Tuesday, September 18, 2012

பொல்லாப்பிள்ளையார்

http://www.englishgraphic.com/wp-content/uploads/2011/12/ganeshaanimated.gif

கணபதி என்றிட கலங்கும் வல்வினை 
கணபதி என்றிட காலனும் கை தொழும் 
கணபதி என்றிட கருமம் ஆதலால் 
கணபதி என்றிட கவலை தீருமே ! 


 நல்லவர் ஒருவர் இருந்தால், அவருக்காக பெய்யும் மழை, ஊருக்கே பயன்படும் என்று வள்ளுவர் சொல்வது போல, நம்பியாண்டார் நம்பியின் நற்செயலால், காலத்தால் அழியாத தேவாரம் நம்க்குக் கிடைத்தது ...
http://sprasanth.wen.ru/wallpapers/Ganapati.gif
சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூர் கிராமத்தில் சிவாலயத்தில் அருள்பாலிக்கும், “பொல்லாப்பிள்ளையார்’ பிரசித்தி பெற்றவர் ,
http://img1.dinamalar.com/kovilimages/news/SN_110830125001000000.jpg
“பொள்ளா’ என்றால், “தானாகத் தோன்றுதல்!’ அதாவது, சிற்பிகளால் செதுக்கப்படாமல், சுயம்புவாகவே தோன்றியவர் இவர். பொள்ளாப்பிள்ளையார் என்பதே, “பொல்லா’ என திரிந்து விட்டது.பொல்லாதவர் என்பது இதன் பொருளல்ல.


 நம்பியாண்டார் நம்பி.இறைவனையே ஆட்கொண்டவர் ...

 பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்தார். “தும்பியே! சாப்பிடு…’ என்றார். பிள்ளையார் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. நீண்டநேரம் போராடினார். அவர் சாப்பிடாததால், “நீ சாப்பிடாவிட்டால் நான் இறப்பேன்…’ எனச் சொல்லி, கருவறைச் சுவரில் தலையை மோதினார்.

கருணையுள்ள பிள்ளையார், அதற்கு மேல் சோதிக்காமல், சாப்பிட ஆரம்பித்தார். மகிழ்ந்தார் நம்பி. ஊரார் இதை நம்ப மறுக்கவே, அவர்கள் முன்னிலையிலும், இந்த அதிசயம் நிகழச் செய்தார்.

சோழநாட்டை ஆண்டராஜராஜசோழ மன்னன்அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரம் எங்கே முடங்கியிருக்கும் என ஆய்வு செய்தான்.பிள்ளையாரிடமே பேசும் நம்பியாண்டார் நம்பியை பற்றிக் கேள்விப்பட்டு, திருநாரையூருக்கே வந்து அவரை சந்தித்தான். விஷயத்தைச் சொன்னதும், நம்பி அதுபற்றி பிள்ளையாரிடம் கேட்டான்.


“சிதம்பரம் நடராஜர் சன்னிதியின் அருகிலுள்ள அறையில் சுவடிகள் உள்ளன. அந்த அறை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது. அறையைத் திறந்து எடுத்துக் கொள்ளுங்கள்…’ என்றார்.
ராஜராஜனும் சிதம்பரம் சென்று, அங்கிருந்தோர் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அறைக்கதவை திறந்தான். லட்சத்திற்கு அதிகமான பதிகங்களை மூவரும் பாடியிருந்தனர். ஆனால், 796 பதிகங்களைத் தவிர, மற்றவை எல்லாம் செல்லரித்துப் போயிருந்தன.

 இனி வரும் காலங்களில் இந்தளவு பாடல்களைப் படிக்கவே யாரும் முன்வர மாட்டர். எனவே தான், தெய்வ சங்கல்பத்தால் இப்படி ஏற்பட்டது. மேலும், ஒருவர் பிறப்பற்ற நிலை அடைய, இந்த பதிகங்களே போதும்…’ என்றது அசரீரி.
ராஜராஜன் மகிழ்ச்சியுடன் சுவடிகளை அள்ளி வந்தான். நம்பியாண்டார் நம்பியிடம் அவற்றை ஒப்படைத்து, பாடல்களைத் தொகுத்து தரும்படி வேண்டிக் கொண்டான்.
  திருமுறைகளாக தொகுத்துத்தந்தார் நம்பியாண்டார் நம்பி ...

 



http://www.oocities.org/ggavaska/banyan-ganesh.gifhttp://www.commentsguru.com/images/ganeshchaturthi/ganesh_chaturthi_graphics.gif

17 comments:

  1. வெறும் 796 பதிகங்கள் மட்டும்தான் கிடைத்ததா.... ம்ம்ம்... முழுவதும் கிடைத்திருந்தால்....

    நல்ல பகிர்வு... படங்களும் அருமை.

    ReplyDelete
  2. முதல் ஆறு படங்கள் கண்ணைப் பறித்து ஜொலிக்கின்றன.

    ReplyDelete
  3. பொல்லாப் பிள்ளையாரின் விளக்கம் தெரிந்து கொண்டேன். மற்ற தகவல்களும் படங்களும் எப்போதும் போல் சிறப்பு, பிளையாரை எனக்கு எப்போதும் பிடிக்கும்.
    பாலும் தெளிதேனும் என்ற அவ்வையின் செய்யுள் சிறு வயதிலிருந்து என்னை கவர்ந்ததுண்டு.

    ReplyDelete
  4. மிக அருமையான பகிர்வு..... அருமையான படங்களும் கூட........


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு.

    ReplyDelete

  6. படங்களும் பதிவும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. படங்களும் பகிர்வும் மிகவும் அருமை அம்மா...

    நன்றி...

    ReplyDelete
  8. "இனி வரும் காலங்களில் இந்தளவு பாடல்களைப் படிக்கவே யாரும் முன்வர மாட்டர். எனவே தான்,..."

    உண்மைதான். அனால் கிடத்தது மிகவும் அரிதான பாடல்கள்.
    "ஸதுர்த்தி வாழ்த்துக்கள்"

    ReplyDelete
  9. கண்கவர் வண்ணப் பதிவு!
    எல்லாரும் எல்லாமும் பெற கண நாதன் அருள்புரிய பிரார்த்திக்கின்றேன்! இனிய சகோதரிக்கு ஸ்பெஷல் பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  10. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
    அருமையான படங்கள். அழகாய் தொகுத்த பொல்லாபிள்ளையார் செய்திகள். எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
    அருமையான படங்கள். அழகாய் தொகுத்த பொல்லாபிள்ளையார் செய்திகள். எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. படங்களும் பகிர்வும் அருமை.

    பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மேடம் .

    ReplyDelete
  14. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மேடம் .

    ReplyDelete
  15. சில பேர் விநாயக சதுர்த்தியன்னிக்கு 108 கணபதி பார்க்கணும்பாங்க.. இந்த சைட் முகவரி கொடுத்து அனுப்பணும். :-)
    நல்ல பதிவு.

    ReplyDelete
  16. பொல்லாப்பிள்ளையார் என்ற இந்தப்பதிவு அருமை.

    மொத்தத்தில் பொல்லாத பிள்ளையார் தான்.

    கீழிருந்து மூன்றாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    வழக்கப்படி எல்லாமே அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள்.


    ReplyDelete