Thursday, September 13, 2012

கள்ளவாரணப் பிள்ளையார்


தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை 
ஊரர்தம் பாகத்து உமைமைந்த னேஉல(கு) ஏழும்பெற்ற 
சீரபி ராமிஅந் தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே 
காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே.

அளப்பரிய சிறப்புக்களுடன் அருமையாகத் திகழும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் எழுநிலைகளுடைய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
 ராஜகோபுரத்தில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் "கள்ள வாரண பிள்ளையார்' அருள்பாலிக்கிறார். 

சமஸ்கிருதத்தில் "சோர கணபதி' என்பார்கள். 

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு அனைவருக்கும் கொடுத்தார். 

பொதுவாக, விநாயகர் பூஜைக்குப் பின்னரே இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும். 

இதனால் விநாயகப் பெருமான் அந்த அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்த்தால்  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் விநாயகர் "கள்ள வாரண பிள்ளையார்' எனப்படுகிறார். 

தப்புப் பண்ணிய தேவர்களிடமிருந்து அம்ருத கலசத்தை அபேஸ் பண்ணிவிட்டு, அப்புறம் அவர்கள் தங்கள் தப்பை தெரிந்து கொண்டு பூஜை பண்ணிய பிறகு அதைக் கொடுத்தவர் அவர். 

 • அமரர்களும் அசுரர்களும் அமுதக்குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத் தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ளவாரணப் பிள்ளையார் அவர்.
இப்படி அநேக க்ஷேத்திரங்களில் விகடங்கள் பண்ணி, வேடிக்கை வேடிக்கையாய்ப் பெயர் வாங்கியவர்.

அமிர்தகுடம் லிங்கமாக மாறி "அமிர்தகடேஸ்வரர்' ஆனதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் செய்வது சிறப்பாகும். 
உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி (மணிவிழா) , சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவேயாகும். இச்சாந்திகளை வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் அமிர்தகடேஸ்வரர் கோயிலின் மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.

13 comments:

 1. திருக்கடையூர் கோயில் சம்பந்தமான அழகிய புகைப்படங்களை பதிவில் இடம் பெறச்செய்து வழக்கம் போல அசத்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. என்ன பிள்ளையார் தலைப்பின் கீழே அம்மன் படம் இருக்கிறதே என்று பார்த்தேன்...

  திருக்கடையூர் ஒருமுறை போயிருக்கிறேன்.. இப்பொழுது நிறைய வசதிகள் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

  படங்கள் பிரமாதம்.

  ReplyDelete
 3. கள்ளவாரணப் பிள்ளையார் பெயர்க் காரணம் அருமை

  ReplyDelete
 4. Wow...beautiful temple...I shall visit this temple

  ReplyDelete
 5. கள்ளவாரணப் பிள்ளையார் பெயர்க் காரணம் அருமை

  படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு

  ReplyDelete
 6. கடைசி படத்திற்கு முந்தைய யானை சிலை படம்... தீடீரென்று பார்த்தான் உண்மையான யானை போலவே தோன்றுகிறது! புகைப்படம் நல்ல தெளிவு!

  தளத்தின் பெயர்க்காரணம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி! தொடரட்டும் தங்கள் ஆன்மீக பயணம்!

  ReplyDelete
 7. அருமையான புகைப்படங்கள். நல்லதொரு விளக்கங்கள்.

  ReplyDelete

 8. கால சம்ஹார மூர்த்தியாக மார்கண்டேயனுக்கு அருள் பாலித்த இடம். எங்கள் சஷ்டியப்த பூர்த்தியை அங்குதான் நடத்தினோம். பேரனுக்கும் பேத்திக்கும் ஒரே குஷி. தாத்தா பாட்டி கல்யாணம் என்று கூறி மகிழ்ந்தார்கள். நினைவுகளை கிளறிவிட்ட பதிவு. நன்றி
  காலனைக் காலால் உதைக்கும்சிற்பம் , அமிர்தகடேசர் ஆராதனையின்போது சொற்ப நேரமே காட்டுகிறார்கள். .

  ReplyDelete
 9. திருக்கடையூர் கள்ள வாரண விநாயகர் பாதம் போற்றி!
  சிறப்பான் படங்களுடன் அழகிய பதிவு! நன்றி!
  இன்று என் தளத்தில்
  ஓல்டு ஜோக்ஸ் 2
  http://thalirssb.blogspot.in/2012/09/2.html


  ReplyDelete
 10. கோபுரத்தின் சிற்பங்கள் மற்றும் அதுகுறித்த விளக்கங்கள் இதுவரை தெரியாதவை.

  ReplyDelete
 11. கோபுர‌ த‌ரிச‌ன‌ம் பாப‌விமோச‌ன‌மென்று ப‌ட‌ப‌ட‌வென‌ க‌ன்ன‌த்தில் போட்டுக் கொண்டு க‌ண‌நேர‌ த‌ரிச‌ன‌த்தில் த‌வ‌ற‌ விட்டு விடுகிறோம் கோபுர‌ச் சிற்ப‌ங்க‌ளின் அழ‌கையும் அவை நினைவூட்டும் க‌தைக‌ளையும். அத‌ற்குத் தானோ முன்னோர் பிர‌த‌ட்சிண‌ம் வ‌ந்த‌பின் ச‌ற்று அம‌ர்ந்தெழ‌ச் சொன்ன‌து. (அப்போதும் ப்ர‌சாத‌மும் ஊர்க்க‌தைக‌ளும் இட‌த்தைப் பிடித்துக் கொள்கிறது)

  ReplyDelete
 12. கள்ள வாரணப்பிள்ளையார்

  பற்றி அனைத்தும் அறிய முடிந்தது. சந்தோஷம்.

  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பற்றியும் அழகான விளக்கங்கள் கொடுட்த்து அசத்தியுள்ளீர்கள்.

  படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  2-3 படங்கள் மட்டும் திறக்காமல் உள்ளன.

  காட்சி தருபவை களிப்பதாகவே உள்ளன.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்,. நன்றிகள்..

  ReplyDelete