ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகர்
ஐந்து கரத்தனை ஆனைமகத்தனை
இந்தியினிளம்பிறை போலுமெயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தனை
‘கலங்காமல் காத்த விநாயகரை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
பழமையான சிற்பங்கள் நிறைந்த தெற்குக் கோபுரத்தில் ஆலய வாயிலில் நுழைந்ததும் கலங்காமல் காத்த விநாயகர் சன்னதி ...
கஜமுகாசுரனால் தேவர்களுக்கேற்பட்ட இடுக்கண்களைக் களைந்து காத்தலால் ‘கலங்காமல் காத்த விநாயகர்’ என அழைக்கப்படுகிறார்.
கஜாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி விண்ணில் இருக்கும் அண்டத்தை காலால் உதைக்க அண்டச்சுவர் உடைந்து ஆகாசகங்கை பூலோகத்தை நோக்கி வந்தது.
உயிர்கள் அனைத்தும் மரண பயத்தால் கலங்கின. தேவர்கள் விநாயகரிடம் சரணடைந்தனர். கஜாசுரனைக் கொல்ல ஆயத்தமானார் விநாயகர். முதலில் பூலோகத்தைக் காக்க, கால்பெருவிரல் நகத்தால் அண்டச்சுவரில் ஏற்பட்ட துளையை அடைத்தார். ஆகாச கங்கை தடைபட்டது.
கஜாசுரனை ஒரே நொடியில் வீழ்த்தினார்.
கலக்கம் தீர்ந்த தேவர்கள் விநாயகரை பூஜித்து மகிழ்ந்தனர்.
தேவர்களின் கலக்கம் தீர்த்த "கலங்காமல் காத்த விநாயகர்' என பெயர் பெற்று குரு தலமான ஆலங்குடியில் (திருவாரூர் மாவட்டம்) அருள்பாலிக்கிறார். வழிபட்டால் மனக்கலக்கம், எதிரிபயம் நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.
ஆலகால விஷத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர்.
ஆபத்திலிருந்து காப்பாற்றியதனால் ஆபத்சகாயேஸ்வரர் ..
ஆலமாகிய விஷத்தை உண்டு அருள் புரிந்த‘ஆலங்குடி’ திருத்தலத்தில் அரவு தீண்டி மரித்தவர் யாரும் இல்லை என்பது சிறப்பு.
குருவே தட்சிணாமூர்த்தியாகவும், தட்சிணாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக அமைந்துள்ளது.
தேவர்களும் முனிவர்களும் சேவிக்கும் சுரகுருவை
மேவுசுடர்ப் பொன்போன்று மிகவும் ஒளிர்பவனை,
மூவுலகும் வணங்குகின்ற மூர்த்தியினை, ஈஸ்வரனை
யாவுமிக அறிந்தவனை யான்வணங்கிப் போற்றுகிறேன்.
asasththum padankal sirappu
ReplyDeleteகலங்காமல்
ReplyDeleteகாத்த
விநாயகருக்கு
என் அன்பான
நமஸ்காரங்கள்.
கடைசி படத்துக்கு முந்தய படத்தில் வெள்ளை வெளேர் என உள்ள தேய்காய் மூடிகளுக்கும், முழுத்தேங்காய்களுக்கும் இடையே காட்டப்பட்டுள்ள நம் பிள்ளையார் மிகவும் அருமையாக உள்ளார். ;)))))
ReplyDeleteகீழிருந்து ஐந்தாவது படத்தில் அழகான கோபுரமும், நுழைவாயிலில் மிகப்பிரகாசமாக எரியும் மின் விளக்கும் வெகு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteமோதகப்பிரியரை மோதகங்களாலயே மூழ்கடித்து திணற வெச்சுட்டீங்க. இத்தனையையும் எப்பத்தான் சாப்பிட்டு முடிப்பார். பத்தாக்குறைக்கு தேங்காய் அலங்காரமும் இருக்குது. அசத்த்தல்ங்க ..
ReplyDeleteகீழிருந்து ஆறாவது படத்தில் அதுபோலவே அழகான் கோபுரமும்,
ReplyDeleteகோபுரத்திற்கு நேர் வகிடு எடுத்தாற்போல, நிமிர்ந்து மிகவும் விரைப்பாக 90 டிகிரிக்கு மேல் நோக்கி எழும்பி நிற்கும் அந்த த்வஸ்தம்பமும், சுற்றி நின்று காத்திருக்கும் மக்கள் கூட்டமும், கோயில் சுவற்றில் அடித்துள்ள செம்மண் மற்றும் சுண்ணாம்புப் பட்டைகளிட்ட மதில் சுவரும் ....
அடடா, மிகவும் சூப்பர் கவரேஜ் தான்.
முதல் படம் இதுவரை திறக்கப்படாமல் சண்டித்தனம் செய்கிறது.
ReplyDeleteதிறந்த வரை மற்ற எல்லாப்படங்களும் வழக்கம்போல வெகு அருமையாகவே உள்ளன.
ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை
ReplyDeleteஇந்தியின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினை
‘கலங்காமல் காத்த விநாயகரை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
சிறிய சந்து கிடைத்தால், சந்தடிவாக்கில் ஏதோ ஒரு வரியையோ அல்லது படத்தையோ, அல்லது ஒரு அனிமேஷனையோ புகுத்தி விடுவதே தங்களின் தனிச்சிறப்பு.
அதுபோல மேலே உள்ள பாடலில் நான்காவது வரியினை புதிதாகப் புகுத்தி அசத்தியுள்ளீர்கள். ;)
//ஆலமாகிய விஷத்தை உண்டு அருள் புரிந்த‘ஆலங்குடி’ திருத்தலத்தில் அரவு தீண்டி மரித்தவர் யாரும் இல்லை என்பது சிறப்பு//
ReplyDeleteஅதிசயமான
அற்புதமான
அருமையானதோர் தகவல்.
அனைத்து ஊர்களிலும் உள்ள அரவங்களையும் பிடித்து ஆலங்குடிக்கே ஏற்றுமதிசெய்து அனுப்பி விடலாம் போலத் தோன்றுகிறதே ! ;)
ஆஹா! இப்போது முதல் படத்தினில் அழகாக நர்த்தன கணபதி டான்ஸ் ஆடி தரிஸனம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
ReplyDeleteஇப்போது அவர் என்னைக் கலங்காமல் காத்து விட்டார். ;)))))
ஒற்றைக்காலினை ஊன்றியமடி ஒய்யாரமான டான்ஸ்.
கைகள் இரண்டினில் மத்தளம்,
தலைமேல் இரு கைகளால் கோலாட்டம்.
சூப்பராக வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அவரின் துதிக்கையும் ஆடுகிறது.
கழுத்தினில் அழகான மாலை,
மஞ்சள் கலரில் பஞ்சக்கச்சம்? [சித்தி+புத்தியைத் திருமணம் செய்து கொண்டதாலோ?],
தோளினில் பச்சைக்கலரில் உத்திரீயம்.
படம் படா ஜோர்.
கூடவே எலியாரும் நன்கு ஆடுகிறார்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)
விநாயகச் சதுர்த்திக்கு 16 நாட்கள் இருக்கும் போதே, இன்று முதன் முதலாகப் பிள்ளையார்ப் பதிவுகள் துவங்கி விட்டன.
ReplyDeleteஇனி இந்த மாதம் பூராவும் ஒரே ஜாலி தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
என்னுடைய நான்காவது கமெண்டில்
ReplyDelete/த்வஸ்தம்பமும்/
எனத்தவறாக எழுதியுள்ளேன். அது
த்வஜஸ்தம்பமும்,
என இருக்க வேண்டும். மாற்றிப் படிக்கும் படி வேண்டுகிறேன்.
அவசரத்தில் ஏற்படும் இதுபோன்ற எழுத்துப்பிழைகளுக்கு வருந்துகிறேன்.
இந்தப்பதிவை பிள்ளையார் பார்த்தால் 19- ம்தேதி வரவேண்டியவர் இப்பவே ஓடி வந்துடுவார்
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்திக்கு இப்பவே கட்டியம் சொல்லும் பகிர்வு...
ReplyDeleteஎத்தனையெத்தனை அலங்காரங்கள்...! கிரியேட்டிவிட்டி எல்லோருக்குள்ளும்!!
ReplyDeleteஅசர வைக்கும் விநாயகர் படங்கள்...
ReplyDeletenice post
ReplyDelete