள். மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியே. எவ்வளவு பொறுமையாகச் செய்துள்ளார்கள். எவ்வளவு பெரியதாக கம்பீரமாக உள்ளது!

  அந்தச்சிறப்புக்கலைஞர்களுக்கு என் பாராட்டுக்கள்.

  கொட்டும் மழையில் விநாயக ஸ்வரூபமான யானையார் இருவரால் விநாயகருக்கு பூஜை. சூப்பரோ சூப்பர்.

  அப்பம் கொழுக்கட்டைகள் லட்டுகள் எதுவும் எனக்கு வேண்டாம். தித்திப்பு மோதகக் கொழுக்கட்டையின் உள்ளே வைப்பார்களே, அந்த உள்ளே வைக்கும் [தேங்காய்_வெல்லம்+ஏலக்காய் போட்ட] பூர்ணம் மட்டுமே தனியாக வேணும். அது தான் நான் விரும்பிச் சாப்பிடுவேன்.

  தங்களுக்கு சொப்பு செய்யும் வேலையும் மிச்சம் தானே!

  இதென்ன பிரமாதம் உடனே புறப்பட்டு வாருங்கள். செய்து தந்துவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை உங்களிடமிருந்து வராதே! என்கிறார், ஏற்கனவே பொரிடீலிங் உங்களுடன் போட்டுள்ள ஒரு தோழி! இதில் நான் வேறு நடுவில் என்கிறீர்களா? அதுவும் சரிதான். படத்தில் பார்ப்பதே சாப்பிட்டது போல நிறைவைத் தருகிறதே! ;))))) எனக்கு அதுவே போதும்.

  ReplyDelete
 22. அடுத்தடுத்தும் பல விநாயகர்களைக் காட்டி மகிழ்ச்செய்துள்ளீர்கள். அதில் சுப விவாஹ கணபதி ஒருவர், சுப லாப கணபதிக்கு போட்டியாளரோ?

  வியாசர் வேகமாகக் கதையைப் பாடல்களாகச் சொல்லச்சொல்ல பிள்ளையார் தன் கொம்பை ஒடித்து, மகத்தான மஹா பாரதத்தை அதிவேகமாக எழுதினாராம்.

  ஒருவர் வேகத்திற்கு மற்றவர் சளைத்தவர் இல்லையாம். மளமளவென்று நான் எழுதும் வேகத்திற்கு சொல்லிக்கொண்டே போகணும் என்றாராம் பிள்ளையார்.

  நான் சொல்வதை மனதில் அர்த்தம் செய்து கொண்டு நீங்கள் எழுதணும் என்று எதிர் கண்டிஷன் போட்டாராம் வியாசர்.

  அதுபோல, அந்த மகத்தான மஹா பாரதம் போல மிக நீளமான பதிவாகப்போட்டு, என்னைப் பின்னூட்டமிட வைத்து, நான் விநாயகர் போல உடைக்க எனக்குக் கொம்பேதும் இல்லாததால், கை விரல்களை உடைத்துக்கொண்டேன். அப்படியும் என்னால் இதற்கு மேல் முடியவில்லை.

  அவ்வளவு விஷயங்களை அள்ளித்தந்து அசத்தி விட்டீர்கள். இருப்பினும் முழுவதுமாக பின்னூட்டம் தர முடியவில்லை என்ற ஏதோ ஒரு குறையுடன் இத்துடன் சுருக்கமாக முடித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.

  நன்றி, வணக்கம், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மீகத்தொண்டு.

  [அவ்வப்போது தங்கள் உடம்பையும் மிகவும் அதிக ஸ்ட்ரெயின் கொடுக்காமல் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கோ!]

  பிரியமுள்ள,
  vgk
  [ கடைசி படத்தில் பரபரப்பான பஜாரைப்பார்த்தபடி, பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறாளே ஒருவள் .... அவளுக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தமோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவும் அழகாகவே உள்ளது.
  மிகப்பெரிய பதிவு வெற்றிகரமாக முடிந்து வெளியானது இன்று என்ற கொண்டாட்டமோ! ;)))))) ]

  ReplyDelete
 23. பொரிப்பருப்புத்தேங்காய்க்குக் கீழே காட்டப்பட்டுள்ள இரண்டும் இளநீர் காய்களா? அசல் துதிக்கையுடன் கூடிய விநாயகர் போலல்லவா தெரிகிறது.

  அதன் அருகே வலதுபுறம் உள்ளதும் சூப்பராக உள்ளது. அது என்ன முற்றிய காய்ந்த மட்டைக்காயில் செய்திருப்பார்களோ?

  கீழே உள்ள சங்குக்குள் சாய்ந்து ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பிள்ளையார் ரொம்பவும் அழகு!
  படு ஜோர்! ;)))))

  அது பீங்கானில் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நல்ல மிகச்சிறந்த ART WORK அல்லவா?
  vgk

  ReplyDelete
 24. விநாயகருக்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது.

  விநாயகரின் அருள் உங்களுக்குப் பரிபூர்ணமாக உள்ளது.

  அவரைப்பற்றிய பதிவென்றால் படு உற்சாகமாக ஏராளமான படங்களுடன் ஒருவித புத்துணர்ச்சி+பேரெழுச்சியுடன் தருவது போல எனக்கு ஒரு Feeling.

  ’நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். விநாயகன் என்றால் தலைவனுக்கெல்லாம் தலைவன் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது விநாயகனுக்கு மேற்பட்ட தலைவன் இல்லை, கடவுள் இல்லை என்று அர்த்தம்” என்பார் திருமுருகக் கிருபானந்த வாரியார் விநாயகர் பெருமை என்ற தனது சொற்பொழிவில்.

  முழுமுதற் கடவுளான விநாயகர் அருளால் தாங்கள் க்ஷேமமாக இருந்து இதுபோல மேலும் பல நல்ல நல்ல பதிவுகளை, தினமும் தந்து கொண்டே இருக்கணும். நாங்கள் அதை கொழுக்கட்டைப் பூர்ணம் போல பரிபூர்ணமாக ருசிக்கணும்.

  வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 25. வை.கோபாலகிருஷ்ணன் said...//

  //இதென்ன பிரமாதம் உடனே புறப்பட்டு வாருங்கள். செய்து தந்துவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை உங்களிடமிருந்து வராதே! என்கிறார், ஏற்கனவே பொரிடீலிங் உங்களுடன் போட்டுள்ள ஒரு தோழி! இதில் நான் வேறு நடுவில் என்கிறீர்களா? அதுவும் சரிதான். படத்தில் பார்ப்பதே சாப்பிட்டது போல நிறைவைத் தருகிறதே! ;))))) எனக்கு அதுவே போதும்.//

  என் சமையல் மீது
  எனக்கிருக்கும் நம்பிக்கையே காரணம்.

  நான் எபோதும் பரிமாறும் பணியை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொள்வேன்.

  சமைப்பதையும்
  சாப்பிடுவதையும்
  தவிர்க்க...

  ReplyDelete
 26. வை.கோபாலகிருஷ்ணன் said...//

  [ கடைசி படத்தில் பரபரப்பான பஜாரைப்பார்த்தபடி, பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறாளே ஒருவள் .... அவளுக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தமோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவும் அழகாகவே உள்ளது.
  மிகப்பெரிய பதிவு வெற்றிகரமாக முடிந்து வெளியானது இன்று என்ற கொண்டாட்டமோ! ;))))))

  இத்தனை பெரிய பதிவா என்று வெற்றிகரமாக படித்தும், பார்த்தும் களைத்தவர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!

  ReplyDelete
 27. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  பிள்ளையாருக்கு இத்தனை வடிவங்களா ? இத்தனை முகங்களா ? இத்தனை படங்களா ? எங்கள் வீட்டில் எங்கள் பேத்தி வந்த போது வீட்டில் உள்ள பிள்ளையார் சிலைகளை எண்ணி - யூ ஹாவ் செவெண்டி சிக்ஸ் பிள்ளயார்ஸ் எனச் சொன்னது நினைவிற்கு வந்தது. அட்டகாசமான பதிவு - அழகான விளக்கங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  யூ ஹாவ் செவெண்டி சிக்ஸ் பிள்ளயார்ஸ் ???

  வியப்பு.. மகிழ்ச்சி !!

  அட்டகாசமாக நல்வாழ்த்துகள் நல்கியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 28. DrPKandaswamyPhD said...
  ரசித்தேன்./

  மகிழ்ந்தேன்..

  ReplyDelete
 29. காலையில் அருமையான விளக்கங்களுடன் பிள்ளையார்களை தரிசனம் செய்ய வைத்ததற் கு நன்றி

  ReplyDelete
 30. விநாயகர் எத்தனை வடிவங்கள்?
  அற்புதம்.
  அருமையான பதிவு.
  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 31. வினைகள் தீர்க்கும் வி நாயகரின்
  பல்வேறு உருவங்களில் திவ்ய தரிசனம்
  தங்கள் தயவால் கிடைத்தது
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. பிள்ளையார்களின் தரிசனம் கண்கொள்ளாக் காட்சி.

  பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 33. பிள்ளையார் சுவாமியின் பல அவதாரங்களில் புகைப்படங்கள் அருமை .
  மனதுக்கு பிடித்திருந்தது மேடம்

  ReplyDelete
 34. //கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்//

  சிறு வயதில் ஒன்றாம் வகுப்பு (அப்பல்லாம் ஒண்ணாப்பு அப்டின்னு ஸ்டைலா சொல்வாங்க!)படிக்கும் பொழுது என் அக்கா இந்த ஸ்லோகத்தை
  எனக்கு கற்றுத் தந்தாள்.அவள் எத்தனை முறை 'கபித்த ஜம்பூ பல' என்று சொல்லித் தந்தாலும் நான் 'கபித்தஜம் பூபல' என்றுதான் சொல்வேன்.அவள் திருத்தும் சமயம் மாற்றிக் கொண்டாலும் பின்னர் இப்டித்தான்.வளர்ந்து சமஸ்க்ருதம் படித்து அர்த்தம் அறிந்து கபித்த ஜம்பூ என்றால் என்ன என தெரிந்த போதும் இப்பொழுதும் சன்னதி முன் சொல்கையில் டக் கென்று என்னையறியாமல் கபித்தஜம் பூபல தான். (மரமண்டை!என்னைத்தான் சொன்னேன் :( )

  ReplyDelete
 35. அதே ஒன்றாம் வகுப்பு படிக்கும் சமயம் அக்கா சொல்லித் தந்த 'பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாட்டைத்தான் எல்லார் வீட்டு கொலுவுக்கும் பாடுவேன் சிறு வயதில்.பின் கொஞ்சம் பெரியவளானதும் கஜவதனா கருணாசதனா,வாதாபி போன்ற பாடல்கள் (நமக்கென்ன போச்சு? கேக்கற பிள்ளையாருக்குத்தான கஷ்டம்.வேணும்னா அவர் கஷ்டத்துல நீங்க பங்கெடுத்துக்கறீங்களா? :-) )

  ReplyDelete
 36. அந்த தஞ்சாவூர் பெயிண்டிங் பிள்ளையார் சூப்ப்ர்.நீங்க தயாரிச்சதா?

  அப்பறம் அந்த ப்ளூ கலர்ல லட்டு வச்சுருக்கறவர்,செம்பருத்தி அருகம்புல் பிள்ளையார் கூட சூப்பர்.குழந்தைகளோட இருக்கற பிள்ளையார் எவ்வளவு மகிழ்ச்சியாவும் வாஞ்சையாவும் இருக்கார்.

  அந்த சாக்லேட் பிஸ்கட் பிள்ளையார் எனக்கும் பிடிக்கும்.me too like :)

  அப்பறம் சாப்பாட்டு ஐட்டமா?வரிசையில நான்காவதா இருக்கற ஐட்டம் பத்தி நான் எதுவும் சொல்லலைப்பா (படையப்பால ரஜினி சொல்வாரே அந்த மாதிரி)

  ReplyDelete
 37. கடைசில நானே செஞ்சு சாப்பிட்டாச்சு

  ReplyDelete
 38. raji said...//

  (நமக்கென்ன போச்சு? கேக்கற பிள்ளையாருக்குத்தான கஷ்டம்.வேணும்னா அவர் கஷ்டத்துல நீங்க பங்கெடுத்துக்கறீங்களா? :-) )//

  தாராளமாய் பாடி யூ ட்யூப்பில் பகிருங்கள்..

  தினமும் கேட்டுவிடுகிறேன்..

  மலரும் நினைவுகளை அருமையான கருத்துரைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதற்கு மனம் நிறைந்த நன்றிகள்...

  ReplyDelete
 39. தமிழ் பிரியன்December 12, 2011 at 4:12 AM

  அன்பு அம்மா,
  விநயாகர் வடிவங்கள் படித்தோம் ரசித்தோம். தரிசித்தோம். அறுமை.

  அன்பு மகன்
  தமிழ் பிரியன்.

  ReplyDelete
 40. தமிழ் பிரியன் said...
  அன்பு அம்மா,
  விநயாகர் வடிவங்கள் படித்தோம் ரசித்தோம். தரிசித்தோம். அறுமை.

  அன்பு மகன்
  தமிழ் பிரியன்/

  அன்பு மகனுக்கு
  அருமையான
  ஆசீர்வாதங்கள்..

  ReplyDelete
 41. இத்தனை கணபதி படங்கள் அதிலும் வேறு வேறு அலங்காரங்களில்! மனதை கவர்ந்துவிட்டது தங்களின் பதிவு.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 42. பல்வேறு வடிவங்களுடைய கணபதியைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது... ஷண்முக கணபதி (ஆறுமுகம் உள்ள கணபதி)யே போற்றி போற்றி.... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

 43. 1552+15+1+3*=1571 ;)))))

  பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதியுள்ளேன்.

  இப்போ நினைத்தாலும் கை விரலெல்லாம் வலுக்குதூஊஊஊ.

  அம்பாளின் ஐந்து பதில்கள் கிடைத்ததில் சற்றே சந்தோஷம்.

  அவை தான் எனக்கு அன்று ஊக்கமும் உற்சாகமும் கொடுத்திருக்கும் என நினைக்கிறேன்.

  [* my replies to அன்பின் திரு. சீனா ஐயா 02.12.2011=1 + 03.12.2011=2 total 3 added here for accounting purposes.]

  ReplyDelete