"அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடஅருகில் சென்றுகண்டுகொண்டேன்வருவார் தலையில்.
வடஅருகில் சென்றுகண்டுகொண்டேன்வருவார் தலையில்.
தடபடெனக் குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கட தட கும்பக் களிற்றுக்கிளைய களிற்றினையே
"ஆடக விசித்ர கன கோபுர முகப்பில்
அருணாபுரியில் நிற்கும் அடையாளக்கரனும்"
வாரணத்தானை அயனைவிண்ணோரை மலர்க்கரத்து
வாரணத்தானை மகத்துவவென்றோன் மைந்தனை துவஜ
வாரணத்தானைதுணை நயந்தானை வயல் அருணை
வாரணத்தானை திறை கொண்டயானையை வாழ்த்துவனே.
"ஜெய ஜெய அருணாத்திரி. சிவய நம"
ஜெய ஜெய அருணாத்திரித்னின் விழி வைத்து.
ஹர ஹர சரணாத்திரி என உருகி
ஜெய ஜெய குரு பாக்கியம் என மருவிச் சுடர்தாளை.
சிவ சிவ சரணாத்திரி ஜெய ஜெயென.
சரண் மிசை தொழுதேத்திய சுவை பெருக.
திருவடி சிவ வாக்கிய கடலமுதைக் குடியேனோ"
இறைவனது இடப்பாகத்தைப் பெற விரும்பிய பார்வதி தேவி இறைவன் ஆணைப்படி திருவண்ணாமலைக்குத் தவம் செய்ய வந்தாள்...
"திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடிதலை தெரியாப்படி நிண அருண சிவசுடர் சிகிநாட்டவன்" அருளால் தவத்தில் வெற்றியும் கிடைத்தது..
அண்ணாமலையில் பூத உடலை விட்டுவிட்டு கிளிரூபத்தில் இந்திரலோகம் சென்றவர் திரும்பி வருவதற்கு முன் அருணகிரி இறந்துவிட்டார் என்று கூறி அவரது உடலைத் தகனம் செய்துவிட்டார் சம்பந்தாண்டார்...
பாரிஜாதத்தை பூமிக்குக் கொண்டுவந்த அருணகிரியார் நடந்ததைக் கேள்வியுற்று இருவினைக்குக் காரணமான இப்பூத உடலை இறைவன் எடுத்துக் கொண்டு விட்டதை எண்ணி மகிழ்ந்து கிளி ரூபத்தில் இருந்து கொண்டு
கந்தர் அனுபூதி எனும் மஹாமந்த்ர நூலைப் பாடினார் .....
பௌதிக உடம்பை மாற்றி இந்த உலகம் என்ற நினைவு இல்லாத சுகசொரூபமாக நின்ற பொழுது இறைவனுடைய மயமான ஒரு நிலையில். பசுகரணங்களெல்லாம் மாறிப் பதிகரணம் ஆன பொழுது பாடிய பாட்டு
கந்தர் அனுபூதி"
ஆடும் பரி. வேல். அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்" என்று அனுபூதி வரிகளைப் பாடிய வண்ணம் கிளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது. ‘யானை திறை கொண்ட விநாயகர்' நம் கவனத்தை ஈர்க்கிறார்.
கிளிக்கோபுர வாயிலின், வலப்புறம் அழகுற அமைந்துள்ளது, ஸ்ரீயானைதிறை கொண்ட விநாயகர் சந்நிதி.
அருள்மழை பொழியும் கற்பக விருட்சமாய் அருள்பாலிக்கிறார் கணபதி.
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து மனதார வழிபட, வேண்டிய வரம் சடுதியில் கிடைக்குமாம்.
"யானை திறை கொண்டவனை என்னுள்ளத்தே கொண்டு"
என்று சோணாசலமாலைக் காப்புச் செய்யுளும் வணங்கும். "
வயல் அருணை வாரணத்தானைத் திறை கொண்ட யானை" என்று கந்தரந்தாதிச் செய்யுளும் குறிப்பிடுகின்றன.
ஆனை திறை கொண்ட யானை’ என்றால்,
கப்பம் பெற்ற யானை என்று பொருள்
ஒரு காலத்தில் முகிலன் எனும் அரசன், பொது மக்களுக்கும் அடியவர்களுக்கும் மிகுந்த கொடுமைகளைச் செய்ய துன்பப்பட்ட மக்கள், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயர் எனும் அருளாளரிடம் முறையிட்டனர்.
மல்லிகார்ச்சுனம் எனும் ஸ்ரீசைலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எழுந்தருளி, அங்குள்ள குகையன்றில் தவம் புரிந்தவர் குகை நமசிவாயர். அருளிய நூல், ‘அருணகிரி அந்தாதி’!!.
குகை நமசிவாயர், அடியவர்களின் துன்பம் தீர அருள்புரியுமாறு அருணாசலேஸ்வரரை வேண்டினார்;
"சூலம் கரத்திருக்க. சோதி மழுவாளிருக்க
ஆலமுண்ட காலத்தருள் இருக்க மேலே
எரித்த விழியிருக்க. இந்நாட் சோணேசர்
தரித்ததென்ன காரணமோ தாம்."
‘ கையில் சூலம் இருக்க,
பிரகாசிக்கும் மழு- வாள் இருக்க,
ஆலகால விஷம் உண்ட (அனுக்ரக) அருள் இருக்க,
இப்போது சோணேசர் இந்தக் கொடுமையை சகித்து (பொறுத்து)க் கொண்டிருக்க காரணம் என்ன?’ எனும் பொருள் அமைந்த பாடலைப் பாடினார்.
இறைவன், தன்னுடைய மூத்த புதல்வனாகிய யானை முகத்தானுக்கு ஆணையிட்டார். அன்றிரவே, யானை வடிவாகச் சென்று முகிலனைப் பய முறுத்தினார் விநாயகர்.
தன் பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினான் முகிலன்.
கருணை கொண்ட கணேசமூர்த்திக்கு திறையாக (கப்பமாக) சில யானைகளையும் அளித்தான். இதனால், திருவண்ணாமலை கோயிலில் அருளும் ஸ்ரீவிநாயகருக்கு, யானைத் திறை கொண்டவர் எனும் திருப்பெயர் வந்தது.
தடபடெனக் குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
ReplyDeleteகட தட கும்பக் களிற்றுக்கிளைய களிற்றினையே//
கிரிவலப்பாதையில் கம்பீரமாக கடைகளில் ஒலிக்கும் சுகி.சிவம் அவர்களின் குரலில் குகை நமச்சிவாயர் பற்றிய உரை மனதில் ஒலிக்க, தங்கள் பதிவால் அவர் தாத்பர்யத்தை முழுமையாக அறிய முடிந்தது.
அண்ணாமலை பற்றிய படங்களும்
ReplyDeleteவினாயகர் பற்றிய செய்யுள்களும் குட்டிக் கதைகளின் விளக்கங்களும் அருமை.
\\\ஆனை திறை கொண்ட யானை’///
ReplyDeleteவிளக்கம் அறிந்து மெய் சிலிர்த்தேன்.
உள்ளம் நெகிழ்த்திய பதிவு. நன்றி மேடம்
எங்கேந்துதான் தகவல்கள் திறட்டுரீங்களோ பிரமிப்பாதான் இருக்கு
ReplyDeleteகிளி ரூபத்தில் இருந்து அருணகிரியார் பாடிய ” கந்தரநுபூதி” மற்றும் ” ஆனை திறை கொண்ட யானை” பற்றிய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி!
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteஎத்தனை எத்தனை அறியாத தகவல்கள்... அறிந்து கொண்டேன்... நன்றி அம்மா...
ReplyDeletesuperb
ReplyDeletedescription
thanks a lot
subbu rathinam
அருமையானதோர் பதிவு.
ReplyDeleteசுகப்பிரம்மரிஷி கூட கிளிரூபத்தில் இருந்து இறைவனைத்தொழுதார். இருவரும் ஒருவர் தானோ!
ReplyDeleteசந்திர வம்சம் said...
ReplyDeleteசுகப்பிரம்மரிஷி கூட கிளிரூபத்தில் இருந்து இறைவனைத்தொழுதார். இருவரும் ஒருவர் தானோ!//
சுகப்பிரம்ம ரிஷி வியாச மகரிஷியின் புதல்வர் ...மனித உருவமும் கிளியின் தலையும் கொண்டவர்...
அருணகிரிநாதர் தன் பூத உடல் சம்பந்தாண்டாரால் தந்திரமாக எரிக்கப்பட்டதும் , கிளியின் உடலில் புகுந்து கந்தரனுபூதி பாடினவர்...
இருவரும் வேறு வேறு ...
@ Blogger சந்திர வம்சம் said... //
ReplyDeletePlease Read :
http://jaghamani.blogspot.com/2012/06/blog-post_9483.html
ஞானக்குழந்தை சுகபிரம்ம ரிஷி
அகத்தையும்,புறத்தையும் சிலிர்க்க வைத்த தகவல்கள்.பார்த்த உடன் பரவசப்பட வைக்கும் படங்களுடன்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
"ஆனை திறை கொண்ட யானை" விளக்கங்கள் பெற்றோம்.
ReplyDeleteவிநாயக சதுர்த்தி நெருங்கும் வேளையில் நல்லதொரு பதிவு! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html
உடன் சந்தேகத்தை தீர்த்தமைக்கு நன்றி
ReplyDeleteஅழகிய புகைப்படங்களுடன் பெயர்க்காரணம் போன்ற பல அரிய தகவல்களுடன் மிக நன்றாக இருக்கிறது இப்பதிவு.
ReplyDeleteமிகவும் அருமை....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
யானைகளைக் கப்பமாகப்பெற்ற யானை முகத்தானின் கதையை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஅருணகிரியார், கிளி ரூபத்தில் இயற்றிய கந்தர் அனுபூதி கதையையும் மிகவும் சுவாரஸ்யமாகவே சொல்லியுள்ளீர்கள்.
ப்டங்கள் எல்லாமே வழக்கம்போல அழகு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.