திருவிழாவினால் பெருமைபெற்ற வரகூர் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தமான தனிச்சிறப்புடையதாகும்.
வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்.
காஞ்சிப் பெரியவர் “ஒவ்வொருவரும் அவரவர் ஊரின் கோயிலுக்குத் தங்கள் ஒரு மாத ஊதியத்தைத் தருவதற்கு முன்வந்தால் வறுமையில் வாடும் பல கோயில்கள் புது வாழ்வு பெறும்; வளமும் சேரும்” என்று வரகூர் மக்களைப் பாராட்டினாராம்.
வேலை கிடைத்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் இவ்வூர் இளைஞர்கள் தங்கள் முதல் மாதச் சம்பளத்தை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக் கின்றது
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் அதாவது காயத்திரி ஜபத்தன்று தொடங்கிப் பத்து நாட்கள் விழா நடைபெறும்.
உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரப்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக கோயில் உத்சவமூர்த்தி வீதி உலா வருவார். (நவநீதம் என்றால் வெண்ணை.)
பின்னால் சதுர்வேத பாராயணமும், பாகவதர்களின் நாமசங்கீர்த்தனமும் தொடரும்.
அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் புஷ்பாலங்காரத்தில் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமும், உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு காலில் சலங்கையுமாய் ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும்.
அடுத்து பாகவதர்கள் நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணிப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருவார்கள்.
இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள்.
பெருமாள் கிருஷ்ணர் வடிவில் வந்து காட்சி அள்ளித்ததால் கிருஷ்ணருக்குப் பிடித்தமான உரியடி திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்
வரகூரிலுள்ள மக்கள் ஸ்வயம்புவாகத் தோன்றிய வெங்கடேசப் பெருமாளைத்தான் தங்கள் குல தெய்வமாகக் கொண்டுள்ளனர்.
பூலோக வைகுண்டம் என்று சிறப்பிக்கப்படும் ஆலயத்தில் உள்ள மூலவர் தனது மடியில் தாயாரை அமர்த்திக் கொண்ட கோலத்தில் அருள் பொழிகிறார்..
உஞ்சவிருத்தி, முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற
சம்பிரதாயங்களுடன் ருக்மிணி கல்யாணம் நடைபெறும்.
உற்சவ மூர்த்தியுடன் ஆஞ்சநேயரையும் அமர்த்தி வீதி உலா வரச்செய்து பஜனை கோஷ்டி நாம சங்கீர்த்தனம் பாடிவர உறியடி உற்சவம் நிறைவுறும்.
இடையர் வேடமணிவது, உறியடி ஏறுவது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவையெல்லாம் வெறும் கேளிக்கையல்ல. கிருஷ்ணனின் அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவைகள்.
உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள் தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ் ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவதென்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.
கடவுளைக் காண்பது எளிதல்ல.
விடா முயற்சி கொண்டு, எத்தனை ஏமாற்றம் பெற்றாலும், அவர் நாமத்தை விடாமல் மனதில் உறுதியாகக் கொண்டால் கடவுளைக் காணலாம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கடவுளே உறி மீது கட்டப்பட்டு பொருள், வெண்ணை தடவிய கட்டை மீது எத்தனை வழுக்கினாலும் ஏறச் சென்று அல்லது தண்ணீரை பீச்சி அடித்து முகத்தை மறைத்தாலும், விடாமல் பலரது தோளின் மீது ஏறிச் சென்று, உறியை தட்டிப் பறிப்பதைப் போல, எந்த வழியிலாவது தீர்மானமாகச் சென்று கடவுளை அடைவதைக் காட்டும் நிகழ்ச்சியாக உறியடி விழா அமைந்து உள்ளது
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் -கிருஷ்ண ஜெயந்தி நாளில் சிறப்பான படைப்பு..
ReplyDeleteபாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
படங்கள் அனைத்தும்
ReplyDeleteஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என்று
சாட்சாத் கண்ண பெருமானை
கண்முன் கொணர்ந்து தரிசிக்கவைக்கின்றன
சிறப்புப் பாராட்டுக்கள் அம்மா !
விடா முயற்சி கொண்டு, எத்தனை ஏமாற்றம் பெற்றாலும், அவர் நாமத்தை விடாமல் மனதில் உறுதியாகக் கொண்டால் கடவுளைக் காணலாம் என்னும் உயர்ந்த தத்துவத்தை உறியடி மூலம் தத்துவார்த்தமாக விளக்கி தெளிவாக்கும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமையிலும் அருமை !!!.அனைவருக்கும் இந்நாள் பொன்னாளாக அமைய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
ReplyDeleteவரகூர் மக்கள் முதல் மாத சம்பளத்தை கோவிலுக்கு தரும் செய்தி புதியது! நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
என் கண்கள் பனித்தன! எம் கண்ணன் பதிவு என்றாலே மனம் ஆனந்தக்கூத்தாடும்! நெஞ்சு நிறைந்த நல்வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteகிருஷ்ணார்ப்பணம்
ReplyDeleteகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
ReplyDeleteகிருஷ்ன ஜயந்தி வாழ்த்துகள் படங்களும் பதிவும் நல்லா இருக்கு
ReplyDeleteகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அம்மா...
கண்ணன் படங்கள் அருமை. நன்றி.
ReplyDeleteமிகவும் அருமை....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பூலோக வைகுண்டமான வரஹூர் பெருமாளைப்பற்றி எழுதியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் அழகோ அழகு.
விளக்கங்கள் யாவும் படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன.
உறியடி தத்துவ விளக்கம் வெகு அருமை.
மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்! ;)))))
Eхcellent, what a weblog it is! This webpagе ргoviԁeѕ useful data to us,
ReplyDeletekeеp it up.
Tаkе a looκ at mу weblοg diet supplements