ஸ்வாமி தேசிகன் தம்முடைய ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் பாதுகையின் பெருமையை மஹாலக்ஷ்மியுடன் ஒப்பிடும் போது -
“பத்மேவ மங்கள ஸரித்பாரம் ஸம்ஸார ஸந்ததே:|
துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:||”
துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:||”
“பாதுகையானது பிராட்டியைப் போன்றது. எப்படியென்றால், ஆற்றுவெள்ளம் போன்று சுபங்களைப் பெருகச் செய்வதில், ஸம்சார சங்கிலியை அறுப்பதில், பாபங்களைப் போக்குவதில் இணையானது” என்கிறார்.
இத்தனை பெருமைகளையும் சக்திகளையும் தன்னகத்தே கொண்ட இந்த மஹாலக்ஷ்மியை, மக்கள் தங்கள், தங்கள் விருப்பம் பூர்த்தியடைய, எண் வகைச் செல்வங்களையும் பெற்று மகிழ உபாஸிக்கிறார்கள்.
பாதுகா ஸகஸ்ரம் -புஷ்ப பத்ததி
இரத்தினக்கற்களால் பதிக்கப் பெற்ற பாதுகையே! உயர்ந்த ஐச்வர்யம் விரும்புவர்கள் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை உன்னிடம் சமர்ப்பித்து விட்டால் போதுமானது.
திருவரங்கன் ஸஞ்சாரம் செய்யும்போது அவன் மீது பூமாரி பொழிந்தபடி உள்ள மலர்கள் அவனது திருவடிகளில் உள்ள பாதுகையைச் சென்று அடைகின்றன.
அத்தகைய பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.
பூக்களால் பூஜிக்கப்பட்ட படமும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாதுகை படமும் மிகவும் அருமை...
ReplyDeleteநன்றி அம்மா...
பாத பூஜை பவித்திரமானது.
ReplyDeleteஇப்படி கோயிலுக்கு போய் படம் எடுத்து போட்டு நல்ல தகவல்களை தரும் நீங்கள் அடுத்த தடவை கோயிலுக்கு போகும் போது எங்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா
ReplyDeleteVery nice photos
ReplyDelete
ReplyDeleteகடவுளர்களின் திரு உருவப் படத்தை வரையும்போது பாதங்களில் இருந்து துவக்குவது என்னை அறியாமல் வந்து விட்ட பழக்கம். பதிவு சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
"உயர்வற உயர்நலம்" - இது எங்க ஸ்கூல்ல பிரேயர் சாங்'ஆ இருந்தது. தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் பாடுவோம். கண்ணுக்கு இனிமையான படங்கள், நன்றி
ReplyDeleteவழக்கம் போல் அருமை.
ReplyDeleteஇந்தப் பூக்களில் ஒன்றாகப் பிறந்திருக்கக் கூடாதா..?!
ReplyDeleteஉயர்வற உயர்நலம் உடையவன்
ReplyDeleteஉயர்ந்த தரமான பதிவு.
சிறிய பதிவாயினும் மிகச்சிறந்த பதிவு.
>>>>
காட்டியுள்ள ஐந்து படங்களும் பஞ்ச ரத்தினங்களாக மிகச்சிறப்பாக உள்ளன.
ReplyDeleteஅதுவும் முதல் படமும் அந்த கடைசி படத்தில் உள்ள பாதுகையும் மிகவும் அழகோ அழகு.
வைத்தகண் வாங்காமல் நீண்ட நேரம் பார்த்து ரஸித்து மகிழ்ந்தேன்.
RICH / RICHER / RICHEST PHOTOS.
YOU CAN ONLY SUPPLY THESE EXCELLENT PICTURES ;)))))
>>>>>>
இரண்டு அல்லது மூன்று துளஸி இலைகளை அவர் திருவடிகளில் சமர்பித்தால் போதும், நேரிடையாக இந்திரப்பதவியையே அடைய முடியும்!
ReplyDeleteகேட்கவே மிகவும் சந்தோஷமாகவும், மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும், இருக்குதுங்க.
எனக்கு இந்திரப்பதவி கூட வேண்டாம்.
உங்களின் பதிவுகளை அன்றாடம் படித்து ரஸித்து, ஏதாவது அதைப்பற்றி சற்றேனும் சிந்தித்து, கருத்துக்கள் கூற, அந்த எம்பெருமான் கிருபை செய்தால் அதுவே எனக்குப் போதும்.
அதில் கிடைக்கும் சந்தோஷம், இந்திரப்பதவியில் கூட கிடைக்க முடியாது என்பது என் நம்பிக்கை.
அழகான பதிவுக்கு பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
ooooo