1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்தில் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர்.
அன்பெனும் அட்சய பாத்திரத்தை நெஞ்சில் ஏந்தி உலகிற்கு அள்ளி வழங்கிய ஞான வள்ளல் ,பேரறிவாளர் விவேகானந்தர் - காவி உடுத்திய கீழை நாட்டுத் துறவி,- மேலை நாட்டினரின் மனங்களை " Sisters and Brothers of America " என்ற ஐந்தே ஐந்து சொற்களின் மூலம் வென்று,பிற மதங்களை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற இந்துப் பண்புகளை உரத்து முழங்கினர் ...
பிரிவினை வாதத்திற்கும் மதவெறிக்கும் அழிவுக்காலம் வந்து விட்டது , எழுமின்;விழிமின்;ஓயாது உழைமின் என்றுஅறுதியிட்டு அறிவித்தார் அந்த நிகழ்வில். ...
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் 2008 ஆம் ஆண்டு முதல்
செப்டம்பர் 11 உலக சகோதரத்துவ தினமாக அனுசரிக்கிறது.
செப்டம்பர் 11ம் தேதி , உலக மகாகவியான பாரதியார் நினைவு நாள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை
பாரதியார் தன்னுடைய கடமையாக,
""நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
""பைந்தமிழ்த்தேர்ப்பாகன்,
அவனொரு செந்தமிழ்த்தேனீ,
சிந்துக்குத் தந்தை'' என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியார் தன்னுடைய கடமையாக,
""நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 11ஆம் நாளன்றுதான் வீரத்துறவி விவேகானந்தர் பாரதத்தின் ஞானதீபத்தால் சர்வமதப் பேரவையில் ஒளிபெருகச் செய்தார்
விவேகானந்தரும் (1893 )
மகாத்மா காந்தியும் (1906)
மகாகவி பாரதியும் (1921) இந்நாளை புனிதப்படுத்தி இருக்கிறார்கள்.
‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாடிய பாரதியும், அஹிம்சையை ஆயுதமாக்கிய மகாத்மா காந்தியும்,
‘அனைவரும் சகோதரர்கள்’ என்று உணர்த்திய சுவாமி விவேகானந்தரும் விரும்பியது உலக நன்மையைத்தான் ....
உலக சகோதரத்துவ தினமாகக் கொண்டாடப்பட
அனைத்து தகுதியும் கொண்டது செப்டம்பர் 11 ...
அனைத்து தகுதியும் கொண்டது செப்டம்பர் 11 ...
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_29.html
வீரத்துறவி விவேகானந்தரையும் மீசைக் கவிஞன் பாரதியையும் ஒரே நேரத்தில் நினைவில் கொணர்ந்த தங்களுக்கு நன்றி!
ReplyDeleteசிக்காகோ மாநாட்டை மறந்து போயிருந்தேன் நினைவு படுதியமிக்கு நன்றி... விவேகானதரின் தத்ரூபமான சிலை அருமை... பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது
ReplyDeleteஆஹா நல்ல பகிர்வு
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி !!.நல்லோரை நினைவு கூர்ந்து இன் நன்னாளில் சகோதரத்துவமும் மேலும் வலுப்பெற வாழ்த்துக்கள் இது அனைவரையும் சென்றடையட்டும் .மிக்க நன்றி அழகிய
ReplyDeleteபடைபிற்கு .
மீசைகவியையும், விவேகானந்தரையும் ஒருசேர நினைவுப்படுத்திய தங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅரும்பு மீசையுடன்.. அது சுவாமிஜி தானா?
ReplyDeleteஇதுவரை இந்த படத்தை பார்த்ததில்லை!
சிறப்பான பகிர்வு... மிக்க நன்றி அம்மா...
ReplyDelete(தொழிற்களத்திலும் கருத்திட்டேன்...)
தேசிய கவியையும்! விவேகானந்தரையும் சிறப்பித்த பதிவு சிறப்பு! படங்கள் அனைத்தும் ரசிக்கவைத்தன!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
தகவல்களைத் திரட்டு மணம் வீசும் மலர்மாலை போல தொடுத்து, அணிவித்து சகோதரத்துவத்தினை வலிமைபடுத்தி, பகிர்ந்தவிதம் பெருமைக்குரிய ஒன்று! எழுச்சியூட்டும் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி!
ReplyDeleteஅருமையான அழகான பகிர்வு.
ReplyDeleteதெரிந்தோ தெரியமலோ கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தினை எனது "நாஞ்சில் மணம்" என்ற பதிவில் போட்டிருந்தேன்."நாஞ்சில் மணம்"
ReplyDeleteஇறுதியில் பூக்கள் படம் சூப்பர்
ReplyDeleteஇருவரையும் போற்றும் பகிர்வு அருமை.
ReplyDeleteஉலக சகோதரத்துவ தினம் பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteதகவல்கள் அத்தனையும் சிறப்பாக உள்ளன.
கடைசி இரண்டு படங்களும் மனதைக்கொள்ளை கொள்வதாக உள்ளன. A1 EXCELLENT PICTURES ;)))))
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.