தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள்ளமுதே
அநித்தமறத் திருப்பொதுவில் விளங்கு நடத் தரசே
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கணிந் தருளே.
இராமலிங்க அடிகள் இனித்திடும் தெள்ளமுதான இறைவனைப் போற்றிய பாடல் நமக்கு இன்சுவை விருந்தாகத் தித்திக்கிறது..
தாயிற் சிறந்த தயாபரனான சிவபெருமான் கோடிகோடி சூரிய பிரகாசம் பொருந்தியவன் ..
இதய ஆகாசத்தில் - சைதன்ய சொருபமாய் ஒளிர்பவன்..,
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.
நடராச பெருமானின் திருவுருவில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம்
இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே நீடிய வேதம் தேடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம் சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே அம்பலத் தமுதே அம்பலத் தமுதே
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்
ஸ்ரீ நடராஜா பெருமானின் பூஜையில் அணிவிக்கப்படும்
ஸ்ரீ குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்.டு நடராஜ பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது..
குஞ்சித பாதத்தை தரிசித்தால் நோய் அகலும் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்..
காஞ்சி மகாபெரியவர் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை பூஜையில் அணிவிக்கப்படும் பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்துடன் தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார்...
மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர், காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து, தலையில் வைத்துக்கொண்டார்.
குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. "தேடி வந்த சிதம்பரம்' படத்தை வணங்கி நற்பலன் பெறலாம்...
தாண்டவ சபையின் எல்லையிலே கோலங்கள் காட்டும் குஞ்சித பாதம்
கொள்ளை கொள்வது தில்லையிலே
அம்பலம் நடுவே அசைகிற அசைவே அண்டம் அசைவதன் ரகசியமாம்
செம்பொன் கூரையில் செங்கதிர் உதிக்கும்
சிதம்பரம் ஒன்றே நிரந்தரமாம் இத்தில்லைத் தலத்தின் பெருமையை அந்த ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதி சேஷனாலும் கூற முடியாது
நடைபெறும்
ReplyDelete2012 ஆம் ஆண்டில்
வெற்றிகரமாக
தாங்கள் தந்துள்ள
தங்களின்
2 7 5 ஆவது பதிவுக்கு
என் மனமார்ந்த
பா ரா ட் டு க் க ள் !
அன்பான
வா ழ் த் து க ள் !!.
தங்களின் அனைத்துப் பதிவுகளுமே
தித்திக்கும் தெள்ளமுது தான் !!!
ஆரம்ப வரிகளான
ReplyDelete//தனித் தனி முக்கனிப் பிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின்
பொடியுமிகக் கலந்தே//
முக்கனி + சர்க்கரை + கற்கண்டு கலவைபோல இனிக்கின்றன. ;)
தலைப்புக்கீழே
ReplyDeleteமூன்று
ஒன்று
ஒன்று
என [படங்கள் உள்ள] கட்டங்கள் மட்டுமே தெரிகின்றன.
அதற்குள் ஏதாவது படங்கள் இருந்து பிறகு திறக்கப்படுமோ என்னவோ தெரியவில்லை.
இப்போது காட்சியளிக்கும் முதல் படம் முரட்டு குண்டு மல்லிகை மாலையணிந்த் ஆடலரசர் நடராஜர்.
அடுத்தபடம் நம் சிவகாம சுந்தரியம்மா, முரட்டு மஞ்சள் மாலை + முரட்டு திருமாங்கல்யத்துடன்
வெகு ஜோராக ! ;)))))
இப்போது ஒருசில நாட்களாகத் தங்கள் பதிவினில் உள்ள வரிகளை Copy & Paste செய்ய முடிகிறது.
ReplyDeleteஇது பின்னூட்டமிடும் எங்களுக்கு சற்றே செளகர்யமாக இருப்பினும்
வேறு யாராவது இதையே Copy & Paste செய்து Misuse செய்யக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்து விடுமே.
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
தங்களுக்கு தெரியுமோ தெரியாதோ என்பதால் தெரிவித்துள்ளேன்.
//ஸ்ரீ நடராஜா பெருமானின் பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்.டு நடராஜ பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது.
ReplyDeleteகுஞ்சித பாதத்தை தரிசித்தால் நோய் அகலும் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.//
அந்த மிகவும் விசேஷமான குஞ்சிதபாதம் [குண்டியூண்டு குழந்தையின் பாதங்கள்] போலவே மிகச்சிறப்பான தகவல் இது. ;)))))
தேடி வந்த ’சிதம்பரம்’ இன்று இந்தப்பதிவின் மூலம் எங்களைத்
ReplyDeleteதேடி வந்தது அதிசயம்.
மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)
சமீபத்தில் வேறு சில பதிவுகளில் பார்த்த படங்களே தான் என்றாலும், அவற்றை வேறொரு தலைப்பில் இன்று மீண்டும் திரும்பிப் பார்ப்பதில்,
ReplyDeleteமேலும் மேலும் மிகுந்த மகிழ்ச்சியும், பக்திப் பரவஸமும்,
சொல்லமுடியாத சந்தோஷமும்,
பரம ஆனந்தமுமே ஏற்படுகிறது.
அது தான்
”தித்திக்கும் தெள்ளமுது” என்பதா?
தொடரட்டும் தங்களின் இத்தகைய பரிசுத்தமான ஆன்மிகப்பணிகள்.
நான் திறக்கப்படாமல் இருப்பதாகச் சொன்ன ஐந்து கட்டங்களிலும் இப்போது படங்கள் திறந்து காட்சியளிக்கின்றன.
ReplyDeleteமுதல் மூன்று வரிசையா “ஓம்” என்ற பிரணவ மந்திரம்.
அவை அழகோ அழகாக அனிமேஷனில் தங்களைத் தாங்களே பிரதக்ஷணமாகச் சுற்றிக் கொண்டு ஜொலிக்கின்றன.
அடுத்தது குழந்தை வடிவில் சிவன்.
அது தான் சிவக்கொழுந்தோ!
மூன்றாவது படத்தில் இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜர். வலது பாதத்தால், அயோக்ய அசுரன் முயலவனை மிதித்துக்கொண்டு ...
சுற்றிலும் ரெளண்டாக திருவாசியுட்ன் அழகாக காட்டப்பட்டுள்ளது. ;)
அதுபோலவே கீழிருந்து ஏழாவது படம் [அனிமேஷன்] முன்பு மிகச்சிறிய கட்டமாக மட்டுமே இருந்து இப்போது தான் திறக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஅதுவும் நல்லாவே .... இருக்கு.
நீங்கள் எதுகாட்டினாலும் சூப்பராகத் தானே இருக்கும்!!!!
உங்களுக்கு மட்டும் இதுபோன்ற அருமையான அனிமேஷன் படங்கள் எங்கு தான் கிடைக்கின்றதோ! ;)))))
கடுமையாக .... மிகக்கடுமையாகவே ....
உழைக்கின்றீர்கள்.
ReplyDeleteஉங்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறேன் என்பதே என் பின்னூட்டம்.!
தித்திக்கும் பதிவு... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteVGK ஐயா என்னவெல்லாம் கவனிக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது... முக்கியமாக Copy & Paste விசயத்தை கவனிக்கவும்...
275 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete275 பதிவுக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபால சிவன் என்ன அழகு.. ஆஹா.. மனம் கொள்ளை போனது.
அம்பலத்தே ஆடும் இறைவன்! தில்லை நடராஜர் படங்கள் அருமை!
ReplyDeleteபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த ஆண்டில்275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேடிவந்த சிதம்பரம்’ செய்தி புதிது.
படங்கள் எல்லாம் அருமை.
வீட்டில் குழந்தைகள் வருகையால் உங்கள் பதிவுகளை தினம் தொடர முடியவில்லை.
முடிந்த போது தொடர்கிறேன்.
இந்த ஆண்டின் 275-ஆம் பதிவிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள்....
இவை அனைத்தும்
ReplyDeleteஇறை ஓவியங்களா !!
இல்லை என்
இதயத்தைத் திறக்க வல்ல
இசைக் காவியங்களா !!
ஆன்மீக ஒளி விளக்கேற்றி
அனைவரையும் கூட்டிச்செல்லும்
அன்புள்ளம் கொண்ட உங்களைப் பார்த்தால் எனக்கு
பெருமையாக இருக்கிறது.
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்.
எனும் வள்ளுவனின் குரலுக்கேற்ப
உங்கள் நட்பும் உங்கள் பதிவின் பார்வையுமே எங்களைப்
புனிதமாக்குகிறது.
சுப்பு ரத்தினம்.
அருமையான இறைவனின் இப்படங்களை கொஞ்சம் பதிவிறக்கிப் பயன்படுத்தி இன்புற அனுமதித்தால் தான் என்ன?
ReplyDeleteநன்றி..