Monday, September 17, 2012

வியத்தகு விநாயகி விக்ரஹங்கள்
















Ganeshani Art By Sala Warin Chaichantueg
விநாயகருக்கு விநாயகி என்பது பெண்பால். வைநாயகி, விக்னேசுவரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனா, ஐங்கிணி என்ற பெயர்களும் உண்டு.  இந்து, பௌத்த, சமண சமயத்தவரால் ஒரு காலத்தில் சிறப்பாக வழிபடப்பட்டது. 

இந்து சமயத்தில் சக்தி கணபதி என்ற பெயராலும் தாய்த் தெய்வம் வழிபடப்பட்டது. 

காணாபத்யமும் தாந்திரீக வழிபாடும் ஓங்கியிருந்த காலத்தில் விநாயகி வழிபாடும் சிறப்புற்று விளங்கியது.
  

"சிற்ப ரத்தினா' என்ற சிற்ப நூல்"சக்தி கணபதிக்கு யானைத் தலை, பருத்த வயிறு, செந்தூர வண்ணம்,  இளமைத் துடிப்புடைய பெண்ணுருவம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது...
    

"இடப்புறம் திரும்பிய யானைத் தலை, இரு கைகள், வலக்கையில் பெரிய தாமரை மொட்டு, தொங்கிய இடக்கை, கச்சுடன் விளங்கும் ஸ்தனங்கள், இடுப்பிற்குக்கீழ் புலியின் கால்பாகம், நிமிர்ந்து சுருண்ட வால்' என்னும் அமைப்புடைய இத்திருவுருவை கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக  குறிக்கிறார்கள்.
   
    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகியின் சிற்பம் அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டலையில் - தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழகிய மகுடம் ,  மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின்றன. 


 பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூலும் அழகு செய்கின்றன. 

கால்களில் சிலம்புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடையும் மேகலையும் அழகூட்ட இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.
    

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில்  நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது.

 

முக்குறுணி பிள்ளையார் சன்னிதியிலிருந்து  பிரகாரத்திலேயே நடந்து சென்றால்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும் இரண்டாவது பிரகாரத்தில் பெரும்தூண்களைக் கொண்ட சங்கத்தார் மண்டபம்   தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம்.           

  புலிக்கால்களுடன் இருக்கும்  கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்..

புலிக்காலுடன் கூடிய வியாக்ரபாத விநாயகியைச் சிதம்பரத்திலும் தரிசிக்கலாம். 
சிதம்பரத்தில்  நின்ற கோலம் வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை.  இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை,  கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள்.
    

திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலித் தேரிலும் விநாயகியின் சிற்பங்களைக் காணலாம்.
Ganeshani Statue


பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு  தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார்.


மாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான் கிய இடங்களிலும் விநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் கிடைக்கின்றன.           பெண் வடிவில் 'கணேசினி'  சைனாவில் இருக்கிறது.           .          

இரட்டை விநாயகர்' என்ற  அமைப்பு ஜப்பானில்  இரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு நிற்பதைப் போன்ற வடிவம் ... 

பிள்ளையார் சுழி தேவதைகள்!

பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், 
உகரத்திற்குத் திருமால், 
மகரத்திற்கு ருத்திரன், 
பிந்துவிற்கு மகேசன், 
நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். 
எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி .
Ganeshani Statue
சமண சமயத்தினர் தாங்கள் வழிபடும் யோகினிகளில் ஒன்றாக விநாயகியைக் கருதினர். , மகாயோகி, சித்தயோகி, பிரிடாக்ஷி முதலிய யோகினிகளில் ஒன்றாக கணேசுவரியைக் கருதுகிறது. விநாயகி அல்லது வைநாயகி எனக் குறிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தில் யானைத் தலையுடன் விளங்கும் தாய்த் தெய்வம், "கணபதி ஹ்ருதயா' என்று குறிக்கப்பட்டுள்ளது. 
"கணபதி ஹிருதயா, ஏகமுகா, துவிபுஜா, வரதா


அபயா நிரித்யாசனா'.


கணபதி ஹ்ருதயாவிற்கு ஒரே முகம், இரண்டு புஜங்கள், வரத- அபய முத்திரைகள், நடன நிலை என்பதாகும்.


 ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினிகளின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. 

அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த்தவர்கள். 
 யோகினிகள் தாந்திரீக வழிபாட்டோடு சம்பந்தப் பட்டவர்கள் 


Pillaiyar+statue

18 comments:

  1. கணேசினி பற்றிய தகவல்கள் புதியவை எனக்கு. தமிழகத்தில் விநாயகரைப் பெண்வடிவில் வணங்கிய தகவல்களும் இதுவரை அறிந்திராதவை. பல அரிய செய்திகளை அற்புதமானப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் மேடம்.

    ReplyDelete
  2. அற்புத‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும்! விநாய‌கி ப‌ற்றி இன்றுதான் அறிகிறேன். ந‌ன்றி தோழி த‌ங்க‌ள் ஆத்மார்த்த‌ சேவைக்கு!

    ReplyDelete
  3. வினாயகி புதுசா இருக்கே

    ReplyDelete
  4. விநாயகி இன்றுதான் கேள்விப்படுகிறேன் சகோதரி...
    நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்...
    நன்றிகள் பல...

    ReplyDelete
  5. நல்ல பதிவு....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  6. Colorful! Really feel nice to visit this blog.

    ReplyDelete
  7. விக்னேஸ்வரி ரூபத்தில் ஒரு படம் எங்கள் வீட்டில் இருக்கு.

    இங்கே விநாயகி என்ற பெண்பாலுடன் தகவல்கள் நிறைய அரியத்தகவல்கள்... அருமை அருமை....

    படங்கள் அற்புதமாக இருக்கிறது... விநாயகர் பெண்பாலுக்கான பெயர்கள் அத்தனையும் அழகாக இருக்கிறது...

    அத்தனை வித விதமான படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது..

    படர்ந்த விநாயகர் ரூபம்...

    மரத்தில் விநாயகர்....

    சுவற்றில் விநாயகி கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் அழகிய கோலம்...

    இரட்டை விநாயகர்...

    அடேங்கப்பா கண்பதி பப்பா மோரியா எவ்ளோ கூட்டம்....

    ஆதி விநாயகர் நாங்கள் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் கண்டோம். அதாவது விநாயகர் தலை கொய்யுமுன் எல்லோரையும் போலவே இருக்கும் மனித முகத்துடன்....

    மிக மிக அழகிய பகிர்வு ராஜராஜேஸ்வரிம்மா... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

    ReplyDelete
  8. விநாயகி பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நல்லதோர் பகிர்வு.

    ReplyDelete
  9. பல விஷயங்களை உன்னிப்பாய் கவனிப்பதும், அதனை தகுந்த நேரத்தில் கோர்வையாய் தருவதும் தங்களுக்கே உரிய கைவண்ணம்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! தங்களின் கைவண்ணத்தில் மற்றுமொரு வண்ணமிகு அழகிய பகிர்வு. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete

  10. கற்பனைத் திறனும் கை வண்ணமுமிருப்பவர் இஷ்டப்ப்டி வனைய வளைந்து கொடுக்கும் விநாயகர்வழிபாடு தமிழகத்தில் தனிப்பட்ட முறையில் இருந்தது. இப்போது மற்ற மாநிலத்தவர் போல் கூட்டு வழிபாடு ( கம்யூனிடி ப்ரேயர்ஸ் ) துவங்கி விட்டது. விநாயகி தகவல் தெரியாது. தெரிவித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. விநாயகி - புதிதாக விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

    படங்களும் அருமை!

    ReplyDelete
  12. மிக்க நன்றி! விநாயகி குறித்த தகவலுக்கு!

    ReplyDelete
  13. விநாயகி பற்றிய செய்திகள் அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  14. பாரதி கண்ணனை காதலனாகவும் (கண்ணன் பாட்டு) காதலியாகவும் (கண்ணம்மா பாட்டு) நினைந்து பாடியதைப் போன்று விநாயகனை விநாயகியாக்கி வழிபட்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. புதிய செய்தி. நன்றி!

    ReplyDelete
  15. கணேசினி பற்றிய தகவல்கள் புதியவை எனக்கு.விநாயகரைப் பெண்வடிவில் வணங்கிய தகவல்களும் இதுவரை அறிந்திராதவை. பல அரிய செய்திகளை அற்புதமான படங்களுடன் பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. Ariiya aacharya thagaval ! Kankavar pandangal !

    ReplyDelete
  17. விநாயகரும் நீயே !
    விநாயகியும் நீயே !!

    மொத்தத்தில்
    எல்லாமே நீயே !!!

    படங்கள் எல்லாமே மிகவும் கவர்ச்சியாக உள்ளன.

    விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்..

    ReplyDelete