Thursday, September 6, 2012

ஆனந்த விநாயகர்!


 எந்த ஒருசெயல் துவங்கினாலும், விக்கினங்கள் -தடைகள் இன்றி செவ்வனே நடைபெற ரை விநாயகரை வணங்கிச் செய்வது வழக்கம்..

எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.  உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு“மகா கணபதிம்” என்று ஆரம்பித்து, , கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து “ராமச்சந்த்ராய ஜனக என மங்களம் பாடி முடிப்பது சம்பிரதாயமான மரபு.
 


பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், '
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். 

அதற்கு 'மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.

 
ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும்.

திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடினால் பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர்.

 செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள்.

ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.


எந்த ஒரு காரியத்தைச் செய்யும்போதும்,மஞ்சள் தூளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து,அவரை வழிபட்டு ஆரம்பிக்க்கிறோம்...

காரியம் நல்லபடியாக முடிந்ததும், ஆஞ்சநேயருக்குவடைமாலை சாத்தி முடிக்கணும்… என்ற விளக்கம் உண்டு..

வியாச மகரிஷி,மகாபாரதத்தைச் சொல்லிவர, பிள்ளையார்
அதை தம்முடைய கொம்பை ஒடித்துப் பிடித்து எழுதினார்.

குருஷேத்திரப் போர் முடிந்ததும், அர்ச்சுனனைரதத்தை விட்டு இறங்கும்படி
 ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். அர்ச்சுனன் இறங்கியதும், ஸ்ரீ கிருஷ்ணர்
இறங்கினார்.

அடுத்து ரதத்தின் கொடியிலிருந்த ஆஞ்சநேயர் மறைந்து விட்டார். அடுத்தநொடி, ரதம் தீப்பிடித்து எரிந்தது.

இப்படி பிள்ளையார் ஆரம்பித்து வைத்தது,
ஆஞ்சநேயரால முடிந்தது மகாபாரதம் .....

 “கம்” என்பது  கணபதியின் பீஜாக்ஷரமந்திரம் 
“ஹம்”! ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம்.....
கம் கணபதயே என்று க-வில் துவங்கி 
ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.

கணபதி  ,அனுமன் இருவருமே பிரம்மச்சாரிகள்!
விலங்கின ரூபம் கொண்டவர்கள்!
ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் ! 

 நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!

இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! 
இருவருக்குமே சூரியன் தான் குரு...

து தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
கணபதிக்கு  ஆற்றங்கரை கூட இடம் தான்! 
மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! 

அனுமனுக்கோ தூண் கூட இடம் தான்! 
விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!
 வடநாட்டில் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!

 நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!
கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!

இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! 
பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!
Jai hanuman
இராமாயணத்தில், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! 
அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறார்! 
நன்றி ஒன்று வேண்டாதானிடம் நன்றி சொல்லி மாளுமா !!


விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு' என்று  சொல்கிறார்கள்.
 
"ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.

ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.

பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர்.

அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது.


28 comments:

 1. ஆஹா! இன்று ஆனந்த விநாயகரா?

  ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ! ;))))

  பிறகு மீண்டும் வருவேன் !

  ReplyDelete
 2. கணபதியும் ஹனுமானும் சேர்ந்திருக்கும் படம் அருமை.

  ReplyDelete
 3. //எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல்

  ஸ்ரீ ராமதூதனான அனுமனை
  வணங்கி அந்த நிகழ்ச்சியை
  நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்//

  இதைத்தான்
  பிள்ளையாரைப்பிடிக்க
  குரங்காய் முடிந்த கதை
  என்கிறார்களோ?

  பிள்ளையாரின் சிலை ஒன்றை களிமண்ணால் நாம் பிடிக்க ஆரம்பிக்க, அந்தச் சிலை கடைசியில் குரங்கு போலத்தோற்றம் அளித்தது என நாம் தப்பாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது

  எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாக முடிய நாம் முதலில் பிள்ளையாரை வணங்கி வேண்டி ஆரம்பிக்க வேண்டும்.

  [அதாவது பிள்ளையார் பிடிக்க என்றால் ... பிள்ளையாரின் காலை நாம் பிடிக்க ... என இங்கு அர்த்தமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்]

  அவ்வாறு பிள்ளையாரை வேண்டி நாம் ஆரம்பிக்கும் காரியம், ஸ்ரீ ராம தூதனும், ஸ்ரீ ராம பக்தனுமான ஆஞ்ஜநேயரின் வெற்றி போல வெற்றி கரமாக கடைசியில் முடியும் என்பதையே குரங்காய் முடிந்தது என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

  பிள்ளையாரின் காலை நாம் பிடிக்க,
  ஹனுமனின் வாலால் வெற்றி நம்மைத் தேடி வரும்.

  பிள்ளையாரின் கால் ......
  ஹனுமனின் வால் ...... ;)))))

  ReplyDelete
 4. ஒரு செயலைத் துவங்கினால் அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும் வேண்டும்.

  திட்டமிடாமல், மன உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடினால் பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்லி குழப்புவர்.

  செயலைத் தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு, எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள்.

  ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும், அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய் முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.//

  திட்ட்மிடல் + மன உறுதி இரண்டும் இல்லாத மனமாகிய குரங்கு என்ற
  தங்களின் இந்த விளக்கம், மிகவும் எனக்குப் பிடித்துள்ளது.

  திட்டமிடுவோம்.

  மன உறுதியுடன் தொடர்ந்து செயலாற்றுவோம்.

  வெற்றியை அடைவோம்.

  இந்த வரிகளுக்கு மட்டுமே எனது ஸ்பெஷலான

  பாராட்டுக்கள்.
  வாழ்த்துகள்.
  நன்றிகள்.

  ReplyDelete
 5. //பிள்ளையார் ஆரம்பித்து வைத்தது,
  ஆஞ்சநேயரால முடிந்தது மகாபாரதம் .....//

  மிக அழகான விளக்கங்கள். அருமை.

  “கம்” என்பது கணபதியின் பீஜாக்ஷரமந்திரம்

  “ஹம்”! ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம்.....

  கம் கணபதயே என்று க-வில் துவங்கி

  ஸ்வாஹா என்று
  ஹ-வில் முடிப்பது மரபு.//

  அடேங்கப்பா!
  சூப்பரோ சூப்பர் தான் !!

  சும்மாவா ... பதிவிட்டுள்ளது யார்?
  ஞான சரஸ்வதியல்லவா ! ;)))))

  ReplyDelete
 6. //கணபதி,அனுமன்
  இருவருமே பிரம்மச்சாரிகள்!

  விலங்கின ரூபம் கொண்டவர்கள்!

  ஞானச் செருக்கு இல்லாத
  சமநிலை மூர்த்திகள்!//

  சபாஷ்! மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள் !

  ======

  ஓர் உபன்யாசத்தில்
  நான் கேட்டு மகிழ்ந்தது:-

  [பிரும்மச்சாரி=திருமணமாகாதவர்]
  [வானரம் = குரங்கு இனம்]

  ஹனுமன் ஒரு வா ன ர ம்
  ஹனுமன் ஒரு பி ரு ம் ம ச் சா ரி

  வானரத்தில் பிரும்மச்சாரி உண்டா ?
  எனக்கேட்காதீர்கள்.

  வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு

  அதுபோல

  பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு.

  என்றார் உபந்யாசம் செய்தவர்.

  மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

  ReplyDelete
 7. //விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர்.

  ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு' என்று சொல்கிறார்கள்.//

  மிகவும் அழகாக விளக்கமாகச் சொல்லியுள்ளீர்கள்.

  இன்றைய பதிவும் அருமை.

  படங்களும் வழக்கம் போலவே மிகவும் அருமை.

  பஞ்சமுக கணபதி +
  பஞ்சமுக ஹனுமார் என ஏதேதோ ஏராளமாகவும் தாராளமாகவும் வள்ளல் போல அள்ளிஅள்ளிக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  அனைத்துக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 8. சில தெரியாத விஷயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 9. சுந்தரனின் புகழையும், கண நாதனின் புகழையும் எளிமையாக பகிர்ந்தவிதம் அருமை. அருமையான கண்ணிற்கினியக் காட்சிகளுடன் ! பகிர்விற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 10. பதிவில் நுழைந்ததுமே “ விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே “ என்று பாடத் தோன்றியது.

  ReplyDelete
 11. பல விசயங்களை அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி அம்மா...

  ReplyDelete
 12. படங்களும் பகிர்வும் அருமை !..அறியாத பல
  தகவலை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி .

  பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!!!!!........

  ReplyDelete
 13. பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 14. பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 15. ஆனந்த விநாயகர் அற்புத விநாயகர்

  ReplyDelete
 16. பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 17. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. ஆனந்த வினாயகரை ஆனந்தமாக தரிசித்தோம். நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete
 19. இன்றைய பதிவில் எனக்கு பிடித்த எம்பெருமான் விநாயகரின் புகழ் பாடியமைக்கு நன்றி!

  ReplyDelete
 20. இல்ல‌ற‌த்தார்க்கு ஆன‌ந்த‌ம‌ருளும் இவ்விரு பிர‌ம்ம‌ச்சாரிக‌ளும் எக்காரிய‌த்திலும் முத‌லும் முடிவுமாயிருந்து அருள‌ட்டும்!

  ReplyDelete
 21. தெளிவான விளக்கங்களும் அருமையான படங்களும் பார்க்க படிக்க ஆனந்தமாக உள்ளது..மிக்க நன்றி.

  ReplyDelete
 22. ஆனந்த விநாயகர் அருமை.

  ReplyDelete
 23. ஆனந்த விநாயகர் பற்றிய பகிர்வு படித்து ஆனந்தம் அடைந்தேன். நன்றி.

  ReplyDelete
 24. பிள்ளையாரப்பா!

  நீ பிள்ளையார் சதுர்த்தியில் பிறந்தாயா அப்பா!!

  உன்னைப்பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமாப்பா!!!

  உன்னைப்பார்த்து 146 நாள் ஆச்சுப்பா!!!!

  ஆனாலும் எப்போதும் உன் நினைவாகவே இருக்கும் பக்தனப்பா !!!!!

  இது விஷயம் உனக்குத்தெரியுமோ தெரியாதோ அப்பா!

  இன்று 30.01.2013 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி யப்பா.

  இப்போதான் இங்குள்ள உன் கோயிலுக்குப்போய் ஸ்பெஷலா உனக்காகவும் எனக்காகவும் வேண்டிக்கொண்டு வந்தேனப்பா.

  >>>>>>>


  ReplyDelete
 25. வை.கோபாலகிருஷ்ணன் said...//

  இனிய நன்றிகளைத்தவிர
  வேறென்ன சொல்ல !!

  ReplyDelete
 26. இனிமேல் அடிக்கடி ஒருநாள் விடாமல் உன் தரிஸனம் கிடைக்கணுமப்பா.

  அதற்கு அனுக்கிரஹம் செய்யணுமப்பா!

  மனச் சங்கடங்கள் எல்லாம்
  இன்று சங்கடஹட சதுர்த்தியோடு
  சுத்தமாத் தீரணுமப்பா!

  எல்லோரும் எப்போதும் செளக்யமா, சந்தோஷமா, செளபாக்யமா இருக்கணுமப்பா!!

  ஆனந்த விநாயகா, என்றும் இனி
  ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று அருள் செய்யணுமப்பா !!!

  ReplyDelete