Friday, February 24, 2012

தரணியாளும் தண்டுமாரியம்மன்


அம்மா தண்டு மாரியம்மாகோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே உன் அருள் நாடி வந்தோமே

கோவை நகரின் காவல் தெய்வமாக நகரின் இரு கண்களில் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறாள் தண்டுமாரியம்மன் .
மூலவர் தண்டு மாரியம்மன்
[Gal1]
அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். 
[Image1]
ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, லட்சுமி, முருகன், கருப்பராயன், முனியப்பன் ஆகியோர் அருள்புரிகின்றனர்.
மகாலட்சுமி
[Gal1]
பாலமுருகன்
[Gal1]
தட்சிணாமூர்த்தி
துர்க்கை
[Gal1]
அம்மை நோய் குணமாக, தொழில் விருத்தியடைய, குடும்பம் சிறக்க, தீராத பிணிகள் தீர்ந்திட இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
கோவையில் தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம் நடைபெறும்.
"தண்டு' என்றால் "படை வீரர்கள் தங்கும் கூடாரம்' எனப்பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் "தண்டுமாரியம்மன்' என்று அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர். 

படை வீரர்கள் தண்டு மாரியம்மனை வணங்கி வந்த நேரத்தில் ஒர் சமயம் பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தோன்றியது. அவர்கள் அம்மை விலக அம்பாளை வணங்கி தண்டுக்கீரை சாறால் அபிஷேகம் செய்து வழிபட்டு அத்தீர்த்தத்தை பருகிட, அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது.

அனைத்து மதத்தினரும் வழிபடும் தெய்வமாக திகழும் தண்டுமாரியம்மன் 

வணிகம் புரிவதற்காக வந்து நாட்டைக் கைப்பற்றிய வெள்ளையர்களிடம் இருந்து போரிட்டு, நாட்டை மீட்கப் போராடிய திப்பு சுல்தான் தனது படைவீரர்களை கோவை கோட்டை மதில்களுக்கிடையில் ஓர் கூடாரத்தில் தங்க வைத்திருந்தார். 

அங்கு தங்கியிருந்த வீரர்களில் ஒருவன் அம்பாளின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவளை தினமும் வணங்கி வந்தான்.

அப்போது,ஒருநாள் இரவில் அவனது கனவில் தோன்றிய மாரியம்மன், தான் வீரர்கள் குடியிருக்கும் பகுதியில் வேப்பமரங்களுக்கும், காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருந்த நீர்ச்சுனைக்கு அருகில் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.
மூலவர் விமானம்

கனவில் அம்பாளின் அரிய திருமேனியைக் கண்ணுற்ற அவ்வீரன் மறுநாள் காலையில், அம்பாள் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரங்களின் இடையே தேடினான். அப்போது அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்பாள் அங்கே வீற்றிருந்தாள்.
அங்கேயே அம்பாளை வணங்கிய அவன் சக படைவீரர்களுக்கும் கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தான். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டு காலப்போக்கில் பெரிய கோயிலாக எழுப்பினர்.
நவக்கிரக மண்டபம்
[Gal1]
தங்கரத்தில் தண்டுமாரியம்மன்

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா


விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.

புவனமுழுதாளுகின்ற புவனேச்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேச்வரி
நவநவமாய் வடிவாகும் மகேச்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேச்வரி


கவலைகளைத் தீர்த்துவிடும் காளீச்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீச்வரி
உவமானப்பரம்பொருளே ஜகதீச்வரி
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி


உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கொஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா

காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவனின் குரல்கேட்டுன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத்தினம் வழியனுப்பு
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்


பண்ணமைக்கும் நாஉனையே பாடவேண்டும்
பக்தியொடு கையுனையே கூடவேண்டும்
என்ணமெலாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்


மன்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகளுடைய குறைகளையும் தீருமம்மா
நெற்றியுலும் குங்குமமே நிறையவேண்டும்
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்

கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றமெல்லாம்நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா ?


மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா ?
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ?
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையன்றிக் காவலுண்டோ?
கன்றுக்குப் பசுவன்றிச் சொந்தமுண்டோ?


முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ ?
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ?


அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என்காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்
வஞ்சத்தை என்னெஞ்சம் அறுக்கவேண்டும்

பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்
என்னோடு நீயென்றும் வாழவேண்டும்


கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை


செம்பவழ வாயழகி உன்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை


காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்


தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.மகாலட்சுமி அலங்காரம், திருப்பூர்.


27 comments:

 1. அருள்கொடுக்கும் தண்டுமாரியம்மன் கோவிலுக்கு
  இதுவரை சென்றதில்லை சகோதரி.
  அம்மனை தரிசித்த பெருமை பெற்றேன் இப்போது..

  அதுவும் திரு.வீரமணி அவர்களின் பாடலுடன்
  கேட்க கேட்க மனம் குளிர்கிறது..

  ReplyDelete
 2. கோவை பெரியகடை வீதி மாகாளியம்மன் தான் இன்றைய ஸ்பெஷல் படம். சூப்பரோ சூப்பர் அது.
  எலுமிச்சைப்பழங்களை எவ்வளவு ஜோராக அடுக்கி வைத்துள்ளனர்! ;)))))

  ReplyDelete
 3. எங்க ஊரு கோவில் பதிவு ,

  சகோதரி அழகான எழுத்துருவம்

  ஆஹா அருமையான பேசும் படங்கள்

  நன்றி ,
  கோவை சக்தி

  ReplyDelete
 4. எங்க ஊரு கோவில் பதிவு ,

  சகோதரி அழகான எழுத்துருவம்

  ஆஹா அருமையான பேசும் படங்கள்

  நன்றி ,
  கோவை சக்தி

  ReplyDelete
 5. தண்டு என்பதன் பொருள் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

  அனைத்துத் தகவல்களும் வழக்கம்போல மிக அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 6. ”கற்பூர நாயகியே கனகவல்லி” யில்
  ஆரம்பித்துக் கொடுத்துள்ள பாடல் வெகு அருமை. படிக்கும்போதே பக்திப் பரவஸத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

  ReplyDelete
 7. அனைத்து அம்பாள் படங்களும் அழகோ அழகு தான். ஒவ்வொன்றாக வெகு நேரம் ரசித்துப்பார்த்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 8. கொங்கு மண்டலத்தின் சக்தி அம்சங்கள் கண்டவுடன் ஆனந்தம்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 9. கோவை நகரின் காவல் தெய்வமான இரு கண்களில் ஒன்றானவள் “கோனி அம்மன்” என்று நினைக்கிறேன்.

  ஏற்கனவே “கோனி அம்மன்” பற்றிய தங்கள் பதிவைப் படித்து மகிழ்ந்துள்ளேன்.

  மற்றொரு காவல் தெய்வமாக விளங்கும் இந்த அம்மனைப்பற்றி இப்போது தான் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 10. முதல் படத்தில் காட்டியுள்ள லக்ஷ்மி அம்மன், இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்றாற்போல மிகவும் லக்ஷ்மிகரமாக அமைந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

  440 ஆவது பதிவுக்கு பாராட்டுக்கள்.
  வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 11. இரண்டாவது படமாகக் காட்டப்பட்டுள்ள,
  தரணியாளும் தண்டு மாரியம்மன் மஞ்சள்+சந்தன அலங்காரத்தில்,
  கோவைப்பழவாயுடன்,
  புல்லக்கு தொங்க,
  மூக்குத்தி ஜொலிக்க,
  கன்னத்தில் திருஷ்டிப்பொட்டுடன், தீர்க்கமான கருணைப் பார்வையுடன், நெற்றியில் பெரிய வட்டவடிவக் குங்குமப்பொட்டுடன்,
  காதுகளில் மலர்ச்சுருள்களால் ஆன தாடங்கங்கள் பிரகாஸிக்க,
  புஷ்பங்களால் ஆன மலர் க்ரீடம் தரித்து வெகு அழகாக
  அலங்கரிக்கப் பட்டுள்ளதே!

  அம்மனை அவ்வாறு அழகாக அலங்கரித்தவருக்கும்,

  அதை வெகு அழகாகப் பதிவுசெய்து எங்களையும் இன்று தரிஸிக்கச்செய்த உங்களுக்கும், மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 12. தண்டு மாரியம்மனின் மகிமையையும் வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அன்னையின் கற்பூரநாயகியே கனகவல்லி பாடல் தாங்கி வந்து பல அரிய தேசிக்காய் அலங்காரத்துடன் காட்சிப்படத்தினை கண்டு மனம் மகிழ்ந்தேன் .பகிர்வுக்கு வாழ்த்துக்கள். 

  ReplyDelete
 13. சிறப்பான படங்களுடன் தண்டு மாரியம்மாவின் மகிமைகளை விளக்கியது அற்புதம்.. ஓம் சக்தி தாயே போற்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 14. வெள்ளிக்கிழமையும் அதுவும் மாரியம்மன் தரிசனம் கிடைக்கப்பெற்றோம் நன்றி வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. Achooooooooo
  Enguru mariamman.
  Very lucky to have darshan of our Dandumariamman.
  Ninayu therija nal muthala parthu kumbadare amma ennikku Rajeswari mulama enakkum katchi kudutheye Devi.
  viji

  ReplyDelete
 16. தண்டுமாரியம்மன் அருள் இன்று உங்கள் பதிவின் வழி கிடைத்தது. உங்களுக்கு இறையருள் உண்டு

  ReplyDelete
 17. தண்டுமாரியம்மன் தரிசனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 18. கோவையில் நாங்கள் இருக்கும் போது அடிக்கடி போகும் கோயில்.

  அப்புறம் புகுந்தவீடு கோவை ஆனபின் எப்போதாவது போகும் கோயிலாகி விட்டது.

  மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.

  கோனியம்மன் திருவிழா இப்போது நடக்குமே அதைப் பற்றி எப்போது எழுதபோகிறீர்கள்?

  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 19. நம்ம ஊர் தண்டு மாரியம்மனை பற்றி இது வரை தெரியாத தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.

  அழகான பகிர்வுங்க. நன்றி.

  ReplyDelete
 20. அருமையான தெய்வீக தரிசனம்
  படங்களும் விளக்கங்களும் உள்ளத்தைக்
  கொள்ளைகொண்டன
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. ஏன் தண்டு தண்டு என்று எண்ணிக் கொண்டு வாசித்தேன் புதுப் பெயராக இருந்தது. விளக்கம் கிடைத்தது நன்றி. தண்டுக்கீரையை நாங்கள் தண்டங்கீரை என்போம். கற்பூர நாயகியே பாடலை எடுப்போம் என்றால் கொப்பி பண்ணக் கூடாது என்று தடையே போட்டு வைத்துள்ளீர்கள். விட்டுவிட்டேன். வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 22. அற்புதமான படங்கள் புதிய தகவல்களுடன் மிகவும் அருமையான பதிவு.

  ReplyDelete
 23. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமையான் பதிவு - தண்டு மாரியம்மனைப் பற்றிய பதிவு - பெயர்க்கரானம் துவங்கி - வரலாறினைக் கூறியமை நன்று. எத்தனை எத்தனை அம்மன் .... படங்களூம் விளக்கங்களும் பாடலும் பிரமிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 24. அருமையான பதிவு.
  அருமையான விளக்கங்கள்.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 25. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 26. 26. பாண்டவப் பிரியா கோவிந்தா

  ReplyDelete